< எசேக்கியேல் 12 >

1 யெகோவாவுடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:
I stało się słowo Pańskie do mnie mówiąc:
2 மனிதகுமாரனே, நீ கலகவீட்டாரின் நடுவிலே தங்கி இருக்கிறாய்; பார்க்கும்படி அவர்களுக்குக் கண்கள் இருந்தாலும் காணாமற்போகிறார்கள்; கேட்கும்படி அவர்களுக்குக் காதுகள் இருந்தாலும் கேட்காமற்போகிறார்கள்; அவர்கள் கலகம்செய்கிற மக்கள்.
Synu człowieczy! ty w pośrodku domu odpornego mieszkasz, którzy mają oczy, aby widzieli, a nie widzą, uszy mają, aby słyszeli, a nie słyszą; przeto, że domem odpornym są.
3 இப்போதும் மனிதகுமாரனே, நீ வேறு தேசத்திற்கு போகும்படி பயண பொருட்களை ஆயத்தப்படுத்தி, பகற்காலத்திலே அவர்களுடைய கண்களுக்கு முன்பாகப் பயணப்படு; உன்னுடைய இடத்தைவிட்டு வேறே இடத்திற்கு அவர்களுடைய கண்களுக்கு முன்பாகப் புறப்பட்டுப்போ; அவர்கள் கலகவீட்டார்களாக இருந்தாலும் ஒருவேளை சிந்தித்து உணருவார்கள்.
Ty tedy, synu człowieczy! spraw sobie sprzęt przeprowadzenia, a przeprowadzaj się we dnie przed oczyma ich, a przeprowadzaj się z miejsca swego na miejsce inne przed oczyma ich, aza wżdy obaczą, acz domem odpornym są.
4 சிறையிருப்புக்குப் போகிறவனைப்போல் உன்னுடைய பொருட்களை நீ பகற்காலத்திலே அவர்கள் கண்களுக்கு முன்பாக வெளியே வைத்து, நீ மாலையிலே அவர்கள் கண்களுக்கு முன்பாகச் சிறையிருப்புக்குப் போகிறவனைப்போல் புறப்படுவாயாக.
I wyniesiesz sprzęt swój, jako sprzęt przeprowadzenia, we dnie przed oczyma ich; a sam wynijdź w wieczór przed oczyma ich, jako wychodzą, którzy się przeprowadzają.
5 அவர்களுடைய கண்களுக்கு முன்பாக நீ சுவரிலே துவாரமிட்டு, அதின் வழியாக அவைகளை வெளியே கொண்டுபோகவேண்டும்.
Przed oczyma ich przekop sobie mur, a wynieś przezeń sprzęt twój.
6 அவர்களுடைய கண்களுக்கு முன்பாக அவைகளை உன்னுடைய தோளின்மேல் எடுத்து, மாலை நேரத்தில் வெளியே கொண்டுபோகவேண்டும்; நீ தேசத்தைப் பார்க்காதபடி உன்னுடைய முகத்தை மூடிக்கொள்; இஸ்ரவேல் மக்களுக்கு உன்னை அடையாளமாக்கினேன் என்றார்.
Przed oczyma ich na ramionach nieś, z zmierzkiem wynieś, twarz swoję zakryj, a nie patrz na ziemię; bom cię dał za dziw domowi Izraelskiemu.
7 எனக்குக் கட்டளையிட்டபடியே நான் செய்தேன்; சிறைப்பட்டுப்போகும்போது சாமான்களைக் கொண்டுபோவதுபோல என்னுடைய சாமான்களைப் பகற்காலத்தில் வெளியே வைத்தேன்; மாலையிலோ கையினால் சுவரிலே துவாரமிட்டு, மாலை நேரத்தில் அவைகளை வெளியே கொண்டுபோய், அவர்கள் கண்களுக்கு முன்பாக அவைகளைத் தோளின்மேல் எடுத்துக்கொண்டுபோனேன்.
I uczyniłem tak, jako mi rozkazano; sprzęt mój wyniosłem jako sprzęt prowadzącego się we dnie, a w wieczór przekopałem sobie mur ręką; z zmierzkiem wyniosłem go na ramieniu niosąc przed oczyma ich.
8 விடியற்காலத்திலே யெகோவாவுடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:
Znowu stało się słowo Pańskie do mnie rano, mówiąc:
9 மனிதகுமாரனே, கலகம்செய்கிற மக்களாகிய இஸ்ரவேல் மக்கள் உன்னைப் பார்த்து: நீ செய்கிறது என்னவென்று உன்னைக் கேட்டார்கள் அல்லவா?
Synu człowieczy! Izali nie rzekł do ciebie dom Izraelski, dom ten odporny: Cóż to czynisz?
10 ௧0 இது எருசலேமில் இருக்கிற அதிபதியின்மேலும் அதின் நடுவில் இருக்கிற இஸ்ரவேல் மக்கள் அனைவரின்மேலும் சுமரும் பாரம் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார் என்று அவர்களிடத்தில் சொல்லு.
Rzeczże im, tak mówi panujący Pan: Na księcia, który jest w Jeruzalemie, ściąga się to brzemię, i na wszystek dom Izraelski, którzy są w pośród jego.
11 ௧௧ நீ அவர்களை நோக்கி: நான் உங்களுக்கு அடையாளமாக இருக்கிறேன்; நான் செய்வது எப்படியோ, அப்படியே அவர்களுக்கும் செய்யப்படும்; சிறைப்பட்டுப் வேறு தேசத்திற்கு போவார்கள்.
Rzeczże do nich: Jam jest dziwem waszym; jakom uczynił, tak się im stanie; przeprowadzą się, i w niewolę pójdą.
12 ௧௨ அவர்கள் நடுவில் இருக்கிற அதிபதி மாலைமறையும்போது தோளின்மேல் சுமைசுமந்து புறப்படுவான்; வெளியே சுமைகொண்டுபோகச் சுவரிலே துவாரமிடுவார்கள்; கண்களாலே அவன் தன்னுடைய தேசத்தைக் காணாதபடி தன்னுடைய முகத்தை மூடிக்கொள்வான்.
A książę, który jest w pośrodku nich, na ramieniu poniesie sprzęt swój z zmierzkiem, i wynijdzie; mur przekopią, aby go wywiedli przezeń; twarz swoję zakryje, tak, że nie będzie widział ziemi okiem swojem.
13 ௧௩ நான் என்னுடைய வலையை அவன்மேல் வீசுவேன், அவன் என்னுடைய கண்ணியிலே பிடிபடுவான்; அவனைக் கல்தேயர்கள் தேசமாகிய பாபிலோனுக்குக் கொண்டுபோவேன்; அங்கே அவன் மரிப்பான்; ஆகிலும் அதைக் காணமாட்டான்.
Bo rozciągnę nań sieć swoję, i pojmany będzie niewodem moim, i przywiodę go do Babilonu, do ziemi Chaldejskiej, a tej nie ogląda, i tam umrze.
14 ௧௪ அவனுக்கு உதவியாக அவனைச் சுற்றிலும் இருக்கிற அனைவரையும் அவனுடைய எல்லா இராணுவங்களையும் நான் எல்லா திசைகளிலும் தூற்றி, அவர்கள் பின்னே வாளை உருவுவேன்.
Także też wszystkich, którzy są około niego, pomoc jego, i wszystkie hufy jego rozproszę na wszystkie strony, i miecza dobędę za nimi;
15 ௧௫ அப்படி நான் அவர்களை தேசங்களுக்குள்ளே தூற்றி, அவர்களை தேசங்களிலே சிதறடிக்கும்போது, நான் யெகோவா என்று அறிந்துகொள்வார்கள்.
I poznają, żem Ja Pan, gdy ich rozproszę między narody, i rozwieję ich po ziemiach.
16 ௧௬ ஆனாலும் தாங்கள் போய்ச்சேரும் தேசங்களுக்குள்ளே தங்களுடைய அருவருப்புகளையெல்லாம் விவரிக்கும்படி, நான் அவர்களில் கொஞ்சம்பேரைப் பஞ்சத்திற்கும் பட்டயத்திற்கும் கொள்ளைநோய்க்கும் விலக்கி மீதியாக இருக்கச்செய்வேன்; அப்பொழுது நான் யெகோவா என்று அறிந்துகொள்வார்கள் என்று சொல் என்றார்.
Jednak zostawię z nich trochę mężów po mieczu, po głodzie i po morze, aby opowiadali wszystkie obrzydliwości swe między narodami, do których wnijdą, i poznają, żem Ja Pan.
17 ௧௭ பின்னும் யெகோவாவுடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:
Znowu stało się słowo Pańskie do mnie, mówiąc:
18 ௧௮ மனிதகுமாரனே, நீ உன்னுடைய அப்பத்தை நடுக்கத்துடன் சாப்பிட்டு, உன்னுடைய தண்ணீரைக் கலக்கத்தோடும் வருத்தத்தோடும் குடித்து,
Synu człowieczy! chleb swój z strachem jedz i wodę twoję ze drżeniem i z smutkiem pij,
19 ௧௯ தேசத்திலுள்ள மக்ககளை நோக்கி: இஸ்ரவேல் தேசத்திலுள்ள எருசலேமின் மக்களைக் குறித்துக் யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால், தங்களுடைய அப்பத்தை வருத்தத்துடன் சாப்பிட்டு, தங்களுடைய தண்ணீரைப் பயத்துடன் குடிப்பார்கள்; அவர்களுடைய தேசத்துக் மக்களுடைய கொடுமையினால் அதிலுள்ளதெல்லாம் அழிய, அது பாழாகும்.
A rzecz do ludu tej ziemi: Tak mówi panujący Pan o tych, którzy mieszkają w Jeruzalemie, o ziemi Izraelskiej: Chleb swój z smutkiem jeść, a wodę swą z trwogą pić będą, aby była ziemia jego złupiona z dostatków swoich dla bezprawia wszystkich mieszkających w niej;
20 ௨0 குடியேறியிருக்கிற பட்டணங்கள் வனாந்திரங்களாகி, தேசம் பாழாய்ப்போகும்; அப்பொழுது நான் யெகோவா என்று அறிந்துகொள்வீர்கள் என்று சொல் என்றார்.
Także miasta, w których mieszkają, spustoszone będą, i ziemia spustoszeje; i dowiecie się, żem Ja Pan.
21 ௨௧ பின்னும் யெகோவாவுடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:
Stało się zaś słowo Pańskie do mnie, mówiąc:
22 ௨௨ மனிதகுமாரனே, நாட்கள் நீடிக்கும், தரிசனம் எல்லாம் அவமாகும் என்று இஸ்ரவேல் தேசத்திலே வழங்கும் பழமொழி என்ன?
Synu człowieczy! cóż to za przypowieść u was o ziemi Izraelskiej, iż mówicie: Przedłużąć się dni, a z tego widzenia nic nie będzie?
23 ௨௩ ஆகையால் நீ அவர்களை நோக்கி: யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால், அவர்கள் இனி இஸ்ரவேலிலே இந்தப் பழமொழியைச் சொல்லி வராதபடி நான் அதை ஒழியச்செய்வேன்; நாட்களும் எல்லாத் தரிசனத்தின் பொருளும் அருகில் வந்தன என்று அவர்களுடன் சொல்லு.
Przetoż mów do nich: Tak mówi panujący Pan: Sprawię Ja to, iż ustanie ta przypowieść, a nie będą używać tej przypowieści więcej w Izraelu; powiedz im: I owszem, przybliżyły się te dni, i spełnienie wszelkiego widzenia.
24 ௨௪ இஸ்ரவேல் மக்களின் நடுவில் இனிச் சகல கள்ளத்தரிசனமும் முகஸ்துதியான குறிசொல்லுதலும் இல்லாமற்போகும்.
Bo nie będzie więcej żadnego marnego widzenia, ani wieszczby pochlebcy w pośrodku domu Izraelskiego.
25 ௨௫ நான் யெகோவா, நான் சொல்லுவேன், நான் சொல்லும் வார்த்தை நிறைவேறும்; இனித் தாமதியாது; கலகமக்களே, உங்கள் நாட்களிலே நான் வார்த்தையைச் சொல்லுவேன், அதை நிறைவேறவும் செய்வேன் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார் என்று சொல் என்றார்.
Przeto, że Ja Pan mówić będę, a którekolwiek słowo wyrzekę, stanie się; nie pójdzie w długą, ale za dni waszych, domie odporny! wyrzekę słowo, i wypełnię je, mówi panujący Pan.
26 ௨௬ பின்னும் யெகோவாவுடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:
I stało się słowo Pańskie do mnie, mówiąc:
27 ௨௭ மனிதகுமாரனே, இதோ, இஸ்ரவேல் மக்கள்: இவன் காண்கிற தரிசனம் நிறைவேற அநேக நாட்கள் ஆகும்; தூரமாக இருக்கிற காலங்களைக்குறித்து இவன் தீர்க்கதரிசனம் சொல்லுகிறான் என்கிறார்கள்.
Synu człowieczy! oto dom Izraelski mówią: To widzenie, które ten widzi, odwlecze się na wiele dni, a o dalekich czasach ten prorokuje;
28 ௨௮ ஆகையால் என்னுடைய வார்த்தைகளில் ஒன்றுகூட இனித் தாமதிப்பதில்லையென்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார்; நான் சொன்ன வார்த்தை நிறைவேறும் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார் என்று அவர்களுடன் சொல் என்றார்.
Przeto im rzecz: Tak mówi panujący Pan: Nie pójdzieć w długą żadne słowo moje; ale słowo, które wyrzekę, stanie się, mówi panujący Pan.

< எசேக்கியேல் 12 >