< எசேக்கியேல் 10 >
1 ௧ இதோ, கேருபீன்களுடைய தலைக்குமேல் இருந்த மண்டலத்தில் இந்திர நீலரத்தினம்போன்ற சிங்காசனத்தைபோல ஒரு தோற்றத்தைக் கண்டேன்; அது அவைகளுக்குமேல் காணப்பட்டது.
Потом видех, и гле, на небу које беше над главама херувимима показа се над њима као камен сафир на очи као престо.
2 ௨ அவர் சணல்நூல் அங்கி அணிந்திருந்த மனிதனை நோக்கி: நீ கேருபீனின் கீழ் இருக்கிற சக்கரங்களுக்கு நடுவிலே நுழைந்து, கேருபீன்களின் நடுவே இருக்கிற நெருப்புத்தழலில் உன்னுடைய கை நிறைய எடுத்து, அதை நகரத்தின்மேல் சிதறலாக வீசு என்றார்; அப்படியே அவன் என்னுடைய கண்காண உள்ளே நுழைந்தான்.
И проговори човеку обученом у платно, и рече: Уђи међу точкове под херувимима, и узми пуне прегршти жеравице између херувима и разаспи на град. И уђе на моје очи.
3 ௩ அந்த மனிதன் உள்ளே நுழையும்போது, கேருபீன்கள் ஆலயத்தின் வலது புறத்தில் நின்றன; ஒரு மேகம் உள்முற்றத்தை நிரப்பிற்று.
А херувими стајаху с десне стране дома кад уђе човек, и облак напуни унутрашњи трем.
4 ௪ யெகோவாவுடைய மகிமை கேருபீனின் மேலிருந்து எழும்பி, ஆலயத்தின் வாசற்படியிலே வந்தது; ஆலயம் மேகத்தினாலே நிறைந்திருந்தது, முற்றமும் யெகோவாவுடைய மகிமையின் பிரகாசத்தினால் நிரம்பிற்று.
И слава Господња подиже се с херувима на праг од дома, и напуни се дом облака, а трем се напуни светлости славе Господње.
5 ௫ கேருபீன்களுடைய இறக்கைகளின் இரைச்சல் சர்வத்துக்கும் வல்ல தேவன் பேசும்போது உண்டாகும் சத்தம்போல வெளிமுற்றம்வரை கேட்கப்பட்டது.
И лупа крила у херувима чујаше се до спољашњег трема као глас Бога Свемогућег кад говори.
6 ௬ அவர் சணல்நூல் அங்கி அணிந்திருந்த மனிதனை நோக்கி: நீ கேருபீன்களுக்குள் சக்கரங்களின் நடுவிலிருந்து நெருப்பை எடு என்று கட்டளையிட்டவுடனே, அவன் உள்ளே நுழைந்து சக்கரங்கள் அருகிலே நின்றான்.
И кад заповеди човеку обученом у платно говорећи: Узми огња између точкова између херувима; он уђе и стаде код точкова.
7 ௭ அப்பொழுது கேருபீன்களுக்குள்ளே ஒரு கேருபீன் தன்னுடைய கையைக் கேருபீன்களின் நடுவில் இருக்கிற நெருப்பில் நீட்டி, அதில் எடுத்து சணல்நூல் அங்கி அணிந்திருந்த மனிதனுடைய கையில் கொடுத்தான்; அவன் அதை வாங்கிக்கொண்டு வெளியே வந்தான்.
И један херувим пружи руку своју између херувима к огњу који беше међу херувимима, и узе и метну у прегршти обученом у платно и он прими и изиђе.
8 ௮ கேருபீன்களுடைய இறக்கைகளின்கீழ் மனிதர்களின் கையைப் போல காணப்பட்டது.
А виђаше се у херувима као рука човечија под крилима.
9 ௯ இதோ, கேருபீன்கள் அருகில் நான்கு சக்கரங்கள் இருக்கக் கண்டேன்; ஒவ்வொரு கேருபீன் அருகில் ஒவ்வொரு சக்கரம் இருந்தது; சக்கரங்களின் தோற்றம் படிகப்பச்சை நிறம்போலிருந்தது.
И видех, и гле, четири точка код херувима, по један точак код једног херувима, и точкови беху на очи као камен хрисолит.
10 ௧0 அவைகள் நான்கிற்கும் ஒரே மாதிரியான ரூபம் இருந்தது; சக்கரங்களின் நடுவிலே சக்கரம் இருப்பதுபோல் காணப்பட்டது.
И на очи беху сва четири точка једнака, и као да је точак у точку.
11 ௧௧ அவைகள் ஓடும்போது தங்கள் நான்கு பக்கங்களிலும் ஓடும்; ஓடும்போது அவைகள் திரும்பினதில்லை; தலைப்பார்க்கும் இடத்துக்கே அவைகள் அதின் பின்னாலே ஓடின; ஓடும்போது அவைகள் திரும்பினதில்லை.
Кад иђаху, иђаху сва четири, сваки на своју страну, и идући не скретаху, него куда гледаше глава онамо иђаху и идући не скретаху.
12 ௧௨ அவைகளின் உடல் அனைத்தும், அவைகளின் முதுகுகளும், அவைகளின் கைகளும், அவைகளின் இறக்கைகளும், அந்தச் சக்கரங்களும், சுற்றிலும் கண்களினாலே நிறைந்திருந்தன; அவைகள் நான்கும் இருந்த சக்கரங்களும் அப்படியே இருந்தன.
А све им тело и леђа и руке и крила и точкови, сва четири точка њихова, беху пуна очију свуда унаоколо.
13 ௧௩ அந்தச் சக்கரங்களைப் பார்த்து: சக்கரமே என்று ஒருவன் கூப்பிடுகிற சத்தத்தைக் கேட்டேன்.
А точкови се зваху како чух: кола.
14 ௧௪ ஒவ்வொன்றுக்கும் நான்கு முகங்கள் இருந்தன; முதலாம் முகம் கேருபீன்முகமும், இரண்டாம் முகம் மனிதமுகமும், மூன்றாம் முகம் சிங்கமுகமும், நான்காம்முகம் கழுகுமுகமுமாக இருந்தது.
А четири лица имаше свака животиња: једно лице херувимско, друго лице човечије и треће лице лавово и четврто лице орлово.
15 ௧௫ கேருபீன்கள் மேலே எழும்பின; இதுதான், நான் கேபார் நதியின் அருகில் கண்ட உயிர்.
И подигоше се херувими у вис; то беху исте животиње које видех на реци Хевару.
16 ௧௬ கேருபீன்கள் செல்லும்போது சக்கரங்கள் அவைகள் அருகே ஓடின; பூமியிலிருந்து எழும்பக் கேருபீன்கள் தங்களுடைய இறக்கைகளை விரித்தபோது, சக்கரங்களும் அவைகளை விட்டு விலகிப்போகவில்லை.
А кад иђаху херувими, иђаху и точкови уз њих, и кад херувими махаху крилима својим да се подигну од земље, точкови се не одмицаху од њих.
17 ௧௭ அவைகள் நிற்கும்போது இவைகளும் நின்றன; அவைகள் எழும்பும்போது இவைகளும் எழும்பின; உயிருள்ள ஆவி இவைகளில் இருந்தது.
Кад се они устављаху, устављаху се и точкови; а кад се они подизаху, подизаху се и точкови; јер беше дух животињски у њима.
18 ௧௮ யெகோவாவுடைய மகிமை ஆலயத்தின் வாசற்படியைவிட்டுப் புறப்பட்டு, கேருபீன்களின்மேல் நின்றது.
И слава Господња отиде изнад прага од дома, и стаде над херувиме.
19 ௧௯ அப்பொழுது கேருபீன்கள் தங்களுடைய இறக்கைகளை விரித்து, என்னுடைய கண் காண பூமியைவிட்டு எழும்பின; அவைகள் புறப்படும்போது சக்கரங்களும் அவைகளுக்குச் சரியாகச் சென்றன; யெகோவாவுடைய ஆலயத்தின் கிழக்கு வாசலிலே போய் நிற்க, இஸ்ரவேலின் தேவனுடைய மகிமை அவைகளின்மேல் உயர இருந்தது.
И херувими махнувши крилима подигоше се од земље преда мном полазећи, и точкови према њима; и стадоше на источним вратима дома Господњег, и слава Бога Израиљевог беше озго над њима.
20 ௨0 இது நான் கேபார் நதியின் அருகிலே இஸ்ரவேலின் தேவனுக்குக் கீழே இருக்கக்கண்ட அந்த உயிரினம் தானே; அவைகள் கேருபீன்கள் என்று அறிந்துகொண்டேன்.
То беху исте животиње које видех под Богом Израиљевим на реци Хевару, и познах да су херувими.
21 ௨௧ அவைகளில் ஒவ்வொன்றுக்கும் நான்கு முகமும், நான்கு இறக்கைகளும் இருந்தன; அவைகளுடைய இறக்கைகளின்கீழ் மனித கைளைப் போல இருந்தது.
Свака имаше четири лица и четири крила, и као рука човечија беше им под крилима.
22 ௨௨ அவைகளுடைய முகங்கள் நான் கேபார் நதியின் அருகிலே கண்ட அந்த முகங்களைப் போல இருந்தது; ஒவ்வொன்றும் தன்தன் முகத்திற்கு முன்னே இருந்த திசையை நோக்கிச் சென்றது.
И лица им беху иста која видех на реци Хевару; обличја беху иста, исти беху; сваки иђаше право на према се.