< யாத்திராகமம் 7 >
1 ௧ யெகோவா மோசேயை நோக்கி: “பார், உன்னை நான் பார்வோனுக்கு தேவனாக்கினேன்; உன் சகோதரனாகிய ஆரோன் உன்னுடைய தீர்க்கதரிசியாக இருப்பான்.
И Господ рече Мојсију: Ево, поставио сам те да си Бог Фараону; а Арон брат твој биће пророк твој.
2 ௨ நான் உனக்குக் கட்டளையிடும் யாவையும் நீ சொல்லவேண்டும்; பார்வோன் இஸ்ரவேல் மக்களைத் தன்னுடைய தேசத்திலிருந்து அனுப்பிவிடும்படி உன்னுடைய சகோதரனாகிய ஆரோன் அவனிடம் பேசவேண்டும்.
Говорићеш све што ти заповедим; Арон, пак, брат твој говориће Фараону да пусти синове Израиљеве из земље своје.
3 ௩ நான் பார்வோனின் இருதயத்தைக் கடினப்படுத்தி, எகிப்துதேசத்தில் என்னுடைய அடையாளங்களையும் அற்புதங்களையும் மிகுதியாக நடப்பிப்பேன்.
А ја ћу учинити да отврдне срце Фараону, те ћу умножити знаке своје и чудеса своја у земљи мисирској.
4 ௪ பார்வோன் உங்களுடைய சொல்லைக்கேட்கமாட்டான்; ஆகையால் எகிப்திற்கு விரோதமாக நான் என்னுடைய கையை நீட்டி, கொடிய தண்டனையினால் என்னுடைய சேனைகளும் என்னுடைய மக்களுமாகிய இஸ்ரவேல் மக்களை எகிப்து தேசத்திலிருந்து புறப்படச்செய்வேன்.
И неће вас ипак послушати Фараон; а ја ћу метнути руку своју на Мисир, и извешћу војску своју, народ свој, синове Израиљеве из земље мисирске судовима великим.
5 ௫ நான் எகிப்தின்மேல் என்னுடைய கையை நீட்டி, இஸ்ரவேலர்களை அவர்கள் நடுவிலிருந்து புறப்படச்செய்யும்போது, நானே யெகோவா என்று எகிப்தியர்கள் அறிவார்கள்” என்றார்.
И познаће Мисирци да сам ја Господ, кад дигнем руку своју на Мисир, и изведем синове Израиљеве између њих.
6 ௬ மோசேயும் ஆரோனும் யெகோவா தங்களுக்குக் கட்டளையிட்டபடியே செய்தார்கள்.
И учини Мојсије и Арон, како им заповеди Господ, тако учинише.
7 ௭ அவர்கள் பார்வோனோடு பேசும்போது, மோசேக்கு எண்பது வயதும், ஆரோனுக்கு எண்பத்துமூன்று வயதுமாக இருந்தது.
А Мојсију беше осамдесет година, а Арону осамдесет и три године, кад говораху с Фараоном.
8 ௮ யெகோவா மோசேயையும் ஆரோனையும் நோக்கி:
И рече Господ Мојсију и Арону говорећи:
9 ௯ “உங்களை ஒரு அற்புதம் காட்டுங்கள் என்று பார்வோன் உங்களோடு சொன்னால்; அப்பொழுது நீ ஆரோனை நோக்கி: உன்னுடைய கோலை எடுத்து அதைப் பார்வோனுக்கு முன்பாகப் போடு என்பாயாக; அது பாம்பாகும்” என்றார்.
Кад вам каже Фараон и рече: Учините како чудо, онда реци Арону: Узми штап свој, и баци га пред Фараона; те ће се преметнути у змију.
10 ௧0 மோசேயும் ஆரோனும் பார்வோனிடம் போய், யெகோவா தங்களுக்குக் கட்டளையிட்டபடி செய்தார்கள். ஆரோன் பார்வோனுக்கு முன்பாகவும், அவனுடைய வேலைக்காரர்களுக்கு முன்பாகவும் தன்னுடைய கோலைப் போட்டான், அது பாம்பானது.
И изађоше Мојсије и Арон пред Фараона, и учинише како заповеди Господ; и баци Арон штап свој пред Фараона и пред слуге његове, и преметну се у змију.
11 ௧௧ அப்பொழுது பார்வோன் ஞானிகளையும், சூனியக்காரர்களையும் அழைத்தான். எகிப்தின் மந்திரவாதிகளும் தங்கள் மந்திரவித்தையினால் அப்படிச் செய்தார்கள்.
А Фараон дозва мудраце и врачаре; те и врачари мисирски учинише тако својим врачањем.
12 ௧௨ அவர்கள் ஒவ்வொருவனாகத் தன் தன் கோலைப் போட்டபோது, அவைகள் பாம்புகளாயின; ஆரோனுடைய கோலோ அவர்களுடைய கோல்களை விழுங்கியது.
И бацише сваки свој штап, и преметнуше се штапови у змије; али штап Аронов прождре њихове штапове.
13 ௧௩ யெகோவா சொல்லியிருந்தபடி பார்வோனின் இருதயம் கடினப்பட்டது, அவர்களுடைய சொல்லைக் கேட்காமற்போனான்.
И отврдну срце Фараоново, и не послуша их, као што беше казао Господ.
14 ௧௪ அப்பொழுது யெகோவா மோசேயை நோக்கி: “பார்வோனின் இருதயம் கடினமானது; மக்களை விடமாட்டேன் என்கிறான்.
И рече Господ Мојсију: Отежа срце Фараоново; неће да пусти народ.
15 ௧௫ காலையில் நீ பார்வோனிடம் போ, அவன் நதிக்குப் புறப்பட்டு வருவான்; நீ அவனுக்கு எதிராக நதியோரத்தில் நின்று, பாம்பாக மாறின கோலை உன்னுடைய கையிலே பிடித்துக்கொண்டு,
Иди ујутру к Фараону. Гле, он ће изаћи на воду, па стани према њему на обали, а штап који се био преметнуо у змију узми у руку.
16 ௧௬ அவனை நோக்கி: வனாந்திரத்தில் எனக்கு ஆராதனைசெய்ய என்னுடைய மக்களை அனுப்பிவிடவேண்டும் என்று சொல்லும்படி எபிரெயர்களுடைய தேவனாகிய யெகோவா என்னை உம்மிடத்திற்கு அனுப்பியும், இது வரைக்கும் நீர் கேட்காமற்போனீர்.
И реци му: Господ Бог јеврејски посла ме к теби да ти кажем: Пусти народ мој да ми послужи у пустињи. Али ти ето још не послуша.
17 ௧௭ இதோ, என்னுடைய கையில் இருக்கிற கோலால் நதியில் இருக்கிற தண்ணீர்மேல் அடிப்பேன்; அப்பொழுது அது இரத்தமாக மாறி,
Зато Господ овако вели: Овако ћеш познати да сам ја Господ: ево, ударићу штапом што ми је у руци по води што је у реци, и преметнуће се у крв.
18 ௧௮ நதியில் இருக்கிற மீன்கள் செத்து, நதி நாறிப்போகும்; அப்பொழுது நதியில் இருக்கிற தண்ணீரை எகிப்தியர்கள் குடிக்கமுடியாமல் அருவருப்பார்கள்; இதினால் நானே யெகோவா என்பதை அறிந்துகொள்வாய் என்று யெகோவா சொல்லுகிறார்” என்று சொல் என்றார்.
И рибе у реци помреће, и река ће се усмрдети, и Мисирци ће се узмучити тражећи воде да пију из реке.
19 ௧௯ மேலும், யெகோவா மோசேயை நோக்கி: “நீ ஆரோனிடம் உன்னுடைய கோலை எடுத்துக்கொண்டு எகிப்தின் நீர்நிலைகளாகிய அவர்கள் வாய்க்கால்கள்மேலும், நதிகள்மேலும், குளங்கள்மேலும், தண்ணீர் நிற்கிற எல்லா இடங்கள்மேலும், அவைகள் இரத்தமாகும்படி, உன்னுடைய கையை நீட்டு; அப்பொழுது எகிப்து தேசம் எங்கும் மரப்பாத்திரங்களிலும், கற்பாத்திரங்களிலும் இரத்தம் உண்டாகும் என்று சொல்” என்றார்.
И Господ рече Мојсију: Реци Арону: Узми штап свој, и пружи руку своју на воде мисирске, на потоке, на реке и на језера њихова и на сва зборишта вода њихових; и преметнуће се у крв, и биће крв по свој земљи мисирској, и по судима дрвеним и каменим.
20 ௨0 யெகோவா கட்டளையிட்டபடி மோசேயும் ஆரோனும் செய்தார்கள்; பார்வோனுடைய கண்களுக்கு முன்பாகவும், அவனுடைய வேலைக்காரர்களின் கண்களுக்கு முன்பாகவும் கோலை ஓங்கி, நதியிலுள்ள தண்ணீரை அடிக்க, நதியிலுள்ள தண்ணீரெல்லாம் இரத்தமாக மாறியது.
И учинише Мојсије и Арон како им заповеди Господ; и подигавши Арон штап свој удари по води која беше у реци пред Фараоном и слугама његовим. И сва вода што беше у реци преметну се у крв.
21 ௨௧ நதியின் மீன்கள் செத்து, நதி நாறிப்போனது; நதியின் தண்ணீரைக் குடிக்க எகிப்தியர்களுக்கு முடியாமற்போனது; எகிப்து தேசம் எங்கும் இரத்தமாக இருந்தது.
И помреше рибе што беху у реци, и усмрде се река тако да не могаху Мисирци пити воде из реке, и беше крв по свој земљи мисирској.
22 ௨௨ எகிப்தின் மந்திரவாதிகளும் தங்கள் மந்திரவித்தையினால் அப்படிச் செய்தார்கள்; யெகோவா சொல்லியிருந்தபடி பார்வோனின் இருதயம் கடினப்பட்டது; அவர்களுடைய வார்த்தைகளை கேட்காமற்போனான்.
Али и врачари мисирски учинише тако својим врачањем; и срце Фараону отврдну, те их не послуша, као што беше казао Господ.
23 ௨௩ பார்வோன் இதையும் சிந்திக்காமல், தன்னுடைய வீட்டிற்குத் திரும்பிப்போனான்.
И окренувши се Фараон отиде кући својој, и не мари ни за то.
24 ௨௪ நதியின் தண்ணீர் குடிக்க உதவாதபடியால், குடிக்கத்தக்க தண்ணீருக்காக எகிப்தியர்கள் எல்லோரும் நதியோரத்தில் ஊற்று தோண்டினார்கள்.
А Мисирци сви копаше око реке тражећи воде да пију; јер не могаху пити воде из реке.
25 ௨௫ யெகோவா நதியை அடித்து ஏழுநாட்கள் ஆனது.
И наврши се седам дана како реку удари Господ.