< யாத்திராகமம் 40 >

1 யெகோவா மோசேயை நோக்கி:
И рече Господь к Моисею, глаголя:
2 “நீ முதலாம் மாதம் முதல் தேதியில் ஆசரிப்புக்கூடாரத்தின் வாசஸ்தலத்தை பிரதிஷ்டைசெய்.
в день первый месяца перваго, в новомесячие поставиши скинию свидения:
3 அதிலே சாட்சிப்பெட்டியை வைத்து, பெட்டியைத் திரையினால் மறைத்து,
и да положиши кивот свидения, и покрыеши кивот завесою:
4 மேஜையைக் கொண்டுவந்து, அதில் வைக்கவேண்டியதை சரியாக வைத்து, குத்துவிளக்கைக் கொண்டுவந்து, அதின் விளக்குகளை ஏற்றி,
и внесеши трапезу, и предложиши предложение ея: и внесеши светилник, и поставиши светила его:
5 பொன் தூபபீடத்தைச் சாட்சிப்பெட்டிக்கு முன்னே வைத்து, வாசஸ்தலத்தின் வாசலின் தொங்கு திரையைத் தூக்கிவைக்கக்கடவாய்.
и положиши олтарь златый, в каждение пред кивотом свидения, и возложиши покров завесы над дверию скинии свидения:
6 பின்பு, தகன பலிபீடத்தை ஆசரிப்புக்கூடாரமாகிய வாசஸ்தலத்தின் வாசலுக்கு முன்பாக வைத்து,
и олтарь приношений поставиши у дверий скинии свидения,
7 தொட்டியை ஆசரிப்புக்கூடாரத்திற்கும் பலிபீடத்திற்கும் நடுவே வைத்து, அதிலே தண்ணீர் ஊற்றி,
и поставиши умывалницу между скиниею свидения и между олтарем, и влиеши в ню воду:
8 சுற்று பிராகாரத்தை நிறுத்தி, பிராகாரவாசல் தொங்கு திரையைத் தூக்கிவைத்து,
и поставиши двор окрест и даси завесу дверий двора:
9 அபிஷேக தைலத்தை எடுத்து, வாசஸ்தலத்தையும் அதிலுள்ள யாவையும் அபிஷேகம்செய்து, அதையும் அதிலுள்ள எல்லாப் பணிப்பொருட்களையும் பரிசுத்தப்படுத்து; அப்பொழுது பரிசுத்தமாக இருக்கும்.
и возмеши елей помазания и помажеши скинию и вся яже в ней, и освятиши ю и вся сосуды ея, и будут свята:
10 ௧0 தகனபலிபீடத்தையும், அதின் எல்லா பணிப்பொருட்களையும், அபிஷேகம்செய்து, அதைப் பரிசுத்தப்படுத்து; அப்பொழுது அது மகா பரிசுத்தமான பலிபீடமாக இருக்கும்.
и да помажеши олтарь приношений и вся сосуды его, и освятиши олтарь, и будет олтарь святый святых:
11 ௧௧ தொட்டியையும் அதின் பாதத்தையும் அபிஷேகம்செய்து, பரிசுத்தப்படுத்து.
и помажеши умывалницу и стояло ея и освятиши ю:
12 ௧௨ பின்பு ஆரோனையும் அவனுடைய மகன்களையும் ஆசரிப்புக்கூடாரத்தின் வாசலில் வரச்செய்து, அவர்களை தண்ணீரால் குளிக்கவைத்து,
и да приведеши Аарона и сынов его пред двери скинии свидения и измыеши их водою:
13 ௧௩ ஆரோனுக்குப் பரிசுத்த ஆடைகளை உடுத்தி, எனக்கு ஆசாரிய ஊழியம் செய்யும்படி அவனை அபிஷேகம்செய்து, அவனைப் பரிசுத்தப்படுத்து.
и да облечеши Аарона в ризы святыя и помажеши его, и освятиши его, и да жрет Мне:
14 ௧௪ அவன் மகன்களையும் வரச்செய்து, அவர்களுக்கு அங்கிகளை உடுத்தி,
и сыны его да приведеши и облечеши я в ризы,
15 ௧௫ அவர்கள் எனக்கு ஆசாரிய ஊழியம் செய்யும்படி, அவர்களையும், அவர்கள் தகப்பனை அபிஷேகம்செய்தபடியே, அபிஷேகம்செய்; அவர்கள் பெறும் அந்த அபிஷேகம் தலைமுறைதோறும் நிரந்தர ஆசாரியத்துவத்திற்கு ஏதுவாக இருக்கும் என்றார்.
и да помажеши я, якоже помазал еси отца их, да жрут Мне: и будет, еже быти им помазанию жречества во век, в роды их.
16 ௧௬ யெகோவா தனக்குக் கற்பித்தபடியெல்லாம் மோசே செய்தான்.
И сотвори Моисей вся, елика заповеда ему Господь, сице сотвори.
17 ௧௭ இரண்டாம் வருடம் முதலாம் மாதம் முதல் தேதியில் வாசஸ்தலம் நிறுவப்பட்டது.
И бысть в первый месяц во второе лето исходящым им от Египта, в новомесячии ста скиния.
18 ௧௮ மோசே கூடாரத்தை எடுப்பித்தான்; அவன் அதின் பாதங்களை வைத்து, அதின் பலகைகளை நிறுத்தி, அதின் தாழ்ப்பாள்களைப் பாய்ச்சி, அதின் தூண்களை நாட்டி,
И постави Моисей скинию, и подложи стояла ея, и возложи главицы, и вложи разворы, и постави столпы,
19 ௧௯ வாசஸ்தலத்தின்மேல் கூடாரத்தை விரித்து, அதின்மேல் கூடாரத்தின் மூடியை, யெகோவா தனக்குக் கற்பித்தபடியே போட்டான்.
и простре опоны на скинию, и возложи покрывало скинии на ню с верху, якоже заповеда Господь Моисею:
20 ௨0 பின்பு, யெகோவா மோசேக்குக் கற்பித்தபடியே, சாட்சிப்பிரமாணத்தை எடுத்து, அதைப் பெட்டியிலே வைத்து, பெட்டியில் தண்டுகளைப்பாய்ச்சி, பெட்டியின்மேல் கிருபாசன மூடியை வைத்து,
и взем свидения, вложи в кивот, и подстави ноги под кивотом, и возложи очистилище над кивотом:
21 ௨௧ பெட்டியை வாசஸ்தலத்திற்குள்ளே கொண்டுபோய், மறைவின் திரைச்சீலையைத் தொங்கவைத்து, சாட்சிப்பெட்டியை மறைத்துவைத்தான்.
и внесе кивот в скинию, и возложи покров завесы, и закры кивот свидения, якоже заповеда Господь Моисею:
22 ௨௨ பின்பு, யெகோவா மோசேக்குக் கற்பித்தபடியே, மேஜையை ஆசரிப்புக்கூடாரத்தில் வாசஸ்தலத்தின் வடபுறமாகத் திரைக்குப் புறம்பாக வைத்து,
и постави трапезу в скинии свидения, на страну скинии свидения, яже к северу, внеуду завесы скинии:
23 ௨௩ அதின்மேல் யெகோவாவுடைய சமுகத்தில் அப்பத்தை வரிசையாக அடுக்கிவைத்தான்.
и возложи на ню хлебы предложения пред Господем, якоже заповеда Господь Моисею:
24 ௨௪ பின்பு, யெகோவா மோசேக்குக் கற்பித்தபடியே, குத்துவிளக்கை ஆசரிப்புக்கூடாரத்தில் மேஜைக்கு எதிராக வாசஸ்தலத்தின் தென்புறத்திலே வைத்து,
и постави светилник в скинии свидения прямо трапезы, на страну скинии, яже к югу:
25 ௨௫ யெகோவாவுடைய சந்நிதியில் விளக்குகளை ஏற்றினான்.
и постави свещники его пред Господем, якоже заповеда Господь Моисею:
26 ௨௬ பின்பு, யெகோவா மோசேக்குக் கற்பித்தபடியே, ஆசரிப்புக்கூடாரத்தில் திரைக்கு முன்பாகப் பொற்பீடத்தை வைத்து,
и постави олтарь златый в скинии свидения противу завесы,
27 ௨௭ அதின்மேல் நறுமணப்பொருட்களால் தூபம்காட்டினான்.
и покади над ним фимиамом сложения, якоже заповеда Господь Моисею:
28 ௨௮ பின்பு, யெகோவா மோசேக்குக் கற்பித்தபடியே, வாசஸ்தலத்தின் தொங்கு திரையைத் தூக்கிவைத்து,
и положи завесу дверий скинии,
29 ௨௯ தகனபலிபீடத்தை ஆசரிப்புக்கூடாரமான வாசஸ்தலத்தின் வாசலுக்கு முன்பாக வைத்து, அதின்மேல் சர்வாங்க தகனபலியையும் போஜனபலியையும் செலுத்தினான்.
и олтарь приношений постави у дверий скинии покрова свидения, и вознесе на нем всесожжение и жертву, якоже заповеда Господь Моисею:
30 ௩0 அவன் ஆசரிப்புக்கூடாரத்திற்கும் பலிபீடத்திற்கும் நடுவே தொட்டியை வைத்து, கழுவுகிறதற்கு அதிலே தண்ணீர் வார்த்தான்.
и сотвори умывалницу между скиниею свидения и между жертвенником,
31 ௩௧ அவ்விடத்திலே மோசேயும் ஆரோனும் அவனுடைய மகன்களும் தங்கள் கைகளையும் கால்களையும் கழுவினார்கள்.
и влия в ню воду, да умывают от нея Моисей и Аарон и сынове его руки своя и ноги, входящым им в скинию свидения:
32 ௩௨ யெகோவா மோசேக்குக் கற்பித்தபடியே, அவர்கள் ஆசரிப்புக்கூடாரத்திற்குள்ளே நுழைகிறபோதும், பலிபீடத்தினருகில் சேருகிறபோதும், அவர்கள் கழுவிக்கொள்ளுவார்கள்.
или приходяще к жертвеннику служити, умывахуся от нея, якоже заповеда Господь Моисею:
33 ௩௩ பின்பு, அவன் வாசஸ்தலத்தையும் பலிபீடத்தையும் சுற்றி பிராகாரத்தை அமைத்து, பிராகாரத்தின் தொங்கு திரையைத் தொங்கவைத்தான்; இவ்விதமாக மோசே வேலையை முடித்தான்.
и постави двор окрест скинии и олтаря и положи завесу двора. И сконча Моисей вся дела.
34 ௩௪ அப்பொழுது ஒரு மேகம் ஆசரிப்புக்கூடாரத்தை மூடினது; யெகோவாவுடைய மகிமை வாசஸ்தலத்தை நிரப்பியது.
И покры облак скинию свидения, и славы Господни исполнися скиния,
35 ௩௫ மேகம் அதின்மேல் தங்கி, யெகோவாவுடைய மகிமை வாசஸ்தலத்தை நிரப்பினதினால், மோசே ஆசரிப்புக்கூடாரத்திற்குள் நுழையமுடியாமல் இருந்தது.
и не можаше Моисей внити в скинию свидения, яко осеняше над нею облак, и славы Господни исполнися скиния:
36 ௩௬ வாசஸ்தலத்திலிருந்து மேகம் மேலே எழும்பும்போது, இஸ்ரவேல் மக்கள் பயணம்செய்யப் புறப்படுவார்கள்.
егда же восхождаше облак от скинии, воздвизахуся сынове Израилевы со имением своим:
37 ௩௭ மேகம் எழும்பாமல் இருந்தால், அது எழும்பும் நாள்வரைக்கும் பயணம் செய்யாமல் இருப்பார்கள்.
аще же не взыде облак, не воздвизахуся даже до дне, в оньже взыдет облак:
38 ௩௮ இஸ்ரவேல் மக்கள் செய்யும் எல்லாப் பயணங்களிலும் அவர்களெல்லோருடைய கண்களுக்கும் நேரடியாக பகலில் யெகோவாவுடைய மேகமும், இரவில் அக்கினியும், வாசஸ்தலத்தின்மேல் தங்கியிருந்தது.
облак бо Господнь бяше над скиниею в день, и огнь бяше над нею в нощь пред всем Израилем во всех путешествиих их.

< யாத்திராகமம் 40 >