< யாத்திராகமம் 35 >
1 ௧ மோசே இஸ்ரவேலர்களாகிய சபையார்கள் எல்லோரையும் கூடிவரச்செய்து, அவர்களை நோக்கி:
Môi-se triệu tập toàn dân họp lại và tuyên bố: “Đây là mệnh lệnh Chúa Hằng Hữu truyền cho chúng ta vâng giữ:
2 ௨ “நீங்கள் ஆறுநாட்கள் வேலைசெய்யவேண்டும், ஏழாம் நாளோ உங்களுக்குப் பரிசுத்த நாளாக இருப்பதாக; அது யெகோவாவுக்கென்று ஓய்ந்திருக்கும் ஓய்வுநாள்; அதிலே வேலைசெய்கிறவன் எவனும் கொலைசெய்யப்படவேண்டும்.
Mọi người chỉ được làm việc trong sáu ngày, nhưng ngày thứ bảy phải nghỉ vì là ngày Sa-bát, là ngày thánh để thờ phượng Chúa Hằng Hữu. Ai làm việc trong ngày ấy phải bị xử tử.
3 ௩ ஓய்வுநாளில் உங்களுடைய வீடுகளில் நெருப்பு மூட்டாதிருங்கள் என்னும் இந்த வார்த்தைகளைக் கைக்கொள்ளும்படி யெகோவா கட்டளையிட்டார்” என்றான்.
Ngay cả lửa cũng không được nhóm lên trong ngày Sa-bát.”
4 ௪ பின்னும் மோசே இஸ்ரவேலர்களாகிய சபையார்கள் எல்லோரையும் நோக்கி,
Môi-se nói tiếp với toàn dân: “Chúa Hằng Hữu cũng truyền rằng:
5 ௫ “உங்களுக்கு இருப்பதிலே யெகோவாவுக்கு ஒரு காணிக்கையைக் கொண்டுவந்து செலுத்துங்கள்; மனமுள்ளவன் எவனோ, அவன் அதைக் கொண்டுவரட்டும்; யெகோவாவுக்குச் செலுத்தும் காணிக்கை என்னவென்றால், பொன்னும், வெள்ளியும், வெண்கலமும்,
Mỗi người tùy tâm, trích ra trong tài sản mình có, đem dâng lên Chúa Hằng Hữu: Vàng, bạc, đồng;
6 ௬ இளநீலநூலும், இரத்தாம்பரநூலும், சிவப்புநூலும், மெல்லிய பஞ்சுநூலும், வெள்ளாட்டு முடியும்,
chỉ xanh, tím, đỏ; vải gai mịn, lông dê;
7 ௭ சிவப்பு வண்ணம் தீட்டப்பட்ட ஆட்டுக்கடாத்தோலும், மெல்லிய தோலும், சீத்திம் மரமும்,
da chiên nhuộm đỏ, da dê gỗ keo;
8 ௮ விளக்குக்கு எண்ணெயும், அபிஷேகத்தைலத்திற்கு பரிமளத்தைலமும், தூபத்திற்கு நறுமணப் பொருட்களும்,
dầu thắp; chất liệu dùng làm dầu xức và hương thơm;
9 ௯ ஆசாரியர்களுடைய ஏபோத்திலும் மார்ப்பதக்கத்திலும் பதிக்கவேண்டியது கோமேதகம் முதலிய இரத்தினங்களுமே.
bạch ngọc, và các thứ ngọc khác để gắn vào ê-phót và bảng đeo ngực.
10 ௧0 “உங்களில் ஞானஇருதயமுள்ள அனைவரும் வந்து, யெகோவா கட்டளையிட்டவைகளையெல்லாம் செய்வார்களாக.
Ai là người khéo tay trong toàn dân, phải đến làm Đền Tạm theo như Chúa Hằng Hữu đã phán bảo:
11 ௧௧ ஆசரிப்புக்கூடாரத்தையும், அதின் கூடாரத்தையும், அதின் மூடியையும், அதின் கொக்கிகளையும், அதின் பலகைகளையும், அதின் தாழ்ப்பாள்களையும், அதின் தூண்களையும், அதின் பாதங்களையும்,
Trại và nóc trại, móc, khung, thanh ngang, trụ và lỗ trụ;
12 ௧௨ பெட்டியையும், அதின் தண்டுகளையும், கிருபாசனத்தையும், மறைவின் திரைச்சீலையையும்,
Hòm Giao Ước và đòn khiêng; nắp chuộc tội trên Hòm; màn che Nơi Thánh,
13 ௧௩ மேஜையையும், அதின் தண்டுகளையும், அதின் எல்லாப் பணிப்பொருட்களையும், சமுகத்து அப்பங்களையும்,
cái bàn và đòn khiêng cùng với đồ phụ tùng; Bánh Thánh;
14 ௧௪ வெளிச்சம்கொடுக்கும் குத்துவிளக்கையும், அதின் கருவிகளையும், அதின் அகல்களையும், வெளிச்சத்திற்கு எண்ணெயையும்,
chân đèn, đồ dụng cụ, đèn, và dầu thắp đèn;
15 ௧௫ தூபபீடத்தையும், அதின் தண்டுகளையும், அபிஷேகத் தைலத்தையும், நறுமணப் பொருட்களையும், ஆசரிப்புக்கூடார வாசலுக்குத் தொங்கு திரையையும்,
bàn thờ xông hương và đòn khiêng; dầu xức thánh, hương thơm; màn che cửa Đền Tạm;
16 ௧௬ தகனபலிபீடத்தையும், அதின் வெண்கலச் சல்லடையையும், அதின் தண்டுகளையும், அதின் எல்லா பணிப்பொருட்களையும், தொட்டியையும், அதின் பாதத்தையும்,
bàn thờ dâng của lễ thiêu; rá đồng, đòn khiêng cùng đồ phụ tùng; bồn nước và chân bồn;
17 ௧௭ பிராகாரத்தின் தொங்கு திரைகளையும், அதின் தூண்களையும், அதின் பாதங்களையும், பிராகாரத்து வாசலின் தொங்கு திரையையும்,
màn che hành lang; trụ và lỗ trụ; màn che cửa hành lang;
18 ௧௮ கூடாரத்தின் முளைகளையும், ஆசரிப்புக்கூடாரத்தின் முளைகளையும், அவைகளின் கயிறுகளையும்,
móc và dây trong hành lang Đền Tạm;
19 ௧௯ பரிசுத்த ஸ்தலத்திலே ஆராதனை செய்வதற்குரிய ஆடைகளையும், ஆசாரிய ஊழியம்செய்கிற ஆரோனின் பரிசுத்த ஆடைகளையும் அவனுடைய மகன்களின் ஆடைகளையும் அவர்கள் செய்யவேண்டும் என்றான்.
bộ áo lễ của Thầy Tế lễ A-rôn và các con trai người mặc trong lúc thi hành chức vụ trong Nơi Thánh.”
20 ௨0 அப்பொழுது இஸ்ரவேலர்களாகிய சபையார்கள் எல்லோரும் மோசேயின் சமுகத்தைவிட்டுப் புறப்பட்டார்கள்.
Nghe xong, ai nấy cáo từ Môi-se để về trại mình.
21 ௨௧ பின்பு எவர்களை அவர்களுடைய இருதயம் எழுப்பி, எவர்களை அவர்களுடைய ஆவி உற்சாகப்படுத்தினதோ, அவர்கள் எல்லோரும் ஆசரிப்புக்கூடாரத்தின் வேலைக்கும், அதின் எல்லா ஊழியத்திற்கும், பரிசுத்த ஆடைகளுக்கும் ஏற்றவைகளைக் யெகோவாவுக்குக் காணிக்கையாகக் கொண்டுவந்தார்கள்.
Những người được cảm động, liền tự nguyện trở lại, mang theo lễ vật dâng lên Chúa Hằng Hữu để dùng cất Đền Tạm, làm dụng cụ và may áo thánh.
22 ௨௨ மனப்பூர்வமுள்ள ஆண்கள் பெண்கள் அனைவரும், தங்கத்தினாலான ஊசிகள், காதணிகள், மோதிரங்கள், ஆரங்கள் முதலான எல்லாவித பொன் ஆபரணங்களையும் கொண்டுவந்தார்கள்; யெகோவாவுக்குக் காணிக்கை செலுத்தின ஒவ்வொருவனும் தங்கத்தைக் காணிக்கையாகச் செலுத்தினான்.
Họ kéo nhau đến, cả nam lẫn nữ, với lòng tự nguyện, dâng lên Chúa Hằng Hữu các món nữ trang bằng vàng như hoa tai, nhẫn, kiềng.
23 ௨௩ இளநீலநூலையும் இரத்தாம்பரநூலையும் சிவப்புநூலையும் மெல்லிய பஞ்சுநூலையும் வெள்ளாட்டு முடியையும் சிவப்பு வண்ணம் தீட்டப்பட்ட ஆட்டுக்கடாத்தோலையும் மெல்லிய தோலையும் வைத்திருந்த எல்லோரும் அவைகளைக் கொண்டுவந்தார்கள்.
Những người khác mang đến chỉ xanh, tím, đỏ, chỉ gai mịn, lông dê, da chiên nhuộm đỏ, và da dê.
24 ௨௪ வெள்ளியையும் வெண்கலத்தையும் கொடுக்கும் அனைவரும் அவைகளைக் யெகோவாவுக்குக் காணிக்கையாகக் கொண்டுவந்தார்கள். பற்பல வேலைகளுக்கு உதவும் சீத்திம் மரத்தை வைத்திருந்த யாவரும் அவைகளைக் கொண்டுவந்தார்கள்.
Người khác lại đem dâng Chúa Hằng Hữu bạc và đồng. Người thì dâng gỗ keo, tùy theo khả năng mình.
25 ௨௫ ஞான இருதயமுள்ள பெண்கள் எல்லோரும் தங்கள் கைகளினால் பிண்ணி, தாங்கள் பிண்ணின இளநீலநூலையும் இரத்தாம்பரநூலையும் சிவப்புநூலையும் மெல்லிய பஞ்சுநூலையும் கொண்டுவந்தார்கள்.
Các phụ nữ khéo tay kéo chỉ xanh, tím, đỏ, và dệt vải gai mịn.
26 ௨௬ எந்த பெண்களுடைய இருதயம் ஞான எழுப்புதல் அடைந்ததோ, அவர்கள் எல்லோரும் வெள்ளாட்டு முடியைத் திரித்தார்கள்.
Các bà khác tình nguyện dệt lông dê, theo khả năng mình.
27 ௨௭ தலைவர்கள் ஏபோத்திலும் மார்ப்பதக்கத்திலும் பதிக்கும் கோமேதகம் முதலிய இரத்தினங்களையும்,
Các nhà lãnh đạo dân chúng đem dâng bạch ngọc và các thứ ngọc khác để gắn ê-phót và bảng đeo ngực.
28 ௨௮ நறுமணப் பொருட்களையும், விளக்கெண்ணெயையும், அபிஷேகத் தைலத்திற்கும் வாசனை தூபத்திற்கும் வேண்டியவைகளையும் கொண்டுவந்தார்கள்.
Họ cũng dâng hương liệu để chế dầu xức thánh và hương thơm cùng với dầu thắp.
29 ௨௯ செய்யப்படும்படி யெகோவா மோசேயைக்கொண்டு கற்பித்த வேலைக்குரிய யாவையும் கொண்டுவர, இஸ்ரவேலர்களுக்குள் தங்களுடைய இருதயத்தில் உற்சாகமடைந்த ஆண்கள் பெண்கள் அனைவரும் யெகோவாவுக்குக் காணிக்கையை மனப்பூர்வமாக கொண்டுவந்தார்கள்.
Vậy trong toàn dân Ít-ra-ên, dù nam hay nữ, tất cả những người sẵn lòng đóng góp để thực hiện công tác Chúa Hằng Hữu truyền bảo Môi-se, đều tự nguyện mang lễ vật đến dâng lên Ngài.
30 ௩0 பின்பு மோசே இஸ்ரவேலர்களை நோக்கி: “பாருங்கள், யெகோவா யூதாவின் கோத்திரத்தில் ஊரின் மகனான ஊரியின் மகன் பெசலெயேலைப் பெயர்சொல்லி அழைத்து,
Môi-se bảo mọi người: “Chúa Hằng Hữu đã chỉ định đích danh Bê-sa-lê (con trai U-ri, cháu Hu-rơ, thuộc đại tộc Giu-đa)
31 ௩௧ அவன் மிகுந்த விசித்திரமான வேலைகளை யோசித்துச் செய்யவும், தங்கத்திலும் வெள்ளியிலும் வெண்கலத்திலும் வேலை செய்யவும்,
làm thợ chính, vì Ngài đã cho người này đầy Thánh Linh của Đức Chúa Trời, có tài năng, thông minh, và kiến thức.
32 ௩௨ இரத்தினங்களை முத்திரை வெட்டாக வெட்டிப் பதிக்கவும், மரத்தில் சித்திரவேலை செய்து எல்லா வித்தியாசமான வேலைகளைச் செய்யவும்,
Ông dùng vàng, bạc, và đồng làm ra các vật dụng tinh vi đẹp đẽ.
33 ௩௩ அவனுக்கு ஞானத்தையும் புத்தியையும் அறிவையும் அருளி, அவன் எல்லாவித வேலைகளையும் செய்யும்படி தேவ ஆவியினாலே அவனை நிரப்பினார்.
Ông còn cắt, khảm ngọc, và chạm gỗ. Chung qui để làm mọi công việc nghệ thuật khéo léo.
34 ௩௪ அவனுடைய இருதயத்திலும், தாண் கோத்திரத்தின் அகிசாமாகின் மகனாகிய அகோலியாபின் இருதயத்திலும், போதிக்கும் வரத்தையும் அருளினார்.
Còn một người thứ hai là Ô-hô-li-áp (con trai A-hi-sa-mạc, thuộc đại tộc Đan), cũng có tài để dạy lại cho người khác kiến thức của mình như Bê-sa-lê vậy.
35 ௩௫ சித்திரவேலையையும் சிற்பவேலையையும், இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்புநூலாலும் மெல்லிய பஞ்சுநூலாலும் செய்யப்படும் விசித்திரத் தையல் வேலையையும், எல்லா விசித்திர நெசவு வேலைகளையும் வித்தியாசமான வேலைகளை யூகிக்கிறவர்களும் செய்கிறவர்களும் நிறைவேற்றும் எல்லாவித வேலைகளையும் செய்யும்படி அவர்களுடைய இருதயத்தை ஞானத்தினால் நிரப்பினார்” என்றான்.
Chúa Hằng Hữu phú cho hai người này nhiều kỹ năng về nhiều ngành như thợ bạc, thợ cắt ngọc, chạm trổ, thêu thùa (dùng chỉ xanh, tím, và đỏ), dệt sợi (dùng các sợi gai mịn) và các công việc của nghệ nhân và ngươi thiết kế.”