< யாத்திராகமம் 33 >
1 ௧ யெகோவா மோசேயை நோக்கி: “நீயும், எகிப்து தேசத்திலிருந்து நீ அழைத்துக்கொண்டு வந்த மக்களும் இந்த இடத்தைவிட்டுப் புறப்பட்டு. உன்னுடைய சந்ததிக்குக் கொடுப்பேன் என்று நான் ஆபிரகாமுக்கும், ஈசாக்குக்கும், யாக்கோபுக்கும் ஆணையிட்டுக்கொடுத்த செழிப்பான தேசத்திற்குப் போங்கள்.
Then Yahweh spoke to Moses, “Go from here, you and the people whom you have brought up out of the land of Egypt. Go to the land about which I made an oath to Abraham, to Isaac, and to Jacob, when I said, 'I will give it to your descendants.'
2 ௨ நான் ஒரு தூதனை உங்களுக்கு முன்பாக அனுப்பி, கானானியர்களையும், எமோரியர்களையும், ஏத்தியர்களையும், பெரிசியர்களையும் ஏவியர்களையும், எபூசியர்களையும் துரத்திவிடுவேன்.
I will send an angel before you, and I will drive out the Canaanites, Amorites, Hittites, Perizzites, Hivites, and Jebusites.
3 ௩ ஆனாலும், வழியிலே நான் உங்களை அழிக்காதபடி, நான் உங்களிடம் வரமாட்டேன், நீங்கள் பிடிவாதமுள்ள மக்கள்” என்றார்.
Go to that land, which is flowing with milk and honey, but I will not go up with you, because you are a stubborn people. I might destroy you on the way.”
4 ௪ துக்கமான இவ்வார்த்தைகளை மக்கள் கேட்டபோது, ஒருவரும் தங்களுடைய ஆபரணங்களைப் போட்டுக்கொள்ளாமல் துக்கித்துக்கொண்டிருந்தார்கள்.
When the people heard these troubling words, they mourned, and no one put on any jewelry.
5 ௫ ஏனென்றால், “நீங்கள் பிடிவாதமுள்ள மக்கள், நான் ஒரு நிமிடத்தில் உங்கள் நடுவில் எழும்பி, உங்களை அழிப்பேன்; ஆகையால், நீங்கள் போட்டிருக்கிற உங்கள் ஆபரணங்களைக் கழற்றிப்போடுங்கள்; அப்பொழுது நான் உங்களுக்குச் செய்யவேண்டியதைக்குறித்துத் தீர்மானிப்பேன் என்று இஸ்ரவேலர்களுக்குச் சொல்” என்று யெகோவா மோசேயோடு சொல்லியிருந்தார்.
Yahweh had said to Moses, “Say to the Israelites, 'You are a stubborn people. If I went among you for even one moment, I would destroy you. So now, take off your jewelry so that I may decide what to do with you.'”
6 ௬ ஆகையால், இஸ்ரவேலர்கள் ஓரேப் மலை அருகே தங்களுடைய ஆபரணங்களைக் கழற்றிப்போட்டார்கள்.
So the Israelites wore no jewelry from Mount Horeb onward.
7 ௭ மோசே கூடாரத்தை பெயர்த்து, அதை முகாமிற்கு வெளியே தூரத்திலே போட்டு, அதற்கு ஆசரிப்புக்கூடாரம் என்று பெயரிட்டான். யெகோவாவைத் தேடும் யாவரும் முகாமிற்குத் தூரமான கூடாரத்திற்குப் போவார்கள்.
Moses took a tent and pitched it outside the camp, some distance from the camp. He called it the tent of meeting. Everyone who asked Yahweh for anything went out to the tent of meeting, outside the camp.
8 ௮ மோசே கூடாரத்திற்குப் போகும்போது, மக்கள் எல்லோரும் எழுந்து, தங்கள் தங்கள் கூடாரவாசலில் நின்றுகொண்டு, அவன் கூடாரத்திற்குள் நுழையும்வரை, அவனை பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
When Moses would go out to the tent, all the people would stand up at their tent entrances and look at Moses until he had gone inside.
9 ௯ மோசே கூடாரத்திற்குள் நுழையும்போது, மேகமண்டலம் இறங்கி, கூடாரவாசலில் நின்றது; யெகோவா மோசேயோடு பேசினார்.
Whenever Moses entered the tent, the pillar of cloud would come down and stand at the tent entrance, and Yahweh would speak with Moses.
10 ௧0 மக்கள் எல்லோரும் மேகமண்டலம் கூடாரவாசலில் நிற்பதைப் பார்த்தார்கள்; மக்கள் எல்லோரும் எழுந்திருந்து, தங்கள் தங்கள் கூடாரவாசலில் பணிந்துகொண்டார்கள்.
Whenever all the people saw the pillar of cloud stand at the entrance to the tent, they would get up and worship, every man at his own tent entrance.
11 ௧௧ ஒருவன் தன்னுடைய நண்பனோடு பேசுவதுபோல, யெகோவா மோசேயோடு முகமுகமாகப் பேசினார்; பின்பு, அவன் முகாமிற்குத் திரும்பினான்; நூனின் மகனாகிய யோசுவா என்னும் அவனுடைய பணிவிடைக்காரனாகிய வாலிபன் ஆசரிப்புக்கூடாரத்தைவிட்டுப் போகாமல் இருந்தான்.
Yahweh would speak to Moses face to face, as a man speaks to his friend. Then Moses would return to the camp, but his servant Joshua son of Nun, a young man, would stay in the tent.
12 ௧௨ மோசே யெகோவாவை நோக்கி: “தேவரீர் இந்த மக்களை அழைத்துக்கொண்டுபோ என்று சொன்னீர்; ஆகிலும், என்னோடுகூட இன்னாரை அனுப்புவேன் என்பதை எனக்கு நீர் அறிவிக்கவில்லை; என்றாலும், உன்னைப் பெயர்சொல்லி அழைத்து அறிந்திருக்கிறேன் என்றும், என்னுடைய கண்களில் உனக்குக் கிருபை கிடைத்தது என்றும், தேவரீர் சொன்னதுண்டு;
Moses said to Yahweh, “See, you have been saying to me, 'Take this people on their journey,' but you have not let me know whom you will send with me. You have said, 'I know you by name, and you have also found favor in my eyes.'
13 ௧௩ உம்முடைய கண்களில் இப்பொழுது எனக்குக் கிருபை கிடைத்ததானால் நான் உம்மை அறிவதற்கும், உம்முடைய கண்களில் எனக்குக் கிருபை கிடைப்பதற்கும், உம்முடைய வழியை எனக்கு அறிவியும்; இந்த தேசம் உம்முடைய மக்களென்று நினைத்தருளும்” என்றான்.
Now if I have found favor in your eyes, show me your ways so that I may know you and continue to find favor in your eyes. Remember that this nation is your people.”
14 ௧௪ அதற்கு அவர்: “என்னுடைய சமுகம் உனக்கு முன்பாகச் செல்லும், நான் உனக்கு இளைப்பாறுதல் தருவேன்” என்றார்.
Yahweh answered, “My own presence will go with you, and I will give you rest.”
15 ௧௫ அப்பொழுது அவன் அவரை நோக்கி: “உம்முடைய சமுகம் என்னோடு வராமற்போனால், எங்களை இந்த இடத்திலிருந்து கொண்டுபோகாமல் இரும்.
Moses said to him, “If your presence does not go with us, do not take us up from here.
16 ௧௬ எனக்கும் உமது மக்களுக்கும் உம்முடைய கண்களிலே கிருபை கிடைத்ததென்பது எதினால் தெரியவரும்; நீர் எங்களுடன் வருவதினால் அல்லவா? இப்படியே பூமியின்மேலுள்ள மக்கள் எல்லோரையும்விட, நானும் உம்முடைய மக்களும் விசேஷித்தவர்கள் என்று விளங்கும்” என்றான்.
For otherwise, how will it be known that I have found favor in your eyes, I and your people? Will it not only be if you go with us so that I and your people are different from all the other peoples that are on the surface of the earth?”
17 ௧௭ அப்பொழுது யெகோவா மோசேயை நோக்கி: “நீ சொன்ன இந்த வார்த்தையின்படி செய்வேன்; என்னுடைய கண்களில் உனக்குக் கிருபை கிடைத்தது; உன்னைப் பெயர்சொல்லி அழைத்து அறிந்திருக்கிறேன்” என்றார்.
Yahweh said to Moses, “I will also do this thing that you have requested, for you have found favor in my eyes, and I know you by name.”
18 ௧௮ அப்பொழுது அவன்: “உம்முடைய மகிமையை எனக்குக் காண்பித்தருளும்” என்றான்.
Moses said, “Please show me your glory.”
19 ௧௯ அதற்கு அவர்: “என்னுடைய எல்லா தயவையும் நான் உனக்கு முன்பாகக் கடந்துபோகச்செய்து, யெகோவாவுடைய நாமத்தை உனக்கு முன்பாகக்கூறுவேன்; எவன்மேல் கிருபையாக இருக்க விருப்பமாக இருப்பேனோ, அவன்மேல் கிருபையாக இருப்பேன்; எவன்மேல் இரக்கமாக இருக்க விருப்பமாக இருப்பேனோ, அவன்மேல் இரக்கமாக இருப்பேன் என்று சொல்லி,
Yahweh said, “I will make all my goodness pass before you, and I will proclaim my name 'Yahweh' before you. I will be gracious to whom I will be gracious, and I will show mercy on whom I will show mercy.”
20 ௨0 நீ என்னுடைய முகத்தைக் காணமாட்டாய், ஒரு மனிதனும் என்னைக் கண்டு உயிரோடிருக்கமுடியாது” என்றார்.
But Yahweh said, “You may not see my face, for no one can see me and live.”
21 ௨௧ பின்னும் யெகோவா: “இதோ, என் அருகில் ஒரு இடம் உண்டு; நீ அங்கே கன்மலையில் நில்லு.
Yahweh said, “See, here is a place by me; you will stand on this rock.
22 ௨௨ என்னுடைய மகிமை கடந்துபோகும்போது, நான் உன்னை அந்தக் கன்மலையின் வெடிப்பிலே வைத்து, நான் கடந்துபோகும்வரை என்னுடைய கரத்தினால் உன்னை மூடுவேன்;
While my glory passes by, I will put you in a crevice of the rock and cover you with my hand until I have passed by.
23 ௨௩ பின்பு, என்னுடைய கரத்தை எடுப்பேன்; அப்பொழுது என்னுடைய பின்பக்கத்தைக் காண்பாய்; என்னுடைய முகமோ காணப்படாது” என்றார்.
Then I will take away my hand, and you will see my back, but my face will not be seen.”