< யாத்திராகமம் 30 >

1 “தூபங்காட்டுவதற்கு ஒரு தூபபீடத்தையும் சீத்திம் மரத்தால் உண்டாக்கவேண்டும்.
“Hãy đóng một bàn thờ xông hương bằng gỗ keo.
2 அது ஒரு முழ நீளமும் ஒரு முழ அகலமுமான சதுரமும், இரண்டு முழ உயரமுமாக இருக்கவேண்டும், அதனுடைய கொம்புகள் அதனோடு ஒன்றாக இருக்கவேண்டும்.
Mặt bàn vuông, mỗi bề 0,46 mét, cao 0,92 mét, có các sừng được gắn liền với bàn thờ.
3 அதின் மேல்பக்கத்தையும் சுற்றுப்புறத்தையும் அதின் கொம்புகளையும் தகட்டால் மூடி, சுற்றிலும் அதற்குப் பொன்விளிம்பை உண்டாக்கி,
Lấy vàng ròng bọc mặt bàn, cạnh bàn, các sừng và viền khắp chung quanh bàn.
4 அந்த விளிம்பின்கீழே அதின் இரண்டு பக்கங்களிலும் அதைச் சுமக்கும் தண்டுகளின் இடங்களாகிய அதின் இரண்டு பக்கத்து இரண்டு மூலைகளிலும் இரண்டு பொன் வளையங்களை உண்டாக்கவேண்டும்.
Làm mỗi bên hai khoen vàng gắn ngay bên dưới đường viền, để giữ đòn khiêng.
5 அந்தத் தண்டுகளையும் சீத்திம் மரத்தால் செய்து, அவைகளையும் பொன்தகட்டால் மூடவேண்டும்.
Đòn khiêng được làm bằng gỗ keo bọc vàng.
6 சாட்சிப்பெட்டிக்கு முன்பாக இருக்கும் திரைச்சீலைக்கும், நான் உன்னைச் சந்திக்கும் இடமாகிய சாட்சி சந்நிதியின்மேலுள்ள கிருபாசனத்திற்கும் முன்பாக அதை வைக்கவேண்டும்.
Bàn thờ này được đặt ở trước bức màn che Hòm Giao Ước và nắp chuộc tội trên Hòm, là nơi Ta gặp con.
7 ஆரோன் காலைதோறும் அதின்மேல் நறுமண தூபம்காட்டவேண்டும்; மாலையில் விளக்கேற்றும்போதும் அதின்மேல் தூபம்காட்டவேண்டும்; விளக்குகளை விளக்கும்போதும் அதின்மேல் தூபம்காட்டவேண்டும்.
Mỗi buổi sáng, lúc A-rôn sửa soạn đèn, người sẽ đốt hương thơm trên bàn thờ.
8 உங்களுடைய தலைமுறைதோறும் யெகோவாவுடைய சந்நிதியில் காட்டவேண்டிய நிரந்தர தூபம் இதுவே.
Và mỗi buổi tối, khi A-rôn đốt đèn, người cũng sẽ đốt hương. Như vậy, hương sẽ được đốt liên tục trước mặt Chúa Hằng Hữu, từ thế hệ này sang thế hệ khác.
9 அதின்மேல் அந்நிய தூபத்தையோ, தகனபலியையோ, ஆகாரபலியையோ படைக்கவேண்டாம்; அதின்மேல் பானபலியை ஊற்றவும் வேண்டாம்.
Trên bàn thờ này không được đốt hương lạ, cũng không dâng tế lễ thiêu, tế lễ chay, hay tế lễ thức uống.
10 ௧0 வருடத்தில் ஒருமுறை ஆரோன் பாவநிவாரணபலியின் இரத்தத்தால் அதின் கொம்புகளின்மேல் பரிகாரம் செய்யவேண்டும்; உங்களுடைய தலைமுறைதோறும் வருடத்தில் ஒருமுறை அதின்மேல் பரிகாரம் செய்யவேண்டும்; அது யெகோவாவுக்கு மகா பரிசுத்தமானது என்றார்.
Hằng năm, A-rôn phải làm lễ chuộc tội tại bàn thờ, lấy máu con sinh tế chuộc tội bôi trên sừng bàn thờ. Lễ này phải làm mỗi năm, từ thế hệ này sang thế hệ khác, vì đây là một bàn thờ Chúa Hằng Hữu rất thánh.”
11 ௧௧ பின்னும் யெகோவா மோசேயை நோக்கி:
Chúa Hằng Hữu phán dạy Môi-se:
12 ௧௨ “நீ இஸ்ரவேலர்களை அவர்கள் எண்ணிக்கையின்படி கணக்குப்பார்க்க, அவர்களை எண்ணும்போது, அவர்களுக்குள்ளே ஒரு வாதை உண்டாகாதபடி, அவர்களில் ஒவ்வொருவனும் எண்ணப்படும் நேரத்தில் தன்தன் ஆத்துமாவுக்காகக் யெகோவாவுக்கு மீட்கும் பொருளைக் கொடுக்கவேண்டும்.
“Khi nào con kiểm kê dân số Ít-ra-ên, mỗi công dân được kiểm kê phải nộp cho Ta một món tiền đền mạng, như thế họ sẽ không bị tai nạn gì trong cuộc kiểm kê này.
13 ௧௩ எண்ணப்படுகிறவர்களின் கணக்கிலே சேருகிற ஒவ்வொருவனும் பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கல் கணக்கின்படி அரைச்சேக்கல் கொடுக்கவேண்டும்; ஒரு சேக்கலுக்கு இருபது கேரா; யெகோவாவுக்குச் செலுத்தப்படுவது அரைச்சேக்கல்.
Mỗi người phải nộp nửa đồng bạc theo tiêu chuẩn tiền tệ của Nơi Thánh là lễ vật dâng lên Chúa Hằng Hữu.
14 ௧௪ எண்ணப்படுகிறவர்களின் கணக்கிலே சேருகிற இருபது வயது முதற்கொண்டு அதற்கு மேற்பட்ட ஒவ்வொருவனும் அதைக் யெகோவாவுக்குச் செலுத்தவேண்டும்.
Các công dân từ hai mươi tuổi trở lên sẽ được kiểm kê và nộp tiền này cho Chúa Hằng Hữu.
15 ௧௫ உங்கள் ஆத்துமாக்களுக்காகப் பாவநிவிர்த்திசெய்யும்படி நீங்கள் யெகோவாவுக்குக் காணிக்கை செலுத்தும்போது, செல்வந்தன் அரைச்சேக்கலுக்கு அதிகமாகக் கொடுக்கவும் வேண்டாம், தரித்திரன் அதற்குக் குறைவாகக் கொடுக்கவும் வேண்டாம்.
Người giàu không nộp hơn, nghèo không nộp kém, vì đây là một lễ vật mỗi người dâng lên Chúa Hằng Hữu để chuộc tội cho chính mình.
16 ௧௬ அந்த பாவநிவிர்த்தி பணத்தை நீ இஸ்ரவேலர்கள் கையில் வாங்கி, அதை ஆசரிப்புக்கூடாரத்தின் திருப்பணிக்குக் கொடுக்கவேண்டும்; அது யெகோவாவுடைய சந்நிதியில் உங்கள் ஆத்துமாக்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்வதற்கு, இஸ்ரவேலர்களுக்கு ஞாபகக்குறியாக இருக்கும் என்றார்.
Dùng tiền này vào công việc Đền Tạm, trước mặt Chúa Hằng Hữu, để Ta lưu ý và tha tội cho họ.”
17 ௧௭ பின்னும் யெகோவா மோசேயை நோக்கி:
Chúa Hằng Hữu phán bảo Môi-se:
18 ௧௮ “கழுவுவதற்கு வெண்கலத்தால் ஒரு தொட்டியையும், வெண்கலத்தால் அதின் பாதத்தையும் உண்டாக்கி, அதை ஆசரிப்புக்கூடாரத்திற்கும் பலிபீடத்திற்கும் நடுவே வைத்து, அதிலே தண்ணீர் ஊற்றவேண்டும்.
“Hãy làm một cái bồn bằng đồng có chân cũng bằng đồng. Đặt bồn giữa Đền Tạm và bàn thờ, rồi đổ nước vào bồn.
19 ௧௯ அதனிடம் ஆரோனும் அவனுடைய மகன்களும் தங்களுடைய கைகளையும் தங்களுடைய கால்களையும் கழுவவேண்டும்.
A-rôn và các con trai người sẽ rửa tay, và rửa chân tại đó.
20 ௨0 அவர்கள் ஆசரிப்புக்கூடாரத்திற்குள் நுழையும்போதும், யெகோவாவுக்குத் தகனத்தைக் கொளுத்தவும் பலிபீடத்தில் ஆராதனைசெய்ய சேரும்போதும், அவர்கள் சாகாதபடி தண்ணீரினால் தங்களைக் கழுவவேண்டும்.
Họ phải rửa tay và chân mình trước khi vào Đền Tạm hoặc đến gần bàn thờ để dâng tế lễ thiêu lên Chúa Hằng Hữu, nếu không họ sẽ chết.
21 ௨௧ அவர்கள் சாகாதபடி தங்களுடைய கைகளையும் தங்களுடைய கால்களையும் கழுவவேண்டும்; இது தலைமுறைதோறும் அவனுக்கும் அவனுடைய சந்ததியார்களுக்கும் நிரந்தர கட்டளையாக இருக்கும் என்றார்.
Lệ này áp dụng cho A-rôn và con cháu người, từ thế hệ này sang thế hệ khác.”
22 ௨௨ பின்னும் யெகோவா மோசேயை நோக்கி:
Chúa Hằng Hữu phán bảo Môi-se:
23 ௨௩ “மேன்மையான நறுமணப்பொருட்களாகிய சுத்தமான வெள்ளைப்போளத்தில் பரிசுத்த இடத்தின் சேக்கலின்படி ஐந்நூறு சேக்கல் எடையையும், நறுமணப்பட்டையிலே அதில் பாதியாகிய இருநூற்று ஐம்பது சேக்கல் எடையையும், சுகந்த வசம்பில் இருநூற்று ஐம்பது சேக்கல் எடையையும்,
“Hãy lựa chọn các một dược thượng hạng, gồm có: 5,7 ký nhựa thơm nguyên chất, 2,9 ký hương quế, 2,9 ký hương thạch xương bồ,
24 ௨௪ இலவங்கப்பட்டையில் ஐந்நூறு சேக்கல் எடையையும், ஒலிவ எண்ணெயில் ஒரு குடம் எண்ணெயையும் எடுத்து,
và 5,7 ký quế bì, theo cân Nơi Thánh, cùng với 3,8 lít dầu ô-liu.
25 ௨௫ அதினால், பரிமளத்தைலக்காரன் செய்வதுபோல, கூட்டப்பட்ட பரிமளத்தைலமாகிய சுத்தமான அபிஷேக தைலத்தை உண்டாக்கு; அது பரிசுத்த அபிஷேக தைலமாக இருப்பதாக.
Dùng các hương liệu này chế ra một thứ dầu xức thánh, theo phép hòa hương.
26 ௨௬ அதினாலே ஆசரிப்புக்கூடாரத்தையும், சாட்சிப்பெட்டியையும்,
Dùng dầu này xức lên Đền Tạm, Hòm Giao Ước,
27 ௨௭ மேஜையையும், அதின் பணிப்பொருட்கள் எல்லாவற்றையும், குத்துவிளக்கையும், அதின் கருவிகளையும், தூப பீடத்தையும்,
bàn, và dụng cụ của bàn, chân đèn và dụng cụ đốt đèn, bàn thờ xông hương,
28 ௨௮ தகன பலிபீடத்தையும் அதின் பணிப்பொருட்கள் எல்லாவற்றையும், தொட்டியையும், அதின் பாதத்தையும் அபிஷேகம்செய்து,
bàn thờ dâng tế lễ thiêu và dụng cụ của bàn thờ, bồn rửa và chân bồn.
29 ௨௯ அவைகள் மகா பரிசுத்தமாக இருக்கும்படி, அவைகளைப் பரிசுத்தப்படுத்தவேண்டும்; அவைகளைத் தொடுகிறதெல்லாம் பரிசுத்தமாக இருக்கும்.
Như vậy, các vật này sẽ được thánh hóa, được dành riêng cho Chúa Hằng Hữu, bất kỳ vật gì đụng đến chúng cũng đều được thánh hóa.
30 ௩0 ஆரோனும் அவனுடைய மகன்களும் எனக்கு ஆசாரிய ஊழியம் செய்யும்படி, நீ அவர்களை அபிஷேகம்செய்து, அவர்களைப் பரிசுத்தப்படுத்தவேண்டும்.
Hãy xức dầu đó cho A-rôn và các con trai người, đặc cử họ làm chức tế lễ thánh phục vụ Ta.
31 ௩௧ இஸ்ரவேலர்களுடன் நீ பேசிச் சொல்லவேண்டியது: உங்களுடைய தலைமுறைதோறும் இது எனக்குரிய பரிசுத்த அபிஷேகத் தைலமாக இருக்கவேண்டும்.
Nói cho người Ít-ra-ên biết rằng dầu này là dầu xức thánh của Ta mãi mãi.
32 ௩௨ இது மனிதர்களுடைய சரீரத்தின்மேல் ஊற்றப்படக்கூடாது; இது செய்யப்பட்ட முறையின்படி அவர்கள் வேறொரு தைலத்தைச் செய்யவும்கூடாது; இது பரிசுத்தமானது, இது உங்களுக்குப் பரிசுத்தமாக இருக்கும்.
Không được dùng dầu này xức cho người thường, cũng không ai được chế dầu theo công thức này để dùng, vì đó là dầu thánh của Ta, cũng là dầu thánh của các ngươi.
33 ௩௩ இந்த முறையின்படியே தைலங்கூட்டுகிறவனும், அதில் எடுத்து அந்நியன்மேல் ஊற்றுகிறவனும், தன்னுடைய மக்களில் இராதபடி அறுப்புண்டுபோகவேண்டும் என்று சொல் என்றார்.
Người nào chế dầu theo công thức này hoặc dùng dầu này xức cho một người thường sẽ bị trục xuất khỏi cộng đồng Ít-ra-ên.”
34 ௩௪ “பின்னும் யெகோவா மோசேயை நோக்கி: சுத்த வெள்ளைப்போளமும் குங்கிலியமும் அல்பான் பிசினுமாகிய கந்தவர்க்கங்களையும் சுத்தமான சாம்பிராணியையும் நீ சமஎடையாக எடுத்து,
Chúa Hằng Hữu lại phán dạy Môi-se: “Hãy dùng các hương liệu gồm có tô hợp hương, loa yểm hương, phong tử hương, và nhũ hương nguyên chất, phân lượng bằng nhau.
35 ௩௫ தைலக்காரன் செய்கிறதுபோல அதற்குப் பரிமளமேற்றி, தூய்மையான பரிசுத்த தூபவர்க்கமாக்கி,
Theo phép hòa hợp hương liệu, chế ra một thứ hương để đốt có pha muối. Hương này sẽ là thuần chất và thánh.
36 ௩௬ அதில் கொஞ்சம் எடுத்துப் பொடியாக இடித்து, நான் உன்னைச் சந்திக்கும் ஆசரிப்புக்கூடாரத்திலிருக்கும் சாட்சி சந்நிதியில் வைக்கவேண்டும்; அது உங்களுக்கு மகா பரிசுத்தமாக இருக்கவேண்டும்.
Đem một ít hương này nghiền ra bột, để một ít bột hương trước Hòm Giao Ước, nơi Ta gặp con trong Đền Tạm. Hương này rất thánh.
37 ௩௭ இந்தத் தூபவர்க்கத்தை நீ செய்யவேண்டிய முறையின்படி உங்களுக்காகச் செய்துகொள்ளக்கூடாது; இது யேகோவாக்கென்று உனக்குப் பரிசுத்தமாக இருக்கவேண்டும்.
Không ai được làm hương theo công thức này để dùng, vì đây là hương thánh của Chúa Hằng Hữu, cũng là hương thánh của các ngươi.
38 ௩௮ இதற்கு ஒப்பானதை முகருகிறதற்காகச் செய்கிறவன் தன்னுடைய மக்களில் இல்லாதபடி துண்டிக்கப்படவேண்டும் என்றார்.
Ai làm hương này cho mình sẽ bị trục xuất khỏi cộng đồng Ít-ra-ên.”

< யாத்திராகமம் 30 >