< யாத்திராகமம் 28 >
1 ௧ “உன்னுடைய சகோதரனாகிய ஆரோன் எனக்கு ஆசாரிய ஊழியம் செய்யும்படி, நீ ஆரோனையும் அவனுடன் அவனுடைய மகன்களாகிய நாதாப், அபியூ, எலெயாசார், இத்தாமார் என்னும் ஆரோனின் மகன்களையும் இஸ்ரவேலர்களிலிருந்து பிரித்து, உன்னிடம் சேர்த்துக்கொள்.
౧“నాకు యాజకత్వం చేయడానికి నీ సోదరుడు అహరోనును అతని కొడుకులు నాదాబును, అబీహును, ఎలియాజరును ఈతామారును ఇశ్రాయేలీయుల్లో నుండి నీ దగ్గరికి పిలిపించు.
2 ௨ உன்னுடைய சகோதரனாகிய ஆரோனுக்கு, மகிமையும் அலங்காரமுமாக இருக்கும்படி, பரிசுத்த ஆடைகளை உண்டாக்கு.
౨అతనికి గౌరవం, వైభవం కలిగేలా నీ సోదరుడు అహరోనుకు ప్రతిష్ఠిత వస్త్రాలు కుట్టించాలి.
3 ௩ ஆரோன் எனக்கு ஆசாரிய ஊழியம் செய்ய அவனைப் பரிசுத்தப்படுத்தும்படி அவனுக்கு ஆடைகளை உண்டாக்க, நான் ஞானத்தின் ஆவியால் நிரப்பின விவேகமான இருதயமுள்ள எல்லாரோடும் நீ சொல்லு.
౩అహరోను నాకు యాజక సేవ జరిగించేలా నీవు అతణ్ణి ప్రత్యేక పరచడం కోసం అతని దుస్తులు కుట్టించాలి. నేను జ్ఞానాత్మతో నింపిన నిపుణులు అందరికీ ఆజ్ఞ జారీ చెయ్యి.
4 ௪ அவர்கள் உண்டாக்கவேண்டிய ஆடைகள்; மார்ப்பதக்கமும், ஏபோத்தும், அங்கியும், வேலைப்பாடுடன் நெய்யப்பட்ட உள்சட்டையும், தலைப்பாகையும், இடுப்புக்கச்சையுமே. உன்னுடைய சகோதரனாகிய ஆரோன் எனக்கு ஆசாரிய ஊழியம் செய்யும்படி, அவனுக்கும் அவனுடைய மகன்களுக்கும் பரிசுத்த ஆடைகளை உண்டாக்கவேண்டும்.
౪వారు కుట్టవలసిన దుస్తులు ఇవి. వక్ష పతకం, ఏఫోదు, నిలువుటంగీ, రంగు దారాలతో కుట్టిన చొక్కా, తల పాగా, నడికట్టు. అతడు నాకు యాజకుడై యుండేలా వారు నీ సోదరుడు అహరోనుకు, అతని కుమారులకు ప్రతిష్ఠిత దుస్తులు కుట్టించాలి.
5 ௫ அவர்கள் பொன்னும் இளநீலநூலும் இரத்தாம்பரநூலும் சிவப்புநூலும் மெல்லிய பஞ்சுநூலும் சேகரிக்கட்டும்.
౫కళాకారులు బంగారు, నీల, ధూమ్ర, రక్త వర్ణాలు గల నూలును సన్ననారను దీనికి ఉపయోగించాలి.
6 ௬ “ஏபோத்தைப் பொன்னினாலும் இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்புநூலாலும் திரித்த மெல்லிய பஞ்சுநூலாலும் விசித்திரவேலையாகச் செய்யட்டும்.
౬బంగారం నీల ధూమ్ర రక్త వర్ణాల ఏఫోదును పేనిన సన్న నారతో కళాకారుని నైపుణ్యంతో చెయ్యాలి.
7 ௭ அது ஒன்றாக இணைக்கப்படும்படி, இரண்டு தோள்துண்டுகளின்மேலும், அதின் இரண்டு முனைகளும் சேர்க்கப்படவேண்டும்.
౭రెండు భుజాలకు సరిపడేలా రెండు పై అంచుల్లో కూర్చిన పట్టీలు దానికి ఉండాలి.
8 ௮ அந்த ஏபோத்தின்மேல் இருக்கவேண்டிய வேலைப்பாடு மிகுந்த வார்க்கச்சை அந்த வேலையைப்போலவே, பொன்னினாலும் இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்புநூலாலும் திரித்த மெல்லிய பஞ்சுநூலாலும் செய்யப்பட்டு, அதனோடு ஒன்றாக இருக்கவேண்டும்.
౮ఏఫోదుపై ధరించడానికి పనితనంతో చేసిన నడికట్టు ఏకాండంగా ఉండి, బంగారంతో, నీల, ధూమ్ర, రక్త వర్ణాల నూలుతో, పేనిన సన్ననారతో కుట్టాలి.
9 ௯ பின்னும் நீ இரண்டு கோமேதகக்கற்களை எடுத்து, இஸ்ரவேலின் பன்னிரண்டு மகன்களின் பெயர்களை அவைகளில் வெட்டுவாயாக.
౯నీవు రెండు లేత పచ్చలను తీసుకుని వాటి మీద ఇశ్రాయేలీయుల పేర్లను అంటే వారి పుట్టుక క్రమం చొప్పున
10 ௧0 அவர்கள் பிறந்த வரிசையின்படி, அவர்களுடைய பெயர்களில் ஆறு பெயர்கள் ஒரு கல்லிலும், மற்ற ஆறு பெயர்கள் மறுகல்லிலும் இருக்கவேண்டும்.
౧౦ఒక రత్నం మీద ఆరు పేర్లు, రెండవ రత్నం మీద తక్కిన ఆరు పేర్లను చెక్కించాలి.
11 ௧௧ இரத்தினங்களில் முத்திரை வெட்டுகிறவர்கள் செய்யும் வேலைக்கு ஒப்பாக அந்த இரண்டு கற்களிலும் இஸ்ரவேலின் பன்னிரண்டு மகன்களின் பெயர்களை வெட்டி, அவைகளைப் பொன் குவளைகளில் பதிப்பாயாக.
౧౧ముద్ర మీద చెక్కిన పనిలాగా ఆ రెండు రత్నాలపై ఇశ్రాయేలీయుల పేర్లు చెక్కి బంగారు కుదురుల్లో వాటిని పొదగాలి.
12 ௧௨ ஆரோன் யெகோவாவுக்கு முன்பாகத் தன்னுடைய இரண்டு தோள்களின்மேலும் இஸ்ரவேல் மகன்களின் பெயர்களை ஞாபகக்குறியாகச் சுமந்துவர, அந்த இரண்டு கற்களையும் ஏபோத்து தோள்களின்மேல் அவர்களை நினைக்கும்படி கற்களாக வைக்கவேண்டும்.
౧౨అప్పుడు ఇశ్రాయేలీయులకు స్మారక సూచకమైన ఆ రెండు రత్నాలను ఏఫోదు భుజాలపై నిలపాలి. ఆ విధంగా అహరోను తన రెండు భుజాలపై యెహోవా సన్నిధిలో జ్ఞాపక సూచనగా ఆ పేర్లను ధరిస్తాడు.
13 ௧௩ “பொன்னினால் வளையங்களைச்செய்து,
౧౩బంగారు కుదురులను తయారు చెయ్యాలి.
14 ௧௪ சரியான அளவுக்குப் பின்னல்வேலையான இரண்டு சங்கிலிகளையும், சுத்தப்பொன்னினால் உண்டாக்கி, அந்தச் சங்கிலிகளை அந்த வளையங்களில் பூட்டுவாயாக.
౧౪మేలిమి బంగారంతో రెండు అల్లిక గొలుసులను చెయ్యాలి. ఆ అల్లిక పనికి అల్లిన గొలుసులను తగిలించాలి.
15 ௧௫ “நியாயவிதி மார்ப்பதக்கத்தையும் விசித்திரவேலையாகச் செய்; அதை ஏபோத்து வேலைக்கு ஒப்பாகப் பொன்னினாலும் இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் திரித்த மெல்லிய பஞ்சுநூலாலும் செய்வாயாக.
౧౫కళాకారుని నైపుణ్యంతో న్యాయనిర్ణయ పతకాన్ని చెయ్యాలి. ఏఫోదు పని లాగా దాన్ని చెయ్యాలి. బంగారంతో, నీల ధూమ్ర రక్త వర్ణాల నూలుతో పేనిన సన్ననారతో దాన్ని చెయ్యాలి.
16 ௧௬ அது சதுரமும் இரட்டையும், ஒரு சாண் நீளமும் ஒரு சாண் அகலமுமாக இருக்கவேண்டும்.
౧౬నలుచదరంగా ఉన్న ఆ పతకాన్ని మడత పెట్టాలి. దాని పొడవు జానెడు, వెడల్పు జానెడు ఉండాలి.
17 ௧௭ அதிலே நான்கு வரிசை இரத்தினக்கற்களை நிறையப் பதிக்கவும்; முதலாம் வரிசை பத்மராகமும் புஷ்பராகமும் மாணிக்கமும்,
౧౭దానిలో నాలుగు వరసల్లో రత్నాలుండేలా రత్నాల కుదుర్లు చెయ్యాలి. మొదటి వరస మాణిక్యం, గోమేధికం, మరకతం.
18 ௧௮ இரண்டாம் வரிசை மரகதமும் இந்திரநீலமும் வைரமும்,
౧౮రెండో వరస పద్మరాగం, నీలం, వజ్రం.
19 ௧௯ மூன்றாம் வரிசை கெம்பும் வைடூரியமும் சுகந்தியும்,
౧౯మూడవది గారుత్మతం, యష్మురాయి, ఇంద్రనీలం.
20 ௨0 நான்காம் வரிசை படிகப்பச்சையும் கோமேதகமும் யஸ்பியுமாக இருக்கட்டும்; இவைகள் அந்தந்த வரிசையில் பொன்னினாலே பதித்திருக்கவேண்டும்.
౨౦నాలుగవ వరస గరుడ పచ్చ, సులిమాని రాయి, సూర్యకాంతం. వాటిని బంగారు కుదురుల్లో పొదగాలి.
21 ௨௧ இந்தக் கற்கள் இஸ்ரவேல் மகன்களின் பெயர்களின்படியே பன்னிரண்டும், அவர்களுடைய பெயர்கள் அவைகளில் வெட்டப்பட்டவைகளுமாக இருக்கவேண்டும்; பன்னிரண்டு கோத்திரங்களில் ஒவ்வொன்றினுடைய பெயர் ஒவ்வொன்றிலே முத்திரைவெட்டாக வெட்டியிருக்கவேண்டும்.
౨౧ఆ రత్నాలపై ఇశ్రాయేలీయుల పేర్ల ప్రకారం పన్నెండు పేర్లు ఉండాలి. ముద్ర మీద చెక్కినట్టు వారిలో ఒక్కొక్క పేరు చొప్పున పన్నెండు గోత్రాల పేర్లు ఉండాలి.
22 ௨௨ மார்ப்பதக்கத்திற்கு அதின் பக்கங்களிலே பின்னல்வேலையான சுத்தப்பொன் சங்கிலிகளையும் செய்து,
౨౨ఆ పతకాన్ని అల్లిక పనిగా పేనిన గొలుసులతో మేలిమి బంగారంతో చెయ్యాలి.
23 ௨௩ அந்த மார்ப்பதக்கத்திற்கு இரண்டு பொன் வளையங்களையும் செய்து, அந்த இரண்டு வளையங்களையும் மார்ப்பதக்கத்தின் இரண்டு பக்கங்களிலே வைத்து,
౨౩పతకానికి రెండు బంగారు రింగులు చేసి
24 ௨௪ பொன்னினால் செய்த அந்த இரண்டு பின்னல் வேலையான சங்கிலிகளையும் மார்ப்பதக்கத்தின் பக்கங்களில் இருக்கிற இரண்டு வளையங்களில் மாட்டி,
౨౪ఆ రెండు రింగులను పతకపు రెండు కొసలకు అల్లిన ఆ రెండు బంగారు గొలుసులను తగిలించాలి.
25 ௨௫ அந்த இரண்டு பின்னல் வேலையான சங்கிலிகளின் இரண்டு முனைகளை ஏபோத்துத் தோள்துண்டின்மேல் அதின் முன்பக்கத்தில் இருக்கிற இரண்டு வளையங்களில் மாட்டவேண்டும்.
౨౫అల్లిన ఆ రెండు గొలుసుల కొసలను రెండు కుదురులకు తగిలించి ఏఫోదు ముందు వైపు భుజాలపై కట్టాలి.
26 ௨௬ நீ இரண்டு பொன்வளையங்களை செய்து, அவைகளை ஏபோத்தின் கிழக்குபக்கத்திற்கு எதிரான மார்ப்பதக்கத்தினுடைய மற்ற இரண்டு பக்கங்களிலும் அதனுடைய ஓரத்திற்குள்ளாக வைத்து,
౨౬నీవు బంగారంతో రెండు రింగులు చేసి ఏఫోదు ముందు భాగంలో పతకం లోపలి అంచున దాని రెండు కొసలకు వాటిని తగిలించాలి.
27 ௨௭ வேறு இரண்டு பொன்வளையங்களைச் செய்து, அவைகளை ஏபோத்தின் முன்பக்கத்து இரண்டு கீழ்ப்பக்கங்களில் அதின் இணைப்புக்கு எதிராகவும், ஏபோத்தின் வேலைப்பாடு மிகுந்த வார்க்கச்சைக்கு மேலாகவும் வைத்து,
౨౭నీవు రెండు బంగారు రింగులు చేసి ఏఫోదు నమూనా ప్రకారం చేసిన నడికట్టుపై దాని ముందు వైపు కింది భాగంలో ఏఫోదు రెండు భుజాలకు వాటిని తగిలించాలి.
28 ௨௮ மார்ப்பதக்கம் ஏபோத்தின் விசித்திரமான வார்க்கச்சைக்கு மேலாக இருக்கும்படி, அது ஏபோத்திலிருந்து நீங்காதபடி, அதை அதின் வளையங்களால் ஏபோத்து வளையங்களோடு இளநீல நாடாவினால் கட்டவேண்டும்.
౨౮అప్పుడు పతకం ఏఫోదు నమూనా ప్రకారం చేసిన నడికట్టుకు పైగా ఉండేలా బిగించాలి. అది ఏఫోదునుండి విడిపోకుండా ఉండేలా వారు దాని రింగులను నీలి దారంతో కట్టాలి.
29 ௨௯ ஆரோன் பரிசுத்த ஸ்தலத்திற்குள் நுழையும்போது, இஸ்ரவேலின் பன்னிரண்டு மகன்களின் பெயர்களைத் தன்னுடைய இருதயத்தின்மேல் இருக்கும் நியாயவிதி மார்ப்பதக்கத்திலே யெகோவாவுடைய சந்நிதானத்தில் ஞாபகக்குறியாக எப்பொழுதும் அணிந்துகொள்ளவேண்டும்.
౨౯ఆ విధంగా అహరోను పరిశుద్ధ స్థలం లోకి వెళ్ళినప్పుడల్లా అతడు తన రొమ్ము మీద న్యాయనిర్ణయ పతకంలోని ఇశ్రాయేలీయుల పేర్లను నిత్యం యెహోవా సన్నిధిలో జ్ఞాపకార్థంగా ధరించాలి.
30 ௩0 நியாயவிதி மார்ப்பதக்கத்திலே ஊரீம் தும்மீம் என்பவைகளை வைக்கவேண்டும்; ஆரோன் யெகோவாவுடைய சந்நிதானத்தில் நுழையும்போது, அவைகள் அவனுடைய இருதயத்தின்மேல் இருக்கவேண்டும்; ஆரோன் தன்னுடைய இருதயத்தின்மேல் இஸ்ரவேலர்களுடைய நியாயவிதியைக் யெகோவாவுடைய சந்நிதானத்தில் எப்பொழுதும் அணிந்துகொள்ளவேண்டும்.
౩౦నీవు ఈ న్యాయనిర్ణయ పతకంలో ఊరీము తుమ్మీము అనే వాటిని ఉంచాలి. అహరోను యెహోవా సన్నిధికి వెళ్లినప్పుడల్లా అవి అతని రొమ్ముపై ఉంటాయి. అతడు యెహోవా సన్నిధిలో తన రొమ్ముపై ఇశ్రాయేలీయుల న్యాయనిర్ణయాలను నిత్యం భరిస్తాడు.
31 ௩௧ “ஏபோத்தின் கீழ் அங்கியை முழுவதும் இளநீலநூலால் உண்டாக்கவேண்டும்.
౩౧ఏఫోదు నిలువుటంగీని కేవలం నీలిరంగు దారంతోనే కుట్టాలి.
32 ௩௨ தலை நுழைகிற அதின் துவாரம் அதின் நடுவில் இருக்கவும், அதின் துவாரத்திற்கு நெய்யப்பட்ட வேலைப்பாடுள்ள ஒரு நாடா சுற்றிலும் இருக்கவேண்டும்; அது கிழியாதபடி மார்க்கவசத்தின் துவாரத்திற்கு ஏற்றதாக இருக்கவேண்டும்.
౩౨దాని మధ్య భాగంలో తల దూర్చడానికి రంధ్రం ఉండాలి. అది చినిగి పోకుండా మెడ కవచం లాగా దాని రంధ్రం చుట్టూ నేతపని గోటు ఉండాలి.
33 ௩௩ அதின் கீழ் ஓரங்களில் இளநீலநூல் இரத்தாம்பரநூல் சிவப்புநூல் வேலையால் செய்யப்பட்ட மாதுளம்பழங்களையும், அவைகளுக்கு இடையிடையே சுற்றிலும் பொன்மணிகளையும் அதின் ஓரங்களில் சுற்றிலும் தொங்கும்படி செய்துவைக்கவேண்டும்.
౩౩దాని అంచుల చుట్టూ నీల ధూమ్ర రక్త వర్ణాల దానిమ్మ కాయ ఆకారాలను, వాటి మధ్యలో బంగారు గంటలను నిలువు టంగీ చుట్టూ తగిలించాలి.
34 ௩௪ அங்கியின் ஓரங்களில் சுற்றிலும் ஒரு பொன்மணியும் ஒரு மாதுளம்பழமும், ஒரு பொன்மணியும் ஒரு மாதுளம்பழமுமாகத் தொங்கட்டும்.
౩౪ఒక్కొక్క బంగారు గంట, దానిమ్మకాయ ఆ నిలువుటంగీ కింది అంచున చుట్టూరా ఉండాలి.
35 ௩௫ ஆரோன் ஆராதனை செய்யக் யெகோவாவுடைய சந்நிதியில் பரிசுத்த இடத்திற்குள் நுழையும்போதும், வெளியே வரும்போதும், அவன் சாகாதபடி, அதின் சத்தம் கேட்கப்படும்படி அதை அணிந்துகொள்ளவேண்டும்.
౩౫సేవ చేసేటప్పుడు అహరోను దాని ధరించాలి. అతడు యెహోవా సన్నిధిలో పరిశుద్ధస్థలం లోకి ప్రవేశించేటప్పుడు అతడు చావకుండేలా వాటి చప్పుడు వినబడుతూ ఉండాలి.
36 ௩௬ “சுத்தப்பொன்னினால் ஒரு தகட்டைச்செய்து, யெகோவாவுக்குப் பரிசுத்தம் என்று அதிலே முத்திரை வெட்டாக வெட்டி,
౩౬నీవు మేలిమి బంగారు రేకు చేసి ముద్ర చెక్కినట్టు దానిపై ‘యెహోవాకు పరిశుద్ధం’ అనే మాట చెక్కాలి.
37 ௩௭ அது தலைப்பாகையில் இருக்கும்படி அதை இளநீல நாடாவினால் பாகையின் முகப்பிலே கட்டுவாயாக.
౩౭పాగాపై ఉండేలా నీలి దారంతో దాన్ని కట్టాలి. అది పాగా ముందు వైపు ఉండాలి.
38 ௩௮ இஸ்ரவேலர்கள் தங்களுடைய பரிசுத்த காணிக்கைகளாகப் படைக்கும் பரிசுத்தமானவைகளின் அக்கிரமத்தை ஆரோன் சுமக்கும்படி, அது ஆரோனுடைய நெற்றியின்மேல் இருப்பதாக; யெகோவாவுடைய சந்நிதியில் அவர்கள் அங்கீகரிக்கப்படும்படி, அது எப்பொழுதும் அவனுடைய நெற்றியின்மேல் இருக்கவேண்டும்.
౩౮ఇశ్రాయేలీయులు అర్పించే పరిశుద్ధమైన అర్పణలన్నిటిలో వాటిలో ఇమిడి ఉన్న దోషాలను అహరోను భరించేలా అది అహరోను నుదిటిపై ఉండాలి. వారికి యెహోవా సన్నిధిలో ఆమోదం ఉండేలా అది నిత్యం అతని నుదుటిపై ఉండాలి.
39 ௩௯ “மெல்லிய பஞ்சுநூலால் வேலைப்பாடு மிகுந்த உள்சட்டையும், மெல்லிய பஞ்சுநூலால் தலைப்பாகையையும் உண்டாக்கி, இடுப்புக்கச்சையை வேலைப்பாட்டுடன் செய்யவேண்டும்.
౩౯సన్న నారతో చొక్కాయిని బుట్టాపనిగా చెయ్యాలి. సన్న నారతో పాగాను నేయాలి. నడికట్టును కూడా బుట్టాపనిగా చెయ్యాలి.
40 ௪0 “ஆரோனுடைய மகன்களுக்கும், மகிமையும் அலங்காரமுமாக இருக்கும்படி, அங்கிகளையும், இடுப்புக்கச்சைகளையும், தலைப்பட்டைகளையும் உண்டாக்கவேண்டும்.
౪౦నీవు అహరోను కుమారులకు చొక్కాలు కుట్టించాలి. వారికి నడికట్లు తయారు చెయ్యాలి. వారి ఘనత, వైభవాలు కలిగేలా వారికీ టోపీలు చెయ్యాలి.
41 ௪௧ உன்னுடைய சகோதரனாகிய ஆரோனும் அவனுடன் அவனுடைய மகன்களும் எனக்கு ஆசாரிய ஊழியம் செய்யும்படி, நீ அந்த ஆடைகளை அவர்களுக்கு அணிவித்து, அவர்களை அபிஷேகம்செய்து, அவர்களைப் பிரதிஷ்டைசெய்து, அவர்களைப் பரிசுத்தப்படுத்தவேண்டும்.
౪౧నీవు నీ సోదరుడు అహరోనుకు, అతని కుమారులకు వాటిని తొడిగించాలి. వారు నాకు యాజకులయ్యేలా వారికి అభిషేకం చేసి, వారిని ప్రతిష్ఠించి పవిత్రపరచాలి.
42 ௪௨ அவர்களுடைய நிர்வாணத்தை மூடும்படி, இடுப்புத்துவங்கி முழங்கால்வரை அணிய சணல்நூல் உள்ளாடைகளையும் உண்டாக்கவேண்டும்.
౪౨వారి నగ్నతను కప్పుకొనేందుకు నీవు వారికి నారతో చేసిన లోదుస్తులు కుట్టించాలి.
43 ௪௩ ஆரோனும் அவனுடைய மகன்களும் பரிசுத்த இடத்திலே ஆராதனைசெய்ய ஆசரிப்புக்கூடாரத்திற்குள் நுழையும்போதும் பலிபீடத்தின் அருகில் சேரும்போதும், அக்கிரமம் சுமந்து அவர்கள் சாகாதபடி, அவைகளை அணிந்திருக்கவேண்டும்; இது அவனுக்கும் அவனுக்குப் பின்வரும் சந்ததிக்கும் நிரந்தர கட்டளை.
౪౩వారు ప్రత్యక్ష గుడారంలోకి ప్రవేశించేటప్పుడు గానీ పరిశుద్ధస్థలం లో సేవ చేయడానికి బలిపీఠం దగ్గరికి వచ్చేటప్పుడు గానీ వారు దోషులై చావకుండేలా అహరోను, అతని కుమారులు వాటిని ధరించాలి. ఇది అతనికి, అతని తరువాత అతని సంతానానికి ఎప్పటికీ నిలిచి ఉండే శాసనం.”