< யாத்திராகமம் 27 >

1 “ஐந்து முழ நீளமும் ஐந்து முழ அகலமாக சீத்திம் மரத்தால் பலிபீடத்தையும் உண்டாக்கவேண்டும்; அது சதுரமும் மூன்று முழ உயரமுமாக இருப்பதாக.
«و مذبح را از چوب شطیم بساز، طولش پنج ذراع و عرضش پنج ذراع. ومذبح مربع باشد. و بلندی‌اش سه ذراع.۱
2 அதின் நான்கு மூலைகளிலும் நான்கு கொம்புகளை உண்டாக்கவேண்டும்; அதின் கொம்புகள் அதனோடு ஒன்றாக இருக்கவேண்டும்; அதை வெண்கலத் தகட்டால் மூடவேண்டும்.
وشاخه هایش را بر چهار گوشه‌اش بساز وشاخه هایش از همان باشد و آن را به برنج بپوشان.۲
3 அதின் சாம்பலை எடுக்கத்தகுந்த சட்டிகளையும் கரண்டிகளையும் கிண்ணங்களையும் முள்துறடுகளையும் நெருப்புச்சட்டிகளையும் உண்டாக்கவேண்டும்; அதின் பணிப்பொருட்களையெல்லாம் வெண்கலத்தால் செய்வாயாக.
و لگنهایش را برای برداشتن خاکسترش بساز. وخاک اندازهایش و جامهایش و چنگالهایش ومجمرهایش و همه اسبابش را از برنج بساز.۳
4 வலைப்பின்னல்போன்ற ஒரு வெண்கலச் சல்லடையைச் செய்து, அந்தச் சல்லடையின் நான்கு மூலைகளிலும் நான்கு வெண்கல வளையங்களை உண்டாக்கி,
وبرایش آتش دانی مشبک برنجین بساز و بر آن شبکه چهار حلقه برنجین بر چهار گوشه‌اش بساز.۴
5 அந்தச் சல்லடை பலிபீடத்தின் பாதிஉயரத்தில் இருக்கும்படி அதை பலிபீடத்தின் அடியில் சுற்றடைப்புக்குக் கீழே வைக்கவேண்டும்.
و آن را در زیر، کنار مذبح بگذار تا شبکه به نصف مذبح برسد.۵
6 பலிபீடத்திற்குச் சீத்திம் மரத்தால் தண்டுகளைச் செய்து, அவைகளை வெண்கலத்தகட்டால் மூடவேண்டும்.
و دو عصا برای مذبح بساز. عصاها از چوب شطیم باشد و آنها را به برنج بپوشان.۶
7 பலிபீடத்தைச் சுமக்கும்படி அந்தத் தண்டுகள் அதின் இரண்டு பக்கங்களிலும் வளையங்களிலே மாட்டப்பட்டிருக்கவேண்டும்.
و عصاها را در حلقه‌ها بگذرانند، وعصاها بر هر دو طرف مذبح باشد تا آن را بردارند.۷
8 அதை உள்ளே மற்றும் வெளியேவிட்டுப் பலகைகளினாலே செய்யவேண்டும்; மலையில் உனக்குக் காண்பிக்கப்பட்டபடி அதைச் செய்யவேண்டும்.
و آن را مجوف از تخته‌ها بساز، همچنانکه درکوه به تو نشان داده شد، به این طور ساخته شود.۸
9 “ஆசரிப்பு கூடாரத்திற்கு பிராகாரத்தையும் உண்டாக்கவேண்டும்; தெற்கே தென்திசைக்கு எதிரான பிராகாரத்திற்குத் திரித்த மெல்லிய பஞ்சுநூலால் செய்யப்பட்ட நூறுமுழ நீளமான தொங்கு திரைகள் இருக்கவேண்டும்.
«و صحن مسکن را بساز به طرف جنوب به سمت یمانی. پرده های صحن از کتان نازک تابیده شده باشد، و طولش صد ذراع به یک طرف.۹
10 ௧0 அவைகளுக்கு வெண்கலத்தினால் இருபது தூண்களும், இருபது பாதங்களும் இருக்கவேண்டும்; தூண்களின் கொக்கிகளும் அவைகளின் வளையங்களும் வெள்ளியால் செய்யப்படவேண்டும்.
وستونهایش بیست و پایه های آنها بیست، از برنج باشد و قلابهای ستونها و پشت بندهای آنها ازنقره باشد.۱۰
11 ௧௧ அப்படியே வடக்கு பக்கத்தின் நீளத்திற்கும் நூறுமுழ நீளமான தொங்கு திரைகள் இருக்கவேண்டும்; அவைகளுக்கு இருபது தூண்களும், அவைகளுக்கு இருபது பாதங்களும் வெண்கலமாக இருக்கவேண்டும்; தூண்களின் கொக்கிகளும் வளையங்களும் வெள்ளியால் செய்யப்படவேண்டும்.
و همچنین به طرف شمال، درطولش پرده‌ها باشد که طول آنها صد ذراع باشد وبیست ستون آن و بیست پایه آنها از برنج باشد وقلابهای ستونها و پشت بندهای آنها از نقره باشد.۱۱
12 ௧௨ பிராகாரத்தின் மேற்கு பக்கமான அகலத்திற்கு ஐம்பது முழ நீளமான தொங்கு திரைகள் இருக்கவேண்டும்; அவைகளுக்குப் பத்துத் தூண்களும், அவைகளுக்குப் பத்துப் பாதங்களும் இருக்கவேண்டும்.
و برای عرض صحن به سمت مغرب، پرده های پنجاه ذراعی باشد. و ستونهای آنها ده وپایه های آنها ده.۱۲
13 ௧௩ சூரியன் உதிக்கிற திசையாகிய கிழக்குப்பக்கத்தின் பிராகாரம் ஐம்பது முழ அகலமாக இருக்கவேண்டும்.
و عرض صحن به‌جانب مشرق از سمت طلوع پنجاه ذراع باشد.۱۳
14 ௧௪ அங்கே ஒரு பக்கத்திற்குப் பதினைந்து முழ நீளமான தொங்கு திரைகளும், அவைகளுக்கு மூன்று தூண்களும், அவைகளுக்கு மூன்று பாதங்களும் இருக்கவேண்டும்.
وپرده های یک طرف دروازه، پانزده ذراع وستونهای آنها سه و پایه های آنها سه.۱۴
15 ௧௫ மறுபக்கத்திற்குப் பதினைந்து முழ நீளமான தொங்கு திரைகளும், அவைகளுக்கு மூன்று தூண்களும், அவைகளுக்கு மூன்று பாதங்களும் இருக்கவேண்டும்.
وپرده های طرف دیگر پانزده ذراعی و ستونهای آنها سه و پایه های آنها سه.۱۵
16 ௧௬ பிராகாரத்தின் வாசலுக்கு இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்புநூலாலும் திரித்த மெல்லிய பஞ்சுநூலாலும் சித்திரத் தையல்வேலையாகச் செய்யப்பட்ட இருபதுமுழ நீளமான ஒரு தொங்கு திரையும் அதற்கு நான்கு தூண்களும், அவைகளுக்கு நான்கு பாதங்களும் இருக்கவேண்டும்.
و برای دروازه صحن، پرده بیست ذراعی از لاجورد و ارغوان وقرمز و کتان نازک تابیده شده از صنعت طرازباشد. و ستونهایش چهار و پایه هایش چهار.۱۶
17 ௧௭ சுற்று பிராகாரத்தின் தூண்களெல்லாம் வெள்ளியினால் வளையம் கட்டப்பட்டிருக்கவேண்டும்; அவைகளின் கொக்கிகள் வெள்ளியினாலும் அவைகளின் பாதங்கள் வெண்கலத்தினாலும் செய்யப்பட்டிருக்கவேண்டும்.
همه ستونهای گرداگرد صحن با پشت بندهای نقره پیوسته شود، و قلابهای آنها از نقره وپایه های آنها از برنج باشد.۱۷
18 ௧௮ பிராகாரத்தின் நீளம் நூறுமுழமும், இருபக்கத்து அகலம் ஐம்பது ஐம்பது முழமும், உயரம் ஐந்து முழமுமாக இருப்பதாக; அதின் தொங்கல்கள் திரித்த மெல்லிய பஞ்சுநூலினால் செய்யப்பட்டு, அதின் தூண்களின் பாதங்கள் வெண்கலமாக இருக்கவேண்டும்.
طول صحن صدذراع، و عرضش در هر جا پنجاه ذراع، وبلندی‌اش پنج ذراع از کتان نازک تابیده شده، وپایه هایش از برنج باشد.۱۸
19 ௧௯ ஆசரிப்பு கூடாரத்தின் எல்லா பணிகளுக்குத் தேவையான எல்லா பணிப்பொருட்களும், அதின் எல்லா ஆப்புகளும், பிராகாரத்தின் எல்லா ஆப்புகளும் வெண்கலமாக இருக்கவேண்டும்.
و همه اسباب مسکن برای هر خدمتی، و همه میخهایش، و همه میخهای صحن از برنج باشد.۱۹
20 ௨0 குத்துவிளக்கு எப்பொழுதும் எரிந்துகொண்டிருக்கும்படி இடித்துப் பிழிந்த தெளிவான ஒலிவ எண்ணெயை உன்னிடத்தில் கொண்டுவரும்படி இஸ்ரவேலர்களுக்குக் கட்டளையிடு.
«و تو بنی‌اسرائیل را امر فرما که روغن زیتون مصفی و کوبیده شده برای روشنایی نزد توبیاورند تا چراغها دائم روشن شود.۲۰
21 ௨௧ கூடாரத்தில் சாட்சி சந்நிதிக்கு முன்னிருக்கும் திரைக்கு வெளியே ஆரோனும் அவனுடைய மகன்களும் மாலை துவங்கி அதிகாலைவரை யெகோவாவுடைய சந்நிதானத்தில் அந்த விளக்கை எரியவைக்கவேண்டும்; இது இஸ்ரவேலர்களின் தேசத்திற்கு தலைமுறை தலைமுறையாக நிரந்தர கட்டளையாக இருக்கட்டும்.
در خیمه اجتماع، بیرون پرده‌ای که در برابر شهادت است، هارون و پسرانش از شام تا صبح، به حضورخداوند آن را درست کنند. و این برای بنی‌اسرائیل نسلا بعد نسل فریضه ابدی باشد.۲۱

< யாத்திராகமம் 27 >