< யாத்திராகமம் 24 >

1 பின்பு அவர் மோசேயை நோக்கி: “நீயும் ஆரோனும், நாதாபும் அபியூவும் இஸ்ரவேலின் மூப்பர்களில் எழுபதுபேர்களும் கர்த்தரிடம் ஏறிவந்து, தூரத்திலிருந்து தொழுதுகொள்ளுங்கள்.
И рече Мојсију: Изађи горе ка Господу ти и Арон и Надав и Авијуд и седамдесет старешина Израиљевих, и поклоните се издалека.
2 மோசே மட்டும் யெகோவாவுக்கு அருகில் வரலாம்; மற்றவர்கள் அருகில் வரக்கூடாது; மக்கள் அவனுடன் ஏறிவரவேண்டாம்” என்றார்.
И Мојсије сам нека приступи ка Господу, а они нека не приступе; и народ нека не иде на горе с њим.
3 மோசே வந்து, யெகோவாவுடைய வார்த்தைகள் யாவையும் நீதி சட்டங்கள் யாவையும் மக்களுக்கு அறிவித்தான்; “அப்பொழுது மக்கள் எல்லோரும் ஒரேசத்தமாக: யெகோவா அருளின எல்லா வார்த்தைகளின்படியும் செய்வோம்” என்று மறுமொழி சொன்னார்கள்.
И дође Мојсије, и каза народу све речи Господње и све законе. И одговори народ једним гласом и рекоше: Чинићемо све што је рекао Господ.
4 மோசே யெகோவாவுடைய வார்த்தைகளையெல்லாம் எழுதிவைத்து, அதிகாலையில் எழுந்து, மலையின் அடியில் ஒரு பலிபீடத்தைக் கட்டி, இஸ்ரவேலுடைய பன்னிரண்டு கோத்திரங்களுடைய எண்ணிக்கையின்படி பன்னிரண்டு தூண்களை நிறுத்தினான்.
И написа Мојсије све речи Господње, и уставши рано начини олтар под гором и дванаест ступова за дванаест племена Израиљевих.
5 இஸ்ரவேலின் வாலிபர்களை அனுப்பினான்; அவர்கள் சர்வாங்கதகனபலிகளைச் செலுத்தி, யெகோவாவுக்குச் சமாதானபலிகளாகக் காளைகளைப் பலியிட்டார்கள்.
И посла младиће између синова Израиљевих, који принесоше жртве паљенице и принесоше теоце на жртве захвалне Господу.
6 அப்பொழுது மோசே அந்த இரத்தத்தில் பாதி எடுத்து, கிண்ணங்களில் ஊற்றி, பாதி இரத்தத்தைப் பலிபீடத்தின்மேல் தெளித்து,
И узевши Мојсије половину крви, метну у зделе, а половину крви изли на олтар.
7 உடன்படிக்கையின் புத்தகத்தை எடுத்து, மக்களின் காதுகளில் கேட்க வாசித்தான்; அவர்கள் யெகோவா சொன்னபடியெல்லாம் செய்து, கீழ்ப்படிந்து நடப்போம்” என்றார்கள்.
И узе књигу заветну и прочита народу. А они рекоше: Шта је год рекао Господ чинићемо и слушаћемо.
8 அப்பொழுது மோசே இரத்தத்தை எடுத்து, மக்களின்மேல் தெளித்து, இந்த வார்த்தைகள் எல்லாவற்றையும்குறித்து யெகோவா உங்களோடு செய்த உடன்படிக்கையின் இரத்தம் இதுவே” என்றான்.
А Мојсије узе крв, и покропи њом народ, и рече: Ево крв завета, који учини Господ с вама за све речи ове.
9 பின்பு மோசேயும், ஆரோனும், நாதாபும் அபியூவும், இஸ்ரவேலுடைய மூப்பர்கள் எழுபதுபேர்களும் மலைக்கு ஏறிப்போய்,
Потом отиде горе Мојсије и Арон, Надав и Авијуд, и седамдесет старешина Израиљевих.
10 ௧0 இஸ்ரவேலின் தேவனைத் தரிசித்தார்கள். அவருடைய பாதத்தின்கீழுள்ள இடமானது இழைத்த வேலைப்பாடு மிகுந்த நீலக்கல்லைப்போல தெளிந்த வானத்தின் சுடரொளிக்கு ஒப்பாகவும் இருந்தது.
И видеше Бога Израиљевог, и под ногама Његовим као дело од камена сафира и као небо кад је ведро.
11 ௧௧ அவர் இஸ்ரவேலர்களுடைய தலைவர்கள்மேல் தம்முடைய கையை நீட்டவில்லை; அவர்கள் தேவனைத் தரிசித்து, பின்பு சாப்பிட்டுக் குடித்தார்கள்.
И не пружи руке своје на изабране између синова Израиљевих, него видеше Бога, па једоше и пише.
12 ௧௨ அப்பொழுது யெகோவா மோசேயை நோக்கி: “நீ மலையின்மேல் என்னிடத்திற்கு ஏறிவந்து, அங்கே இரு. நான் உனக்குக் கற்பலகைகளையும், நீ அவர்களுக்கு கற்றுக்கொடுப்பதற்கு, நான் எழுதின நியாயப்பிரமாணத்தையும் கற்பனைகளையும் கொடுப்பேன்” என்றார்.
И рече Господ Мојсију: Попни се к мени на гору, и остани овде, и даћу ти плоче од камена, закон и заповести, које сам написао да их учиш.
13 ௧௩ அப்பொழுது மோசே தன்னுடைய ஊழியக்காரனாகிய யோசுவாவோடு எழுந்து போனான். மோசே தேவனுடைய மலையில் ஏறிப்போகும்போது,
Тада уста Мојсије с Исусом, који га служаше, и изађе Мојсије на гору Божију.
14 ௧௪ அவன் மூப்பர்களை நோக்கி: “நாங்கள் உங்களிடம் திரும்பிவரும்வரை, நீங்கள் இங்கே எங்களுக்காகக் காத்திருங்கள்; ஆரோனும், ஊரும் உங்களிடம் இருக்கிறார்கள்; ஒருவனுக்கு ஏதாவது பிரச்சனை உண்டானால், அவன் அவர்களிடத்தில் போகலாம்” என்றான்.
А старешинама рече: Седите ту док се вратимо к вама; а ето Арон и Ор с вама; ко би имао шта, нека иде к њима.
15 ௧௫ மோசே மலையின்மேல் ஏறினபோது, ஒரு மேகம் மலையை மூடியது.
И отиде Мојсије на гору, а облак покри гору.
16 ௧௬ யெகோவாவுடைய மகிமை சீனாய்மலையின்மேல் தங்கியிருந்தது; மேகம் ஆறுநாட்கள் அதை மூடியிருந்தது; ஏழாம்நாளில் அவர் மேகத்தின் நடுவிலிருந்து மோசேயைக் கூப்பிட்டார்.
И беше слава Господња на гори Синајској, и облак је покриваше шест дана; а у седми дан викну Мојсија испред облака.
17 ௧௭ மலையின் உச்சியிலே யெகோவாவுடைய மகிமையின் காட்சி இஸ்ரவேலர்களுடைய கண்களுக்கு சுட்டெரிக்கிற அக்கினியைப்போல் இருந்தது.
И слава Господња беше по виђењу као огањ који сажиже на врх горе пред синовима Израиљевим.
18 ௧௮ மோசே மேகத்தின் நடுவிலே நுழைந்து, மலையின்மேல் ஏறி, இரவும் பகலும் நாற்பதுநாட்கள் மலையில் இருந்தான்.
И Мојсије уђе усред облака, и попе се на гору; и оста Мојсије на гори четрдесет дана и четрдесет ноћи.

< யாத்திராகமம் 24 >