< யாத்திராகமம் 22 >
1 ௧ “ஒருவன் ஒரு மாட்டையோ ஒரு ஆட்டையோ திருடி, அதைக் கொன்றால், அல்லது அதை விற்றால், அவன் அந்த மாட்டுக்கு ஐந்து மாடுகளையும், அந்த ஆட்டுக்கு நான்கு ஆடுகளையும் பதிலாகக் கொடுக்கவேண்டும்.
Om någor stjäl en oxa eller ett får, och slagtar det, eller säljer, han skall igengifva fem oxar för en oxa, och fyra får för ett får.
2 ௨ திருடன் திருடும்போது கண்டுபிடிக்கப்பட்டு, அடிக்கப்பட்டுச் செத்தால், அவனுடைய இரத்தப்பழி அடித்தவனைச் சேராது.
Om en tjuf beslagen varder, att han bryter sig in, och får hugg till döds; så skall ingen blodsrätt gå öfver dråparen.
3 ௩ சூரியன் அவன்மேல் உதித்தபின்பு, அவனுடைய இரத்தப்பழி சுமரும்; திருடன் பதில் கொடுத்துத் தீர்க்கவேண்டும்; அவனுடைய கையில் ஒன்றும் இல்லாமல் இருந்தால், தான் செய்த திருட்டுக்காக விற்கப்படுவான்.
Men är solen öfver honom uppgången, då skall man blodsrätten gå låta. En tjuf skall igen betala. Hafver han intet, så skall man sälja honom för hans tjufnad.
4 ௪ அவன் திருடின மாடோ, கழுதையோ, ஆடோ உயிருடன் அவன் கையில் கண்டுபிடிக்கப்பட்டால், இருமடங்காக அவன் கொடுக்கவேண்டும்.
Finner man tjufnaden när honom lefvande, det vare sig oxe, åsne eller får, så skall han gifva dubbelt igen.
5 ௫ “ஒருவன் மற்றவனுடைய வயலிலோ திராட்சைத்தோட்டத்திலோ தன்னுடைய மிருகஜீவனை மேயவிட்டால், அவன் தன்னுடைய சொந்தவயலிலும் திராட்சைத்தோட்டத்திலும் உள்ள பலனில் சிறந்ததை எடுத்து, பதிலுக்குக் கொடுக்கவேண்டும்.
Om någor gör skada på åker eller vingård, så att han låter sin boskap skada göra uti ens annars åker; han skall af det bästa i sin åker och vingård igen betala.
6 ௬ அக்கினி எழும்பி, முட்களில் பற்றி, தானியப்போரையோ, விளைந்த பயிரையோ, வயலிலுள்ள வேறு எதையாவது எரித்துப்போட்டால், அக்கினியைக் கொளுத்தினவன் அக்கினிச் சேதத்திற்கு ஈடு செய்யவேண்டும்.
Om en eld uppkommer, och fånger i törne, så att skylarne eller säden, som ännu står, eller åkren uppbränd varder; det skall han betala igen, som elden släppt hafver.
7 ௭ ஒருவன் பிறனிடம் பணத்தையோ, பொருட்களையோ பாதுகாப்பிற்காக வைத்திருக்கும்போது, அது அவனுடைய வீட்டிலிருந்து திருட்டுப்போனால், திருடன் அகப்பட்டால், அவன் அதற்கு இருமடங்காக கொடுக்கவேண்டும்.
Om någor får sinom nästa penningar, eller tyg till att gömma, och dem samma varder det stulet utu huset; finner man tjufven, då skall han gifva det tvefaldt igen.
8 ௮ திருடன் அகப்படாவிட்டால், அந்த வீட்டுக்காரன் தான் பிறனுடைய பொருளை அபகரித்தானோ இல்லையோ என்று அறியும்படி நியாயாதிபதிகளிடம் அவனைக் கொண்டுபோகவேண்டும்.
Finner man icke tjufven, så skall man hafva husvärden fram för gudarna; om han icke hafver kommit sina hand vid sins nästas ting.
9 ௯ காணாமல்போன மாடு, கழுதை, ஆடு, உடை முதலியவைகளில் ஏதாவது ஒன்றை வேறொருவன் தன்னுடையது என்று சொல்லி குற்றம்சொன்னால், இரண்டு பேர்களுடைய வழக்கும் நியாயாதிபதிகளிடம் வரவேண்டும்; நியாயாதிபதிகள் எவனைக் குற்றவாளி என்று தீர்க்கிறார்களோ, அவன் மற்றவனுக்கு இருமடங்கு கொடுக்கவேண்டும்.
Och om en den andra skyller för någon orätt, vare sig om oxa, eller åsna, eller får, eller kläder, eller hvad som helst bortkommet är, då skall begges deras sak komma inför gudarna; hvilken gudarne fördöma, han skall betala sinom nästa dubbelt igen.
10 ௧0 ஒருவன் தன்னுடைய கழுதையையோ மாட்டையோ ஆட்டையோ மற்ற ஏதாவதொரு மிருகஜீவனையோ ஒருவனிடம் விட்டிருக்கும்போது, அது செத்தாலும், காயப்பட்டாலும், ஒருவரும் காணாதபடி ஓட்டிக்கொண்டு போகப்பட்டாலும்,
Om någor sätter neder när sin nästa, åsna, eller oxa, eller får, eller hvad boskap det kan vara, och det dör, eller eljest får skada, eller varder honom bortdrifvet, så att ingen ser det;
11 ௧௧ அவன் தான் பிறனுடைய பொருளை அபகரிக்கவில்லையென்று யெகோவாவின் நாமத்தில் ஆணையிட்டால் அவர்கள் இருவருக்கும் அதுவே நியாயம்தீர்க்கட்டும்; உடையவன் அதை அங்கீகரிக்கவேண்டும்; மற்றவன் பதிலளிக்கத்தேவையில்லை.
Så skall det komma till en ed dem emellan vid Herran, att han icke hafver låtit komma sina hand vid hans nästas ting. Och äganden skall den anamma, att hin icke skall gifvat igen.
12 ௧௨ அது அவனிடமிருந்து திருடப்பட்டுப்போனால், அவன் அதனுடைய எஜமானுக்கு அதற்காக ஈடுகொடுக்கவேண்டும்.
Om en tjuf stjäl honom det ifrå, skall han då betala det ägandenom igen.
13 ௧௩ அது வேட்டையாடப்பட்டுப்போனால், அதற்கு சாட்சியை ஒப்புவிக்கவேண்டும். வேட்டையாடப்பட்டதற்காக அவன் ஈடுகொடுக்கத் தேவையில்லை.
Varder det rifvet, skall han hafva fram vittne deruppå, och så intet igengifva.
14 ௧௪ ஒருவன் பிறனிடம் எதையாவது இரவலாக வாங்கியிருந்தால், அதற்குரியவன் கூட இல்லாதபோது, அது காயப்பட்டாலும், செத்துப்போனாலும், அவன் அதற்கு ஈடுசெய்யவேண்டும்.
Om någor lånar af sin nästa, och det varder förderfvadt, eller dör, så att dess herre der icke när är, då skall han gifva det igen.
15 ௧௫ அதற்குரியவன் கூட இருந்தால், அவன் ஈடுகொடுக்கத் தேவையில்லை; அது வாடகைக்கு வாங்கப்பட்டிருந்தால், அது அவனுடைய வாடகைக்கு வந்த சேதம்.
Är dess herre der när, då skall han icke gifva det igen; medan han det för sina penningar lejt hafver.
16 ௧௬ திருமணத்திற்கு நியமிக்கப்படாத ஒரு கன்னிகையை ஒருவன் மோசம்போக்கி அவளோடு உறவுகொண்டால், அவன் அவளுக்காகப் பரிசம்கொடுத்து, அவளைத் திருமணம்செய்யவேண்டும்.
Om någor lockar ena jungfru, den ännu icke förlofvad är, och lägrar henne; han skall gifva henne hennes morgongåfvor, och hafva henne till hustru.
17 ௧௭ அவளுடைய தகப்பன் அவளை அவனுக்குக் கொடுக்கமாட்டேன் என்று சொன்னால், கன்னிகைகளுக்காகக் கொடுக்கப்படும் பரிசமுறையின்படி அவன் பணத்தை நிறுத்துக் கொடுக்கவேண்டும்.
Om hennes fader försön honom henne, skall han då utgifva penningar, så mycket som jungfruers morgongåfvor tillhörer.
18 ௧௮ சூனியக்காரியை உயிரோடு வைக்கவேண்டாம்.
En trollkona skall du icke låta lefva.
19 ௧௯ மிருகத்தோடு உறவுவைக்கிற எவனும் கொல்லப்படவேண்டும்.
Den som hafver värdskap med någon boskap, han skall döden dö.
20 ௨0 யெகோவா ஒருவரைத்தவிர வேறு தெய்வங்களுக்குப் பலியிடுகிறவன் அழிக்கப்படவேண்டும்.
Den som offrar gudom, utan Herranom allena, han vare förbannad.
21 ௨௧ அந்நியனைச் சிறுமைப்படுத்தாமலும் ஒடுக்காமலும் இருப்பீர்களாக; நீங்களும் எகிப்து தேசத்தில் அந்நியர்களாக இருந்தீர்களே.
Främlingar skall du icke beröfva eller undertrycka; förty I hafven ock varit främlingar i Egypti lande.
22 ௨௨ விதவையையும் திக்கற்ற பிள்ளையையும் ஒடுக்காமல் இருப்பீர்களாக;
I skolen ingen enko och faderlös barn bedröfva.
23 ௨௩ அவர்களை அதிகமாக ஒடுக்கும்போது, அவர்கள் என்னை நோக்கி முறையிட்டால், அவர்கள் முறையிடுதலை நான் நிச்சயமாகக் கேட்டு,
Bedröfvar du dem, så varda de ropande till mig, och jag skall höra deras rop;
24 ௨௪ கோபமடைந்து, உங்களைப் பட்டயத்தால் கொலைசெய்வேன்; உங்களுடைய மனைவிகள் விதவைகளும், உங்களுடைய பிள்ளைகள் திக்கற்றப் பிள்ளைகளுமாவார்கள்.
Och min vrede skall förgrymma sig, så att jag dräper eder med svärd, och edra hustrur skola varda enkor, och edor barn faderlös.
25 ௨௫ உங்களுக்குள் ஏழையாக இருக்கிற என்னுடைய மக்களில் ஒருவனுக்கு நீங்கள் பணம் கடனாகக் கொடுத்திருந்தால், வட்டிவாங்குகிறவர்கள்போல அவனிடம் வட்டி வாங்கவேண்டாம்.
När du lånar mino folke penningar, det fattigt är när dig, skall du icke hafva dig så med honom som en ockrare, och intet ocker på honom bedrifva.
26 ௨௬ பிறனுடைய ஆடையை பதிலாக வாங்கினால், பொழுதுமறையும் முன்பே அதை அவனுக்குத் திரும்பக் கொடுத்துவிடுவாயாக.
När du tager en klädnad till pant af din nästa, skall du få honom det igen, förra än solen går ned.
27 ௨௭ அவன் ஆடை அதுதானே, அதுவே அவன் தன்னுடைய உடலை மூடிக்கொள்ளுகிற துணி; வேறு எதினாலே போர்த்திப் படுத்துக்கொள்ளுவான்? அவன் என்னை நோக்கி முறையிடும்போது, நான் அவனுடைய வார்த்தையைக் கேட்பேன், நான் இரக்கமுள்ளவராக இருக்கிறேன்.
Förty hans klädnad är hans huds endesta öfvertäckelse, der han uti sofver. Ropar han till mig, så vill jag höra honom; ty jag är barmhertig.
28 ௨௮ தேவனை நிந்திக்காமலும், உன்னுடைய மக்களை ஆளுகிறவர்களைச் சபிக்காமலும் இரு.
Gudarna skall du icke banna, och den öfversta i ditt folk skall du icke lasta.
29 ௨௯ முதல் முதல் பழுக்கும் உன்னுடைய பழத்தையும், வடியும் உன்னுடைய ஆலையின் இரசத்தையும் காணிக்கையாகச் செலுத்தத் தாமதிக்கவேண்டாம். உன்னுடைய மகன்களில் முதலில் பிறந்தவனை எனக்குக் கொடுப்பாயாக.
Din fyllelse och tårar skall du icke fördröja. Din första son skall du gifva mig.
30 ௩0 உன்னுடைய மாடுகளிலும் உன்னுடைய ஆடுகளிலும் அப்படியே செய்வாயாக; குட்டியானது ஏழுநாட்கள் தன்னுடைய தாயோடு இருக்கட்டும்; எட்டாம் நாளிலே அதை எனக்குச் செலுத்துவாயாக.
Så skall du ock göra med dinom oxa och får; i sju dagar låt det blifva när sine moder; på åttonde dagenom skall du gifva mig det.
31 ௩௧ நீங்கள் எனக்குப் பரிசுத்த மனிதர்களாக இருக்கவேண்டும்; வெளியிலே பீறுண்ட இறைச்சியைச் சாப்பிடாமல், அதை நாய்களுக்குப் போட்டுவிடுங்கள்.
I skolen vara ett heligt folk för mig; derföre skolen I intet kött äta, det som på markene af djurom rifvet är, utan kasta det för hundarna.