< யாத்திராகமம் 2 >

1 லேவியின் கோத்திரத்தாரில் ஒருவன் லேவியின் மகள்களில் ஒருத்தியைத் திருமணம்செய்தான்.
А неко од племена Левијевог отиде и ожени се кћерју Левијевом.
2 அந்த பெண் கர்ப்பவதியாகி, ஒரு ஆண்பிள்ளையைப் பெற்று, அது அழகுள்ளது என்று கண்டு, அதை மூன்று மாதங்கள் ஒளித்துவைத்தாள்.
И она затрудне и роди сина; и видећи га лепог кријаше га три месеца.
3 அதன்பின்பு அவள் பிள்ளையை ஒளித்துவைக்கமுடியாமல், ஒரு நாணல்பெட்டியை எடுத்து, அதற்குப் பிசினும் தாரும் பூசி, அதிலே பிள்ளையை வைத்து, நைல் நதியோரமாக நாணலுக்குள்ளே வைத்தாள்.
А кад га не може више крити, уже ковчежић од сите, и обли га смолом и паклином, и метну дете у њ, и однесе га у трску крај реке.
4 அதற்கு என்ன சம்பவிக்கும் என்பதை அறியும்படி அதின் சகோதரி தூரத்திலே நின்றுகொண்டிருந்தாள்.
А сестра његова стаде подаље да види шта ће бити од њега.
5 அப்பொழுது பார்வோனுடைய மகள் நதியில் குளிக்க வந்தாள்; அவளுடைய பணிப்பெண்கள் நதியோரத்தில் உலாவினார்கள்; அவள் நாணலுக்குள்ளே இருக்கிற பெட்டியைக் கண்டு, தன்னுடைய பணிப்பெண்ணை அனுப்பி அதைக் கொண்டுவரும்படிச் செய்தாள்.
А кћи Фараонова дође да се купа у реци, и девојке њене ходаху крај реке; и она угледа ковчежић у трсци, и посла дворкињу своју те га извади.
6 அதைத் திறந்தபோது பிள்ளையைக்கண்டாள்; பிள்ளை அழுதது; அவள் அதின்மேல் இரக்கமுற்று, “இது எபிரெயர்களின் பிள்ளைகளில் ஒன்று” என்றாள்.
А кад отвори, виде дете, и гле, дете плакаше; и сажали јој се, и рече: То је јеврејско дете.
7 அப்பொழுது அப்பிள்ளையின் சகோதரி பார்வோனின் மகளை நோக்கி: “உமக்கு இந்தப் பிள்ளையை வளர்க்கும்படி எபிரெய பெண்களில் பால்கொடுக்கிற ஒருத்தியை நான் போய் உம்மிடத்தில் அழைத்துக்கொண்டு வரட்டுமா” என்றாள்.
Тада рече сестра његова кћери Фараоновој: Хоћеш ли да идем да ти дозовем дојкињу Јеврејку, да ти доји дете?
8 அதற்குப் பார்வோனுடைய மகள்: “அழைத்துக்கொண்டுவா” என்றாள். இந்தப் பெண் போய்ப் பிள்ளையின் தாயையே அழைத்துக்கொண்டு வந்தாள்.
А кћи Фараонова рече јој: Иди. И отиде девојчица, и дозва матер детињу.
9 பார்வோனுடைய மகள் அவளை நோக்கி: “நீ இந்தப் பிள்ளையை எடுத்துக்கொண்டுபோய், அதை எனக்காக வளர்த்திடு, நான் உனக்குச் சம்பளம் கொடுக்கிறேன்” என்றாள். அந்தப் பெண், பிள்ளையை எடுத்துக்கொண்டுபோய், அதை வளர்த்தாள்.
И кћи Фараонова рече јој: Узми ово дете, и одој ми га, а ја ћу ти платити. И узе жена дете и одоји га.
10 ௧0 பிள்ளை பெரிதானபோது, அவள் அதைப் பார்வோனுடைய மகளிடம் கொண்டுபோய் விட்டாள். அவளுக்கு அவன் மகனானான். அவள்: “அவனை தண்ணீரிலிருந்து எடுத்தேன்” என்று சொல்லி, அவனுக்கு மோசே என்று பெயரிட்டாள்.
А кад дете одрасте, одведе га ка кћери Фараоновој, а она га посини; и надеде му име Мојсије говорећи: Јер га из воде извадих.
11 ௧௧ மோசே பெரியவனான காலத்தில், அவன் தன்னுடைய சகோதரர்களிடம் போய், அவர்கள் சுமைசுமக்கிறதைப் பார்த்து, தன்னுடைய சகோதரர்களாகிய எபிரெயர்களில் ஒருவனை ஒரு எகிப்தியன் அடிக்கிறதைக் கண்டு,
И кад Мојсије беше велик, изађе к браћи својој, и гледаше невољу њихову. И виде где некакав Мисирац бије човека Јеврејина између браће његове.
12 ௧௨ அங்கும் இங்கும் பார்த்து, ஒருவரும் இல்லை என்று அறிந்து, எகிப்தியனை வெட்டி, அவனை மணலிலே புதைத்துப்போட்டான்.
И обазрев се и тамо и амо, кад виде да нема никога, уби Мисирца, и закопа га у песак.
13 ௧௩ அவன் மறுநாளிலும் வெளியே போனபோது, எபிரெய மனிதர்கள் இருவர் சண்டையிட்டுக்கொண்டிருந்தார்கள். அப்பொழுது அவன் அநியாயம் செய்கிறவனை நோக்கி: “நீ உன்னுடைய தோழனை அடிக்கிறது ஏன்” என்று கேட்டான்.
И сутрадан изађе опет, а то се два Јеврејина свађаху, и рече оном који чињаше криво: Зашто бијеш ближњег свог?
14 ௧௪ அதற்கு அவன்: “எங்கள்மேல் உன்னை அதிகாரியாகவும் நியாயாதிபதியாகவும் ஏற்படுத்தினவன் யார்? நீ எகிப்தியனைக் கொன்றுபோட்டதுபோல, என்னையும் கொன்றுபோட நினைக்கிறாயோ” என்றான். அப்பொழுது மோசே காரியம் நிச்சயமாக வெளிப்பட்டது என்று பயந்தான்.
А он рече: Ко је тебе поставио кнезом и судијом над нама? Хоћеш ли да ме убијеш као што си убио Мисирца? Тада се Мојсије уплаши и рече: Заиста се дознало.
15 ௧௫ பார்வோன் அந்தக் காரியத்தைக் கேள்விப்பட்டபோது, மோசேயைக் கொலைசெய்ய முயற்சித்தான். மோசே பார்வோனிடத்திலிருந்து தப்பியோடி, மீதியான் தேசத்தில் போய்த் தங்கி, ஒரு கிணற்றின் அருகில் உட்கார்ந்திருந்தான்.
И Фараон чувши за то тражаше да погуби Мојсија. Али Мојсије побеже од Фараона и дође у земљу мадијанску, и седе код једног студенца.
16 ௧௬ மீதியான் தேசத்து ஆசாரியனுக்கு ஏழு மகள்கள் இருந்தார்கள்; அவர்கள் தங்கள் தகப்பனுடைய ஆடுகளுக்குத் தண்ணீர் காட்டும்படி அங்கே வந்து, தண்ணீர் எடுத்து, தொட்டிகளை நிரப்பினார்கள்.
А свештеник мадијански имаше седам кћери, и оне дођоше и стадоше захватати воду и наливати у појила да напоје стадо оца свог.
17 ௧௭ அப்பொழுது மேய்ப்பர்கள் வந்து, அவர்களைத் துரத்தினார்கள்; மோசே எழுந்து, அவர்களுக்குத் துணை நின்று, அவர்களுடைய ஆடுகளுக்குத் தண்ணீர் காட்டினான்.
А дођоше пастири, и отераше их; а Мојсије уста и одбрани их, и напоји им стадо.
18 ௧௮ அவர்கள் தங்களுடைய தகப்பனாகிய ரெகுவேலிடம் வந்தபோது, அவன்: “நீங்கள் இன்று இத்தனை சீக்கிரமாக வந்தது ஏன்” என்று கேட்டான்.
И оне се вратише к оцу свом Рагуилу; а он рече: Што се данас тако брзо вратисте?
19 ௧௯ அதற்கு அவர்கள்: “எகிப்தியன் ஒருவன் மேய்ப்பர்களின் கைகளுக்கு எங்களைத் தப்புவித்து, எங்களுக்குத் தண்ணீர் எடுத்துக் கொடுத்து, ஆடுகளுக்கும் தண்ணீர் காட்டினான்” என்றார்கள்.
А оне рекоше: Један Мисирац одбрани нас од пастира, и нали нам и напоји стадо.
20 ௨0 அப்பொழுது அவன் தன்னுடைய மகள்களைப் பார்த்து, “அவன் எங்கே? அந்த மனிதனை நீங்கள் விட்டுவந்தது ஏன்? சாப்பிடும்படி அவனை அழைத்துக்கொண்டு வாருங்கள்” என்றான்.
А он рече кћерима својим: Па где је? Зашто остависте тог човека? Зовите га да једе.
21 ௨௧ மோசே அந்த மனிதனிடம் தங்கியிருக்கச் சம்மதித்தான். அவன் சிப்போராள் என்னும் தன்னுடைய மகளை மோசேக்குக் கொடுத்தான்.
И Мојсије се склони да живи код оног човека, и он даде Мојсију кћер своју Сефору.
22 ௨௨ அவள் ஒரு மகனைப் பெற்றாள். “நான் அந்நிய தேசத்தில் பரதேசியாக இருக்கிறேன்” என்று சொல்லி, அவனுக்கு கெர்சோம் என்று பெயரிட்டான்.
И она роди сина, и он му надеде име Гирсам, јер сам, рече, дошљак у земљи туђој.
23 ௨௩ சிலகாலம் சென்றபின்பு, எகிப்தின் ராஜா இறந்தான். இஸ்ரவேலர்கள் அடிமைத்தனத்தினால் தவித்து, முறையிட்டுக்கொண்டிருந்தார்கள்; அவர்கள் அடிமைத்தனத்திலிருந்து முறையிடும் சத்தம் தேவசந்நிதியில் எட்டினது.
А после много времена умре цар мисирски; и уздисаху од невоље синови Израиљеви и викаху; и вика њихова ради невоље дође до Бога.
24 ௨௪ தேவன் அவர்கள் பெருமூச்சைக்கேட்டு, தாம் ஆபிரகாமோடும், ஈசாக்கோடும் யாக்கோபோடும் செய்த உடன்படிக்கையை நினைவுகூர்ந்தார்.
И Бог чу уздисање њихово, и опомену се Бог завета свог с Аврамом, с Исаком и с Јаковом.
25 ௨௫ தேவன் இஸ்ரவேலர்களைப் பார்த்தார்; தேவன் அவர்களை நினைத்தருளினார்.
И погледа Бог на синове Израиљеве, и виде их.

< யாத்திராகமம் 2 >