< யாத்திராகமம் 2 >
1 ௧ லேவியின் கோத்திரத்தாரில் ஒருவன் லேவியின் மகள்களில் ஒருத்தியைத் திருமணம்செய்தான்.
В това време отиде някой си човек от Левиевия дом та взе за жена една от Левиевите жени.
2 ௨ அந்த பெண் கர்ப்பவதியாகி, ஒரு ஆண்பிள்ளையைப் பெற்று, அது அழகுள்ளது என்று கண்டு, அதை மூன்று மாதங்கள் ஒளித்துவைத்தாள்.
И жената зачна и роди син; и като видя, че беше красиво дете, кри го за три месеца.
3 ௩ அதன்பின்பு அவள் பிள்ளையை ஒளித்துவைக்கமுடியாமல், ஒரு நாணல்பெட்டியை எடுத்து, அதற்குப் பிசினும் தாரும் பூசி, அதிலே பிள்ளையை வைத்து, நைல் நதியோரமாக நாணலுக்குள்ளே வைத்தாள்.
Но понеже не можеше вече да се крие, взе му рогозен ковчежец и намаза го със смола и катран, тури детето в него и го положи в тръстиката край брега на реката.
4 ௪ அதற்கு என்ன சம்பவிக்கும் என்பதை அறியும்படி அதின் சகோதரி தூரத்திலே நின்றுகொண்டிருந்தாள்.
А сестра му стоеше от далеч, за да види какво ще му се случи.
5 ௫ அப்பொழுது பார்வோனுடைய மகள் நதியில் குளிக்க வந்தாள்; அவளுடைய பணிப்பெண்கள் நதியோரத்தில் உலாவினார்கள்; அவள் நாணலுக்குள்ளே இருக்கிற பெட்டியைக் கண்டு, தன்னுடைய பணிப்பெண்ணை அனுப்பி அதைக் கொண்டுவரும்படிச் செய்தாள்.
И Фараоновата дъщеря слезе да се окъпе в реката, а слугините й ходеха по брега на реката; и когато съгледа ковчежеца в тръстиката, тя прати слугинята си за го донесе.
6 ௬ அதைத் திறந்தபோது பிள்ளையைக்கண்டாள்; பிள்ளை அழுதது; அவள் அதின்மேல் இரக்கமுற்று, “இது எபிரெயர்களின் பிள்ளைகளில் ஒன்று” என்றாள்.
Като го отвори, видя детето, и, ето малкото плачеше; и пожали го и каза: От еврейските деца е това.
7 ௭ அப்பொழுது அப்பிள்ளையின் சகோதரி பார்வோனின் மகளை நோக்கி: “உமக்கு இந்தப் பிள்ளையை வளர்க்கும்படி எபிரெய பெண்களில் பால்கொடுக்கிற ஒருத்தியை நான் போய் உம்மிடத்தில் அழைத்துக்கொண்டு வரட்டுமா” என்றாள்.
Тогава сестра му рече на Фараоновата дъщеря: Да отида ли да ти повикам доилка от еврейките, за да ти дои детето?
8 ௮ அதற்குப் பார்வோனுடைய மகள்: “அழைத்துக்கொண்டுவா” என்றாள். இந்தப் பெண் போய்ப் பிள்ளையின் தாயையே அழைத்துக்கொண்டு வந்தாள்.
И Фараоновата дъщеря й рече: Иди. И тъй, момичето отиде та повика майката на детето.
9 ௯ பார்வோனுடைய மகள் அவளை நோக்கி: “நீ இந்தப் பிள்ளையை எடுத்துக்கொண்டுபோய், அதை எனக்காக வளர்த்திடு, நான் உனக்குச் சம்பளம் கொடுக்கிறேன்” என்றாள். அந்தப் பெண், பிள்ளையை எடுத்துக்கொண்டுபோய், அதை வளர்த்தாள்.
И Фараоновата дъщеря й рече: Вземи това дете и ми го отдой, и аз ще ти заплатя. И жената взе детето и го доеше.
10 ௧0 பிள்ளை பெரிதானபோது, அவள் அதைப் பார்வோனுடைய மகளிடம் கொண்டுபோய் விட்டாள். அவளுக்கு அவன் மகனானான். அவள்: “அவனை தண்ணீரிலிருந்து எடுத்தேன்” என்று சொல்லி, அவனுக்கு மோசே என்று பெயரிட்டாள்.
А когато порасна детето, донесе го на Фараоновата дъщеря, и то стана неин син. И наименува го Моисей: Понеже, каза тя, извлякох го от водата.
11 ௧௧ மோசே பெரியவனான காலத்தில், அவன் தன்னுடைய சகோதரர்களிடம் போய், அவர்கள் சுமைசுமக்கிறதைப் பார்த்து, தன்னுடைய சகோதரர்களாகிய எபிரெயர்களில் ஒருவனை ஒரு எகிப்தியன் அடிக்கிறதைக் கண்டு,
А във времето, когато Моисей порасна, излезе при братята си и гледаше теглилата им. И видя някой си египтянин, че биеше един евреин, един от братята му;
12 ௧௨ அங்கும் இங்கும் பார்த்து, ஒருவரும் இல்லை என்று அறிந்து, எகிப்தியனை வெட்டி, அவனை மணலிலே புதைத்துப்போட்டான்.
и като поразгледа насам натам и видя, че няма никой, уби египтянина и го скри в пясъка.
13 ௧௩ அவன் மறுநாளிலும் வெளியே போனபோது, எபிரெய மனிதர்கள் இருவர் சண்டையிட்டுக்கொண்டிருந்தார்கள். அப்பொழுது அவன் அநியாயம் செய்கிறவனை நோக்கி: “நீ உன்னுடைய தோழனை அடிக்கிறது ஏன்” என்று கேட்டான்.
Излезе и на другия ден, и ето, двама евреи се препираха; и каза на обидника: Защо биеш другаря си?
14 ௧௪ அதற்கு அவன்: “எங்கள்மேல் உன்னை அதிகாரியாகவும் நியாயாதிபதியாகவும் ஏற்படுத்தினவன் யார்? நீ எகிப்தியனைக் கொன்றுபோட்டதுபோல, என்னையும் கொன்றுபோட நினைக்கிறாயோ” என்றான். அப்பொழுது மோசே காரியம் நிச்சயமாக வெளிப்பட்டது என்று பயந்தான்.
А той рече: Кой те постави началник и съдия над на? Искаш ли и мене да убиеш, както уби египтянина? Тогава Моисей се уплаши и си каза: Явно е, че това нещо стана известно.
15 ௧௫ பார்வோன் அந்தக் காரியத்தைக் கேள்விப்பட்டபோது, மோசேயைக் கொலைசெய்ய முயற்சித்தான். மோசே பார்வோனிடத்திலிருந்து தப்பியோடி, மீதியான் தேசத்தில் போய்த் தங்கி, ஒரு கிணற்றின் அருகில் உட்கார்ந்திருந்தான்.
А като чу това Фараон, търсеше случай да убие Моисея; но Моисей побягна от Фараоновото лице и се засели в Мадиамската земя. И седна до един кладенец.
16 ௧௬ மீதியான் தேசத்து ஆசாரியனுக்கு ஏழு மகள்கள் இருந்தார்கள்; அவர்கள் தங்கள் தகப்பனுடைய ஆடுகளுக்குத் தண்ணீர் காட்டும்படி அங்கே வந்து, தண்ணீர் எடுத்து, தொட்டிகளை நிரப்பினார்கள்.
А Мадиамският жрец имаше седем дъщери, които дойдоха и наляха вода и напълниха коритата, за да напоят бащините си овци.
17 ௧௭ அப்பொழுது மேய்ப்பர்கள் வந்து, அவர்களைத் துரத்தினார்கள்; மோசே எழுந்து, அவர்களுக்குத் துணை நின்று, அவர்களுடைய ஆடுகளுக்குத் தண்ணீர் காட்டினான்.
Но овчарите дойдоха и ги изпъдиха; а Моисей стана та им помогна, и напои овците им.
18 ௧௮ அவர்கள் தங்களுடைய தகப்பனாகிய ரெகுவேலிடம் வந்தபோது, அவன்: “நீங்கள் இன்று இத்தனை சீக்கிரமாக வந்தது ஏன்” என்று கேட்டான்.
И като дойдоха при баща си Рагуила, той им рече: Как дойдохте днес толкова скоро.
19 ௧௯ அதற்கு அவர்கள்: “எகிப்தியன் ஒருவன் மேய்ப்பர்களின் கைகளுக்கு எங்களைத் தப்புவித்து, எங்களுக்குத் தண்ணீர் எடுத்துக் கொடுத்து, ஆடுகளுக்கும் தண்ணீர் காட்டினான்” என்றார்கள்.
А те казаха: Един египтянин ни избави от ръцете на овчарите, при това и вода ни наля та напои овците.
20 ௨0 அப்பொழுது அவன் தன்னுடைய மகள்களைப் பார்த்து, “அவன் எங்கே? அந்த மனிதனை நீங்கள் விட்டுவந்தது ஏன்? சாப்பிடும்படி அவனை அழைத்துக்கொண்டு வாருங்கள்” என்றான்.
И той рече на дъщерите си: А где е той? защо оставихте човека? повикайте го да яде хляб.
21 ௨௧ மோசே அந்த மனிதனிடம் தங்கியிருக்கச் சம்மதித்தான். அவன் சிப்போராள் என்னும் தன்னுடைய மகளை மோசேக்குக் கொடுத்தான்.
И Моисей склони да живее при човека, който е даде на Моисея дъщеря си Сепфора за жена.
22 ௨௨ அவள் ஒரு மகனைப் பெற்றாள். “நான் அந்நிய தேசத்தில் பரதேசியாக இருக்கிறேன்” என்று சொல்லி, அவனுக்கு கெர்சோம் என்று பெயரிட்டான்.
И тя роди син; и той го наименува Герсам, защото думаше: Пришелец станах в чужда земя.
23 ௨௩ சிலகாலம் சென்றபின்பு, எகிப்தின் ராஜா இறந்தான். இஸ்ரவேலர்கள் அடிமைத்தனத்தினால் தவித்து, முறையிட்டுக்கொண்டிருந்தார்கள்; அவர்கள் அடிமைத்தனத்திலிருந்து முறையிடும் சத்தம் தேவசந்நிதியில் எட்டினது.
Подир дълго време египетският цар умря; а израилтяните пъшкаха под робството и извикаха: и викат им от робството стигна до Бога.
24 ௨௪ தேவன் அவர்கள் பெருமூச்சைக்கேட்டு, தாம் ஆபிரகாமோடும், ஈசாக்கோடும் யாக்கோபோடும் செய்த உடன்படிக்கையை நினைவுகூர்ந்தார்.
Бог чу пъшканията им; и Бог спомни завета си с Авраама, с Исаака, и с Якова.
25 ௨௫ தேவன் இஸ்ரவேலர்களைப் பார்த்தார்; தேவன் அவர்களை நினைத்தருளினார்.
И Бог погледна на израилтяните, и Бог разбра положението им.