< யாத்திராகமம் 19 >

1 இஸ்ரவேல் மக்கள் எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்ட மூன்றாம் மாதம் முதலாம் நாளிலே, சீனாய் வனாந்திரத்திற்கு வந்துசேர்ந்தார்கள்.
Từ Ai Cập ra đi đúng ba tháng, người Ít-ra-ên đến hoang mạc Si-nai.
2 அவர்கள் ரெவிதீமிலிருந்து பயணம் புறப்பட்டு, சீனாய் வனாந்திரத்திற்கு வந்து, அந்த வனாந்திரத்தில் முகாமிட்டார்கள்; இஸ்ரவேலர்கள் அங்கே மலைக்கு எதிராக முகாமிட்டார்கள்.
Họ đi từ Rê-phi-đim đến hoang mạc Si-nai, rồi cắm trại đối diện núi.
3 மோசே தேவனிடம் ஏறிப்போனான்; யெகோவா மலையிலிருந்து அவனைக்கூப்பிட்டு: “நீ யாக்கோபு வம்சத்தார்களுக்குச் சொல்லவும், இஸ்ரவேல் மக்களுக்கு அறிவிக்கவும் வேண்டியது என்னவென்றால்,
Từ trên núi, Đức Chúa Trời gọi Môi-se, ông liền lên gặp Ngài. Chúa Hằng Hữu phán bảo ông: “Con hãy nói với nhà Gia-cốp, và lặp lại cho người Ít-ra-ên nghe những lời này:
4 நான் எகிப்தியர்களுக்குச் செய்ததையும், நான் உங்களைக் கழுகுகளுடைய இறக்கைகளின்மேல் சுமந்து, உங்களை என் அருகிலே சேர்த்துக்கொண்டதையும், நீங்கள் கண்டிருக்கிறீர்கள்.
Các ngươi đã thấy việc Ta làm cho người Ai Cập, cũng đã biết Ta đem các ngươi đến với Ta bằng cách nào, chẳng khác gì dùng cánh đại bàng chở các ngươi.
5 இப்பொழுது நீங்கள் என்னுடைய வாக்கை உள்ளபடி கேட்டு, என்னுடைய உடன்படிக்கையைக் கைக்கொள்வீர்களானால், எல்லா மக்களையும்விட நீங்களே எனக்கு சிறந்த மக்களாக இருப்பீர்கள்; பூமியெல்லாம் என்னுடையது.
Vậy, nếu các ngươi vâng lời Ta và giữ lời giao ước Ta, các ngươi sẽ là dân riêng của Ta giữa vòng muôn dân trên thế giới, vì cả thế giới đều thuộc về Ta.
6 நீங்கள் எனக்கு ஆசாரிய ராஜ்ஜியமும் பரிசுத்த தேசமுமாக இருப்பீர்கள் என்று நீ இஸ்ரவேல் மக்களோடு சொல்லவேண்டிய வார்த்தைகள்” என்றார்.
Các ngươi sẽ là người thánh, phụ trách việc tế lễ cho Ta. Đó là lời con phải nói lại cho người Ít-ra-ên.”
7 மோசே வந்து மக்களின் மூப்பர்களை அழைத்து, யெகோவா தனக்குக் கற்பித்த வார்த்தைகளையெல்லாம் அவர்களுக்கு முன்பாகச் சொன்னான்.
Môi-se từ núi trở về, mời các trưởng lão đến, lặp lại cho họ nghe mọi lời Chúa Hằng Hữu đã phán dặn.
8 அதற்கு மக்கள் எல்லோரும் ஒன்றாக, “யெகோவா சொன்னவைகளையெல்லாம் செய்வோம் என்று மறுமொழி சொன்னார்கள். மக்கள் சொன்ன வார்த்தைகளை மோசே யெகோவாவிடம் தெரிவித்தான்.
Họ đồng thanh đáp: “Chúng tôi xin làm mọi điều Chúa Hằng Hữu đã dạy bảo.” Môi-se trình lại các lời đó lên Chúa Hằng Hữu.
9 அப்பொழுது யெகோவா மோசேயை நோக்கி: “நான் உன்னோடு பேசும்போது மக்கள் கேட்டு, உன்னை என்றைக்கும் விசுவாசிக்கும்படி, நான் கார்மேகத்தில் உன்னிடம் வருவேன்” என்றார். மக்கள் சொன்ன வார்த்தைகளை மோசே யெகோவாவுக்குச் சொன்னான்.
Chúa Hằng Hữu hứa với Môi-se: “Ta sẽ đến cùng con trong đám mây dày đặc, để dân chúng sẽ nghe Ta nói với con, và sẽ tin tưởng nơi con mãi mãi.
10 ௧0 பின்னும் யெகோவா மோசேயை நோக்கி: “நீ மக்களிடம் போய், இன்றைக்கும் நாளைக்கும் அவர்களைப் பரிசுத்தப்படுத்து; அவர்கள் தங்கள் ஆடைகளைத் துவைத்து,
Bây giờ con về, bảo dân phải giặt áo xống, giữ mình thanh sạch hôm nay và ngày mai,
11 ௧௧ மூன்றாம் நாளுக்கு ஆயத்தப்பட்டிருக்கவேண்டும்; மூன்றாம் நாளில் யெகோவா எல்லா மக்களுக்கும் வெளிப்படையாக சீனாய் மலையின்மேல் இறங்குவார்.
đến ngày thứ ba phải sẵn sàng để chiêm ngưỡng Chúa Hằng Hữu khi Chúa Hằng Hữu giáng lâm tại núi Si-nai.
12 ௧௨ மலையைச்சுற்றிலும் நீ ஒரு எல்லையைக் குறித்து, மக்கள் மலையில் ஏறாதபடியும், அதின் அடிவாரத்தைத் தொடாதபடியும் எச்சரிக்கையாக இருங்கள் என்று அவர்களுக்குச் சொல்; மலையைத் தொடுகிறவன் எவனும் நிச்சயமாகவே கொல்லப்படுவான்.
Con cũng phải vạch đường ranh giới chung quanh núi, cấm không ai được vượt qua, và căn dặn dân: Phải cẩn thận, tuyệt đối không được lên núi. Người nào dù chỉ chạm đến chân núi cũng phải tội chết.
13 ௧௩ ஒரு கையும் அதைத் தொடலாகாது; தொட்டால், நிச்சயமாகக் கல்லெறியப்பட்டு, அல்லது வில் எய்யப்பட்டுச் சாகவேண்டும்; மிருகமானாலும் சரி, மனிதனானாலும் சரி, உயிரோடு வைக்கப்படலாகாது; எக்காளம் நெடுந்தொனியாகத் தொனிக்கும்போது, அவர்கள் மலையின் அடிவாரத்தில் வரவேண்டும்” என்றார்.
Đừng ai đụng đến người ấy, nhưng phải ném đá hoặc bắn tên cho chết; dù thú vật cũng phải chết như vậy. Chỉ khi nào có tiếng kèn thổi, mọi người mới có phép đến gần chân núi.”
14 ௧௪ மோசே மலையிலிருந்து இறங்கி, மக்களிடம் வந்து, அவர்களைப் பரிசுத்தப்படுத்தினான்; அவர்கள் தங்களுடைய ஆடைகளைத் துவைத்தார்கள்.
Vậy, Môi-se xuống núi, bảo dân giữ mình thanh sạch, giặt áo xống.
15 ௧௫ அவன் மக்களை நோக்கி: “மூன்றாம் நாளுக்கு ஆயத்தப்பட்டிருங்கள், மனைவியிடம் சேராமல் இருங்கள்” என்றான்.
Ông căn dặn họ: “Phải giữ mình thanh sạch từ hôm nay cho đến ngày thứ ba không được đến gần đàn bà.”
16 ௧௬ மூன்றாம் நாள் அதிகாலையில் இடிமுழக்கங்களும் மின்னல்களும், மலையின்மேல் கார்மேகமும் மகா பலத்த எக்காள சத்தமும் உண்டானது; முகாமிலிருந்த மக்கள் எல்லோரும் நடுங்கினார்கள்.
Đến sáng hôm thứ ba, chớp nhoáng sấm sét nổi lên, một đám mây dày đặc trùm lấy núi, tiếng kèn thổi vang động làm cho mọi người run sợ.
17 ௧௭ அப்பொழுது மக்கள் தேவனுக்கு எதிராகபோக, மோசே அவர்களை முகாமிலிருந்து புறப்படச்செய்தான்; அவர்கள் மலையின் அடிவாரத்தில் நின்றார்கள்.
Môi-se dẫn dân ra khỏi trại nghênh đón Đức Chúa Trời. Họ đứng lại dưới chân núi.
18 ௧௮ யெகோவா சீனாய்மலையின்மேல் அக்கினியில் இறங்கியதால், அது முழுவதும் புகைக்காடாக இருந்தது; அந்தப் புகை சூளையின் புகையைப்போல எழும்பியது; மலை முழுவதும் மிகவும் அதிர்ந்தது.
Khắp Núi Si-nai đều có khói phủ kín, bay lên như từ lò lửa hực, vì Chúa Hằng Hữu giáng lâm trên núi như lửa cháy. Cả ngọn núi rung động dữ dội.
19 ௧௯ எக்காளசத்தம் வரவர மிகவும் பலமாகத் தொனித்தது; மோசே பேசினான்; தேவன் அவனுக்கு வாக்கினால் மறுமொழி கொடுத்தார்.
Trong khi tiếng kèn càng lúc càng vang động, Môi-se bắt đầu nói, và Đức Chúa Trời đáp lại, tiếng vang như sấm.
20 ௨0 யெகோவா சீனாய்மலையிலுள்ள உச்சியில் இறங்கினபோது, யெகோவா மோசேயை மலையின் உச்சியில் வரவழைத்தார்; மோசே ஏறிப்போனான்.
Như vậy, Chúa Hằng Hữu giáng lâm trên đỉnh Núi Si-nai, gọi Môi-se và ông liền lên gặp Ngài.
21 ௨௧ அப்பொழுது யெகோவா மோசேயை நோக்கி: “மக்கள் பார்ப்பதற்கு எல்லையைக் கடந்து கர்த்தரிடம் வராதபடியும், அவர்களில் அநேகர் அழிந்துபோகாதபடியும், நீ இறங்கிப்போய், அவர்களை உறுதியாக எச்சரி.
Sau đó, Chúa Hằng Hữu phán bảo Môi-se: “Hãy xuống núi nghiêm cấm người không được vượt ranh giới lên núi tìm xem Đức Chúa Trời, vì như thế họ phải chết.
22 ௨௨ யெகோவாவின் சமுகத்தில் வருகிற ஆசாரியர்களும், யெகோவா தங்களை அழிக்காதபடி, தங்களைப் பரிசுத்தப்படுத்திக்கொள்ளவேண்டும்” என்றார்.
Ngay các thầy tế lễ muốn đến gần Chúa Hằng Hữu cũng phải giữ mình thanh sạch, nếu không cũng phải chết.”
23 ௨௩ அப்பொழுது மோசே யெகோவாவை நோக்கி: “மலையைச் சுற்றிலும் எல்லையைக் குறித்து, அதைப் பரிசுத்தப்படுத்துங்கள் என்று தேவரீர் எங்களை உறுதியாக எச்சரித்திருக்கிறீர்; ஆகையால், மக்கள் சீனாய்மலையின்மேல் ஏறிவரமாட்டார்கள்” என்றான்.
Môi-se thưa: “Thưa Chúa Hằng Hữu, chẳng có ai dám lên Núi Si-nai đâu, vì Chúa đã bảo con vạch ranh giới chung quanh núi để phân định vùng đất thánh.”
24 ௨௪ யெகோவா மோசேயை நோக்கி: “நீ இறங்கிப்போ; பின்பு நீயும் ஆரோனும் கூடி ஏறிவாருங்கள்; ஆசாரியர்களும், மக்களும், யெகோவா தங்களை அழிக்காதபடி, எல்லையைக் கடந்து யெகோவாவிடம் வராமல் இருக்கவேண்டும்” என்றார்.
Chúa Hằng Hữu phán: “Hãy xuống đem A-rôn lên đây. Đồng thời căn dặn các thầy tế lễ và toàn dân không ai được lên núi. Nếu ai bất tuân, thì phải chết.”
25 ௨௫ அப்படியே மோசே இறங்கி மக்களிடம் போய், அதை அவர்களுக்குச் சொன்னான்.
Môi-se xuống núi căn dặn mọi người theo lời Đức Chúa Trời.

< யாத்திராகமம் 19 >