< யாத்திராகமம் 19 >
1 ௧ இஸ்ரவேல் மக்கள் எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்ட மூன்றாம் மாதம் முதலாம் நாளிலே, சீனாய் வனாந்திரத்திற்கு வந்துசேர்ந்தார்கள்.
I den tredje Måned efter Israeliternes Udvandring af Ægypten, på denne Dag nåede de Sinaj Ørken.
2 ௨ அவர்கள் ரெவிதீமிலிருந்து பயணம் புறப்பட்டு, சீனாய் வனாந்திரத்திற்கு வந்து, அந்த வனாந்திரத்தில் முகாமிட்டார்கள்; இஸ்ரவேலர்கள் அங்கே மலைக்கு எதிராக முகாமிட்டார்கள்.
De brød op fra Refdim og kom til Sinaj Ørken og slog Lejr i Ørkenen. Der slog. Israel Lejr lige over for Bjerget,
3 ௩ மோசே தேவனிடம் ஏறிப்போனான்; யெகோவா மலையிலிருந்து அவனைக்கூப்பிட்டு: “நீ யாக்கோபு வம்சத்தார்களுக்குச் சொல்லவும், இஸ்ரவேல் மக்களுக்கு அறிவிக்கவும் வேண்டியது என்னவென்றால்,
men Moses steg op til Gud. Da råbte HERREN til ham fra Bjerget: "Dette skal du sige til Jakobs Hus og kundgøre for Israels Børn:
4 ௪ நான் எகிப்தியர்களுக்குச் செய்ததையும், நான் உங்களைக் கழுகுகளுடைய இறக்கைகளின்மேல் சுமந்து, உங்களை என் அருகிலே சேர்த்துக்கொண்டதையும், நீங்கள் கண்டிருக்கிறீர்கள்.
I har set, hvad jeg gjorde ved Ægypterne, og hvorledes jeg bar eder på Ørnevinger og bragte eder hid til mig.
5 ௫ இப்பொழுது நீங்கள் என்னுடைய வாக்கை உள்ளபடி கேட்டு, என்னுடைய உடன்படிக்கையைக் கைக்கொள்வீர்களானால், எல்லா மக்களையும்விட நீங்களே எனக்கு சிறந்த மக்களாக இருப்பீர்கள்; பூமியெல்லாம் என்னுடையது.
Hvis I nu vil lyde min Røst og holde min Pagt, så skal I være min Ejendom blandt alle Folkene, thi mig hører hele Jorden til,
6 ௬ நீங்கள் எனக்கு ஆசாரிய ராஜ்ஜியமும் பரிசுத்த தேசமுமாக இருப்பீர்கள் என்று நீ இஸ்ரவேல் மக்களோடு சொல்லவேண்டிய வார்த்தைகள்” என்றார்.
og I skal blive mig et Kongerige af Præster og et helligt Folk! Det er de Ord, du skal tale til Israels Børn!"
7 ௭ மோசே வந்து மக்களின் மூப்பர்களை அழைத்து, யெகோவா தனக்குக் கற்பித்த வார்த்தைகளையெல்லாம் அவர்களுக்கு முன்பாகச் சொன்னான்.
Da gik Moses hen og kaldte Folkets Ældste sammen og forelagde dem alle disse Ord, som HERREN havde pålagt ham.
8 ௮ அதற்கு மக்கள் எல்லோரும் ஒன்றாக, “யெகோவா சொன்னவைகளையெல்லாம் செய்வோம் என்று மறுமொழி சொன்னார்கள். மக்கள் சொன்ன வார்த்தைகளை மோசே யெகோவாவிடம் தெரிவித்தான்.
Og hele Folket svarede, alle som een: "Alt, hvad HERREN har sagt, vil vi gøre!" Da bragte Moses HERREN Folkets Svar.
9 ௯ அப்பொழுது யெகோவா மோசேயை நோக்கி: “நான் உன்னோடு பேசும்போது மக்கள் கேட்டு, உன்னை என்றைக்கும் விசுவாசிக்கும்படி, நான் கார்மேகத்தில் உன்னிடம் வருவேன்” என்றார். மக்கள் சொன்ன வார்த்தைகளை மோசே யெகோவாவுக்குச் சொன்னான்.
Derpå sagde HERREN til Moses: "Se, jeg vil komme til dig i en tæt Sky, for at Folket kan høre, at jeg taler med dig, og for stedse tro også på dig!" Og Moses kundgjorde HERREN Folkets Svar.
10 ௧0 பின்னும் யெகோவா மோசேயை நோக்கி: “நீ மக்களிடம் போய், இன்றைக்கும் நாளைக்கும் அவர்களைப் பரிசுத்தப்படுத்து; அவர்கள் தங்கள் ஆடைகளைத் துவைத்து,
Da sagde HERREN til Moses: "Gå til Folket og lad dem hellige sig i Dag og i Morgen og tvætte deres Klæder
11 ௧௧ மூன்றாம் நாளுக்கு ஆயத்தப்பட்டிருக்கவேண்டும்; மூன்றாம் நாளில் யெகோவா எல்லா மக்களுக்கும் வெளிப்படையாக சீனாய் மலையின்மேல் இறங்குவார்.
og holde sig rede til i Overmorgen, thi i Overmorgen vil HERREN stige ned for alt Folkets Øjne på Sinaj Bjerg.
12 ௧௨ மலையைச்சுற்றிலும் நீ ஒரு எல்லையைக் குறித்து, மக்கள் மலையில் ஏறாதபடியும், அதின் அடிவாரத்தைத் தொடாதபடியும் எச்சரிக்கையாக இருங்கள் என்று அவர்களுக்குச் சொல்; மலையைத் தொடுகிறவன் எவனும் நிச்சயமாகவே கொல்லப்படுவான்.
Og du skal rundt om spærre af for Folket og sige til dem: Vog eder for at gå op på Bjerget, ja for blot at røre ved Yderkanten deraf; enhver, der rører ved Bjerget, er dødsens!
13 ௧௩ ஒரு கையும் அதைத் தொடலாகாது; தொட்டால், நிச்சயமாகக் கல்லெறியப்பட்டு, அல்லது வில் எய்யப்பட்டுச் சாகவேண்டும்; மிருகமானாலும் சரி, மனிதனானாலும் சரி, உயிரோடு வைக்கப்படலாகாது; எக்காளம் நெடுந்தொனியாகத் தொனிக்கும்போது, அவர்கள் மலையின் அடிவாரத்தில் வரவேண்டும்” என்றார்.
Ingen Hånd må røre ved ham, han skal stenes eller skydes ned; hvad enten det er et Dyr eller et Menneske, skal det miste Livet. Når Væderhornet lyder, skal de stige op på Bjerget."
14 ௧௪ மோசே மலையிலிருந்து இறங்கி, மக்களிடம் வந்து, அவர்களைப் பரிசுத்தப்படுத்தினான்; அவர்கள் தங்களுடைய ஆடைகளைத் துவைத்தார்கள்.
Så steg Moses ned fra Bjerget til Folket og lod Folket hellige sig, og de tvættede deres Klæder;
15 ௧௫ அவன் மக்களை நோக்கி: “மூன்றாம் நாளுக்கு ஆயத்தப்பட்டிருங்கள், மனைவியிடம் சேராமல் இருங்கள்” என்றான்.
og han sagde til Folket: Hold eder rede til i Overmorgen, ingen må komme en Kvinde nær!"
16 ௧௬ மூன்றாம் நாள் அதிகாலையில் இடிமுழக்கங்களும் மின்னல்களும், மலையின்மேல் கார்மேகமும் மகா பலத்த எக்காள சத்தமும் உண்டானது; முகாமிலிருந்த மக்கள் எல்லோரும் நடுங்கினார்கள்.
Da Morgenen gryede den tredje Dag, begyndte det at tordne og lyne, og en tung Sky lagde sig over Bjerget, og der hørtes vældige Stød i Horn. Da skælvede alt Folket i Lejren.
17 ௧௭ அப்பொழுது மக்கள் தேவனுக்கு எதிராகபோக, மோசே அவர்களை முகாமிலிருந்து புறப்படச்செய்தான்; அவர்கள் மலையின் அடிவாரத்தில் நின்றார்கள்.
Så førte Moses Folket fra Lejren hen for Gud, og de stillede sig neden for Bjerget.
18 ௧௮ யெகோவா சீனாய்மலையின்மேல் அக்கினியில் இறங்கியதால், அது முழுவதும் புகைக்காடாக இருந்தது; அந்தப் புகை சூளையின் புகையைப்போல எழும்பியது; மலை முழுவதும் மிகவும் அதிர்ந்தது.
Men hele Sinaj Bjerg hylledes i Røg, fordi HERREN steg ned derpå i Ild, og Røgen stod i Vejret som Røg fra en Smelteovn; og hele Folket skælvede så1e.
19 ௧௯ எக்காளசத்தம் வரவர மிகவும் பலமாகத் தொனித்தது; மோசே பேசினான்; தேவன் அவனுக்கு வாக்கினால் மறுமொழி கொடுத்தார்.
Og Stødene i Hornene blev stærkere og stærkere; Moses talte, og Gud svarede ham med høj Røst.
20 ௨0 யெகோவா சீனாய்மலையிலுள்ள உச்சியில் இறங்கினபோது, யெகோவா மோசேயை மலையின் உச்சியில் வரவழைத்தார்; மோசே ஏறிப்போனான்.
Og da HERREN var steget ned på Sinaj Bjerg, på Toppen af Bjerget, kaldte han Moses op på Toppen af Bjerget, og Moses steg derop.
21 ௨௧ அப்பொழுது யெகோவா மோசேயை நோக்கி: “மக்கள் பார்ப்பதற்கு எல்லையைக் கடந்து கர்த்தரிடம் வராதபடியும், அவர்களில் அநேகர் அழிந்துபோகாதபடியும், நீ இறங்கிப்போய், அவர்களை உறுதியாக எச்சரி.
Da sagde HERREN til Moses: "Stig ned og indskærp Folket, at de ikke må trænge sig frem til HERREN for at se ham, at der ikke skal ske et stort Mandefald iblandt dem.
22 ௨௨ யெகோவாவின் சமுகத்தில் வருகிற ஆசாரியர்களும், யெகோவா தங்களை அழிக்காதபடி, தங்களைப் பரிசுத்தப்படுத்திக்கொள்ளவேண்டும்” என்றார்.
Selv Præsterne, som ellers træder frem for HERREN, skal hellige sig, for at ikke HERREN skal tynde ud i deres Rækker."
23 ௨௩ அப்பொழுது மோசே யெகோவாவை நோக்கி: “மலையைச் சுற்றிலும் எல்லையைக் குறித்து, அதைப் பரிசுத்தப்படுத்துங்கள் என்று தேவரீர் எங்களை உறுதியாக எச்சரித்திருக்கிறீர்; ஆகையால், மக்கள் சீனாய்மலையின்மேல் ஏறிவரமாட்டார்கள்” என்றான்.
Da sagde Moses til HERREN: "Folket kan jo ikke stige op på Sinaj Bjerg, thi du har selv indskærpet os at afspærre Bjerget og hellige det."
24 ௨௪ யெகோவா மோசேயை நோக்கி: “நீ இறங்கிப்போ; பின்பு நீயும் ஆரோனும் கூடி ஏறிவாருங்கள்; ஆசாரியர்களும், மக்களும், யெகோவா தங்களை அழிக்காதபடி, எல்லையைக் கடந்து யெகோவாவிடம் வராமல் இருக்கவேண்டும்” என்றார்.
Men HERREN sagde til ham: "Stig nu ned og kom atter herop sammen med Aron; men Præsterne og Folket må ikke trænge sig frem for at komme op til HERREN, at han ikke skal tynde ud i deres Rækker."
25 ௨௫ அப்படியே மோசே இறங்கி மக்களிடம் போய், அதை அவர்களுக்குச் சொன்னான்.
Da steg Moses ned til Folket og sagde det til dem.