< யாத்திராகமம் 16 >
1 ௧ இஸ்ரவேலர்களாகிய சபையார்கள் எல்லோரும் ஏலிமைவிட்டு பயணம்செய்து, எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்ட இரண்டாம் மாதம் பதினைந்தாம் தேதியிலே, ஏலிமுக்கும் சீனாய்க்கும் நடுவே இருக்கிற சீன் வனாந்திரத்திற்கு வந்துசேர்ந்தார்கள்.
Od Elima se podigoše, i sav zbor sinova Izrailjevijeh doðe u pustinju Sin, koja je izmeðu Elima i Sinaja, petnaestoga dana drugoga mjeseca pošto izidoše iz zemlje Misirske.
2 ௨ அந்த வனாந்திரத்திலே இஸ்ரவேலர்களாகிய சபையார்கள் எல்லோரும் மோசேக்கும் ஆரோனுக்கும் விரோதமாக முறுமுறுத்து:
I stade vikati sav zbor sinova Izrailjevijeh na Mojsija i na Arona u pustinji,
3 ௩ “நாங்கள் இறைச்சிப் பாத்திரங்களின் அருகிலே உட்கார்ந்து அப்பத்தைத் திருப்தியாகச் சாப்பிட்ட எகிப்து தேசத்தில், யெகோவாவின் கையால் செத்துப்போனால் பரவாயில்லை; இந்தக் கூட்டம் முழுவதையும் பட்டினியினால் கொல்லும்படி நீங்கள் எங்களைப் புறப்படச்செய்து, இந்த வனாந்திரத்திலே அழைத்துவந்தீர்களே” என்று அவர்களிடம் சொன்னார்கள்.
I rekoše im sinovi Izrailjevi: kamo da smo pomrli od ruke Gospodnje u zemlji Misirskoj, kad sjeðasmo kod lonaca s mesom i jeðasmo hljeba izobila! jer nas izvedoste u ovu pustinju da pomorite sav ovaj zbor glaðu.
4 ௪ அப்பொழுது யெகோவா மோசேயை நோக்கி: “நான் உங்களுக்கு வானத்திலிருந்து அப்பம் வரச்செய்வேன்; மக்கள் போய், ஒவ்வொரு நாளுக்கு வேண்டியதை ஒவ்வொரு நாளிலும் சேர்த்துக்கொள்ளவேண்டும்; அதினால் அவர்கள் என்னுடைய கட்டளையின்படி நடப்பார்களோ நடக்கமாட்டார்களோ என்று அவர்களைச் சோதிப்பேன்.
A Gospod reèe Mojsiju: evo uèiniæu da vam daždi iz neba hljeb, a narod neka izlazi i kupi svaki dan koliko treba na dan, da ga okušam hoæe li hoditi po mome zakonu ili neæe.
5 ௫ ஆறாம் நாளிலோ, அவர்கள் தினந்தோறும் சேர்க்கிறதைவிட இரண்டுமடங்கு சேர்த்து, அதை ஆயத்தம்செய்து வைக்கவேண்டும்” என்றார்.
A šestoga dana neka zgotove što donesu, a neka bude dvojinom onoliko koliko nakupe svaki dan.
6 ௬ அப்பொழுது மோசேயும் ஆரோனும் இஸ்ரவேல் மக்கள் எல்லோரையும் நோக்கி: “யெகோவாவே உங்களை எகிப்து தேசத்திலிருந்து புறப்படச்செய்தவர் என்பதை மாலையில் அறிவீர்கள்;
I reèe Mojsije i Aron svijem sinovima Izrailjevijem: doveèe æete poznati da vas je Gospod izveo iz zemlje Misirske;
7 ௭ அதிகாலையில் யெகோவாடைய மகிமையையும் காண்பீர்கள்; யெகோவாவுக்கு விரோதமான உங்களுடைய முறுமுறுப்புகளை அவர் கேட்டார்; நீங்கள் எங்களுக்கு விரோதமாக முறுமுறுப்பதற்கு நாங்கள் எம்மாத்திரம்” என்றார்கள்.
A sjutra æete vidjeti slavu Gospodnju; jer je èuo viku vašu na Gospoda. Jer šta smo mi da vièete na nas?
8 ௮ பின்னும் மோசே: “மாலையில் நீங்கள் சாப்பிடுவதற்குக் யெகோவா உங்களுக்கு இறைச்சியையும், அதிகாலையில் நீங்கள் திருப்தியடைவதற்கு அப்பத்தையும் கொடுக்கும்போது இது வெளிப்படும்; யெகோவாவுக்கு விரோதமாக நீங்கள் முறுமுறுத்த உங்களுடைய முறுமுறுப்புகளை அவர் கேட்டார்; நாங்கள் எம்மாத்திரம்? உங்களுடைய முறுமுறுப்புகள் எங்களுக்கு அல்ல, யெகோவாவுக்கே விரோதமாக இருக்கிறது” என்றான்.
I reèe Mojsije: doveèe æe vam dati Gospod mesa da jedete a ujutru hljeba da se nasitite; jer je èuo Gospod viku vašu, kojom vièete na nj. Jer što smo mi? Nije na nas vaša vika nego na Gospoda.
9 ௯ அப்பொழுது மோசே ஆரோனைப் பார்த்து: “நீ இஸ்ரவேல் மக்களாகிய சபையார்கள் எல்லோரையும் நோக்கி: யெகோவாவுக்கு முன்பாக சேருங்கள், அவர் உங்களுடைய முறுமுறுப்புகளைக் கேட்டார் என்று சொல்” என்றான்.
I reèe Mojsije Aronu: kaži svemu zboru sinova Izrailjevih: pristupite pred Gospoda, jer je èuo viku vašu.
10 ௧0 ஆரோன் இஸ்ரவேல் மக்களாகிய சபையார்களுக்கெல்லாம் இதைச் சொல்லுகிறபோது, அவர்கள் வனாந்திரதிசையாகத் திரும்பிப்பார்த்தார்கள்; அப்பொழுது யெகோவாவுடைய மகிமை மேகத்திலே காணப்பட்டது.
I kad reèe Aron svemu zboru sinova Izrailjevih, pogledaše u pustinju, i gle, slava Gospodnja pokaza se u oblaku.
11 ௧௧ யெகோவா மோசேயை நோக்கி:
I Gospod reèe Mojsiju govoreæi:
12 ௧௨ “இஸ்ரவேல் மக்களின் முறுமுறுப்புகளைக் கேட்டிருக்கிறேன்; நீ அவர்களுடன் பேசி, நீங்கள் மாலையில் இறைச்சியைச் சாப்பிட்டு, அதிகாலையில் அப்பத்தால் திருப்தியாகி, நான் உங்களுடைய தேவனாகிய யெகோவா என்பதை அறிந்துகொள்வீர்கள் என்று சொல்” என்றார்.
Èuo sam viku sinova Izrailjevih. Kaži im i reci: doveèe æete jesti mesa, a sjutra æete se nasititi hljeba, i poznaæete da sam ja Gospod Bog vaš.
13 ௧௩ மாலையில் காடைகள் வந்து விழுந்து முகாமை மூடிக்கொண்டது. அதிகாலையில் முகாமைச் சுற்றி பனி பெய்திருந்தது.
I uveèe doletješe prepelice i prekriliše oko, a ujutru pade rosa oko okola;
14 ௧௪ பெய்திருந்த பனி நீங்கினபின்பு, இதோ, வனாந்திரத்தின்மீது எங்கும் உருண்டையான ஒரு சிறிய பொருள் உறைந்த பனிக்கட்டிப் பொடியைப்போலத் தரையின்மேல் கிடந்தது.
A kad se diže rosa, a to po pustinji nešto sitno okruglo, sitno kao slana po zemlji.
15 ௧௫ இஸ்ரவேல் மக்கள் அதைக் கண்டு, அது என்னவென்று அறியாமல் இருந்து, ஒருவரை ஒருவர் பார்த்து, “இது என்ன என்றார்கள்; அப்பொழுது மோசே அவர்களை நோக்கி: “இது யெகோவா உங்களுக்குச் சாப்பிடக்கொடுத்த அப்பம்.
I kad vidješe sinovi Izrailjevi, govorahu jedan drugomu: šta je ovo? Jer ne znadijahu šta bješe. A Mojsije im reèe: to je hljeb što vam dade Gospod da jedete.
16 ௧௬ யெகோவா கட்டளையிடுகிறது என்னவென்றால், அவரவர் சாப்பிடும் அளவுக்குத் தகுந்தபடி அதில் எடுத்துச் சேர்க்கட்டும்; உங்களிலுள்ள நபர்களின் எண்ணிக்கையின்படி, அவனவன் தன் தன் கூடாரத்தில் இருக்கிறவர்களுக்காக தலைக்கு ஒரு ஓமர் அளவு எடுத்துக்கொள்ளட்டும்” என்றான்.
To je za što zapovjedi Gospod: kupite ga svaki dan koliko kome treba za jelo, po gomor na glavu, po broju duša vaših, svaki neka uzme za one koji su mu u šatoru.
17 ௧௭ இஸ்ரவேல் மக்கள் அப்படியே செய்து, சிலர் அதிகமாகவும் சிலர் குறைவாகவும் சேர்த்தார்கள்.
I uèiniše tako sinovi Izrailjevi; i nakupiše koji više koji manje.
18 ௧௮ பின்பு, அதை ஓமரால் அளந்தார்கள்: அதிகமாகச் சேர்த்தவனுக்கு மீதியானதும் இல்லை, குறைவாகச் சேர்த்தவனுக்குக் குறைவானதும் இல்லை; அவரவர் தாங்கள் சாப்பிடும் அளவுக்குத்தகுந்தபடி சேர்த்தார்கள்.
Pa mjeriše na gomor, i ne doðe više onom koji nakupi mnogo, niti manje onom koji nakupi malo, nego svaki nakupi koliko mu je trebalo da jede.
19 ௧௯ மோசே அவர்களை நோக்கி: “ஒருவனும் அதிகாலைவரை அதில் ஒன்றும் வைக்கக்கூடாது என்று அவர்களுக்குச் சொல்லியும்;
I reèe im Mojsije: niko da ne ostavlja od toga za sjutra.
20 ௨0 மோசேயின் சொல் கேட்காமல், சிலர் அதில் அதிகாலைவரை சிறிதளவு மீதியாக வைத்தார்கள்; அது பூச்சி பிடித்து நாற்றமெடுத்தது. அவர்கள்மேல் மோசே கோபம்கொண்டான்.
Ali ne poslušaše Mojsija, nego neki ostaviše od toga za sjutra, te se ucrva i usmrdje. I rasrdi se Mojsije na njih.
21 ௨௧ அதை அதிகாலைதோறும் அவரவர் சாப்பிடும் அளவுக்குத்தகுந்தபடி சேர்த்தார்கள், வெயில் ஏறஏற அது உருகிப்போகும்.
Tako ga kupljahu svako jutro, svaki koliko mu trebaše za jelo; a kad sunce ogrijevaše, tada se rastapaše.
22 ௨௨ ஆறாம் நாளில் தலைக்கு இரண்டு ஓமர் வீதமாக இரண்டுமடங்காக ஆகாரம் சேர்த்தார்கள்; அப்பொழுது சபையின் தலைவர்கள் எல்லோரும் வந்து, அதை மோசேக்கு அறிவித்தார்கள்.
A u šesti dan nakupiše hljeba dvojinom, po dva gomora na svakoga; i doðoše sve starješine od zbora, i javiše Mojsiju.
23 ௨௩ அவன் அவர்களை நோக்கி: “யெகோவா சொன்னது இதுதான்; நாளைக்குக் யெகோவாவுக்குறிய பரிசுத்த ஓய்வுநாளாகிய ஓய்வு; நீங்கள் சுடவேண்டியதைச் சுட்டு, வேகவைக்கவேண்டியதை வேகவைத்து, மீதியாக இருக்கிறதையெல்லாம் நாளைவரை உங்களுக்காக வைத்துவையுங்கள்” என்றான்.
A on im reèe: ovo kaza Gospod: sjutra je subota, odmor svet Gospodu; što æete peæi, pecite, i što æete kuhati, kuhajte danas; a što preteèe, ostavite i èuvajte za sjutra.
24 ௨௪ மோசே கட்டளையிட்டபடி, அதை மறுநாள்வரைக்கும் வைத்துவைத்தார்கள்; அப்பொழுது அது நாறவும் இல்லை, அதிலே பூச்சிபிடிக்கவும் இல்லை.
I ostaviše za sjutra, kao što zapovjedi Mojsije, i ne usmrdje se niti bješe crva u njemu.
25 ௨௫ அப்பொழுது மோசே; “அதை இன்றைக்குச் சாப்பிடுங்கள்; இன்று யெகோவாவுக்குரிய ஓய்வுநாள்; இன்று நீங்கள் அதை வெளியிலே காணமாட்டீர்கள்.
I reèe Mojsije: jedite to danas, jer je danas subota Gospodnja, danas neæete naæi u polju.
26 ௨௬ ஆறுநாட்களும் அதைச் சேர்ப்பீர்களாக; ஏழாம்நாள் ஓய்வுநாளாக இருக்கிறது; அதிலே அது உண்டாகாது” என்றான்.
Šest æete dana kupiti, a sedmi je dan subota, tada ga neæe biti.
27 ௨௭ ஏழாம்நாளில் மக்களில் சிலர் அதைச் சேர்க்கப் புறப்பட்டார்கள்; அவர்கள் அதைப் பார்க்கவில்லை.
I u sedmi dan izidoše neki od naroda da kupe, ali ne naðoše.
28 ௨௮ அப்பொழுது யெகோவா மோசேயை நோக்கி: “என்னுடைய கட்டளைகளையும் என்னுடைய சட்டங்களையும் கைக்கொள்ள எதுவரை மனம் இல்லாமல் இருப்பீர்கள்?
A Gospod reèe Mojsiju: dokle æete se protiviti zapovjestima mojim i zakonima mojim?
29 ௨௯ பாருங்கள், யெகோவா உங்களுக்கு ஓய்வுநாளை கொடுத்தபடியால், அவர் உங்களுக்கு ஆறாம்நாளில் இரண்டு நாளுக்கு வேண்டிய ஆகாரத்தைக் கொடுக்கிறார்; ஏழாம்நாளில் உங்களில் ஒருவனும் தன்தன் இடத்திலிருந்து புறப்படாமல், அவனவன் தன் தன் இடத்திலே இருக்கவேண்டும்” என்றார்.
Vidite, Gospod vam je dao subotu, zato vam daje šestoga dana hljeba na dva dana. Stojte svaki na svom mjestu, i neka ne odlazi niko sa svojega mjesta u sedmi dan.
30 ௩0 அப்படியே மக்கள் ஏழாம்நாளில் ஓய்ந்திருந்தார்கள்.
I poèinu narod u sedmi dan.
31 ௩௧ இஸ்ரவேல் மக்கள் அதற்கு மன்னா என்று பெயரிட்டார்கள்; அது கொத்துமல்லி அளவாகவும் வெண்மைநிறமாகவும் இருந்தது, அதின் ருசி தேனிட்ட பணியாரத்தைப்போல இருந்தது.
I dom Izrailjev prozva taj hljeb mana; a bijaše kao sjeme korijandrovo, bijela, i na jeziku kao medeni kolaèi.
32 ௩௨ அப்பொழுது மோசே: “யெகோவா கட்டளையிட்ட காரியம் என்னவென்றால், நான் உங்களை எகிப்து தேசத்திலிருந்து புறப்படச்செய்தபோது, வனாந்திரத்தில் உங்களுக்கு சாப்பிடக்கொடுத்த அப்பத்தை உங்கள் சந்ததியார்கள் பார்க்கும்படி, அவர்களுக்காக அதைப் பாதுகாப்பதற்கு, அதிலே ஒரு ஓமர் நிறைய எடுத்து வைக்கவேண்டும்” என்றான்.
I reèe Mojsije: ovo je zapovjedio Gospod: napuni gomor toga, neka se èuva od koljena do koljena vašega, da vide hljeb, kojim sam vas hranio u pustinji kad vas izvedoh iz zemlje Misirske.
33 ௩௩ மேலும், மோசே ஆரோனை நோக்கி: “நீ ஒரு பாத்திரத்தை எடுத்து, அதிலே ஒரு ஓமர் அளவு மன்னாவைப் போட்டு, அதை உங்களுடைய சந்ததியார்களுக்காகப் பாதுகாப்பதற்குக் யெகோவாவுடைய சந்நிதியிலே வை” என்றான்.
I reèe Mojsije Aronu: uzmi krèag i naspi pun gomor mane, i metni pred Gospoda da se èuva od koljena do koljena vašega.
34 ௩௪ யெகோவா மோசேக்குக் கட்டளையிட்டபடியே அது காக்கப்படும்படி ஆரோன் அதைச் சாட்சி சந்நிதியில் வைத்தான்.
I ostavi ga Aron pred svjedoèanstvom da se èuva, kao što zapovjedi Gospod Mojsiju.
35 ௩௫ இஸ்ரவேல் மக்கள் குடியிருப்பான தேசத்திற்கு வரும்வரை நாற்பது வருடங்கள் மன்னாவை சாப்பிட்டார்கள்; அவர்கள் கானான் தேசத்தின் எல்லையில் சேரும்வரையும் மன்னாவை சாப்பிட்டார்கள்.
A sinovi Izrailjevi jedoše manu èetrdeset godina dok ne doðoše u zemlju u kojoj æe živjeti; jedoše manu dok ne doðoše na meðu zemlje Hananske.
36 ௩௬ ஒரு ஓமரானது எப்பாவிலே பத்தில் ஒரு பங்கு.
A gomor je desetina efe.