< யாத்திராகமம் 13 >
1 ௧ யெகோவா மோசேயை நோக்கி:
Rəbbe Mısayk'le eyhen:
2 ௨ “இஸ்ரவேலர்களுக்குள் மனிதர்களிலும் மிருகஜீவன்களிலும் கர்ப்பம்திறந்து பிறக்கிற, முதற்பேறான அனைத்தையும் எனக்குப் பரிசுத்தப்படுத்து; அது என்னுடையது” என்றார்.
– İzrailee yedarşe ts'eppa vuxuyne dixbışde hək'ee: ts'eppiyn dixbıyiy həyvanaşin ts'ettiyn balabı Yizde doyil qe'e.
3 ௩ அப்பொழுது மோசே மக்களை நோக்கி: “நீங்கள் அடிமைத்தன வீடாகிய எகிப்திலிருந்து புறப்பட்ட இந்த நாளை நினையுங்கள்; யெகோவா பலத்த கையினால் உங்களை இந்த இடத்திலிருந்து புறப்படச்செய்தார்; ஆகையால், நீங்கள் புளித்த அப்பம் சாப்பிடவேண்டாம்.
Mısee milletık'le eyhen: – Rəbbee Cuna xəbvalla haagu, şu Misirğançe qığav'uyn, nukariyvalike g'attivxhan hav'uyn yiğ yik'el aqqe. Mane yiğıl acıxamırnan gıney umoyxhan.
4 ௪ ஆபீப் மாதத்தின் இந்த நாளிலே நீங்கள் புறப்பட்டீர்கள்.
G'iyniyn, şu inçe qığeepç'ı əlyhəən yiğ Aviv eyhene vuzan vod.
5 ௫ ஆகையால், யெகோவா உனக்குக் கொடுப்பேன் என்று உன்னுடைய முன்னோர்களுக்கு ஆணையிட்டதும், பாலும் தேனும் ஓடுகிறதுமான தேசமாகிய கானானியர்கள், ஏத்தியர்கள், எமோரியர்கள், ஏவியர்கள், எபூசியர்கள் என்பவர்களுடைய தேசத்திற்கு உன்னை வரச்செய்யும் காலத்தில், நீ இந்த மாதத்திலே இந்த ஆராதனையை செய்வாயாக.
Rəbbee vuşde dekkaaşis k'ınniy g'assır, Kana'anbışin, Q'etbışin, Emorbışin, Q'ivbışin, Yevusbışin nyakiy itv gyodatstsen cigabı şos helesva. Rəbbee şu maqa qabıyng'a, mane vuza man ədat he'e:
6 ௬ புளிப்பில்லா அப்பத்தை ஏழுநாட்கள்வரை சாப்பிடவேண்டும்; ஏழாம்நாளிலே யெகோவாவுக்குப் பண்டிகை அனுசரிக்கப்படவேண்டும்.
yighılle yiğna ilydyadıyn, acıxamır deşin gıney oxhne. Yighıd'esde yiğılid Rəbbis bayram alğehe.
7 ௭ அந்த ஏழுநாட்களும் புளிப்பில்லா அப்பம் சாப்பிடவேண்டும்; புளிப்புள்ள அப்பம் உன்னிடத்திலே காணப்படவேண்டாம்; உன்னுடைய எல்லைக்குள் எங்கும் புளித்தமாவும் உன்னிடத்தில் காணப்படவேண்டாம்.
Mane yighne yiğee ilydyadıyn, acıxamır deşin gıney oxhne. Şu vooxhenemeene cigabışee, acıxamırıb, acıxamırıke hı'iyn karıd ixhes ıkkan deş.
8 ௮ அந்த நாளில் நீ உன்னுடைய பிள்ளைகளை நோக்கி: நான் எகிப்திலிருந்து புறப்படும்போது, யெகோவா எனக்குச் செய்ததற்காக இப்படி நடப்பிக்கப்படுகிறது என்று சொல்.
Mane yiğıl şu vuşde dixbışik'le eyhe: «Şi in ha'an, Rəbbee şi Misirğançe qığa'ang'a hav'una yugvalla yik'el avqu».
9 ௯ யெகோவாவின் நியாயப்பிரமாணம் உன்னுடைய வாயிலிருக்கும்படி, இது உன்னுடைய கையிலே ஒரு அடையாளமாகவும் உன்னுடைய கண்களின் நடுவே நினைப்பூட்டுதலாகவும் இருப்பதாக; பலத்த கையினால் யெகோவா உன்னை எகிப்திலிருந்து புறப்படச்செய்தார்;
Rəbbee Cuna xəbvalla haagu, şu Misirğançe qığav'uva, havaasre Rəbbina q'aanun vuşde ghalele g'u'moxhacen. Mançil-allad hasre man ədat vuşde xıleyliniy ligaylin k'ats' xhinne vuşde yik'bışee axvecen.
10 ௧0 ஆகையால், நீ வருடந்தோறும் குறித்த காலத்தில் இந்த நியாயத்தை அனுசரித்து வரவும்.
Senbı atk'ıniylette şu man yiğ yik'el aqqı alğehe.
11 ௧௧ மேலும், “யெகோவா உனக்கும் உன்னுடைய முன்னோர்களுக்கும் ஆணையிட்டபடியே, உன்னைக் கானானியரின் தேசத்திலே வரச்செய்து, அதை உனக்குக் கொடுக்கும்போது,
Rəbbee şosiy vuşde dekkaaşis k'ın g'assır helesva uvhuyne Kana'anaaşine ölkeeqa qabı hipxhırne yiğıle,
12 ௧௨ கர்ப்பந்திறந்து பிறக்கும் அனைத்தையும், உனக்கு இருக்கும் மிருகஜீவன்களின் முதல்பிறப்பு அனைத்தையும், யெகோவாவுக்கு ஒப்புக்கொடுப்பாயாக; அவைகளிலுள்ள ஆண்கள் யெகோவாவுடையவைகள்.
ts'eppiyn dixbı Rəbbine doyul qee'e. Həyvanaaşinıd ts'ettiyn vughulyun balabı Rəbbine doyul qe'e.
13 ௧௩ கழுதையின் முதற்பிறப்பையெல்லாம் ஒரு ஆட்டுக்குட்டியால் மீட்டுக்கொள்வாயாக; மீட்காவிட்டால், அதின் கழுத்தை உடைத்துப்போடு. உன்னுடைய பிள்ளைகளில் முதற்பேறான எல்லோரையும் மீட்டுக்கொள்.
Ts'eppiyne əməleyne balayl-alla urg qevle. Çil-alla vuççud qidelexheene, mançina gardan havaq'ar hee'e. Gırgıne ts'eppa vuxhayne dixbışil-alla nuk'ra qele.
14 ௧௪ பிற்காலத்தில் உன்னுடைய மகன்: இது என்ன என்று உன்னைக் கேட்டால்; நீ அவனை நோக்கி: யெகோவா எங்களைப் பலத்த கையினால் அடிமைத்தன வீடாகிய எகிப்திலிருந்து புறப்படச்செய்தார்.
Mısamecad duxee vake man hucooneva qiyghınene, eyhe: «Rəbb şal oğa it'umra ıxha, şi Misirğançe qığav'u, nukariyvalike g'attivxhan hav'u.
15 ௧௫ எங்களை விடாதபடி, பார்வோன் கடினப்பட்டிருக்கும்போது, யெகோவா எகிப்து தேசத்தில் மனிதரின் முதல்பிள்ளைகள்முதல் மிருகஜீவன்களின் முதற்பிறப்புகள்வரையும் உண்டாயிருந்த முதற்பிறப்புகள் யாவையும் கொன்றுபோட்டார்; ஆகையால், கர்ப்பந்திறந்து பிறக்கும் ஆண்களையெல்லாம் நான் யெகோவாவுக்குப் பலியிட்டு, என்னுடைய பிள்ளைகளில் முதற்பிறப்புகள் அனைத்தையும் மீட்டுக்கொள்ளுகிறேன்.
Fironus şi g'avkvas devkanang'a, mana hı't'ilqa sark'ılyne gahıl, Rəbbee Misirbışin gırgın ts'eppiyn dixbı gyabat'anbı. Həyvanaaşinıd ts'ettiyn balabı gyaat'anbı. Mançil-allad zı ts'ettiyn vughulyun həyvanaaşin balabı Rəbbis q'urbanna allya'a, ts'eppiyne yizde dixbışil-allad nuk'ra qele».
16 ௧௬ யெகோவா எங்களைப் பலத்த கையினால் எகிப்திலிருந்து புறப்படச்செய்வதற்கு, இது உன்னுடைய கையில் அடையாளமாகவும், உன்னுடைய கண்களின் நடுவே ஞாபகக்குறியாகவும் இருப்பதாக என்று சொல்வாயாக” என்றான்.
Rəbb şal oğa it'umra ıxhay, şi Misirğançe qığav'uy, vuşdemee xıleyliniy ligaylin k'ats' xhinne ixhecen.
17 ௧௭ பார்வோன் மக்களைப் போகவிட்டபின்பு: மக்கள் யுத்தத்தைக் கண்டால் மனமடிந்து, எகிப்திற்குத் திரும்புவார்கள் என்று சொல்லி; பெலிஸ்தர்களின் தேசத்தின் வழியாகப் போவது அருகாமையாக இருந்தாலும், தேவன் அவர்களை அந்த வழியாக நடத்தாமல்,
Fironee millet g'ayqiyng'a, Allahee manbı Filiştinaaşine cigabışile k'ena yəq cit'aba vuxheyib quvqekka deş. Allahee eyhen: – Maa'ab manbışika muhariba hav'eene, manbışe sayid fıkırbı badal hı'ı Misirqacab siviyk'al.
18 ௧௮ செங்கடலின் வனாந்திர வழியாக மக்களைச் சுற்றிப் போகச்செய்தார். இஸ்ரவேல் மக்கள் எகிப்து தேசத்திலிருந்து கோத்திரம் கோத்திரமாக புறப்பட்டுப்போனார்கள்.
Allahee millet alik'ar hı'ı sahrayle k'ena Ç'ərane deryahısqa qıkkeka. İzrailybı Misireençe dəv'əysınbı xhinnen silahbı alyaat'u avayk'an.
19 ௧௯ மோசே தன்னோடு யோசேப்பின் எலும்புகளை எடுத்துக்கொண்டு போனான். தேவன் நிச்சயமாக உங்களைச் சந்திப்பார்; அப்பொழுது உங்களுடன் என்னுடைய எலும்புகளை இந்த இடத்திலிருந்து கொண்டுபோங்கள் என்று யோசேப்பு சொல்லி, இஸ்ரவேலர்களை உறுதியாக ஆணையிடும்படிச் செய்திருந்தான்.
Mısee mançe əlyhəəng'ə, Yusufun bark'vbıd cokasana sı'ı qıkkekanbı. Yusuf qek'ang'a İzrailybışisqa k'ın g'assaras alikkı uvhuynniy: – Allahee şos huvuyn cuvab mısacad yik'el hixan ha'as deş. Şunad əlyhəəng'ə, yizın bark'vbı inyaa g'ılyma'a, şoka qıkkee.
20 ௨0 அவர்கள் சுக்கோத்திலிருந்து பயணப்பட்டு, வனாந்திரத்தின் ஓரமாக ஏத்தாமிலே முகாமிட்டார்கள்.
İzrailybı Sukkotğançe qığeepç'ı, sahrayne k'anek sa Etam eyhene cigee çadırbı giyxə.
21 ௨௧ அவர்கள் இரவும் பகலும் வழிநடக்கக்கூடும்படி, யெகோவா பகலில் அவர்களை வழிநடத்த மேகத்தூணிலும், இரவில் அவர்களுக்கு வெளிச்சம் காட்ட அக்கினித்தூணிலும் அவர்களுக்கு முன்பு சென்றார்.
Rəbb Vuc manbışde hirniy əlyhəə. Mang'vee yiğniyığın manbışis yəq buludne dirakıqa, xəmdeb ts'ayine dirakıqaniy işix hele haagva. Mang'vee məxüd manbışisse yiğniyığınıb, xəmdeb əlyhəəs vəxəcenvaniy ha'a.
22 ௨௨ பகலிலே மேகத்தூணிலும், இரவிலே அக்கினித்தூணிலும் மக்களிடத்திலிருந்து விலகிப்போகவில்லை.
Sık'ınne gahıs xheyib buludna dirak yiğniyığın, ts'ayina dirakıb xəmde manbı g'alyav'u avayk'an deş.