< எஸ்தர் 9 >

1 ராஜாவின் வார்த்தையின்படியும் அவனுடைய கட்டளையின்படியும் செய்யப்படுகிறதற்கு, ஆதார் மாதம் என்கிற பன்னிரண்டாம் மாதம் பதின்மூன்றாந்தேதியிலே, யூதர்களின் பகைவர்கள் அவர்களை மேற்கொள்ளலாம் என்று நம்பினார்களே; அந்த நாளிலே, யூதர்களானவர்கள் தங்கள் பகைவர்களை மேற்கொள்ளும்படிக் காரியம் மாறுதலாக முடிந்தது.
וּבִשְׁנֵים֩ עָשָׂ֨ר חֹ֜דֶשׁ הוּא־חֹ֣דֶשׁ אֲדָ֗ר בִּשְׁלֹושָׁ֨ה עָשָׂ֥ר יֹום֙ בֹּ֔ו אֲשֶׁ֨ר הִגִּ֧יעַ דְּבַר־הַמֶּ֛לֶךְ וְדָתֹ֖ו לְהֵעָשֹׂ֑ות בַּיֹּ֗ום אֲשֶׁ֨ר שִׂבְּר֜וּ אֹיְבֵ֤י הַיְּהוּדִים֙ לִשְׁלֹ֣וט בָּהֶ֔ם וְנַהֲפֹ֣וךְ ה֔וּא אֲשֶׁ֨ר יִשְׁלְט֧וּ הַיְּהוּדִ֛ים הֵ֖מָּה בְּשֹׂנְאֵיהֶֽם׃
2 யூதர்கள் அகாஸ்வேரு ராஜாவின் எல்லா நாடுகளிலுமுள்ள பட்டணங்களிலே தங்களுக்கு தீங்கை கொண்டுவர முயற்சிசெய்தவர்கள்மேல் கைபோடக் கூடிக்கொண்டார்கள்; ஒருவரும் அவர்களுக்கு முன்பாக நிற்கமுடியாமல் இருந்தது; அவர்களைப்பற்றி எல்லா மக்களுக்கும் பயமுண்டாயிற்று.
נִקְהֲל֨וּ הַיְּהוּדִ֜ים בְּעָרֵיהֶ֗ם בְּכָל־מְדִינֹות֙ הַמֶּ֣לֶךְ אֳחַשְׁוֵרֹ֔ושׁ לִשְׁלֹ֣חַ יָ֔ד בִּמְבַקְשֵׁ֖י רָֽעָתָ֑ם וְאִישׁ֙ לֹא־עָמַ֣ד לִפְנֵיהֶ֔ם כִּֽי־נָפַ֥ל פַּחְדָּ֖ם עַל־כָּל־הָעַמִּֽים׃
3 நாடுகளின் எல்லா அதிகாரிகளும், ஆளுநர்களும், பிரபுக்களும், ராஜாவின் நிர்வாகிகளும், யூதர்களுக்குத் துணையாக நின்றார்கள்; மொர்தெகாயினால் உண்டான பயம் அவர்களைப் பிடித்தது.
וְכָל־שָׂרֵ֨י הַמְּדִינֹ֜ות וְהָאֲחַשְׁדַּרְפְּנִ֣ים וְהַפַּחֹ֗ות וְעֹשֵׂ֤י הַמְּלָאכָה֙ אֲשֶׁ֣ר לַמֶּ֔לֶךְ מְנַשְּׂאִ֖ים אֶת־הַיְּהוּדִ֑ים כִּֽי־נָפַ֥ל פַּֽחַד־מָרְדֳּכַ֖י עֲלֵיהֶֽם׃
4 மொர்தெகாய் ராஜாவின் அரண்மனையில் பெரியவனாக இருந்தான்; அவனுடைய புகழ் எல்லா நாடுகளிலும் பிரபலமானது; இந்த மொர்தெகாய் என்பவன் மேன்மேலும் பெரியவன் ஆனான்.
כִּֽי־גָ֤דֹול מָרְדֳּכַי֙ בְּבֵ֣ית הַמֶּ֔לֶךְ וְשָׁמְעֹ֖ו הֹולֵ֣ךְ בְּכָל־הַמְּדִינֹ֑ות כִּֽי־הָאִ֥ישׁ מָרְדֳּכַ֖י הֹולֵ֥ךְ וְגָדֹֽול׃ פ
5 அப்படியே யூதர்கள் தங்களுடைய விரோதிகளையெல்லாம் பட்டயத்தால் வெட்டிக்கொன்று அழித்து, தங்களுக்கு விருப்பமானபடி தங்கள் பகைவர்களுக்குச் செய்தார்கள்.
וַיַּכּ֤וּ הַיְּהוּדִים֙ בְּכָל־אֹ֣יְבֵיהֶ֔ם מַכַּת־חֶ֥רֶב וְהֶ֖רֶג וְאַבְדָ֑ן וַיַּֽעֲשׂ֥וּ בְשֹׂנְאֵיהֶ֖ם כִּרְצֹונָֽם׃
6 யூதர்கள் சூசான் அரண்மனையிலும் ஐந்நூறுபேரைக் கொன்று அழித்துப்போட்டார்கள்.
וּבְשׁוּשַׁ֣ן הַבִּירָ֗ה הָרְג֤וּ הַיְּהוּדִים֙ וְאַבֵּ֔ד חֲמֵ֥שׁ מֵאֹ֖ות אִֽישׁ׃
7 அம்மெதாத்தாவின் மகனாகிய ஆமான் என்னும் யூதர்களுடைய எதிரியின் மகன்களான பர்சான்தாத்தா, தல்போன், அஸ்பாதா,
וְאֵ֧ת ׀ פַּרְשַׁנְדָּ֛תָא וְאֵ֥ת ׀ דַּֽלְפֹ֖ון וְאֵ֥ת ׀ אַסְפָּֽתָא׃
8 பொராதா, அதலியா, அரிதாத்தா,
וְאֵ֧ת ׀ פֹּורָ֛תָא וְאֵ֥ת ׀ אֲדַלְיָ֖א וְאֵ֥ת ׀ אֲרִידָֽתָא׃
9 பர்மஷ்டா, அரிசாய், அரிதாய், வாய்சாதா ஆகிய பத்துப்பேரையும் கொன்றுபோட்டார்கள்.
וְאֵ֤ת ׀ פַּרְמַ֙שְׁתָּא֙ וְאֵ֣ת ׀ אֲרִיסַ֔י וְאֵ֥ת ׀ אֲרִדַ֖י וְאֵ֥ת ׀ וַיְזָֽתָא׃
10 ௧0 ஆனாலும் அவர்கள் கொள்ளையிடவில்லை.
עֲ֠שֶׂרֶת בְּנֵ֨י הָמָ֧ן בֶּֽן־הַמְּדָ֛תָא צֹרֵ֥ר הַיְּהוּדִ֖ים הָרָ֑גוּ וּבַ֨בִּזָּ֔ה לֹ֥א שָׁלְח֖וּ אֶת־יָדָֽם׃
11 ௧௧ அன்றையதினம் சூசான் அரண்மனையில் கொன்றுபோடப்பட்டவர்களின் எண்ணிக்கை ராஜாவிற்கு முன்பாக கொண்டுவரப்பட்டது.
בַּיֹּ֣ום הַה֗וּא בָּ֣א מִסְפַּ֧ר הֽ͏ַהֲרוּגִ֛ים בְּשׁוּשַׁ֥ן הַבִּירָ֖ה לִפְנֵ֥י הַמֶּֽלֶךְ׃ ס
12 ௧௨ அப்பொழுது ராஜா, ராணியாகிய எஸ்தரை நோக்கி: யூதர்கள் சூசான் அரண்மனையில் ஐந்நூறுபேரையும் ஆமானின் பத்து மகன்களையும் கொன்றுபோட்டார்கள்; ராஜாவின் மற்ற நாடுகளிலும் என்ன செய்திருப்பார்களோ, இப்போதும் உன்னுடைய வேண்டுதல் என்ன? அது உனக்குக் கட்டளையிடப்படும்; உன்னுடைய மன்றாட்டு என்ன? அதின்படி செய்யப்படும் என்றான்.
וַיֹּ֨אמֶר הַמֶּ֜לֶךְ לְאֶסְתֵּ֣ר הַמַּלְכָּ֗ה בְּשׁוּשַׁ֣ן הַבִּירָ֡ה הָרְגוּ֩ הַיְּהוּדִ֨ים וְאַבֵּ֜ד חֲמֵ֧שׁ מֵאֹ֣ות אִ֗ישׁ וְאֵת֙ עֲשֶׂ֣רֶת בְּנֵֽי־הָמָ֔ן בִּשְׁאָ֛ר מְדִינֹ֥ות הַמֶּ֖לֶךְ מֶ֣ה עָשׂ֑וּ וּמַה־שְּׁאֵֽלָתֵךְ֙ וְיִנָּ֣תֵֽן לָ֔ךְ וּמַה־בַּקָּשָׁתֵ֥ךְ עֹ֖וד וְתֵעָֽשׂ׃
13 ௧௩ அப்பொழுது எஸ்தர்: ராஜாவிற்கு விருப்பமாக இருந்தால், இன்றையநாளின் கட்டளையின்படியே சூசானிலிருக்கிற யூதர்கள் நாளைக்கும் செய்யவும், ஆமானின் பத்து மகன்களின் உடலையும் தூக்குமரத்தில் தூக்கிப்போடவும் உத்திரவிடவேண்டும் என்றாள்.
וַתֹּ֤אמֶר אֶסְתֵּר֙ אִם־עַל־הַמֶּ֣לֶךְ טֹ֔וב יִנָּתֵ֣ן גַּם־מָחָ֗ר לַיְּהוּדִים֙ אֲשֶׁ֣ר בְּשׁוּשָׁ֔ן לַעֲשֹׂ֖ות כְּדָ֣ת הַיֹּ֑ום וְאֵ֛ת עֲשֶׂ֥רֶת בְּנֵֽי־הָמָ֖ן יִתְל֥וּ עַל־הָעֵֽץ׃
14 ௧௪ அப்படியே செய்யும்படி ராஜா உத்திரவு கொடுத்தான்; அதற்கு சூசானிலே கட்டளை பிறந்தது; ஆமானின் பத்து மகன்களுடைய உடல்களையும் தூக்கிப்போட்டார்கள்.
וַיֹּ֤אמֶר הַמֶּ֙לֶךְ֙ לְהֵֽעָשֹׂ֣ות כֵּ֔ן וַתִּנָּתֵ֥ן דָּ֖ת בְּשׁוּשָׁ֑ן וְאֵ֛ת עֲשֶׂ֥רֶת בְּנֵֽי־הָמָ֖ן תָּלֽוּ׃
15 ௧௫ சூசானில் இருக்கிற யூதர்கள் ஆதார் மாதத்தின் பதினான்காம்தேதியிலும் கூடிச்சேர்ந்து, சூசானில் முந்நூறுபேரைக் கொன்றுபோட்டார்கள்; ஆனாலும் கொள்ளையடிக்கத் தங்களுடைய கையை நீட்டவில்லை.
וַיִּֽקָּהֲל֞וּ הַיְּהוּדִיִּים (הַיְּהוּדִ֣ים) אֲשֶׁר־בְּשׁוּשָׁ֗ן גַּ֠ם בְּיֹ֣ום אַרְבָּעָ֤ה עָשָׂר֙ לְחֹ֣דֶשׁ אֲדָ֔ר וַיּֽ͏ַהַרְג֣וּ בְשׁוּשָׁ֔ן שְׁלֹ֥שׁ מֵאֹ֖ות אִ֑ישׁ וּבַ֨בִּזָּ֔ה לֹ֥א שָׁלְח֖וּ אֶת־יָדָֽם׃
16 ௧௬ ராஜாவின் நாடுகளிலுள்ள மற்ற யூதர்கள் தங்களுடைய உயிரைப் பாதுகாக்கவும், தங்கள் பகைவர்களுக்கு விலகி இளைப்பாறுதல் அடையவும் ஒன்றாகச்சேர்ந்து, தங்களுடைய எதிரிகளில் எழுபத்தையாயிரம்பேரைக் கொன்றுபோட்டார்கள்; ஆனாலும் கொள்ளையடிக்கத் தங்களுடைய கையை நீட்டவில்லை.
וּשְׁאָ֣ר הַיְּהוּדִ֡ים אֲשֶׁר֩ בִּמְדִינֹ֨ות הַמֶּ֜לֶךְ נִקְהֲל֣וּ ׀ וְעָמֹ֣ד עַל־נַפְשָׁ֗ם וְנֹ֙וחַ֙ מֵאֹ֣יְבֵיהֶ֔ם וְהָרֹג֙ בְּשֹׂ֣נְאֵיהֶ֔ם חֲמִשָּׁ֥ה וְשִׁבְעִ֖ים אָ֑לֶף וּבַ֨בִּזָּ֔ה לֹ֥א שָֽׁלְח֖וּ אֶת־יָדָֽם׃
17 ௧௭ ஆதார் மாதத்தின் பதிமூன்றாம்தேதியிலே இப்படிச் செய்து, பதினான்காம்தேதியிலே இளைப்பாறி, அதை விருந்துண்டு சந்தோஷப்படுகிற பண்டிகை நாளாக்கினார்கள்.
בְּיֹום־שְׁלֹשָׁ֥ה עָשָׂ֖ר לְחֹ֣דֶשׁ אֲדָ֑ר וְנֹ֗וחַ בְּאַרְבָּעָ֤ה עָשָׂר֙ בֹּ֔ו וְעָשֹׂ֣ה אֹתֹ֔ו יֹ֖ום מִשְׁתֶּ֥ה וְשִׂמְחָֽה׃
18 ௧௮ சூசானிலுள்ள யூதர்களோ, அந்த மாதத்தின் பதிமூன்றாந்தேதியிலும் பதினான்காம்தேதியிலும் ஏகமாகக்கூடி, பதினைந்தாந்தேதியில் இளைப்பாறி, அதை விருந்துண்டு சந்தோஷப்படுகிற பண்டிகை நாளாக்கினார்கள்.
וְהַיְּהוּדִיִּים (וְהַיְּהוּדִ֣ים) אֲשֶׁר־בְּשׁוּשָׁ֗ן נִקְהֲלוּ֙ בִּשְׁלֹשָׁ֤ה עָשָׂר֙ בֹּ֔ו וּבְאַרְבָּעָ֥ה עָשָׂ֖ר בֹּ֑ו וְנֹ֗וחַ בַּחֲמִשָּׁ֤ה עָשָׂר֙ בֹּ֔ו וְעָשֹׂ֣ה אֹתֹ֔ו יֹ֖ום מִשְׁתֶּ֥ה וְשִׂמְחָֽה׃
19 ௧௯ ஆதலால் மதில்களில்லாத ஊர்களில் குடியிருக்கிற நாட்டுப்புறத்தாரான யூதர்கள் ஆதார் மாதத்தின் பதினான்காம்தேதியைச் சந்தோஷமும், விருந்துண்கிற பூரிப்புமான நாளும், ஒருவருக்கொருவர் பரிசுகளை அனுப்புகிற நாளுமாக்கினார்கள்.
עַל־כֵּ֞ן הַיְּהוּדִ֣ים הַפְּרֹוזִים (הַפְּרָזִ֗ים) הַיֹּשְׁבִים֮ בְּעָרֵ֣י הַפְּרָזֹות֒ עֹשִׂ֗ים אֵ֠ת יֹ֣ום אַרְבָּעָ֤ה עָשָׂר֙ לְחֹ֣דֶשׁ אֲדָ֔ר שִׂמְחָ֥ה וּמִשְׁתֶּ֖ה וְיֹ֣ום טֹ֑וב וּמִשְׁלֹ֥וחַ מָנֹ֖ות אִ֥ישׁ לְרֵעֵֽהוּ׃ פ
20 ௨0 மொர்தெகாய் இந்தக் காரியங்களை எழுதி, சமீபத்திலும் தூரத்திலும் இருக்கிற அகாஸ்வேரு ராஜாவின் எல்லா நாடுகளிலுமுள்ள எல்லா யூதர்களுக்கும் கடிதங்களை அனுப்பி,
וַיִּכְתֹּ֣ב מָרְדֳּכַ֔י אֶת־הַדְּבָרִ֖ים הָאֵ֑לֶּה וַיִּשְׁלַ֨ח סְפָרִ֜ים אֶל־כָּל־הַיְּהוּדִ֗ים אֲשֶׁר֙ בְּכָל־מְדִינֹות֙ הַמֶּ֣לֶךְ אֲחַשְׁוֵרֹ֔ושׁ הַקְּרֹובִ֖ים וְהָרְחֹוקִֽים׃
21 ௨௧ ஒவ்வொரு வருடமும் ஆதார் மாதத்தின் பதினான்காம் பதினைந்தாந்தேதிகளை, யூதர்கள் தங்களுடைய பகைவர்களுக்கு விலகி இளைப்பாறுதல் அடைந்த நாட்களாகவும், அவர்களுடைய சஞ்சலம் சந்தோஷமாகவும், அவர்களுடைய துக்கம் மகிழ்ச்சியாகவும் மாறின மாதமாகவும் அநுசரித்து,
לְקַיֵּם֮ עֲלֵיהֶם֒ לִהְיֹ֣ות עֹשִׂ֗ים אֵ֠ת יֹ֣ום אַרְבָּעָ֤ה עָשָׂר֙ לְחֹ֣דֶשׁ אֲדָ֔ר וְאֵ֛ת יֹום־חֲמִשָּׁ֥ה עָשָׂ֖ר בֹּ֑ו בְּכָל־שָׁנָ֖ה וְשָׁנָֽה׃
22 ௨௨ அந்நாட்களில் விருந்துண்டு சந்தோஷம்கொண்டாடவும், ஒருவருக்கொருவர் பரிசுகளை அனுப்பவும், எளியவர்களுக்குத் தானதர்மம் செய்யவும்வேண்டும் என்று திட்டம் செய்தான்.
כַּיָּמִ֗ים אֲשֶׁר־נָ֨חוּ בָהֶ֤ם הַיְּהוּדִים֙ מֵאֹ֣ויְבֵיהֶ֔ם וְהַחֹ֗דֶשׁ אֲשֶׁר֩ נֶהְפַּ֨ךְ לָהֶ֤ם מִיָּגֹון֙ לְשִׂמְחָ֔ה וּמֵאֵ֖בֶל לְיֹ֣ום טֹ֑וב לַעֲשֹׂ֣ות אֹותָ֗ם יְמֵי֙ מִשְׁתֶּ֣ה וְשִׂמְחָ֔ה וּמִשְׁלֹ֤וחַ מָנֹות֙ אִ֣ישׁ לְרֵעֵ֔הוּ וּמַתָּנֹ֖ות לָֽאֶבְיֹונִֽים׃
23 ௨௩ அப்பொழுது யூதர்கள் தாங்கள் செய்யத்துவங்கியபடியும் மொர்தெகாய் தங்களுக்கு எழுதினபடியும் செய்யச் சம்மதித்தார்கள்.
וְקִבֵּל֙ הַיְּהוּדִ֔ים אֵ֥ת אֲשֶׁר־הֵחֵ֖לּוּ לַעֲשֹׂ֑ות וְאֵ֛ת אֲשֶׁר־כָּתַ֥ב מָרְדֳּכַ֖י אֲלֵיהֶֽם׃
24 ௨௪ அம்மெதாத்தாவின் மகனாகிய ஆமான் என்னும் ஆகாகியன், யூதர்களுக்கெல்லாம் எதிரியாக இருந்து யூதர்களை அழிக்க நினைத்து, அவர்களை அழிக்கவும், ஒடுக்கவும் பூர் என்னப்பட்ட சீட்டைப் போட செய்தான்.
כִּי֩ הָמָ֨ן בֶּֽן־הַמְּדָ֜תָא הָֽאֲגָגִ֗י צֹרֵר֙ כָּל־הַיְּהוּדִ֔ים חָשַׁ֥ב עַל־הַיְּהוּדִ֖ים לְאַבְּדָ֑ם וְהִפִּ֥יל פּוּר֙ ה֣וּא הַגֹּורָ֔ל לְהֻמָּ֖ם וּֽלְאַבְּדָֽם׃
25 ௨௫ ஆனாலும் எஸ்தர், ராஜாவிற்கு முன்பாகப்போய், யூதர்களுக்கு விரோதமாக அவன் நினைத்த அவனுடைய பொல்லாத யோசனை அவனுடைய தலையின்மேல் திரும்பும்படி கட்டளையிட்டதால், அவனையும் அவனுடைய மகன்களையும் மரத்திலே தூக்கிப்போட்டார்கள்.
וּבְבֹאָהּ֮ לִפְנֵ֣י הַמֶּלֶךְ֒ אָמַ֣ר עִם־הַסֵּ֔פֶר יָשׁ֞וּב מַחֲשַׁבְתֹּ֧ו הָרָעָ֛ה אֲשֶׁר־חָשַׁ֥ב עַל־הַיְּהוּדִ֖ים עַל־רֹאשֹׁ֑ו וְתָל֥וּ אֹתֹ֛ו וְאֶת־בָּנָ֖יו עַל־הָעֵֽץ׃
26 ௨௬ ஆகையால் அந்த நாட்கள் பூர் என்னும் பெயரால் பூரீம் என்னப்பட்டது; அவன் அந்த கடிதத்தில் எழுதியிருந்த எல்லா வார்த்தைகளினாலும், தாங்களே இந்த விஷயத்தில் அனுபவித்தவைகளினாலும், தங்களுக்கு சம்பவித்தவைகளினாலும்,
עַל־כֵּ֡ן קָֽרְאוּ֩ לַיָּמִ֨ים הָאֵ֤לֶּה פוּרִים֙ עַל־שֵׁ֣ם הַפּ֔וּר עַל־כֵּ֕ן עַל־כָּל־דִּבְרֵ֖י הָאִגֶּ֣רֶת הַזֹּ֑את וּמָֽה־רָא֣וּ עַל־כָּ֔כָה וּמָ֥ה הִגִּ֖יעַ אֲלֵיהֶֽם׃
27 ௨௭ யூதர்கள் அதை ஏற்றுக்கொண்டு, அந்த இரண்டு நாட்களைக்குறித்து எழுதியிருக்கிறபடியே, அவைகளை ஒவ்வொரு வருடமும், அவைகளின் சரியான காலத்தில் கொண்டாடாமல் இருப்பதில்லை என்பதையும்,
קִיְּמ֣וּ וְקִבֵּל (וְקִבְּל֣וּ) הַיְּהוּדִים֩ ׀ עֲלֵיהֶ֨ם ׀ וְעַל־זַרְעָ֜ם וְעַ֨ל כָּל־הַנִּלְוִ֤ים עֲלֵיהֶם֙ וְלֹ֣א יַעֲבֹ֔ור לִהְיֹ֣ות עֹשִׂ֗ים אֵ֣ת שְׁנֵ֤י הַיָּמִים֙ הָאֵ֔לֶּה כִּכְתָבָ֖ם וְכִזְמַנָּ֑ם בְּכָל־שָׁנָ֖ה וְשָׁנָֽה׃
28 ௨௮ இந்த நாட்கள் எல்லாத் தலைமுறைகளிலும், வம்சங்களிலும், தேசங்களிலும், ஊர்களிலும் நினைவுகூறப்பட்டு கொண்டாடப்படவேண்டும் என்பதையும், இந்தப் பூரீம் என்னும் பண்டிகை நாட்கள் யூதர்களுக்குள்ளே தவறிப்போகாமலும், அவைகளை நினைவுகூருதல் தங்களுடைய சந்ததியினர்களுக்குள்ளே ஒழிந்துபோகாமலும் இருக்கவேண்டும் என்பதையும், தங்கள்மேலும், தங்களுடைய சந்ததியினர்கள்மேலும், தங்களுடைய மார்க்கத்தில் அமையப்போகிற மற்ற எல்லோர்மேலும் கடனாக நியமித்துக் கொண்டார்கள்.
וְהַיָּמִ֣ים הָ֠אֵלֶּה נִזְכָּרִ֨ים וְנַעֲשִׂ֜ים בְּכָל־דֹּ֣ור וָדֹ֗ור מִשְׁפָּחָה֙ וּמִשְׁפָּחָ֔ה מְדִינָ֥ה וּמְדִינָ֖ה וְעִ֣יר וָעִ֑יר וִימֵ֞י הַפּוּרִ֣ים הָאֵ֗לֶּה לֹ֤א יַֽעַבְרוּ֙ מִתֹּ֣וךְ הַיְּהוּדִ֔ים וְזִכְרָ֖ם לֹא־יָס֥וּף מִזַּרְעָֽם׃ ס
29 ௨௯ பூரிமைக்குறித்து எழுதியிருக்கிற இந்த இரண்டாம் கடிதத்தை உறுதிப்படுத்தும்படி, அபியாயேலின் மகளாகிய எஸ்தர் என்னும் ராணியும், யூதனாகிய மொர்தெகாயும், பின்னும் மகா உறுதியாக எழுதினார்கள்.
וַ֠תִּכְתֹּב אֶסְתֵּ֨ר הַמַּלְכָּ֧ה בַת־אֲבִיחַ֛יִל וּמָרְדֳּכַ֥י הַיְּהוּדִ֖י אֶת־כָּל־תֹּ֑קֶף לְקַיֵּ֗ם אֵ֣ת אִגֶּ֧רֶת הַפּוּרִ֛ים הַזֹּ֖את הַשֵּׁנִֽית׃
30 ௩0 யூதனாகிய மொர்தெகாயும், ராணியாகிய எஸ்தரும் யூதர்களுக்கு உறுதிசெய்ததும், அவர்கள் உபவாசத்தோடும் அலறுதலோடும் அனுசரிப்போம் என்று தங்கள்மேலும் தங்கள் சந்ததியினர்மேலும் கடனாக நியமித்துக்கொண்டதுமான, பூரீம் என்னப்பட்ட இந்த நாட்கள் அவைகளின் சரியான காலங்களில் அனுசரிக்கப்படும் காரியத்தை உறுதியாக்க,
וַיִּשְׁלַ֨ח סְפָרִ֜ים אֶל־כָּל־הַיְּהוּדִ֗ים אֶל־שֶׁ֨בַע וְעֶשְׂרִ֤ים וּמֵאָה֙ מְדִינָ֔ה מַלְכ֖וּת אֲחַשְׁוֵרֹ֑ושׁ דִּבְרֵ֥י שָׁלֹ֖ום וֶאֱמֶֽת׃
31 ௩௧ அவன் அகாஸ்வேருவின் ராஜ்ஜியத்திலுள்ள நூற்றிருபத்தேழு நாடுகளிலும் இருக்கிற எல்லா யூதர்களுக்கும் சமாதானமும் உண்மையுமான வார்த்தைகளையுடைய கடிதங்களை அனுப்பினான்.
לְקַיֵּ֡ם אֵת־יְמֵי֩ הַפֻּרִ֨ים הָאֵ֜לֶּה בִּזְמַנֵּיהֶ֗ם כַּאֲשֶׁר֩ קִיַּ֨ם עֲלֵיהֶ֜ם מָרְדֳּכַ֤י הַיְּהוּדִי֙ וְאֶסְתֵּ֣ר הַמַּלְכָּ֔ה וְכַאֲשֶׁ֛ר קִיְּמ֥וּ עַל־נַפְשָׁ֖ם וְעַל־זַרְעָ֑ם דִּבְרֵ֥י הַצֹּמֹ֖ות וְזַעֲקָתָֽם׃
32 ௩௨ இப்படியே எஸ்தரின் கட்டளையானது பூரீம் நாட்களைப்பற்றின இந்த சம்பவங்களை உறுதிப்படுத்தினது; அது ஒரு புத்தகத்தில் எழுதப்பட்டது.
וּמַאֲמַ֣ר אֶסְתֵּ֔ר קִיַּ֕ם דִּבְרֵ֥י הַפֻּרִ֖ים הָאֵ֑לֶּה וְנִכְתָּ֖ב בַּסֵּֽפֶר׃ פ

< எஸ்தர் 9 >