< எஸ்தர் 7 >
1 ௧ ராணியாகிய எஸ்தருடன் விருந்து உண்ண, ராஜாவும் ஆமானும் வந்தபோது,
И тако дође цар и Аман на обед царици Јестири.
2 ௨ இரண்டாம் நாள் விருந்தில் திராட்சைரசம் பரிமாறப்படும்போது, ராஜா எஸ்தரை நோக்கி: எஸ்தர் ராணியே, உன்னுடைய வேண்டுதல் என்ன? அது உனக்குக் கொடுக்கப்படும்; நீ கேட்கிற மன்றாட்டு என்ன? நீ ராஜ்ஜியத்தில் பாதியைக் கேட்டாலும் கிடைக்கும் என்றான்.
И рече цар Јестири опет други дан напивши се вина: Шта желиш, царице Јестиро? Даће ти се. И шта молиш? Ако је и до половине царства, биће.
3 ௩ அப்பொழுது ராணியாகிய எஸ்தர் மறுமொழியாக: ராஜாவே, உம்முடைய கண்களில் எனக்குக் கிருபை கிடைத்து, ராஜாவிற்கு விருப்பமாக இருந்தால் என்னுடைய வேண்டுதலுக்கு என்னுடைய ஜீவனும், என்னுடைய மன்றாட்டுக்கு என்னுடைய மக்களும் எனக்குக் கட்டளையிடப்படுவதாக.
Тада одговори царица Јестира и рече: Ако сам нашла милост пред тобом, царе, и ако је цару угодно, нека ми се поклони живот мој на моју жељу и народ мој на моју молбу.
4 ௪ எங்களை அழித்துக் கொல்லும்படி நானும் என்னுடைய மக்களும் விற்கப்பட்டோம்; ஆண்களும், பெண்களும் அடிமைகளாக விற்கப்பட்டுப்போனாலும் நான் மவுனமாக இருப்பேன்; இப்பொழுதோ ராஜாவிற்கு உண்டாகும் நஷ்டத்திற்கு அந்த எதிரி உத்திரவாதம் பண்ணமுடியாது என்றாள்.
Јер смо продани ја и мој народ да нас потру, побију и истребе. Да смо продани да будемо слуге и слушкиње, ћутала бих, премда непријатељ не би могао накнадити штете цару.
5 ௫ அப்பொழுது ராஜாவாகிய அகாஸ்வேரு மறுமொழியாக, ராணியாகிய எஸ்தரை நோக்கி: இப்படிச் செய்யத் துணிகரங்கொண்டவன் யார்? அவன் எங்கே? என்றான்.
А цар Асвир проговори и рече царици Јестири: Ко је тај? И где је тај који се усудио тако чинити?
6 ௬ அதற்கு எஸ்தர்: எதிரியும் பகைவனுமாகிய அந்த மனிதன் இந்த பொல்லாத ஆமான்தான் என்றாள்; அப்பொழுது ராஜாவிற்கும் ராணிக்கும் முன்பாக ஆமான் திகிலடைந்தான்.
А Јестира рече: Противник и непријатељ овај је зликовац Аман. А Аман се уплаши од цара и од царице.
7 ௭ ராஜா கடுங்கோபத்தோடு திராட்சைரசப் பந்தியைவிட்டு எழுந்து, அரண்மனைத் தோட்டத்திற்குப் போனான்; ராஜாவினால் தனக்கு ஆபத்து நிர்ணயிக்கப்பட்டதென்று ஆமான் கண்டு, ராணியாகிய எஸ்தரிடம் தன்னுடைய உயிருக்காக விண்ணப்பம்செய்ய எழுந்து நின்றான்.
Тада цар гневан уста од вина и отиде у врт код двора, а Аман оста да моли за живот свој царицу Јестиру, јер виде да је цар наумио зло по њ.
8 ௮ ராஜா அரண்மனைத் தோட்டத்திலிருந்து திராட்சைரசம் பரிமாறப்பட்ட இடத்திற்குத் திரும்பி வரும்போது, எஸ்தர் உட்கார்ந்திருக்கிற மெத்தையின்மேல் ஆமான் விழுந்துகிடந்தான்; அப்பொழுது ராஜா: நான் அரண்மனையில் இருக்கும்போதே என்னுடைய கண்முன்னே இவன் ராணியை பலவந்தம் செய்யவேண்டுமென்று இருக்கிறானோ என்றான்; இந்த வார்த்தை ராஜாவின் வாயிலிருந்து வந்தவுடனே ஆமானின் முகத்தை மூடினார்கள்.
Потом се цар врати из врта дворског у кућу где беше пио вино; а Аман беше пао на одар где сеђаше Јестира. И цар рече: Еда ли ће и царицу осрамотити код мене у кући? Чим та реч изиђе из уста царевих, покрише лице Аману.
9 ௯ அப்பொழுது ராஜசமுகத்தில் இருக்கிற அதிகாரிகளில் அற்போனா என்னும் ஒருவன்: இதோ, ராஜாவின் நன்மைக்காகப் பேசின மொர்தெகாய்க்கு ஆமான் செய்வித்த ஐம்பது முழ உயரமான தூக்குமரம் ஆமானுடைய வீட்டின் அருகில் நடப்பட்டிருக்கிறது என்றான்; அப்பொழுது ராஜா: அதிலே அவனைத் தூக்கிப்போடுங்கள் என்றான்.
И Арвона, један од дворана царевих, рече: Ево и вешала што је начинио Аман за Мардохеја који је говорио добро по цара стоје код куће Аманове, висока педесет лаката. И рече цар: Обесите га на њих.
10 ௧0 அப்படியே ஆமான் மொர்தெகாய்க்கு ஆயத்தம்செய்த தூக்குமரத்தில் ஆமானையே தூக்கிப்போட்டார்கள்; அப்பொழுது ராஜாவின் கோபம் தணிந்தது.
И тако обесише Амана на вешала која беше приправио Мардохеју. И гнев царев утиша се.