< எஸ்தர் 2 >

1 இவைகளுக்குப்பின்பு, ராஜாவாகிய அகாஸ்வேருவின் கோபம் தணிந்தபோது, அவன் வஸ்தியையும் அவள் செய்ததையும் அவளைக்குறித்துத் தீர்மானிக்கப்பட்டதையும் நினைத்தான்.
And so, after this had been carried out, and the indignation of king Artaxerxes had subsided, he remembered Vashti, and what she had done, and what had happened to her.
2 அப்பொழுது ராஜாவிற்குப் பணிவிடை செய்கிற அவனுடைய வேலைக்காரர்கள் அவனை நோக்கி: அழகாக இருக்கிற கன்னிப்பெண்களை ராஜாவுக்காகத் தேடவேண்டும்.
And the servants of the king, and his ministers, said, “Let young women be sought for the king, virgins and beautiful,
3 அதற்காக ராஜா தம்முடைய ராஜ்ஜியத்தின் நாடுகளிலெல்லாம் பொறுப்பாளர்களை வைக்கவேண்டும்; இவர்கள் அழகாக இருக்கிற எல்லா கன்னிப்பெண்களையும் ஒன்றுகூட்டி, சூசான் அரண்மனையில் இருக்கிற கன்னிமாடத்திற்கு அழைத்துவந்து, பெண்களைக் காவல்காக்கிற ராஜாவின் அதிகாரியாகிய யேகாயினிடம் ஒப்புவிக்கவேண்டும்; அவர்களுடைய அலங்கரிப்புக்கு வேண்டியவைகள் அவர்களுக்குக் கொடுக்கப்படவேண்டும்.
and let investigators be sent throughout all the provinces for young women, beautiful and virgins. And let them bring them to the city of Susa, and deliver them to the house of the women under the hand of Hegai the eunuch, who is the overseer and keeper of the king’s women. And let them receive feminine ornaments, and other things necessary for their use.
4 அப்பொழுது ராஜாவின் கண்களுக்குப் பிரியமான கன்னி, வஸ்திக்கு பதிலாகப் பட்டத்து ராணியாகவேண்டும் என்றார்கள்; இந்த வார்த்தை ராஜாவிற்கு நலமாகத் தோன்றியபடியால் அப்படியே செய்தான்.
And whoever among them all will please the king’s eyes, let her reign instead of Vashti.” The idea pleased the king, and so he ordered it to be done as they had suggested.
5 அப்பொழுது சூசான் அரண்மனையிலே பென்யமீனியனாகிய கீசின் மகன் சீமேயினுடைய மகனாகிய யாவீரின் மகன் மொர்தெகாய் என்னும் பெயருள்ள ஒரு யூதன் இருந்தான்.
There was a Jewish man in the city of Susa, by the name of Mordecai, son of Jair, son of Shimei, son of Kish, of the house of Benjamin,
6 அவன் பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் யூதாவின் ராஜாவாகிய எகொனியாவைப் பிடித்துக்கொண்டுபோகிறபோது, அவனோடு எருசலேமிலிருந்து பிடித்து கொண்டுபோகப்பட்டவர்களில் ஒருவனாக இருந்தான்.
who had been carried away from Jerusalem at the time that Nebuchadnezzar king of Babylon carried away Jeconiah king of Judah,
7 அவன் தன்னுடைய சிறிய தகப்பனின் மகளாகிய எஸ்தர் என்னும் அத்சாளை வளர்த்தான்; அவளுக்குத் தாய்தகப்பன் இல்லை; அந்தப் பெண் அழகும் விரும்பத்தக்கவளுமாக இருந்தாள்; அவளுடைய தகப்பனும், தாயும் மரணமடைந்தபோது, மொர்தெகாய் அவளைத் தன்னுடைய மகளாக எடுத்துக்கொண்டான்.
who had raised his brother’s daughter Hadassah, who by another name was called Esther. And she had lost both her parents. She was very beautiful, with a graceful appearance. Since her father and mother had both died, Mordecai adopted her as his own daughter.
8 ராஜாவின் கட்டளையும் தீர்மானமும் பிரபலமாகி, அநேக பெண்கள் கூட்டப்பட்டு, சூசான் அரண்மனையிலுள்ள யேகாயினிடத்தில் ஒப்புவிக்கப்படுகிறபோது, எஸ்தரும் ராஜாவின் அரண்மனைக்கு அழைத்துக்கொண்டுபோகப்பட்டு, பெண்களைக் காவல்காக்கிற யேகாயினிடம் ஒப்புவிக்கப்பட்டாள்.
And when the king’s command became very well-known, in accordance with his command, many beautiful virgins were brought to Susa, and were delivered to Hegai the eunuch. Likewise, Esther, along with the other young women, was delivered to him, to be protected with the assembled women.
9 அந்தப் பெண் அவனுடைய பார்வைக்கு நன்றாக இருந்ததால், அவளுக்கு அவனுடைய கண்களிலே தயவு கிடைத்தது; ஆகையால் அவளுடைய அலங்கரிப்புக்கு வேண்டியவைகளையும், அவளுக்குத் தேவையான மற்றவைகளையும் அவளுக்குக் கொடுக்கவும், ராஜ அரண்மனையில் இருக்கிற ஏழு பணிப்பெண்களை அவளுக்கு நியமித்து கன்னிமாடத்தில் சிறந்த ஒரு இடத்திலே அவளையும் அவளுடைய பணிப்பெண்களையும் வைத்தான்.
She was pleasing to him, and she found favor in his sight. And he commanded a eunuch to hasten the women’s ornaments, and to deliver her share to her, along with seven of the most beautiful young women of the king’s house, so as to both adorn and honor her and her handmaids.
10 ௧0 எஸ்தரோ தன்னுடைய மக்களையும், தன்னுடைய உறவினர்களையும் அறிவிக்காமல் இருந்தாள்; மொர்தெகாய் அதைத் தெரிவிக்கவேண்டாமென்று அவளுக்குக் கற்பித்திருந்தான்.
She was not willing to reveal to him her people or her native land. For Mordecai had instructed her that she should keep silent about all these things.
11 ௧௧ எஸ்தருடைய சுகசெய்தியையும் அவளுக்கு நடக்கும் காரியத்தையும் அறிய மொர்தெகாய் தினந்தோறும் கன்னிமாடத்து முற்றத்திற்கு முன்பாக உலாவுவான்.
He went for a walk every day, in the front courtyard of the house in which the chosen virgins were kept, having concern for Esther’s welfare and wanting to know what would happen to her.
12 ௧௨ ஒவ்வொரு பெண்ணும் ஆறுமாதங்கள் வெள்ளைப்போளத் தைலத்தினாலும், ஆறுமாதங்கள் வாசனைப்பொருட்களாலும், பெண்களுக்குரிய மற்ற அலங்கரிப்புகளினாலும் அலங்கரிக்கப்படுகிற நாட்கள் நிறைவேறி, இப்படியாக பெண்களின் முறையின்படி பன்னிரண்டு மாதங்களாகச் செய்துமுடித்தபின்பு, ராஜாவாகிய அகாஸ்வேருவினிடம் வர, அவளவளுடைய முறை வருகிறபோது,
But, when the time came for each in the line of young women to go in to the king, after everything had been completed concerning feminine grooming, the twelfth month had been reached, to the extent that for six months they were anointed with oil of myrrh, and for another six months they used certain types of makeup and perfumes.
13 ௧௩ இப்படி அலங்கரிக்கப்பட்ட பெண் ராஜாவிடம் போவாள்; கன்னிமாடத்திலிருந்து தன்னோடு ராஜ அரண்மனைக்குப் போக, அவள் தனக்கு வேண்டுமென்று கேட்பவைகளை எல்லாம் அவளுக்குக் கொடுக்கப்படும்.
And when they were going in to the king, whatever they requested to adorn themselves, they received, and when each was pleased with herself, having been prepared in the chamber of the women, she passed on to the king’s chamber.
14 ௧௪ மாலையில் அவள் உள்ளே போய், காலையில், பிடித்த பெண்களைக் காவல்காக்கிற ராஜாவின் அதிகாரியாகிய சாஸ்காசுடைய பொறுப்பில் இருக்கிற பெண்களின் இரண்டாம் மாடத்திற்குத் திரும்பிவருவாள்; ராஜா தன்னை விரும்பிப் பெயர்சொல்லி அழைக்கும்வரை அவள் ஒருபோதும் ராஜாவிடம் போகக்கூடாது.
And whoever entered at evening, departed in the morning, and then from there she was led to the second house, which was under the hand of Shaashgaz the eunuch, who presided over the king’s concubines. Nor did she have the power to return again to the king, unless the king desired it and had summoned her by name.
15 ௧௫ மொர்தெகாய் தனக்கு மகளாய் ஏற்றுக்கொண்டவளும், அவனுடைய சிறிய தகப்பனாகிய அபியாயேலின் மகளுமான எஸ்தர் ராஜாவிடம் போவதற்கு முறை வந்தபோது, அவள் பெண்களைக் காவல்காக்கிற ராஜாவின் அதிகாரியாகிய யேகாய் நியமித்த காரியத்தைத் தவிர வேறொன்றும் கேட்கவில்லை; எஸ்தருக்குத் தன்னைக் காண்கிற எல்லோருடைய கண்களிலும் தயவு கிடைத்தது.
But, as the order continued to progress, the day arrived when Esther, the daughter of Abihail the brother of Mordecai, whom he had adopted as his daughter, was required to go in to the king. She did not seek feminine ornaments, except that whatever Hegai the eunuch and keeper of the virgins chose, he gave her to adorn her. For she was very attractive, and her incredible beauty made her appear gracious and amiable in the eyes of all.
16 ௧௬ அப்படியே எஸ்தர் ராஜாவாகிய அகாஸ்வேரு அரசாளுகிற ஏழாம் வருடம் தேபேத் மாதமாகிய பத்தாம் மாதத்திலே அரண்மனைக்கு ராஜாவிடம் அழைத்துக்கொண்டு போகப்பட்டாள்.
And so she was led to the chamber of king Artaxerxes, in the tenth month, which is called Tebeth, in the seventh year of his reign.
17 ௧௭ ராஜா எல்லாப் பெண்களையும்விட எஸ்தர்மேல் அன்புவைத்தான்; எல்லா கன்னிப்பெண்களையும்விட அவளுக்கு ராஜாவிற்கு முன்பாக அதிக தயவும் இரக்கமும் கிடைத்தது; ஆகையால் ராஜா ராஜகிரீடத்தை அவளுடைய தலையின்மேல் வைத்து, அவளை வஸ்தியின் இடத்தில் பட்டத்து ராணியாக்கினான்.
And the king loved her more than all the women, and she had favor and mercy in his eyes above all the women, and he set the royal crown on her head, and he made her queen instead of Vashti.
18 ௧௮ அப்பொழுது ராஜா தன்னுடைய எல்லாப் பிரபுக்களுக்கும் வேலைக்காரர்களுக்கும், எஸ்தரினிமித்தம் ஒரு பெரிய விருந்துசெய்து, நாடுகளுக்கும் கரிசனையோடு வரிவிலக்கு உண்டாக்கி, தன்னுடைய கொடைத்தன்மைக்கு ஏற்றவாறு வெகுமானங்களைக் கொடுத்தான்.
And he ordered a magnificent feast to be prepared for all the rulers, and for his servants, because of the union and wedding of Esther. And he gave a holiday to all the provinces, and he bestowed gifts befitting of princely generosity.
19 ௧௯ இரண்டாம்முறை கன்னிகைகள் சேர்க்கப்படும்போது, மொர்தெகாய் ராஜாவின் அரண்மனை வாசலில் உட்கார்ந்திருந்தான்.
And when the virgins were sought for the second time and gathered together, Mordecai remained at the king’s gate.
20 ௨0 எஸ்தர் மொர்தெகாய் தனக்குக் கற்பித்திருந்தபடி, தன்னுடைய உறவினர்களையும் தன்னுடைய மக்களையும் தெரிவிக்காதிருந்தாள்; எஸ்தர் மொர்தெகாயிடம் வளரும்போது அவனுடைய சொல்லைக்கேட்டு நடந்ததுபோல, இப்பொழுதும் அவனுடைய சொல்லைக்கேட்டு நடந்துவந்தாள்.
Esther had not yet declared her native land and her people, according to his command. For whatever he instructed, Esther observed. And so she did all things as she had become accustomed in the time when he raised her from early childhood.
21 ௨௧ அந்த நாட்களில் மொர்தெகாய் ராஜாவின் அரண்மனை வாசலில் உட்கார்ந்திருக்கிறபோது, வாசல்காக்கிற ராஜாவின் இரண்டு வாசல் காவலாளிகள் பிக்தானாவும் தேரேசும் கடுங்கோபத்துடன், ராஜாவாகிய அகாஸ்வேருக்கு தீங்குசெய்ய வாய்ப்பைத் தேடினார்கள்.
Therefore, at that time, when Mordecai was staying at the king’s gate, Bagatha and Thara, two of the king’s eunuchs, who were gatekeepers and who presided over the first entryway of the palace, were angry, and they decided to rise up against the king and kill him.
22 ௨௨ இந்தக் காரியம் மொர்தெகாய்க்குத் தெரியவந்ததால், அவன் அதை ராணியாகிய எஸ்தருக்கு அறிவித்தான்; எஸ்தர் மொர்தெகாயின் பெயரால் அதை ராஜாவிற்குச் சொன்னாள்.
But Mordecai did not keep this secret, and immediately he reported it to queen Esther, and she reported it to the king in Mordecai’s name, who had brought the matter to her.
23 ௨௩ அந்தக் காரியம் விசாரிக்கப்படுகிறபோது, அது உண்மையென்று காணப்பட்டது; ஆகையால் அவர்கள் இருவரும் மரத்திலே தூக்கிப்போடப்பட்டார்கள்; இது ராஜ சமுகத்திலே நாளாகமப்புத்தகத்திலே எழுதப்பட்டிருக்கிறது.
It was inquired into and discovered, and they were both hanged on a gallows. And it was committed to the histories and the chronicles which are delivered in the sight of the king.

< எஸ்தர் 2 >