< எஸ்தர் 10 >
1 ௧ ராஜாவாகிய அகாஸ்வேரு தேசத்தின்மேலும், மத்திய தரைக் கடலிலுள்ள தீவுகளின்மேலும், வரியை ஏற்படுத்தினான்.
És Ahasvérus király adót vettete a földre és a tenger szigeteire.
2 ௨ பலமும் வல்லமையுமான அவனுடைய எல்லா செயல்களும், ராஜா பெரியவனாக்கின மொர்தெகாயினுடைய மேன்மையின் மகத்துவமும், மேதியா பெர்சியா ராஜாக்களின் நாளாகம புத்தகத்தில் எழுதியிருக்கிறது.
Az ő erejének és hatalmának minden cselekedete pedig és Márdokeus nagy méltóságának története, a mellyel felmagasztalá őt a király, avagy nincsenek-é megírva Média és Persia királyainak évkönyveiben,
3 ௩ யூதனாகிய மொர்தெகாய் ராஜாவாகிய அகாஸ்வேருவுக்கு இரண்டாவதாக இருந்தவனும், யூதர்களுக்குள் பெரியவனும், தன்னுடைய திரளான சகோதரர்களுக்குப் பிரியமானவனுமாக இருந்ததும் அன்றி தன்னுடைய மக்களுடைய நன்மையைத்தேடி, தன்னுடைய மக்களுக்கெல்லாம் சமாதானமுண்டாகப் பேசுகிறவனுமாக இருந்தான்.
Mert a zsidó Márdokeus második volt Ahasvérus király után, nagy a zsidók között, és kedves az ő atyjafiai sokasága előtt, a ki javát keresé népének, és békességet szerze minden ivadékának.