< எபேசியர் 1 >
1 ௧ தேவனுடைய விருப்பத்தினாலே இயேசுகிறிஸ்துவினுடைய அப்போஸ்தலனாகிய பவுல், எபேசுவிலே கிறிஸ்து இயேசுவிற்குள் விசுவாசிகளாக இருக்கிற பரிசுத்தவான்களுக்கு எழுதுகிறதாவது:
ဤၑွရသျေစ္ဆယာ ယီၑုခြီၐ္ဋသျ ပြေရိတး ပေါ်လ ဣဖိၐနဂရသ္ထာန် ပဝိတြာန် ခြီၐ္ဋယီၑော် ဝိၑွာသိနော လောကာန် ပြတိ ပတြံ လိခတိ၊
2 ௨ நம்முடைய பிதாவாகிய தேவனாலும், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும், உங்களுக்குக் கிருபையும், சமாதானமும் உண்டாவதாக.
အသ္မာကံ တာတသျေၑွရသျ ပြဘော ရျီၑုခြီၐ္ဋသျ စာနုဂြဟး ၑာန္တိၑ္စ ယုၐ္မာသု ဝရ္တ္တတာံ၊
3 ௩ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரம்; அவர் கிறிஸ்துவிற்குள் உன்னதங்களிலே ஆவியானவருக்குரிய எல்லா ஆசீர்வாதங்களினாலும் நம்மை ஆசீர்வதித்திருக்கிறார்.
အသ္မာကံ ပြဘော ရျီၑေား ခြီၐ္ဋသျ တာတ ဤၑွရော ဓနျော ဘဝတု; ယတး သ ခြီၐ္ဋေနာသ္မဘျံ သရွွမ် အာဓျာတ္မိကံ သွရ္ဂီယဝရံ ဒတ္တဝါန်၊
4 ௪ அவருக்கு முன்பாக நாம் எல்லோரும் பரிசுத்தம் உள்ளவர்களும், குற்றம் இல்லாதவர்களுமாக இருப்பதற்கு, உலகம் உருவாக்கப்படுவதற்கு முன்பே கிறிஸ்துவிற்குள் அவர் நம்மைத் தெரிந்துகொண்டபடியே,
ဝယံ ယတ် တသျ သမက္ၐံ ပြေမ္နာ ပဝိတြာ နိၐ္ကလင်္ကာၑ္စ ဘဝါမသ္တဒရ္ထံ သ ဇဂတး သၖၐ္ဋေ ပူရွွံ တေနာသ္မာန် အဘိရောစိတဝါန်, နိဇာဘိလၐိတာနုရောဓာစ္စ
5 ௫ பிரியமானவருக்குள் அவர் நமக்கு அருளிய அவருடைய கிருபையின் மகிமைக்குப் புகழ்ச்சியாக,
ယီၑုနာ ခြီၐ္ဋေန သွသျ နိမိတ္တံ ပုတြတွပဒေ'သ္မာန် သွကီယာနုဂြဟသျ မဟတ္တွသျ ပြၑံသာရ္ထံ ပူရွွံ နိယုက္တဝါန်၊
6 ௬ அவருடைய தயவுள்ள விருப்பத்தின்படியே, இயேசுகிறிஸ்துவின் மூலமாக அவருக்குச் சொந்த பிள்ளைகளாகும்படி நம்மை முன்குறித்திருக்கிறார்.
တသ္မာဒ် အနုဂြဟာတ် သ ယေန ပြိယတမေန ပုတြေဏာသ္မာန် အနုဂၖဟီတဝါန်,
7 ௭ தேவனுடைய கிருபையின் ஐசுவரியத்தின்படியே இயேசுகிறிஸ்துவினுடைய இரத்தத்தினாலே பாவமன்னிப்பாகிய மீட்பு இவருக்குள் நமக்கு உண்டாயிருக்கிறது.
ဝယံ တသျ ၑောဏိတေန မုက္တိမ် အရ္ထတး ပါပက္ၐမာံ လဗ္ဓဝန္တး၊
8 ௮ அந்தக் கிருபையை அவர் எல்லா ஞானத்திலும் புத்தியிலும் எங்களுக்குள் பெருகப்பண்ணினார்.
တသျ ယ ဤဒၖၑော'နုဂြဟနိဓိသ္တသ္မာတ် သော'သ္မဘျံ သရွွဝိဓံ ဇ္ဉာနံ ဗုဒ္ဓိဉ္စ ဗာဟုလျရူပေဏ ဝိတရိတဝါန်၊
9 ௯ காலங்கள் நிறைவேறும்போது விளங்கும் ஒழுங்கின்படி பரலோகத்திலிருக்கிறவைகளும் பூலோகத்திலிருக்கிறவைகளுமாகிய எல்லாம் கிறிஸ்துவிற்குள்ளே ஒன்று சேர்க்கப்படவேண்டுமென்று,
သွရ္ဂပၖထိဝျော ရျဒျဒ် ဝိဒျတေ တတ္သရွွံ သ ခြီၐ္ဋေ သံဂြဟီၐျတီတိ ဟိတဲၐိဏာ
10 ௧0 தமக்குள்ளே தீர்மானித்திருந்த அவருடைய தயவுள்ள திட்டத்தின் இரகசியத்தை எங்களுக்கு அறிவித்தார்.
တေန ကၖတော ယော မနောရထး သမ္ပူရ္ဏတာံ ဂတဝတ္သု သမယေၐု သာဓယိတဝျသ္တမဓိ သ သွကီယာဘိလာၐသျ နိဂူဎံ ဘာဝမ် အသ္မာန် ဇ္ဉာပိတဝါန်၊
11 ௧௧ மேலும் கிறிஸ்துவின்மேல் முன்பு நம்பிக்கையாக இருந்த நாங்கள் அவருடைய மகிமைக்குப் புகழ்ச்சியாக இருப்பதற்காக,
ပူရွွံ ခြီၐ္ဋေ ဝိၑွာသိနော ယေ ဝယမ် အသ္မတ္တော ယတ် တသျ မဟိမ္နး ပြၑံသာ ဇာယတေ,
12 ௧௨ அவருடைய விருப்பத்தின் ஆலோசனைக்குத்தக்கதாக எல்லாவற்றையும் நடப்பிக்கிற அவருடைய தீர்மானத்தின்படியே நாங்கள் முன்குறிக்கப்பட்டு, கிறிஸ்துவிற்குள் அவருடைய உரிமைப்பங்காகும்படி தெரிந்துகொள்ளப்பட்டோம்.
တဒရ္ထံ ယး သွကီယေစ္ဆာယား မန္တြဏာတး သရွွာဏိ သာဓယတိ တသျ မနောရထာဒ် ဝယံ ခြီၐ္ဋေန ပူရွွံ နိရူပိတား သန္တော'ဓိကာရိဏော ဇာတား၊
13 ௧௩ நீங்களும் உங்களுடைய இரட்சிப்பின் நற்செய்தியாகிய சத்திய வசனத்தைக்கேட்டு, விசுவாசிகளானபோது, வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட பரிசுத்த ஆவியானவரால் அவருக்குள் முத்திரைபோடப்பட்டீர்கள்.
ယူယမပိ သတျံ ဝါကျမ် အရ္ထတော ယုၐ္မတ္ပရိတြာဏသျ သုသံဝါဒံ နိၑမျ တသ္မိန္နေဝ ခြီၐ္ဋေ ဝိၑွသိတဝန္တး ပြတိဇ္ဉာတေန ပဝိတြေဏာတ္မနာ မုဒြယေဝါင်္ကိတာၑ္စ၊
14 ௧௪ அவருக்குச் சொந்தமானவர்கள் அவருடைய மகிமைக்குப் புகழ்ச்சியாக மீட்கப்படுவார்கள் என்பதற்கு ஆவியானவர் நம்முடைய உரிமைப்பங்கின் உத்திரவாதமாக இருக்கிறார்.
ယတသ္တသျ မဟိမ္နး ပြကာၑာယ တေန ကြီတာနာံ လောကာနာံ မုက္တိ ရျာဝန္န ဘဝိၐျတိ တာဝတ် သ အာတ္မာသ္မာကမ် အဓိကာရိတွသျ သတျင်္ကာရသျ ပဏသွရူပေါ ဘဝတိ၊
15 ௧௫ எனவே, கர்த்தராகிய இயேசுவின்மேல் உள்ள உங்களுடைய விசுவாசத்தையும், பரிசுத்தவான்கள் எல்லோர்மேலும் உள்ள உங்களுடைய அன்பையும்குறித்து நான் கேள்விப்பட்டு,
ပြဘော် ယီၑော် ယုၐ္မာကံ ဝိၑွာသး သရွွေၐု ပဝိတြလောကေၐု ပြေမ စာသ္တ ဣတိ ဝါရ္တ္တာံ ၑြုတွာဟမပိ
16 ௧௬ இடைவிடாமல் உங்களுக்காக ஸ்தோத்திரம்பண்ணி, என் ஜெபங்களில் உங்களை நினைத்து,
ယုၐ္မာနဓိ နိရန္တရမ် ဤၑွရံ ဓနျံ ဝဒန် ပြာရ္ထနာသမယေ စ ယုၐ္မာန် သ္မရန် ဝရမိမံ ယာစာမိ၊
17 ௧௭ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் தேவனும் மகிமையின் பிதாவுமானவர் தம்மை நீங்கள் அறிந்துகொள்வதற்கான ஞானத்தையும் தெளிவையும் அளிக்கிற ஆவியை உங்களுக்குத் தந்தருளவேண்டுமென்றும்,
အသ္မာကံ ပြဘော ရျီၑုခြီၐ္ဋသျ တာတော ယး ပြဘာဝါကရ ဤၑွရး သ သွကီယတတ္တွဇ္ဉာနာယ ယုၐ္မဘျံ ဇ္ဉာနဇနကမ် ပြကာၑိတဝါကျဗောဓကဉ္စာတ္မာနံ ဒေယာတ်၊
18 ௧௮ அவர் நம்மை அழைத்ததினாலே நமக்கு உண்டாயிருக்கிற நம்பிக்கை என்னவென்றும், பரிசுத்தவான்களிடத்தில் தமக்கு உண்டாயிருக்கிற உரிமைப்பங்கினுடைய மகிமையின் ஐசுவரியம் என்னவென்றும்;
ယုၐ္မာကံ ဇ္ဉာနစက္ၐူံၐိ စ ဒီပ္တိယုက္တာနိ ကၖတွာ တသျာဟွာနံ ကီဒၖၑျာ ပြတျာၑယာ သမ္ဗလိတံ ပဝိတြလောကာနာံ မဓျေ တေန ဒတ္တော'ဓိကာရး ကီဒၖၑး ပြဘာဝနိဓိ ရွိၑွာသိၐု စာသ္မာသု ပြကာၑမာနသျ
19 ௧௯ தாம் கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து உயிரோடு எழுப்பி, அவரிடத்தில் நடப்பித்த தமது பலத்த வல்லமையின்படியே விசுவாசிக்கிறவர்களாகிய நம்மிடம் காண்பிக்கும் அவருடைய வல்லமையின் மகா மேன்மையான மகத்துவம் என்னவென்றும், நீங்கள் அறியும்படிக்கு, அவர் உங்களுக்குப் பிரகாசமுள்ள மனக்கண்களைக் கொடுக்கவேண்டும் என்றும் வேண்டிக்கொள்ளுகிறேன்.
တဒီယမဟာပရာကြမသျ မဟတွံ ကီဒၖဂ် အနုပမံ တတ် သရွွံ ယုၐ္မာန် ဇ္ဉာပယတု၊
20 ௨0 எல்லா ஆளுகைக்கும், அதிகாரத்திற்கும், வல்லமைக்கும், கர்த்தத்துவத்திற்கும், இக்காலத்தில் மட்டுமல்ல வருங்காலத்திற்கும் பெயர்பெற்றிருக்கும் எல்லா நாமத்திற்கும் மேலாக அவர் உயர்ந்திருக்கத்தக்கதாக, (aiōn )
ယတး သ ယသျား ၑက္တေး ပြဗလတာံ ခြီၐ္ဋေ ပြကာၑယန် မၖတဂဏမဓျာတ် တမ် ဥတ္ထာပိတဝါန်,
21 ௨௧ அவரை உன்னதங்களில் தம்முடைய வலதுபக்கத்தில் உட்காரும்படிச் செய்து,
အဓိပတိတွပဒံ ၑာသနပဒံ ပရာကြမော ရာဇတွဉ္စေတိနာမာနိ ယာဝန္တိ ပဒါနီဟ လောကေ ပရလောကေ စ ဝိဒျန္တေ တေၐာံ သရွွေၐာမ် ဦရ္ဒ္ဓွေ သွရ္ဂေ နိဇဒက္ၐိဏပါရ္ၑွေ တမ် ဥပဝေၑိတဝါန်, (aiōn )
22 ௨௨ எல்லாவற்றையும் அவருடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தி,
သရွွာဏိ တသျ စရဏယောရဓော နိဟိတဝါန် ယာ သမိတိသ္တသျ ၑရီရံ သရွွတြ သရွွေၐာံ ပူရယိတုး ပူရကဉ္စ ဘဝတိ တံ တသျာ မူရ္ဒ္ဓါနံ ကၖတွာ
23 ௨௩ எல்லாவற்றையும் எல்லாவற்றாலும் நிரப்புகிறவருடைய நிறைவாகிய சரீரமான சபைக்கு அவரை எல்லாவற்றிற்கும் மேலான தலையாகத் தந்தருளினார்.
သရွွေၐာမ် ဥပရျျုပရိ နိယုက္တဝါံၑ္စ သဲဝ ၑက္တိရသ္မာသွပိ တေန ပြကာၑျတေ၊