< எபேசியர் 6 >
1 ௧ பிள்ளைகளே, உங்களுடைய பெற்றோருக்குக் கர்த்தருக்குள் கீழ்ப்படியுங்கள், இதுவே சரியானது.
孩子,你们要按照父母的吩咐行事,因为这才是正确的方式。
2 ௨ உனக்கு நன்மை உண்டாயிருப்பதற்கும், பூமியிலே உன் ஆயுசுநாட்கள் அதிகரிப்பதற்கும்,
“要孝敬你的父母。”这是第一条带有承诺的诫命:
3 ௩ உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக என்பதே தேவன் வாக்குத்தத்தம்பண்ணின முதலாம் கட்டளையாக இருக்கிறது.
“这样才可能让你一切顺利,让你可以在人间长寿。”
4 ௪ தகப்பன்மார்களே, நீங்களும் உங்களுடைய பிள்ளைகளைக் கோபப்படுத்தாமல், கர்த்தருக்கேற்ற ஒழுக்கத்திலும் போதனையிலும் அவர்களை வளர்த்துங்கள்.
父亲们,不要让你们的孩子变得疯狂,而是要管教他们,教导他们认识上帝,用这种方式照顾他们。
5 ௫ வேலைக்காரர்களே, நீங்கள் கிறிஸ்துவிற்குக் கீழ்ப்படிகிறதுபோல, சரீரத்தின்படி உங்களுடைய எஜமான்களாக இருக்கிறவர்களுக்கும் பயத்தோடும் மரியாதையோடும் நேர்மையுள்ள மனதோடும் கீழ்ப்படிந்து;
仆人,你们应该服从你们的人类主人,要表现处恰当的尊重和敬畏,做事要奔着真诚的动机,就像在侍奉基督一样。
6 ௬ மனிதர்களுக்குப் பிரியமாக இருக்கவிரும்புகிறவர்களாக அவர்களுடைய பார்வைக்கு ஊழியம் செய்யாமல், கிறிஸ்துவின் ஊழியக்காரர்களாக, மனப்பூர்வமாக தேவனுடைய விருப்பத்தின்படி செய்யுங்கள்.
不要只在其他人看的时候,为了获得认可而好好工作。要像基督的仆人一样工作,诚实地遵行上帝的旨意,
7 ௭ அடிமையானவன் என்றாலும், சுதந்திரமானவன் என்றாலும், அவனவன் செய்கிற நன்மையின்படியே கர்த்தரிடத்தில் பலனை பெறுவான் என்று அறிந்து,
快乐服侍主人,就好像你是在为主而非人做事。
8 ௮ மனிதருக்கென்று ஊழியம் செய்யாமல், கர்த்தருக்கென்றே நல்லமனதோடு ஊழியம் செய்யுங்கள்.
你们知道行善之人会得到主的奖赏,无论他是仆人还是自由人。
9 ௯ எஜமான்களே, அப்படியே நீங்களும், வேலைக்காரர்களுக்குச் செய்யவேண்டியவைகளைச் செய்து, அவர்களுக்கும் உங்களுக்கும் எஜமானானவர் பரலோகத்தில் இருக்கிறார் என்றும், அவரிடத்தில் பட்சபாதம் இல்லை என்றும் அறிந்து, கடுமையான வார்த்தைகளை விட்டுவிடுங்கள்.
主人应该以同样的方式对待你的仆人。不要威胁他们,记得天上的主是你的主人,也是他们的主人。他对人一视同仁,没有偏袒。
10 ௧0 கடைசியாக, என் சகோதரர்களே, கர்த்தரிலும் அவருடைய வல்லமையிலும் பலப்படுங்கள்.
最后,要通过主和他的能力保持强大。
11 ௧௧ நீங்கள் பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்து நிற்கத் திறமையுள்ளவர்களாகும்படி, தேவனுடைய சர்வாயுதங்களையும் அணிந்துகொள்ளுங்கள்.
穿上上帝的所有盔甲,这样你们就可以抵挡魔鬼的所有攻击!
12 ௧௨ ஏனென்றால், சரீரத்தோடும் இரத்தத்தோடும் இல்லை, ஆளுகைகளோடும், அதிகாரங்களோடும், இந்த உலகத்தின் இருளின் அதிபதிகளோடும், வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் படைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு. (aiōn )
我们不是在对抗人类的力量,而是在对抗超自然统治者和权力,它是这个世界的黑暗之主,是对抗天堂的邪恶精神力量。 (aiōn )
13 ௧௩ எனவே, தீங்குநாளிலே அவைகளை நீங்கள் எதிர்க்கவும், எல்லாவற்றையும் செய்துமுடித்தவர்களாக நிற்கவும் திறமையுள்ளவர்களாகும்படி, தேவனுடைய சர்வாயுதங்களையும் எடுத்துக்கொள்ளுங்கள்.
拿起上帝提供的所有武器,这样你就能在邪恶的岁月里站稳脚跟。在付出所有努力后,发现自己仍然屹立不倒!
14 ௧௪ சத்தியம் என்னும் கச்சையை உங்களுடைய இடுப்பில் கட்டினவர்களாகவும், நீதி என்னும் மார்புக்கவசத்தை அணிந்தவர்களாகவும்;
请站起来,把真理的腰带系在腰间,披上公正和正义的胸甲,
15 ௧௫ சமாதானத்தின் நற்செய்திக்குரிய ஆயத்தம் என்னும் காலணிகளைக் கால்களிலே தொடுத்தவர்களாகவும்;
穿上准备就绪的鞋子,分享和平的福音。
16 ௧௬ சாத்தான் எய்யும் அக்கினி அம்புகளையெல்லாம் அவித்துப்போடத்தக்கதாக, எல்லாவற்றிற்கும் மேலாக விசுவாசம் என்னும் கேடயத்தைப் பிடித்துக்கொண்டவர்களாகவும் நில்லுங்கள்.
最重要的是,要拿起信任上帝的盾牌,这样你就可以挡住魔鬼发来的火焰之箭。
17 ௧௭ இரட்சிப்பு என்னும் தலைக்கவசத்தையும், தேவவசனமாகிய ஆவியின் பட்டயத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள்.
戴上救赎的头盔,拿着圣灵的宝剑——灵就是上帝之道。
18 ௧௮ எந்த நேரத்திலும் எல்லாவிதமான வேண்டுதலோடும் விண்ணப்பத்தோடும் ஆவியினாலே ஜெபம்பண்ணி, அதினால் மிகுந்த மனஉறுதியோடும் எல்லாப் பரிசுத்தவான்களுக்கான வேண்டுதலோடும் விழித்துக்கொண்டிருங்கள்.
当你这样做的时候,始终要以灵之名祷告。保持清醒,继续为所有上帝的子民祈祷。
19 ௧௯ நற்செய்திக்காகக் கட்டப்பட்டிருக்கிற பிரதிநிதியாகிய நான் அதைப்பற்றிப் பேசவேண்டியதைத் தைரியமாகப் பேசவும்,
也请为我祈祷,让我始终可以讲出正义之语,让我能自信地解释福音中隐藏的真相。
20 ௨0 நான் தைரியமாக என் வாயைத் திறந்து நற்செய்தியின் இரகசியத்தை அறிவிக்கிறதற்கு வாக்கு எனக்குக் கொடுக்கப்படும்படி எனக்காகவும் விண்ணப்பம்பண்ணுங்கள்.
我就是为了福音而被囚禁的大使,所以请为我祈祷,让我以应该拥有的无畏发声。
21 ௨௧ அன்றியும், நான் செய்யும் காரியங்களையும், என் சுகசெய்திகளையும், நமக்குப் பிரியமான சகோதரனும் கர்த்தருக்குள் உண்மையுள்ள ஊழியக்காரனுமாக இருக்கிற தீகிக்கு உங்களுக்கு அறிவிப்பான்.
推基古是我们的好朋友和忠诚的传道人,他会将我所有的消息告诉你们并解释这一切,这样你们就会知道我在做什么。
22 ௨௨ நீங்கள் எங்களுடைய செய்திகளைத் தெரிந்துகொள்ளவும், அவன் உங்களுடைய இருதயங்களுக்கு ஆறுதல் செய்யவும், அவனை உங்களிடம் அனுப்பினேன்.
这就是我派他道你们那里的原因——他要把我们发生的事情告诉你们并鼓励你们。
23 ௨௩ பிதாவாகிய தேவனாலும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும், சகோதரர்களுக்குச் சமாதானமும் விசுவாசத்துடன் அன்பும் உண்டாவதாக.
愿天父上帝和主耶稣基督,祝福你们那边的所有基督徒能够秉承爱和信任,获得平安。
24 ௨௪ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவிடம் அழியாத அன்போடு அன்புகாட்டுகிற எல்லோருக்கும் கிருபை உண்டாயிருப்பதாக. ஆமென்.
愿永远热爱我们主耶稣之人,都能获得恩惠。