< எபேசியர் 5 >

1 எனவே, நீங்கள் பிரியமான பிள்ளைகளைப்போல தேவனைப் பின்பற்றுகிறவர்களாக இருந்து,
Huza Rji na mrli ma wa ani son ba'a.
2 கிறிஸ்து நமக்காகத் தம்மை தேவனுக்கு இனிய வாசனையான காணிக்கையாகவும் பலியாகவும் ஒப்புக்கொடுத்து நம்மில் அன்புவைத்ததுபோல, நீங்களும் அன்பாக நடந்துகொள்ளுங்கள்.
Ndi zren ni son, towa kristi santa nda nu tuma ni tu mbua.
3 மேலும், பரிசுத்தவான்களுக்குத் தகுந்தபடி, வேசித்தனமும், மற்ற எந்த ஒரு அசுத்தமும், பொருளாசையும் ஆகிய இவைகளின் பெயர்கள்கூட உங்களுக்குள்ளே சொல்லப்படக்கூடாது.
Ndu tie kan, ni kpe bi shan, na he ni mi mbi na bana kpi ni ndi ndi ni bi wa ba kpa tre Rjia na.
4 அப்படியே நிந்தனையும், புத்தியில்லாத பேச்சும், பரிகாசம் செய்வதும் தவறானவைகள்; ஸ்தோத்திரம் செய்வதே நல்லது.
Ndu tre ugbran sron, ni srantre ruru ma nahe ni mi mbina, bana kpi ndi ndi na. ki tie kpe u ngyri
5 விபசாரக்காரனாவது, அசுத்தனாவது, விக்கிரக ஆராதனைக்காரனாகிய பொருளாசைக்காரனாவது தேவனுடைய ராஜ்யமாகிய கிறிஸ்துவின் ராஜ்யத்திலே இடம் பெறுவதில்லையென்று அறிந்திருக்கிறீர்களே.
Bi to, ndi bi tie kan kpe meme, tie shishi bi hu kpi bi brji bana heni bubu u son ni ko Rji na.
6 இப்படிப்பட்டவைகளினால் கீழ்ப்படியாத பிள்ளைகள்மேல் தேவனுடைய கோபம் வருவதால், யாரும் வீண்வார்த்தைகளினாலே உங்களை ஏமாற்றாதபடி நீங்கள் எச்சரிக்கையாக இருங்கள்;
Na ndu njiori gyruyi nitre u megan na, iki ni ndu Rji tie fu ni bi kawo trema (hanton).
7 அப்படிப்பட்டவர்களோடு சேராமல் இருங்கள்.
Nakima bi jana huba na.
8 முற்காலத்தில் நீங்கள் இருளாக இருந்தீர்கள், இப்பொழுதோ கர்த்தருக்குள் வெளிச்சமாக இருக்கிறீர்கள்; வெளிச்சத்தின் பிள்ளைகளாக நடந்துகொள்ளுங்கள்.
Bina bi bwu, u zizan bihe bi kpan ni mi Baci, biku zren na mrli bi kpan.
9 வெளிச்சத்தின் கனி, எல்லா நற்குணத்திலும் நீதியிலும் உண்மையிலும் தெரியும்.
I klo u kpan he ni kpe ndindi tsratsra, ni janji,
10 ௧0 கர்த்தருக்குப் பிரியமானது என்னவென்று நீங்கள் சோதித்துப்பாருங்கள்.
ni kpatron wa Baci ni son'a
11 ௧௧ கனி இல்லாத இருளின் செயல்களுக்கு உடன்படாமல், அவைகள் தவறானவைகள் என்று சுட்டிக்காட்டுங்கள்.
na katu kabi ni klo bi memema na ni klo bi bwu, ngran ba yora.
12 ௧௨ அவர்கள் மறைவான இடத்தில் செய்யும் செயல்களைச் சொல்லுகிறதும் வெட்கமாக இருக்கிறதே.
Ahi kpe u shan ni hla kpi wa batie ni bwu'a
13 ௧௩ அவைகள் எல்லாம் வெளிச்சத்தினால் வெளியாக்கப்படும்; வெளியாக்கப்படுவது எல்லாம் வெளிச்சமாக இருக்கிறது.
Ikpe nita ngranyo ni kpan, baka to ndindime.
14 ௧௪ எனவே, தூங்குகிற நீ விழித்து, மரித்தோரைவிட்டு எழுந்திரு, அப்பொழுது கிறிஸ்து உன்னைப் பிரகாசிக்கப்பண்ணுவார் என்று சொல்லியிருக்கிறார்.
Ikpe wa batoa, ahi kpan. Nakima, batre ndi wlunde, biyi wa bisi kruna, ndi wlu ni khyu, u kristi ni kpan ni mi me
15 ௧௫ எனவே, நீங்கள் ஞானம் இல்லாதவர்களைப்போல நடக்காமல், ஞானம் உள்ளவர்களைப்போலக் கவனமாக நடந்துகொண்டு,
Zren ni wrli, na zren na biwa bana wrli'a na zren na biwa ba wrli'a.
16 ௧௬ நாட்கள் பொல்லாதவைகளாக இருப்பதால் காலத்தைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
Ta mlan zren mbi tie ni ton yi ngbu ngblu'a nani na.
17 ௧௭ எனவே, நீங்கள் அறிவில்லாதவர்களாக இல்லாமல், கர்த்தருடைய விருப்பம் என்னவென்று உணர்ந்துகொள்ளுங்கள்.
na kati ruru na to kpe w Irji ni sona
18 ௧௮ பொல்லாதவழிக்கு உன்னைக் கொண்டுச்செல்லும் மதுபானத்தை நீ குடித்து வெறிகொள்ளாமல், பரிசுத்த ஆவியானவரால் நிறைந்து;
Na hwa ma inabi na, ani ndu ndi katie meme, ndu Brji tsratsra shu ni yuwuu.
19 ௧௯ சங்கீதங்களினாலும் கீர்த்தனைகளினாலும் ஞானப்பாட்டுகளினாலும் ஒருவருக்கொருவர் புத்திசொல்லிக்கொண்டு, உங்களுடைய இருதயத்தில் கர்த்த்தரைப் பாடிக் கீர்த்தனம்பண்ணி,
Tre ni kpambi ni zabura ni se u brji tsratsra.
20 ௨0 நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே எப்பொழுதும் எல்லாவற்றிற்காகவும் பிதாவாகிய தேவனை ஸ்தோத்திரித்து,
Ngyri cacuu ni kpe wawuu, ni mi nde Baci Yesu kristi ru Rji tie mbu.
21 ௨௧ தெய்வபயத்தோடு ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்திருங்கள்.
Ndi ta ya kpambi ni sron ubi ni ndu wa bitie ni kristia.
22 ௨௨ மனைவிகளே, கர்த்தருக்குக் கீழ்ப்படிகிறதுபோல, உங்களுடைய சொந்தக் கணவருக்குக் கீழ்ப்படியுங்கள்.
Imba kpa y'me ni ba lon mbi na ni Baci.
23 ௨௩ கிறிஸ்து சபைக்குத் தலையாக இருக்கிறதுபோல, கணவனும் மனைவிக்குத் தலையாக இருக்கிறான்; கிறிஸ்துவே சரீரத்திற்கும் இரட்சகராக இருக்கிறார்.
Lilon atu uwa nawa kristi hi tu iklisiyaa.
24 ௨௪ எனவே, சபையானது கிறிஸ்துவிற்குக் கீழ்ப்படிகிறதுபோல மனைவிகளும் தங்களுடைய சொந்தக் கணவர்களுக்கு எல்லாக் காரியங்களிலும் கீழ்ப்படிந்திருக்கவேண்டும்.
Wa iklisiya ni nu Baci tuma, imba game banu ba lon ba tumba.
25 ௨௫ கணவர்களே, உங்களுடைய மனைவிகளிடம் அன்பாக இருங்கள்; அப்படியே கிறிஸ்துவும் சபையின்மேல் அன்பாக இருந்து,
Lilon son mbabi na wa kristi son iklisiya nda nu tuma ni wua.
26 ௨௬ தாம் அதைத் திருவசனத்தைக் கொண்டு தண்ணீர் முழுக்கினால் சுத்தப்படுத்தி, பரிசுத்தமாக்குகிறதற்கும்,
a tite toki nda glau, na seu ni mma ni tre ma.
27 ௨௭ கறையேதும்இல்லாமல் பரிசுத்தமும் பிழை இல்லாததுமான மகிமையுள்ள சபையாக அதைத் தமக்குமுன் நிறுத்திக்கொள்வதற்கும் தம்மைத்தாமே அதற்காக ஒப்புக்கொடுத்தார்.
Nda nu tuma iklisiya ndindi, hamma ni shugru ni kpe bibi kima, ndu he tsra trame hamma ni latre
28 ௨௮ அப்படியே, கணவர்களும் தங்களுடைய மனைவிகளைத் தங்களுடைய சொந்த சரீரங்களாக நினைத்து, அவர்கள்மேல் அன்பாக இருக்கவேண்டும்; தன் மனைவியிடம் அன்பாக இருக்கிறவன் தன்னைத்தானே நேசிக்கிறான்.
Ni kon riri me ndu lilon son mba mba na kpambor lilon wa a son wwama, ason kpama.
29 ௨௯ தன் சொந்த சரீரத்தைப் பகைத்தவன் ஒருவனும் இல்லையே; கர்த்தர் சபையைப் பேணிக்காப்பாற்றுகிறதுபோல ஒவ்வொருவனும் தன் சரீரத்தைப் பேணிக்காப்பாற்றுகிறான்.
Injio na kran kpama na, ani mlanu tie, nawa kristi mlan iklisiya tiea.
30 ௩0 நாம் அவருடைய சரீரத்தின் பாகங்களாகவும், அவருடைய சரீரத்திற்கும் அவருடைய எலும்புகளுக்கும் உரியவர்களாகவும் இருக்கிறோம்.
don kihi nghama kpama.
31 ௩௧ இதனால் மனிதன் தன் தகப்பனையும் தன் தாயையும்விட்டு, தன் மனைவியுடன் இணைந்து, இருவரும் ஒரே சரீரமாக இருப்பார்கள்.
Ahi ki ndu lilon ni ka tie ma, ni yima don nda kabi ni wama, hamba, ba kati kpa riri.
32 ௩௨ இந்த இரகசியம் பெரியது; நான் கிறிஸ்துவைப்பற்றியும் சபையைப்பற்றியும் சொல்லுகிறேன்.
Gbonji treyi riri (hidden) misi tre nitu kristi ni iklisiya.
33 ௩௩ எப்படியும், உங்கள்மேல் நீங்கள் அன்பாக இருப்பதுபோல, உங்களுடைய மனைவிகளிடமும் அன்பாக இருக்கவேண்டும்; மனைவியும் கணவனிடத்தில் பயபக்தியாக இருக்கவேண்டும்.
Toki, gbi gbi wawumbiu son wame na tume, gbigbi iwa ni nu lonma nikon

< எபேசியர் 5 >