< எபேசியர் 2 >
1 ௧ அக்கிரமங்களினாலும் பாவங்களினாலும் மரித்தவர்களாக இருந்த உங்களை உயிர்ப்பித்தார்.
Katya kabhele kamyele mmfuili ni makosa gha thambi sya yhomo.
2 ௨ அவைகளில் நீங்கள் முற்காலத்திலே இந்த உலக வழக்கத்திற்கு ஏற்றபடியும், கீழ்ப்படியாத பிள்ளைகளிடம் இப்பொழுது செயலாற்றும் ஆகாயத்து அதிகாரப் பிரபுவின் ஆவிக்குரியபடியும் நடந்துகொண்டீர்கள். (aiōn )
Yayele kup'etela agha kuanza mwalotili kulengana ni magono gha ulimwengu obho. Mwayele kulota kwa kufuata mtawala wa mamulaka gha kunani. Eye ndo roho yiaki yhola yaifuanya mbho mubhana bha kuasi. (aiōn )
3 ௩ அவர்களுக்குள்ளே நாமெல்லோரும் முற்காலத்திலே நமது சரீர விருப்பத்தின்படியே நடந்து, நமது சரீரமும் மனதும் விரும்பினவைகளைச் செய்து, சுபாவத்தினாலே மற்றவர்களைப்போலக் கோபத்தின் பிள்ளைகளாக இருந்தோம்.
Nitete tabhoa kamuandi tayele kujo abha bhabhiamini lepi. Tayela kukeka namuna ya tamaa si baya sa mibhele ya yhoto. Tayela kuketa mapenzi gha mbhele ni ufahamu bhuitu. Tayele kiasili bhana bha ghazabu kujo bhamana.
4 ௪ தேவனோ இரக்கத்தில் செல்வந்தமுள்ளவராக நம்மில் அன்புகூர்ந்த தம்முடைய மிகுந்த அன்பினாலே,
Jobha K'yara mwingi wa rehema kwa upendo wa muene ubhaa wa kutugana tete.
5 ௫ அக்கிரமங்களில் மரித்தவர்களாக இருந்த நம்மைக் கிறிஸ்துவோடு உயிர்ப்பித்தார்; கிருபையினாலே இரட்சிக்கப்பட்டீர்கள்;
Magono ghatayele bhafu kup'etela makosa ghitu, atuletili pamonga mu maisha mapya mugati mwa Kristu. Ndo neema ya kuwa tuokolibhu.
6 ௬ கிறிஸ்து இயேசுவிற்குள் அவர் நம்மேல் வைத்த தயவினாலே, தம்முடைய கிருபையின் மகா மேன்மையான செல்வத்தை வருங்காலங்களில் விளங்கச்செய்வதற்காக, (aiōn )
K'yara atufufuili pamonga ni kutuketa tutamai pamonga mu mahali kumbinguni mugati mwa Kristu Yesu.
7 ௭ கிறிஸ்து இயேசுவிற்குள் நம்மை அவரோடு எழுப்பி, உன்னதங்களிலே அவரோடு உட்காரவும் செய்தார்.
Aketili naa ili maghono ghaghihida abhwesyai kututalasya ukifu wa neema ya muene. Akatulasya tete ele kwa njela ya wema wa muene mugati mwa Yesu Kristu. (aiōn )
8 ௮ கிருபையினாலே விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானது இல்லை, இது தேவனுடைய ஈவு;
Kwa neema mmokolibhu kwa njela ya imani. Na eye yahomilihee kwa tete. Ni zawadi ya K'yara.
9 ௯ ஒருவரும் பெருமைப்படாதபடி இது செயல்களினால் உண்டானது இல்லை;
Yitokana hee ni matendo. matokeo ghaki, asiyi mmonga wa kujisifu.
10 ௧0 ஏனென்றால், நற்செயல்களைச் செய்கிறதற்கு நாம் கிறிஸ்து இயேசுவிற்குள் உருவாக்கப்பட்டு, தேவனுடைய செய்கையாக இருக்கிறோம்; அவைகளில் நாம் நடக்கும்படி அவர் முன்னதாக அவைகளை ஆயத்தம்பண்ணியிருக்கிறார்.
Kwa ndabha tete ndo mbhombho ya K'yara tubhombibhu kup'etela Kristu Yesu kuketa mambo ghamana. Ndo matendo agha ambagho K'yara aghapangili tokea muandi kwajia ya tete, ili tugendai kup'etela agha.
11 ௧௧ எனவே, முன்பு சரீரத்தின்படி யூதரல்லாதவராக இருந்து, சரீரத்தில் கையினாலே விருத்தசேதனம்பண்ணப்பட்டவர்களால் விருத்தசேதனம்பண்ணப்பாடாதவர்கள் என்று சொல்லப்பட்ட நீங்கள்,
Kwa ele mkombhokai ya kuwa apabahi kamuandi mwayele bhanu bha mataifa kwa namna ya mbhele. Mwikutibhwa “mwamdulili tohara” kwa kela kakikutibhwa tohara ya mbhele yayifanyibhwa ni kibhoko kya binadamu.
12 ௧௨ அக்காலத்திலே கிறிஸ்துவைச் சேராதவர்களும், இஸ்ரவேலுடைய குடியுரிமைக்குப் புறம்பானவர்களும், வாக்குத்தத்தத்தின் உடன்படிக்கைகளுக்கு அந்நியர்களாகவும், நம்பிக்கை இல்லாதவர்களும், இந்த உலகத்தில் தேவனில்லாதவர்களுமாக இருந்தீர்கள் என்பதை நினைத்துக்கொள்ளுங்கள்.
Kwa magono ghala mwayele kujomtengibhu ni Kristu. Mwayele mwabhageni kwa bhanu bhaku Israel. Mwayele mwabhageni mu agano la ahadi. Mwayehee ni uhakika wa magono ghaghihida. Mwayele bila K'yara mu ulimuengu.
13 ௧௩ முன்னே தூரத்தில் இருந்த நீங்கள் இப்பொழுது கிறிஸ்து இயேசுவிற்குள் கிறிஸ்துவின் இரத்தத்தினாலே அருகில் வந்தீர்கள்.
Ila henu kup'etela Kristu Yesu muenga ambabho lola mnandi mwayele patali ni K'yara mletibhu papipi ndabha ya muasi wa Kristu.
14 ௧௪ எப்படியென்றால், அவரே நம்முடைய சமாதான காரணராகி, இருகூட்டத்தாரையும் ஒன்றாக்கி, பகையாக நின்ற பிரிவினையாகிய நடுச்சுவரைத் தகர்த்து,
Kwa ndabha muene ndo amani yhitu. Aketili mabhele kuya limongaki mbhele bhuake ahalibu ukuta was utengano about was yele utenganisi bhu, obho ndo uadui.
15 ௧௫ சட்டதிட்டங்களாகிய நியாயப்பிரமாணத்தைத் தம்முடைய சரீரத்தினாலே ஒழித்து, இருகூட்டத்தாரையும் அவருக்குள்ளாக ஒரே புதிய மனிதனாக உருவாக்கி, இப்படிச் சமாதானம்பண்ணி,
Ndabha akomishi sheria ya amuri ni kanuni ya kuwa abhomba munu mmonga mpya mugati mwa muene. Aketili amani.
16 ௧௬ பகையைச் சிலுவையினால் கொன்று, அதினாலே இருகூட்டத்தாரையும் ஒரே சரீரமாக தேவனுக்கு ஒப்புரவாக்கினார்.
Aketili naaili kubhapatanisya makundi mabhele gha bhanu kuya mbhele wu mmonga kwa K'yara kup'etela n'salaba. kwa njela ya n'salaba abhosili uadui.
17 ௧௭ அல்லாமலும், அவர் வந்து, தூரத்தில் இருந்த உங்களுக்கும், அருகில் இருந்த அவர்களுக்கும், சமாதானத்தை நற்செய்தியாக அறிவித்தார்.
su ahidili ni kutangasya amani kwa yhomo muenga ya myele patali ni amani ni bhabhayele papipi.
18 ௧௮ அப்படியே நாம் இருகூட்டத்தாரும் ஒரே ஆவியானவராலே பிதாவினிடத்தில் சேரும் பாக்கியத்தை அவர் மூலமாகப் பெற்றிருக்கிறோம்.
Kwa mana ya njela ya Yesu tete tabhoa tabhabhele tuyele ni nafasi kwa Roho mmonga yhola kuyingila kwa Dadi.
19 ௧௯ ஆகவே, நீங்கள் இனி அந்நியர்களும் பரதேசிகளுமாக இல்லாமல், பரிசுத்தவான்களோடு ஒரே நகரத்தாரும் தேவனுடைய குடும்பத்தினராக இருந்து,
Efukabhele, muenga bhanu bha bha mataifa ni bhasafari ni bhageni kabh'ele. Ila ndo bhenyeji pamonga Ni bhala bhabhatengibhu kwajia ya K'yara ni bhujumbe kup'etela fyumba sya K'yara.
20 ௨0 அப்போஸ்தலர்கள் தீர்க்கதரிசிகள் என்பவர்களுடைய அஸ்திபாரத்தின்மேல் கட்டப்பட்டவர்களுமாக இருக்கிறீர்கள்; அதற்கு இயேசுகிறிஸ்துவே மூலைக்கல்லாக இருக்கிறார்;
Mjengibhu panani pamsingi ya bhamitume na manabii. Kristu Yessu muene ayele liganga libhaa la kupembeni.
21 ௨௧ அவர்மேல் மாளிகை முழுவதும் சீராக இணைக்கப்பட்டு, கர்த்தருக்குள் பரிசுத்த ஆலயமாக எழும்புகிறது;
Kup'etela muene lijengo lyoa liunganishibhu pamonga nikukola katya lihekalu mugati mwa Bwana.
22 ௨௨ அவர்மேல் நீங்களும் ஆவியானவராலே தேவன் தங்கும் இடமாகச் சேர்த்துக் கட்டப்பட்டுவருகிறீர்கள்.
Ndo mugati muake muenga ninamu mwijengibhwa pamonga katya ndo mahali pakuishi pa K'yara kup'etela Roho.