< பிரசங்கி 6 >

1 சூரியனுக்குக் கீழே நான் கண்ட வேறொரு தீங்கும் உண்டு; அது மனிதர்களுக்குள்ளே பெரும்பாலும் நடந்துவருகிறது.
Jest zło, które widziałem pod słońcem i które jest powszechne wśród ludzi:
2 அதாவது, ஒருவனுக்கு தேவன் செல்வத்தையும், பொருட்களையும், மதிப்பையும் கொடுக்கிறார்; அவன் என்ன ஆசைப்பட்டாலும் அதெல்லாம் அவனுக்குக் குறைவில்லாமல் கிடைக்கும்; ஆனாலும் அவைகளை அனுபவிக்கும் சக்தியை தேவன் அவனுக்குக் கொடுக்கவில்லை; அந்நிய மனிதன் அதை அனுபவிக்கிறான்; இதுவும் மாயையும், கொடிய நோயுமானது.
Gdy jakiemuś człowiekowi Bóg dał bogactwo, majątek i sławę, tak że nie brakuje jego duszy nic z tego, czegokolwiek by pragnął, jednak Bóg nie daje mu możliwości spożywać tego, ale spożywa to obcy człowiek. Jest to marnością i ciężką niedolą.
3 ஒருவன் நூறு பிள்ளைகளைப் பெற்று, அநேகம் வருடங்கள் வாழ்ந்து, தீர்க்காயுசை அடைந்திருந்தாலும், அவனுடைய ஆத்துமா அந்தச் செல்வத்தால் திருப்தியடையாமலும், அவனுக்குப் பிரேதக்கல்லறை முதலாக இல்லாமலும் போனால், அவனைவிட கரு சிதைந்த பிண்டமே சிறப்பானது என்கிறேன்.
Choćby ktoś spłodził stu [synów], żył wiele lat i dni jego lat się przedłużyły, a jego dusza nie była nasycona dobrem i nie miał nawet pogrzebu, powiadam: lepszy jest od niego martwy płód.
4 அது மாயையாகத் தோன்றி இருளிலே மறைந்துபோய்விடுகிறது; அதின் பெயரும் மறைந்து போகும்.
[Ten] bowiem przychodzi w marności i odchodzi w ciemności, a jego imię zostaje okryte ciemnością.
5 அது சூரியனைக் கண்டதுமில்லை, ஒன்றையும் அறிந்ததுமில்லை; அவனுக்கு இல்லாத ஓய்வு அதற்கு உண்டு.
Nie widział nawet słońca i nic nie wie. Ma on większy spokój niż tamten.
6 அவன் இரண்டாயிரம் வருடங்கள் பிழைத்திருத்தாலும் ஒரு நன்மையையும் காண்பதில்லை; எல்லோரும் ஒரே இடத்திற்குப் போகிறார்கள் அல்லவா?
Bo choćby nawet żył przez dwa tysiące lat, nie zaznałby żadnego dobra. Czy wszyscy nie idą do jednego miejsca?
7 மனிதனின் பிரயாசமெல்லாம் அவனுடைய வாய்க்காகத்தானே? அவனுடைய மனதுக்கோ திருப்தியில்லை.
Wszelki trud człowieka [jest] dla jego ust, a jednak jego dusza nie może się nasycić.
8 இப்படியிருக்க, மூடனைவிட ஞானிக்கு உண்டாகும் மேன்மை என்ன? உயிருள்ளவர்களுக்கு முன்பாக நடந்துகொள்ளும்படி அறிந்த ஏழைக்கும் உண்டாகும் மேன்மை என்ன?
Czego więcej ma bowiem mądry od głupca? Albo czego [więcej ma] ubogi, który umie postępować wśród żyjących?
9 ஆசையானது அலைந்து தேடுகிறதைவிட கண் கண்டதே நலம்; இதுவும் மாயையும் மனதை கலங்கச் செய்கிறதுமாக இருக்கிறது.
Lepsze jest to, co oczy widzą, niż ciągłe pragnienie. To również jest marnością i utrapieniem ducha.
10 ௧0 இருக்கிறவன் எவனும் தோன்றுமுன்பே பெயரிடப்பட்டிருக்கிறான்; அவன் மனிதனென்று தெரிந்திருக்கிறது; தன்னைவிட வலிமையானவர்களோடு போராட அவனால் முடியாது.
Temu, kto jest, już nadano imię i wiadomo, że jest człowiekiem i że nie może się on spierać z mocniejszym od siebie.
11 ௧௧ மாயையைப் பெருகச்செய்கிற அநேக காரியங்கள் உண்டாயிருக்கிறபடியால் அதினாலே மனிதர்களுக்குப் பயன் என்ன?
Ponieważ wiele jest rzeczy, które pomnażają marność, jaką z nich [korzyść] ma człowiek?
12 ௧௨ நிழலைப்போன்ற மாயையான தன்னுடைய வாழ்நாளை போக்கும் மனிதர்களுக்கு இந்த வாழ்வில் நன்மை இன்னதென்று அறிந்தவன் யார்? தனக்குப்பின்பு சூரியனுக்குக் கீழே நடக்கும் காரியம் இன்னதென்று மனிதனுக்கு அறிவிப்பவன் யார்?
Któż bowiem wie, co jest dobre dla człowieka w tym życiu po wszystkie dni jego marnego życia, które jak cień przemijają? Albo kto oznajmi człowiekowi, co po nim będzie pod słońcem?

< பிரசங்கி 6 >