< உபாகமம் 8 >
1 ௧ “நீங்கள் பிழைத்து, பெருகி, யெகோவா உங்களுடைய முற்பிதாக்களுக்கு வாக்களித்துக் கொடுத்த தேசத்திலே நுழைந்து, அதைச் சொந்தமாக்கிக் கொள்வதற்கு நான் இன்று உங்களுக்கு கொடுக்கிற எல்லாக் கட்டளைகளின்படியும் செய்யக் கவனமாயிருப்பீர்களாக.
Ẹ kíyèsi i láti máa tẹ̀lé gbogbo àṣẹ tí mo fún un yín lónìí, kí ẹ bá à le yè, kí ẹ sì pọ̀ sí i wọ ilẹ̀ náà, kí ẹ sì le gba ilẹ̀ náà, tí Olúwa fì búra ṣèlérí fún àwọn baba ńlá a yín.
2 ௨ உன் தேவனாகிய யெகோவா உன்னைச் சிறுமைப்படுத்தும்படிக்கும், தம்முடைய கட்டளைகளை நீ கைக்கொள்வாயோ கைக்கொள்ளமாட்டாயோ என்று அவர் உன்னைச் சோதித்து, உன் இருதயத்திலுள்ளதை நீ அறியும்படிக்கும், உன்னை இந்த நாற்பது வருடங்களும் வனாந்திரத்திலே நடத்திவந்த எல்லா வழியையும் நினைப்பாயாக.
Ẹ rántí bí Olúwa Ọlọ́run yín ti tọ́ ọ yín ṣọ́nà ní gbogbo ọ̀nà ní aginjù fún ogójì ọdún wọ̀nyí láti tẹ orí yín ba àti láti dán an yín wò kí ó ba à le mọ bí ọkàn yín ti rí, bóyá ẹ ó pa òfin rẹ̀ mọ́ tàbí bẹ́ẹ̀ kọ́.
3 ௩ அவர் உன்னைச் சிறுமைப்படுத்தி, உன்னைப் பசியினால் வருத்தி, மனிதன் உணவினால் மாத்திரம் அல்ல, யெகோவாவுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்பதை உனக்கு உணர்த்துவதற்கு, நீயும் உன் முற்பிதாக்களும் அறியாமலிருந்த மன்னாவினால் உன்னைப் பராமரித்தார்.
Ó rẹ̀ yín sílẹ̀ nípa fífi ebi pa yín, Ó sì fi manna bọ́ ọ yín, èyí tí ẹ kò mọ̀, tí àwọn baba yín kò mọ̀, kí ó ba à lè kọ́ ọ yín pé, ènìyàn kò ti ipa oúnjẹ nìkan wà láààyè, bí kò ṣe ohun gbogbo tí ó jáde láti ẹnu Olúwa wá.
4 ௪ இந்த நாற்பது வருடங்களும் உன்மேல் இருந்த ஆடை பழையதாகிப் போகவும் இல்லை, உன் கால் வீங்கவும் இல்லை.
Aṣọ yín kò gbó mọ́ ọn yín lọ́rùn bẹ́ẹ̀ ní ẹsẹ̀ yín kò sì wú, ní ogójì ọdún náà.
5 ௫ ஒருவன் தன் மகனைச் சிட்சிக்கிறதுபோல உன் தேவனாகிய யெகோவா உன்னைச் சிட்சிக்கிறார் என்று நீ உன் இருதயத்தில் அறிந்துகொள்வாயாக.
Ẹ mọ̀ ní ọkàn an yín pé, bí baba ti ń kọ́ ọmọ rẹ̀, bẹ́ẹ̀ ni Olúwa Ọlọ́run yín ń kọ́ ọ yín.
6 ௬ ஆகையால், உன் தேவனாகிய யெகோவாவுடைய வழிகளில் நடந்து, அவருக்குப் பயப்படும்படி, அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்ளக்கடவாய்.
Nítorí èyí, ẹ gbọdọ̀ pa òfin Olúwa Ọlọ́run yín mọ́, nípa rínrìn ní ọ̀nà rẹ̀, àti bíbẹ̀rù rẹ̀.
7 ௭ உன் தேவனாகிய யெகோவா உன்னை நல்ல தேசத்திலே நுழையச்செய்கிறார்; அது பள்ளத்தாக்குகளிலும் மலைகளிலுமிருந்து புறப்படுகிற ஆறுகளும், ஊற்றுகளும், ஏரிகளுமுள்ள தேசம்;
Nítorí pé Olúwa Ọlọ́run yín ń mú un yín bọ̀ wá sí ilẹ̀ rere ilẹ̀ tí ó kún fún odò àti ibú omi, pẹ̀lú àwọn ìsun tí ń sàn jáde láti orí òkè àti pẹ̀tẹ́lẹ̀.
8 ௮ அது கோதுமையும், வாற்கோதுமையும், திராட்சைச்செடிகளும், அத்திமரங்களும், மாதுளம்செடிகளுமுள்ள தேசம்; அது ஒலிவமரங்களும், எண்ணெயும், தேனுமுள்ள தேசம்;
Ilẹ̀ tí ó kún fún jéró àti ọkà barle, tí ó sì kún fún àjàrà àti igi ọ̀pọ̀tọ́, igi pomegiranate, òróró olifi àti oyin.
9 ௯ அது குறையில்லாமல் அப்பம் சாப்பிடத்தக்கதும் ஒன்றும் உனக்குக் குறைவுபடாததுமான தேசம்; அதின் கற்கள் இரும்பாயிருக்கிறதும், செம்பு வெட்டியெடுக்கத்தக்க மலைகள் உள்ளதுமான தேசம்.
Ilẹ̀ tí oúnjẹ kò ti wọ́n, kò sí ohun tí ẹ̀yin yóò ṣe aláìní, ilẹ̀ tí irin ti pọ̀ bí òkúta, ẹ̀yin sì lè wa idẹ jáde láti inú òkè rẹ̀ wá.
10 ௧0 ஆகையால், நீ சாப்பிட்டுத் திருப்தியடைந்திருக்கும்போது, உன் தேவனாகிய யெகோவா உனக்குக் கொடுத்த அந்த நல்ல தேசத்துக்காக அவரை ஸ்தோத்திரிப்பாயாக.
Nígbà tí ẹ bá ti jẹ tí ẹ sì yó tán ẹ yin Olúwa Ọlọ́run yín fún pípèsè ilẹ̀ rere fún un yín.
11 ௧௧ “உன் தேவனாகிய யெகோவாவை மறக்காதபடிக்கும், நான் இன்று உனக்குக் கொடுக்கிற அவருடைய கற்பனைகளையும், நியாயங்களையும், கட்டளைகளையும், கைக்கொள்ளாமல் போகாதபடிக்கும் எச்சரிக்கையாயிரு.
Ẹ ṣọ́ra kí ẹ má gbàgbé Olúwa Ọlọ́run yín, nípa kíkùnà láti pa àṣẹ rẹ̀, àwọn òfin rẹ̀, àti àwọn ìlànà rẹ̀ tí mo ń fún un yín lónìí mọ́.
12 ௧௨ நீ சாப்பிட்டுத் திருப்தியாகி, நல்ல வீடுகளைக்கட்டி, அவைகளில் குடியிருக்கும்போதும்,
Kí ó má ba à jẹ́ pé, nígbà tí ẹ bá jẹun yó tán, tí ẹ bá kọ́ ilé tí ó dára tán, tí ẹ sí ń gbé inú rẹ̀,
13 ௧௩ உன் ஆடுமாடுகள் மிகுதியாகி, உனக்கு வெள்ளியும் பொன்னும் பெருகி, உனக்கு உண்டானவையெல்லாம் பெருகும்போதும்,
nígbà tí àwọn agbo màlúù yín àti tí ewúrẹ́ ẹ yín bá pọ̀ sí i tán, tí fàdákà àti wúrà yín sì ń peléke sí i, tí ohun gbogbo tí ẹ ní sì ń pọ̀ sí i,
14 ௧௪ உன் இருதயம் பெருமைகொள்ளாமலும், உன்னை அடிமைத்தன வீடாகிய எகிப்திலிருந்து புறப்படச்செய்தவரும்,
nígbà náà ni ọkàn yín yóò gbéga, tí ẹ̀yin yóò sì gbàgbé Olúwa Ọlọ́run yín, tí ó mú un yín jáde láti Ejibiti wá, nínú oko ẹrú.
15 ௧௫ உன்னுடைய பின்நாட்களில் உனக்கு நன்மை செய்வதற்காக, உன்னைச் சிறுமைப்படுத்தி, உன்னைச் சோதித்து, கொள்ளிவாய்ச் சர்ப்பங்களும், தேள்களும், தண்ணீரில்லாத வறட்சியுமுள்ள பயங்கரமான பெரிய வனாந்திரத்தின்வழியாக உன்னை அழைத்துவந்தவரும், உனக்காகப் பாறையான கன்மலையிலிருந்து தண்ணீர் புறப்படச்செய்தவரும்,
Òun ni ó mú un yín la aginjù ẹlẹ́rù ńlá já, ilẹ̀ tí kò sí omi tí ó sì kún fún òǹgbẹ, pẹ̀lú àwọn ejò olóró ńlá ńlá àti àkéekèe. Ó mú omi jáde fún un yín láti inú àpáta.
16 ௧௬ உன்னுடைய முற்பிதாக்கள் அறியாத மன்னாவினால் வனாந்திரத்திலே உன்னைப் பராமரித்துவந்தவருமான உன் தேவனாகிய யெகோவாவை நீ மறக்காமலும்,
Ó fún yín ní manna láti jẹ nínú aginjù, ohun tí àwọn baba yín kò mọ̀ rí, kí Òun bá à le tẹ orí yín ba kí ó sì lè dán an yín wò, kí ó bá à lè dára fún un yín.
17 ௧௭ என் திறமையும் என் கைப்பெலனும் இந்த ஐசுவரியத்தை எனக்குச் சம்பாதித்தது என்று நீ உன் இருதயத்தில் சொல்லிக்கொள்ளாமலும் இருக்க எச்சரிக்கையாயிருந்து,
Ẹ lè rò nínú ara yín pé, “Agbára mi àti iṣẹ́ ọwọ́ mi ni ó mú ọ̀rọ̀ wọ̀nyí wá fún mi.”
18 ௧௮ உன் தேவனாகிய யெகோவாவை நினைப்பாயாக; அவரே உன் முற்பிதாக்களுக்கு வாக்களித்துக்கொடுத்த தம்முடைய உடன்படிக்கையை உறுதிப்படுத்தும்படி, இந்நாளில் உனக்கு உண்டாயிருக்கிறதுபோல, ஐசுவரியத்தைச் சம்பாதிக்கிறதற்கான பெலனை உனக்குக் கொடுக்கிறவர்.
Ṣùgbọ́n ẹ rántí Olúwa Ọlọ́run yín tí ó fún un yín ní agbára àti lè ní àwọn ọrọ̀ wọ̀nyí, tí ó sì fi mú májẹ̀mú rẹ̀ ṣẹ tí ó ti búra fún àwọn baba ńlá a yín bí ó ti rí lónìí.
19 ௧௯ உன் தேவனாகிய யெகோவாவை நீ மறந்து, வேறு தெய்வங்களைப் பின்பற்றி அவைகளை வணங்கி, அவைகளைப் பணிந்துகொள்வாயானால், நிச்சயமாக அழிந்துபோவீர்கள் என்று இன்று உங்களுக்குச் சாட்சியாக அறிவிக்கிறேன்.
Bí ẹ bá wá gbàgbé Olúwa Ọlọ́run yín, tí ẹ sì tẹ̀lé àwọn òrìṣà mìíràn, tí ẹ sì sìn wọ́n, tí ẹ sì foríbalẹ̀ fún wọn, Mo kìlọ̀ fún un yín pé rírun ni ẹ̀yin yóò run.
20 ௨0 உன் தேவனாகிய யெகோவாவுடைய சத்தத்திற்கு நீங்கள் கீழ்ப்படியாமற்போவதினால், யெகோவா உங்களுக்கு முன்பாக அழித்த மக்களைப்போல நீங்களும் அழிவீர்கள்.
Bí àwọn orílẹ̀-èdè tí Olúwa parun níwájú u yín, bákan náà ni ẹ ó parun, torí pé ẹ kò gbọ́rọ̀ sí Olúwa Ọlọ́run yín lẹ́nu.