< உபாகமம் 5 >
1 ௧ “மோசே இஸ்ரவேலர்கள் எல்லோரையும் அழைப்பித்து, அவர்களை நோக்கி: இஸ்ரவேலர்களே, நான் இன்று உங்கள் காதுகள் கேட்கச் சொல்லும் கட்டளைகளையும் நியாயங்களையும் கேளுங்கள்; நீங்கள் அவைகளின்படியே செய்வதற்கு அவைகளைக் கற்றுக் கைக்கொள்ளக்கடவீர்கள்.
Vậy, Môi-se gọi cả Y-sơ-ra-ên mà nói rằng: Hỡi Y-sơ-ra-ên, hãy nghe những luật lệ và mạng lịnh mà ngày nay ta rao truyền nơi lỗ tai các ngươi; các ngươi phải học tập và cẩn thận làm theo những điều đó.
2 ௨ நம்முடைய தேவனாகிய யெகோவா ஓரேபிலே நம்முடன் உடன்படிக்கை செய்தார்.
Giê-hô-va Đức Chúa Trời chúng ta có lập giao ước cùng chúng ta tại Hô-rếp.
3 ௩ அந்த உடன்படிக்கையைக் யெகோவா நம்முடைய முற்பிதாக்களுடன் செய்யாமல், இந்நாளில் இங்கே உயிரோடிருக்கிற நம் அனைவரோடும் செய்தார்.
Chẳng phải cùng tổ phụ chúng ta mà Đức Giê-hô-va đã lập giao ước nầy đâu, nhưng cùng hết thảy chúng ta hiện ngày nay còn sống đây.
4 ௪ யெகோவா மலையிலே அக்கினியின் நடுவிலிருந்து முகமுகமாக உங்களோடு பேசினார்.
Đức Giê-hô-va tại trên núi từ giữa lửa, đã đối diện phán cùng các ngươi.
5 ௫ யெகோவாவுடைய வார்த்தையை உங்களுக்கு அறிவிப்பதற்கு, அக்காலத்திலே நான் யெகோவாவுக்கும், உங்களுக்கும் நடுவாக நின்றேன்; நீங்கள் அக்கினிக்குப் பயந்து மலையில் ஏறாமல் இருந்தீர்கள்; அப்பொழுது அவர் சொன்னது என்னவென்றால்:
Đang lúc đó, ta đứng giữa Đức Giê-hô-va và các ngươi, đặng truyền lại lời của Ngài cho các ngươi; vì các ngươi sợ lửa, không lên trên núi. Ngài phán rằng:
6 ௬ நீங்கள் அடிமைகளாய் வாழ்ந்த எகிப்து தேசத்திலிருந்து புறப்படச்செய்த உன் தேவனாகிய யெகோவா நானே.
Ta là Giê-hô-va Đức Chúa Trời ngươi, đã rút ngươi ra khỏi xứ Ê-díp-tô, tức là khỏi nhà nô lệ.
7 ௭ என்னைத்தவிர உனக்கு வேறு தெய்வங்கள் உண்டாயிருக்கவேண்டாம்.
Trước mặt ta ngươi chớ có các thần khác.
8 ௮ மேலே வானத்திலும், கீழே பூமியிலும், பூமியின்கீழ் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு உருவத்தையாகிலும் யாதொரு சிலையையாகிலும் நீ உனக்கு உண்டாக்கவேண்டாம்.
Ngươi chớ làm tượng chạm cho mình, cũng chớ làm tượng nào giống như những vật trên trời cao kia, hoặc ở nơi đất thấp nầy, hoặc trong nước dưới đất.
9 ௯ நீ அவைகளை வணங்கவும் பூஜை செய்யவும் வேண்டாம்; உன் தேவனாகிய யெகோவாவாயிருக்கிற நான் எரிச்சலுள்ள தேவனாயிருந்து, என்னைப் பகைக்கிறவர்களைக்குறித்து முற்பிதாக்களுடைய அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்தில் மூன்றாம், நான்காம் தலைமுறைவரை விசாரிக்கிறவராயிருக்கிறேன்.
Ngươi chớ quì lạy trước các hình tượng đó, và cũng đừng hầu việc chúng nó; vì ta là Giê-hô-va Đức Chúa Trời ngươi, tức là Đức Chúa Trời kỵ tà, hễ ai ghét ta, ta sẽ nhơn tội tổ phụ phạt lại con cháu đến ba bốn đời,
10 ௧0 என்னிடத்தில் அன்புசெலுத்தி, என் கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கோ ஆயிரம் தலைமுறைவரைக்கும் இரக்கம்செய்கிறவராயிருக்கிறேன்.
và sẽ làm ơn đến ngàn đời cho những kẻ yêu mến ta và giữ các điều răn ta.
11 ௧௧ உன் தேவனாகிய யெகோவாவுடைய நாமத்தை வீணாகப் பயன்படுத்தாதிருப்பாயாக; யெகோவா தம்முடைய நாமத்தை வீணாகப் பயன்படுத்துகிறவனைத் தண்டிக்காமல் விடமாட்டார்.
Ngươi chớ lấy danh của Giê-hô-va Đức Chúa Trời ngươi mà làm chơi; vì Đức Giê-hô-va không cầm bằng vô tội kẻ nào lấy danh Ngài mà làm chơi.
12 ௧௨ உன் தேவனாகிய யெகோவா உனக்குக் கட்டளையிட்டபடியே, ஓய்வுநாளைப் பரிசுத்தமாக அனுசரிப்பாயாக.
Hãy giữ ngày nghỉ đặng làm nên thánh, y như Giê-hô-va Đức Chúa Trời ngươi đã phán dặn ngươi.
13 ௧௩ ஆறு நாளும் நீ வேலைசெய்து, உன் செயல்களையெல்லாம் நடப்பிப்பாயாக.
Ngươi hãy làm hết công việc mình trong sáu ngày;
14 ௧௪ ஏழாம் நாளோ உன் தேவனாகிய யெகோவாவுடைய ஓய்வு நாள்; அதிலே நீயானாலும், உன்னுடைய மகனானாலும், மகளானாலும், வேலைக்காரனானாலும், வேலைக்காரியானாலும், எருதானாலும், கழுதையானாலும், உனக்கு இருக்கிற மற்றெந்த மிருகஜீவனானாலும், உன் வாசல்களில் இருக்கிற அந்நியனானாலும் எந்தவொரு வேலையும் செய்யவேண்டாம்; நீ இளைப்பாறுவதுபோல உன் வேலைக்காரனும், வேலைக்காரியும் இளைப்பாறவேண்டும்;
nhưng ngày thứ bảy là ngày nghỉ của Giê-hô-va Đức Chúa Trời ngươi: chớ làm một công việc nào hết, hoặc ngươi, con trai con gái, tôi trai tớ gái của ngươi, hoặc bò, lừa, hoặc một trong các súc vật của ngươi, hay là khách ở trong nhà ngươi, hầu cho tôi trai và tớ gái ngươi cũng được nghỉ như ngươi.
15 ௧௫ நீ எகிப்து தேசத்தில் அடிமையாயிருந்தாய் என்றும், உன் தேவனாகிய யெகோவா உன்னை அவ்விடத்திலிருந்து வல்லமையுள்ள கரத்தினாலும் ஓங்கிய புயத்தினாலும் புறப்படச்செய்தார் என்றும் நினைப்பாயாக; ஆகையால் ஓய்வு நாளை அனுசரிக்க உன் தேவனாகிய யெகோவா உனக்குக் கட்டளையிட்டார்.
Khá nhớ rằng ngươi đã làm tôi mọi nơi xứ Ê-díp-tô, và Giê-hô-va Đức Chúa Trời ngươi dùng tay quyền năng giơ thẳng ra đem ngươi ra khỏi đó; bởi cớ ấy cho nên Giê-hô-va Đức Chúa Trời ngươi có dặn biểu ngươi phải giữ ngày nghỉ.
16 ௧௬ உன் தேவனாகிய யெகோவா உனக்குக் கொடுக்கிற தேசத்திலே உன் நாட்கள் நீடித்திருப்பதற்கும், நீ நன்றாயிருப்பதற்கும், உன் தேவனாகிய யெகோவா உனக்குக் கட்டளையிட்டபடியே, உன் தகப்பனையும், தாயையும் மதிப்புடன் நடத்துவாயாக.
Hãy hiếu kính cha mẹ ngươi, như Giê-hô-va Đức Chúa Trời ngươi có phán dặn, hầu cho ngươi được sống lâu và có phước trên đất mà Giê-hô-va Đức Chúa Trời ngươi ban cho.
17 ௧௭ கொலை செய்யாதிருப்பாயாக.
Ngươi chớ giết người.
18 ௧௮ விபசாரம் செய்யாதிருப்பாயாக.
Ngươi chớ phạm tội tà dâm.
20 ௨0 மற்றவனுக்கு விரோதமாகப் பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக.
Ngươi chớ làm chứng dối cho kẻ lân cận mình.
21 ௨௧ மற்றவனுடைய மனைவியை இச்சியாதிருப்பாயாக; அவனுடைய வீட்டையும், நிலத்தையும், வேலைக்காரனையும், வேலைக்காரியையும், எருதையும், கழுதையையும், மேலும் அவனுக்குச் சொந்தமான எதையும் இச்சியாதிருப்பாயாக என்றார்.
Ngươi chớ tham vợ của kẻ lân cận mình; chớ tham nhà của người, hoặc ruộng, tôi trai tớ gái, bò, lừa hay là vật chi thuộc về kẻ lân cận ngươi.
22 ௨௨ “இந்த வார்த்தைகளைக் யெகோவா மலையிலே அக்கினி, மேகம், காரிருள் ஆகியவற்றிலிருந்து உங்கள் சபையார் அனைவரோடும் மகா சத்தத்துடனே சொன்னார்; அவைகளோடு ஒன்றும் கூட்டாமல், அவைகளை இரண்டு கற்பலகைகளில் எழுதி என்னிடத்தில் கொடுத்தார்.
Tại trên núi, giữa lửa, mây và sự tối tăm, Đức Giê-hô-va có dùng tiếng lớn phán những lời nầy cho cả hội các ngươi, Ngài không thêm chi hết; đoạn Ngài ghi các lời đó trên hai bảng đá, và trao cho ta.
23 ௨௩ மலை அக்கினியாக எரியும்போது இருளின் நடுவிலிருந்து உண்டான சத்தத்தை நீங்கள் கேட்டபோது, கோத்திரத் தலைவர்களும் மூப்பர்களுமாகிய நீங்கள் எல்லோரும் என்னிடத்தில் வந்து:
Vả, trong khi cả núi phát lửa, các ngươi vừa nghe tiếng từ giữa nơi tối tăm phán ra, thì những quan trưởng của các chi phái, và những trưởng lão các ngươi đến gần ta mà nói rằng:
24 ௨௪ “இதோ, நம்முடைய தேவனாகிய யெகோவா நமக்குத் தம்முடைய மகிமையையும் தம்முடைய மகத்துவத்தையும் காண்பித்தார்; அக்கினியின் நடுவிலிருந்து பேசின அவருடைய சத்தத்தையும் கேட்டோம்; தேவன் மனிதனுடன் பேசியும், அவன் உயிரோடிருக்கிறதை இந்நாளில் கண்டோம்.
Kìa, Giê-hô-va Đức Chúa Trời chúng tôi đã tỏ ra sự vinh hiển và sự oai nghiêm Ngài cho chúng tôi, và chúng tôi có nghe tiếng Ngài từ giữa lửa phán ra; ngày nay chúng tôi thấy rằng Đức Chúa Trời có phán cùng loài người và loài người vẫn còn sống.
25 ௨௫ இப்பொழுது நாங்கள் ஏன் சாகவேண்டும்? இந்தப் பெரிய அக்கினி எங்களை சுட்டெரிக்குமே; நாங்கள் இன்னும் நம்முடைய தேவனாகிய யெகோவாவின் சத்தத்தைக் கேட்போமானால் சாவோம்.
Nhưng bây giờ, cớ sao chúng tôi phải chết? vì đám lửa lớn nầy sẽ tiêu diệt chúng tôi hết. Ví bằng chúng tôi còn có nghe tiếng của Giê-hô-va Đức Chúa Trời chúng tôi, thì chúng tôi phải chết.
26 ௨௬ நாங்கள் கேட்டதுபோல, அக்கினியின் நடுவிலிருந்து பேசுகிற ஜீவனுள்ள தேவனுடைய சத்தத்தை மாம்சமானவர்களில் யாராவது கேட்டு உயிரோடிருந்தது உண்டா?
Vì trong loài người, có ai đã nghe tiếng Đức Chúa Trời sanh hoạt từ giữa lửa phán ra, như chúng tôi mà vẫn còn sống?
27 ௨௭ நீரோ அருகில் சென்று, நம்முடைய தேவனாகிய யெகோவா சொல்வதையெல்லாம் கேட்டு, அவைகளை நீரே எங்களுக்குச் சொல்லவேண்டும்; நாங்கள் கேட்டு, அதின்படியே செய்வோம் என்றீர்கள்.
Vậy, ông hãy đi đến gần, nghe mọi điều Giê-hô-va Đức Chúa Trời chúng tôi sẽ phán, rồi hãy truyền lại cho chúng tôi mọi điều Giê-hô-va Đức Chúa Trời chúng tôi sẽ phán cho ông; thì chúng tôi sẽ nghe và làm theo.
28 ௨௮ நீங்கள் என்னுடன் பேசும்போது, யெகோவா உங்கள் வார்த்தைகளைக் கேட்டு, யெகோவா என்னை நோக்கி; “இந்த மக்கள் உன்னிடம் சொன்ன வார்த்தைகளைக் கேட்டேன்; அவர்கள் சொன்னது எல்லாம் நன்றாக இருந்தது.
Đang khi các ngươi bàn cùng ta, Đức Giê-hô-va nghe những lời của các ngươi, nên phán cùng ta rằng: Ta có nghe những lời dân nầy bàn cùng ngươi; chúng nó nói như vậy lấy làm thậm phải.
29 ௨௯ அவர்களும் அவர்களுடைய பிள்ளைகளும் என்றென்றைக்கும் நன்றாயிருப்பதற்கு, அவர்கள் எந்நாளும் எனக்குப் பயந்து, என் கற்பனைகளையெல்லாம் கைக்கொள்வதற்கேற்ற இருதயம் அவர்களுக்கு இருந்தால் நலமாயிருக்கும்.
è! chớ chi dân nầy thường có một lòng kính sợ ta, hằng giữ theo các điều răn ta như thế, để chúng nó và con cháu chúng nó được phước đời đời!
30 ௩0 நீ போய்: உங்கள் கூடாரங்களுக்குத் திரும்பிப்போங்கள் என்று அவர்களுக்குச் சொல்.
Hãy đi nói cùng dân sự rằng: Khá trở về trại mình;
31 ௩௧ நீயோ இங்கே என்னிடத்தில் நில்; நான் அவர்களுக்குச் சொந்தமாகக் கொடுக்கும் தேசத்தில் அவர்கள் செய்யும்படி நீ அவர்களுக்குப் போதிக்கவேண்டிய சகல கற்பனைகளையும், கட்டளைகளையும், நியாயங்களையும் உனக்குச் சொல்லுவேன் என்றார்.
còn ngươi, hãy ở lại đây với ta, ta sẽ truyền các điều răn, luật lệ, và mạng lịnh mà ngươi sẽ dạy lại cho, để chúng nó làm theo các điều đó trong xứ ta sẽ ban cho họ nhận lấy.
32 ௩௨ உங்கள் தேவனாகிய யெகோவா உங்களுக்குக் கற்பித்தபடியே செய்ய கவனமாக இருங்கள்; வலதுபுறமும் இடதுபுறமும் சாயாதிருப்பீர்களாக.
Vậy, các ngươi khá cẩn thận làm theo, y như Giê-hô-va Đức Chúa Trời các ngươi đã phán dặn các ngươi; chớ xây qua bên hữu, hoặc qua bên tả.
33 ௩௩ நீங்கள் சொந்தமாக்கிக்கொள்கிற தேசத்திலே பிழைத்து சுகமாக நீண்டநாட்கள் வாழ, உங்கள் தேவனாகிய யெகோவா உங்களுக்கு ஏற்படுத்தின வழிகளெல்லாவற்றிலும் நடக்கக்கடவீர்கள்.
Các ngươi khá đi theo trọn đường mà Giê-hô-va Đức Chúa Trời các ngươi đã chỉ cho, để các ngươi được sống, hưởng phước, và ở lâu dài trong xứ mà mình sẽ nhận được.