< உபாகமம் 26 >

1 “உன் தேவனாகிய யெகோவா உனக்குச் சொந்தமாகக் கொடுக்கும் தேசத்தில் நீ போய்ச் சேர்ந்து, அதைக் கட்டிக்கொண்டு அதில் குடியிருக்கும்போது,
A kad uðeš u zemlju koju ti daje Gospod Bog tvoj u našljedstvo, i naslijediš je i naseliš se u njoj,
2 உன் தேவனாகிய யெகோவா உனக்குக் கொடுக்கும் உன் தேசத்தில் நீ பயிரிடும் நிலத்தின் அறுவடையிலெல்லாம் முந்தின பலனை எடுத்து, ஒரு கூடையிலே வைத்து, உன் தேவனாகிய யெகோவா தமது நாமம் விளங்கும்படி தெரிந்துகொண்டிருக்கும் இடத்திற்குப் போய்,
Uzmi prvina od svakoga voæa one zemlje, koje æeš prinositi od zemlje svoje koju ti Gospod Bog tvoj daje, i metnuvši u kotaricu idi na mjesto koje Gospod Bog tvoj izabere da ondje nastani ime svoje,
3 அந்நாட்களில் இருக்கும் ஆசாரியனிடத்தில் சென்று, அவனை நோக்கி: யெகோவா எங்களுக்குக் கொடுக்க நம்முடைய முற்பிதாக்களுக்கு வாக்களித்த தேசத்தில் வந்து சேர்ந்தேன் என்று இன்று உம்முடைய தேவனாகிய யெகோவாவுடைய சந்நிதியில் அறிக்கையிடுகிறேன் என்பாயாக.
I došavši k svešteniku koji bude onda reci mu: priznajem danas pred Gospodom Bogom tvojim da sam ušao u zemlju za koju se Gospod Bog zakleo ocima našim da æe nam je dati.
4 அப்பொழுது ஆசாரியன் அந்தக் கூடையை உன் கையிலிருந்து வாங்கி, அதை உன் தேவனாகிய யெகோவாவின் பலிபீடத்திற்கு முன்பாக வைக்கக்கடவன்.
A sveštenik neka uzme kotaricu iz tvoje ruke i metne je pred oltarom Gospoda Boga tvojega.
5 அப்பொழுது நீ உன் தேவனாகிய யெகோவாவுடைய சந்நிதியில் நின்று அறிக்கையிட்டுச் சொல்லவேண்டியது என்னவென்றால்: என் தகப்பன் அழிவுக்கு நேரான சீரியா தேசத்தானாக இருந்தான்; அவன் கொஞ்சம் மக்களுடன் எகிப்திற்குப் போய், அவ்விடத்தில் அந்நியனாகக் குடியிருந்து, அங்கே பெரிய பலத்த எண்ணிக்கை மிகுந்த மக்கள் கூட்டமானான்.
Tada progovori i reci pred Gospodom Bogom svojim: otac moj bijaše siromah Sirin i siðe u Misir s malo èeljadi, i bi ondje došljak, pa posta narod velik i silan i obilan na broju.
6 எகிப்தியர்கள் எங்களை ஒடுக்கி, எங்களைச் சிறுமைப்படுத்தி, எங்கள்மேல் கடினமான வேலையைச் சுமத்தினபோது,
Ali Misirci stadoše zlo postupati s nama, muèiše nas i udaraše na nas teške poslove.
7 எங்கள் முற்பிதாக்களின் தேவனாகிய யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டோம்; யெகோவா எங்கள் சத்தத்தைக் கேட்டு, எங்களுடைய சிறுமையையும், வருத்தத்தையும், ஒடுக்கத்தையும் பார்த்து,
I mi zavapismo ka Gospodu Bogu otaca svojih, i Gospod èu glas naš, i pogleda na muku našu, na trud naš i na nevolju našu.
8 எங்களைப் பலத்த கையினாலும், ஓங்கிய புயத்தினாலும், மகா பயங்கரங்களினாலும், அடையாளங்களினாலும், அற்புதங்களினாலும், எகிப்திலிருந்து புறப்படச்செய்து,
I izvede nas Gospod iz Misira rukom krjepkom i mišicom podignutom, i strahotom velikom i znacima i èudesima.
9 எங்களை இவ்விடத்திற்கு அழைத்துவந்து, நல்ல விளைச்சல் உள்ள செழிப்பான தேசமாகிய இந்தத் தேசத்தை எங்களுக்குக் கொடுத்தார்.
I dovede nas na ovo mjesto, i dade nam zemlju ovu, zemlju u kojoj teèe mlijeko i med.
10 ௧0 இப்பொழுதும், இதோ, யெகோவாவே, தேவரீர் எனக்குக் கொடுத்த நிலத்தினுடைய அறுவடைகளின் முதற்பலனைக் கொண்டுவந்தேன் என்று சொல்லி, அதை உன் தேவனாகிய யெகோவாவுடைய சந்நிதியில் வைத்து, உன் தேவனாகிய யெகோவாவுடைய சந்நிதியில் பணிந்து,
Zato sad evo donesoh prvine od roda ove zemlje koju si mi dao, Gospode. I ostavi ih pred Gospodom Bogom svojim, i pokloni se pred Gospodom Bogom svojim.
11 ௧௧ நீயும், லேவியனும் உன்னிடத்தில் இருக்கிற அந்நியனும் உன் தேவனாகிய யெகோவா உனக்கும் உன் வீட்டாருக்கும் செய்த சகல நன்மைகளுக்காகவும் சந்தோஷப்படுவீர்களாக.
I veseli se svakim dobrom koje ti da Gospod Bog tvoj i domu tvojemu, ti i Levit i došljak koji je kod tebe.
12 ௧௨ “தசமபாகம் செலுத்தும் வருடமாகிய மூன்றாம் வருடத்திலே, நீ உன் விளைச்சலில் பத்தில் ஒன்றை எடுத்து, லேவியனும் அந்நியனும், திக்கற்ற பிள்ளையும், விதவையும் உன் வாசல்களில் சாப்பிட்டுத் திருப்தியாகும்படி அவர்களுக்குக் கொடுத்தபின்பு,
A kad daš sve desetke od dohodaka svojih treæe godine, koje je godina desetka, i daš Levitu, došljaku, siroti i udovici da jedu u mjestima tvojim i nasite se,
13 ௧௩ நீ உன் தேவனாகிய யெகோவாவுடைய சந்நிதியில் போய் அவரை நோக்கி: தேவரீர் எனக்குக் கொடுத்த எல்லாக் கட்டளைகளின்படியும், நான் பரிசுத்தமான பொருட்களை என் வீட்டிலிருந்து எடுத்துவந்து, லேவியனுக்கும், அந்நியனுக்கும், திக்கற்ற பிள்ளைக்கும், விதவைக்கும் கொடுத்தேன்; உம்முடைய கட்டளைகளில் ஒன்றையும் நான் மீறவும் இல்லை, மறக்கவும் இல்லை.
Onda reci pred Gospodom Bogom svojim: iznesoh iz doma svojega što je sveto, i dadoh Levitu i došljaku, siroti i udovici sasvijem po zapovijesti koju si mi zapovjedio; ne prestupih zapovijesti tvojih niti zaboravih;
14 ௧௪ நான் துக்கம்கொண்டாடும்போது அதைச் சாப்பிடவும் இல்லை, தீட்டான காரியத்திற்கு அதில் ஒன்றும் எடுக்கவும் இல்லை; மரணகாரியத்துக்காக அதில் ஒன்றும் செலுத்தவும் இல்லை; நான் என் தேவனாகிய யெகோவாவின் சத்தத்திற்குக் கீழ்ப்படிந்து, தேவரீர் எனக்குக் கட்டளையிட்டபடி சகலமும் செய்தேன்.
Ne jedoh od toga u žalosti svojoj, niti uzeh od toga na potrebu neèistu, niti dadoh od toga na mrtvaca; slušah Gospoda Boga svojega, uèinih sve kako si mi zapovjedio.
15 ௧௫ நீர் உமது பரிசுத்த வாசஸ்தலமாகிய பரலோகத்திலிருந்து பார்த்து, உமது மக்களாகிய இஸ்ரவேலர்களையும், நீர் எங்களுடைய முற்பிதாக்களுக்கு வாக்களித்தபடியே, எங்களுக்குக் கொடுத்த நல்ல விளைச்சல் உள்ள செழிப்பான தேசத்தையும் ஆசீர்வதியும் என்று சொல்வாயாக.
Pogledaj iz svetoga stana svojega s neba, i blagoslovi narod svoj Izrailja i zemlju koju si nam dao kao što si se zakleo ocima našim, zemlju u kojoj teèe mlijeko i med.
16 ௧௬ “இந்தக் கட்டளைகளின்படியும் நியாயங்களின்படியும் நீ செய்ய, இன்று உன் தேவனாகிய யெகோவா உனக்குக் கட்டளையிடுகிறார்; ஆகையால் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் அவைகளைக் கைக்கொண்டு நடக்கக்கடவாய்.
Danas ti Gospod Bog tvoj zapovijeda da izvršuješ ove uredbe i ove zakone. Pazi dakle i izvršuj ih od svega srca svojega i od sve duše svoje.
17 ௧௭ யெகோவா எனக்கு தேவனாயிருப்பார் என்றும், நான் அவருடைய வழிகளில் நடந்து, அவர் கட்டளைகளையும், கற்பனைகளையும், நியாயங்களையும் கைக்கொண்டு, அவருடைய சத்தத்திற்குக் கீழ்ப்படிவேன் என்றும் நீ இன்று அவருக்கு வாக்குக்கொடுத்தாய்.
Danas si se zarekao Gospodu da æe ti biti Bog i da æeš iæi putovima njegovijem i držati uredbe njegove, i zapovijesti njegove i zakone njegove, i da æeš slušati glas njegov.
18 ௧௮ யெகோவாவும் உனக்கு வாக்குக்கொடுத்து உனக்குச் சொல்லியிருக்கிறபடி: நீ என்னுடைய கட்டளைகளையெல்லாம் கைக்கொண்டால், எனக்குச் சொந்த மக்களாயிருப்பாய் என்றும்,
A Gospod se tebi danas zarekao da æeš mu biti narod osobit, kao što ti je govorio, da bi držao sve zapovijesti njegove;
19 ௧௯ நான் உண்டாக்கிய எல்லா மக்களையும்விட, புகழ்ச்சியிலும், கீர்த்தியிலும், மகிமையிலும் உன்னைச் சிறந்திருக்கச் செய்வேன் என்றும், நான் சொன்னபடியே, நீ உன் தேவனாகிய யெகோவாவான எனக்குப் பரிசுத்த மக்களாயிருப்பாய் என்றும், அவர் இன்று உனக்குச் சொல்லுகிறார்” என்றான்.
I da æe te podignuti nad sve narode, koje je stvorio hvalom, imenom i slavom, da budeš narod svet Gospodu Bogu svojemu, kao što ti je govorio.

< உபாகமம் 26 >