< உபாகமம் 2 >
1 ௧ “யெகோவா எனக்குச் சொன்னபடி நாம் திரும்பி, சிவந்த சமுத்திரத்திற்குப் போகிற வழியாக வனாந்திரத்திற்குப் பிரயாணம்செய்து, அநேக நாட்கள் சேயீர் நாட்டை சுற்றித்திரிந்தோம்.
И возвратившеся воздвигохомся в пустыню, путем моря Чермнаго, якоже глагола Господь ко мне: и обходихом гору Сиир дни многи.
2 ௨ அப்பொழுது யெகோவா என்னை நோக்கி:
И рече Господь ко мне:
3 ௩ நீங்கள் இந்த மலைநாட்டைச் சுற்றித்திரிந்தது போதும்; வடக்கே திரும்புங்கள்.
довлеет вам обхождати гору сию: возвратитеся убо к северу:
4 ௪ மக்களுக்கு நீ கட்டளையிடவேண்டியது என்னவென்றால்: சேயீரிலே குடியிருக்கிற ஏசாவின் சந்ததியான உங்கள் சகோதரர்களின் எல்லையைக் கடக்கப்போகிறீர்கள்; அவர்கள் உங்களுக்குப் பயப்படுவார்கள்; நீங்களோ மிகவும் எச்சரிக்கையாயிருங்கள்;
и людем заповеждь, глаголя: вы пройдите сквозе пределы братии вашея, сынов Исавовых, живущих в Сиире, и убоятся вас и ужаснутся зело:
5 ௫ அவர்களோடு போர்செய்யவேண்டாம்; அவர்களுடைய தேசத்திலே ஒரு அடி நிலத்தைக்கூட உங்களுக்குக் கொடுக்கமாட்டேன்; சேயீர் மலைநாட்டை ஏசாவுக்குச் சொந்தமாகக் கொடுத்திருக்கிறேன்.
не сотворите с ними рати: не дах бо вам от земли их ниже стопы ноги, яко во жребий дах сыном Исавовым гору Сиир:
6 ௬ உணவுப்பொருட்களை அவர்களிடம் பணத்திற்கு வாங்கிச் சாப்பிட்டு, தண்ணீரையும் அவர்களிடம் பணத்திற்கு வாங்கிக் குடியுங்கள்.
сребром пищу купите себе у них и ядите, и воду в меру возмите от них на цене и пийте:
7 ௭ உன் தேவனாகிய யெகோவா உன் கையின் செயல்களிலெல்லாம் உன்னை ஆசீர்வதித்து வருகிறார்; இந்தப் பெரிய வனாந்திரத்தின்வழியாக நீ நடந்துவருகிறதை அறிவார்; இந்த நாற்பது வருடங்களும் உன் தேவனாகிய யெகோவா உன்னுடன் இருந்தார்; உனக்கு ஒன்றும் குறைவுபடவில்லை என்று சொல் என்றார்.
ибо Господь Бог твой благослови тебе во всяком деле руку твоею: разумей, како прошел еси пустыню великую и страшную сию: се, четыредесять лет Господь Бог твой с тобою, и не востребовал еси словесе.
8 ௮ “அப்படியே நாம் சேயீரிலே குடியிருக்கிற நம்முடைய சகோதரர்களாகிய ஏசாவின் சந்ததியைவிட்டுப் புறப்பட்டு, சமபூமி வழியாக ஏலாத்திற்கும், எசியோன் கேபேருக்கும் போய், திரும்பிக்கொண்டு, மோவாப் வனாந்திரவழியாக வந்தோம்.
И минухом братию свою сыны Исавли, живущыя в Сиире, у пути Аравскаго от Елона и от Гесион-Гавера, и возвратившеся преидохом путь в пустыню Моавлю.
9 ௯ அப்பொழுது யெகோவா என்னை நோக்கி: நீ மோவாபை துன்பப்படுத்தாமலும், அவர்களுடன் போர்செய்யாமலும் இரு; அவர்களுடைய தேசத்தில் உனக்கு ஒன்றையும் சொந்தமாகக் கொடுக்கமாட்டேன்; ஆர் என்னும் பட்டணத்தை லோத் சந்ததிக்குச் சொந்தமாகக் கொடுத்தேன்.
И рече Господь ко мне: не совраждуйтеся Моавитом и не сотворите с ними рати: не дах бо вам от земли их во жребий, сыном бо Лотовым дах Ароир наследити.
10 ௧0 திரளானவர்களும், ஏனாக்கியர்களைப்போல உயரமானவர்களுமான பலத்த மக்களாகிய ஏமியர்கள் அதில் முன்னே குடியிருந்தார்கள்.
Оммины прежде седяху на ней, народ велик и мног и крепок якоже Енакими:
11 ௧௧ அவர்களும் ஏனாக்கியர்களைப்போல இராட்சதர்கள் என்று கருதப்பட்டார்கள், மோவாபியர்களோ அவர்களை ஏமியர்கள் என்று சொல்லுகிறார்கள்.
Рафаины глаголются и сии, якоже и Енакими: и Моавити прозывают я Оммины.
12 ௧௨ ஓரியர்களும் சேயீரில் முன்னே குடியிருந்தார்கள்; யெகோவா தங்களுக்குச் சொந்தமாகக் கொடுத்த தேசத்தாரை இஸ்ரவேல் துரத்தினதுபோல, ஏசாவின் சந்ததியினர் அந்த ஓரியர்களைத் துரத்தி, அவர்களைத் தங்கள் முகத்திற்கு முன்பாக அழித்து, அவர்கள் இருந்த பகுதியில் குடியேறினார்கள்.
И в Сиире седяше Хорреи прежде, но сынове Исавовы потребиша я и искорениша я от лица своего: и вселишася вместо их, имже образом сотвори Израиль земли наследия своего, юже даде Господь им.
13 ௧௩ நீங்கள் எழுந்து, சேரேத் ஆற்றை கடந்துபோங்கள் என்று சொன்னார்; அப்படியே சேரேத் ஆற்றைக் கடந்தோம்.
Ныне убо вы востаните и воздвигнитеся, и пройдите дебрь Заретову.
14 ௧௪ போர்செய்யத் தகுதியுள்ளவர்களான அந்தச் சந்ததியெல்லாம் யெகோவா தங்களுக்கு வாக்களித்தபடியே முகாமிலிருந்து அழிந்துபோக, நாம் காதேஸ்பர்னேயாவைவிட்டுப் புறப்பட்டதுமுதல், சேரேத் ஆற்றைக் கடக்கும்வரை சென்றகாலங்கள் முப்பத்தெட்டு வருடங்கள்.
И дни, в няже отидохом от Кадис-Варни дондеже преидохом дебрь Заретову, тридесять и осмь лет, дондеже паде весь род мужей воинских от полка, якоже клятся им Господь Бог.
15 ௧௫ அவர்கள் முகாமிலிருந்து அழிந்துபோகும்வரை யெகோவாவின் கை அவர்களை நிர்மூலமாக்குவதற்கு அவர்களுக்கு விரோதமாயிருந்தது.
И рука Божия бяше на них, погубити я от полка, дондеже падоша.
16 ௧௬ “போர் செய்யத் தகுதியுடையவர்கள் எல்லோரும் மக்களின் நடுவிலிருந்து மரணமடைந்தபின்பு,
И бысть внегда падоша вси мужи воинстии умирающе от среды людий,
17 ௧௭ யெகோவா என்னை நோக்கி:
и рече Господь ко мне, глаголя:
18 ௧௮ நீ ஆர் பட்டணம் இருக்கிற மோவாபின் எல்லையை இன்றைக்குக் கடந்து,
ты прейдеши днесь пределы Моавлими Ароир:
19 ௧௯ அம்மோன் மக்களுக்கு எதிராகச் சேரப்போகிறாய்; நீ அவர்களைத் துன்பப்படுத்தவும் அவர்களுடன் போர்செய்யவும் வேண்டாம்; அம்மோன் மக்களின் தேசத்தில் ஒன்றையும் உனக்குச் சொந்தமாகக் கொடுக்கமாட்டேன்; அதை லோத்தின் சந்ததியினருக்குச் சொந்தமாகக் கொடுத்திருக்கிறேன்.
и пришедше близ сынов Амманих, не совраждуйтеся им и не сотворите с ними рати: не дам бо тебе от земли сынов Амманих во жребий, яко сыном Лотовым дах ю во жребий.
20 ௨0 அதுவும் இராட்சதருடைய தேசமாக கருதப்பட்டது; முற்காலத்தில் இராட்சதர்கள் அதிலே குடியிருந்தார்கள், அம்மோனியர்கள் அவர்களைச் சம்சூமியர்கள் என்று சொல்லுகிறார்கள்.
Земля Рафаинска возименуются: Рафаини бо на ней прежде живяху: Амманитяне же прозывают их Зоммин:
21 ௨௧ அவர்கள் திரளானவர்களும் ஏனாக்கியர்களைப்போல உயரமானவர்களுமான பலத்த மக்களாயிருந்தார்கள்; யெகோவாவோ சேயீரில் குடியிருந்த ஏசாவின் சந்ததிக்கு முன்பாக ஓரியர்களை அழிக்க, அவர்கள் அந்த மக்களைத் துரத்திவிட்டு, அவர்கள் இருந்த பகுதியில் இந்நாள்வரைக்கும் குடியிருக்கிறதுபோலவும்,
язык велик и мног и крепок, якоже и Енакими: и погуби я Господь от лица их, и прияша наследие и вселишася вместо их даже до сего дне:
22 ௨௨ கப்தோரிலிருந்து புறப்பட்ட கப்தோரியர்கள் ஆசேரீம் துவங்கி ஆசாவரை குடியிருந்த ஓரியர்களை அழித்து, அவர்கள் இருந்த பகுதியிலே குடியேறினது போலவும்,
якоже сотвориша сыном Исавовым живущым в Сиире, имже образом потребиша Хорреа от лица своего и наследиша их, и вселишася вместо их даже до сего дне:
23 ௨௩ யெகோவா அவர்களை இவர்களுக்கு முன்பாக அழியச்செய்ய, இவர்கள் அவர்களைத் துரத்திவிட்டு, அவர்கள் இருந்த பகுதியிலே குடியேறினார்கள்.
и Евее живущии во Асирофе даже до Газы, и Каппадоки изшедшии из Каппадокии потребиша я, и вселишася вместо их.
24 ௨௪ நீங்கள் எழுந்து பிரயாணம்செய்து, அர்னோன் ஆற்றைக் கடந்துபோங்கள்; எஸ்போனின் ராஜாவாகிய சீகோன் என்னும் எமோரியனையும் அவனுடைய தேசத்தையும் உன் கையிலே ஒப்புக்கொடுத்தேன்; இதுமுதல் அதைச் சொந்தமாக்கிக்கொள்ள அவனோடு போரிடு.
Ныне убо востаните и воздвигнитеся, и прейдите вы дебрь Арноню: се, предах в руце твои Сиона царя Есевоня Аморрейска и землю его: начни наследовати, сотвори с ним рать днешний день:
25 ௨௫ வானத்தின்கீழ் எங்குமுள்ள மக்கள் உன்னாலே திகிலும் பயமும் அடையும்படி இன்று நான் செய்யத் துவங்குவேன்; அவர்கள் உன்னுடைய புகழைக் கேட்டு, உன்னிமித்தம் நடுங்கி, வேதனைப்படுவார்கள் என்றார்.
начинай даяти трепет твой и страх твой пред лицем всех языков сущих под небесем, иже слышавше имя твое возмятутся, и болезнь приимут от лица твоего.
26 ௨௬ “அப்பொழுது நான் கெதெமோத் வனாந்திரத்திலிருந்து எஸ்போனின் ராஜாவாகிய சீகோனிடத்தில், சமாதான வார்த்தைகளைச் சொல்லும்படி பிரதிநிதிகளை அனுப்பி:
И послах послы от пустыни Кедамоф к Сиону царю Есевоню словесы мирными, глаголя:
27 ௨௭ நான் உம்முடைய தேசத்தைக் கடந்துபோகும்படி அனுமதிகொடும்; வலதுபுறம் இடதுபுறம் சாயாமல் பெரும்பாதை வழியாக நடப்பேன்.
да пройду сквозе землю твою: по пути пройду, не совращуся ни на десно, ни на лево:
28 ௨௮ சேயீரில் குடியிருக்கிற ஏசாவின் சந்ததியினரும், ஆர் பட்டணத்தில் குடியிருக்கிற மோவாபியர்களும் எனக்குச் செய்ததுபோல, நான் யோர்தான் நதியைக் கடந்து, எங்கள் தேவனாகிய யெகோவா எங்களுக்குக் கொடுக்கிற தேசத்தில் சேரும்வரை,
пищу на цене даси ми, и ям: и воду на цене даси ми, и пию: точию ногама моима да прейду:
29 ௨௯ நீர் எனக்கு சாப்பிட உணவையும், குடிக்கத் தண்ணீரையும் விலைக்குத் தாரும்; நான் கால்நடையாகக் கடந்து போகமாத்திரம் அனுமதிகொடும் என்று சொல்லி அனுப்பினேன்.
якоже сотвориша ми сынове Исавли живущии в Сиире и Моавити живущии во Ароире, дондеже прейду Иордан на землю, юже Господь Бог наш дает нам.
30 ௩0 ஆனாலும் தன் தேசத்தைக் கடந்துபோவதற்கு, எஸ்போனின் ராஜாவாகிய சீகோன் நமக்கு அனுமதி கொடுக்கவில்லை; இந்நாளில் இருக்கிறதுபோல, உன் தேவனாகிய யெகோவா அவனை உன் கையில் ஒப்புக்கொடுப்பதற்காக, அவனுடைய மனதையும், இருதயத்தையும் கடினப்படுத்தியிருந்தார்.
И не восхоте Сион цар Есевонь, да пройдем сквозе его, яко ожесточи Господь Бог наш дух его и укрепи сердце его, да предастся в руце твои якоже во днешний день.
31 ௩௧ அப்பொழுது யெகோவா என்னை நோக்கி: இதோ, சீகோனையும் அவனுடைய தேசத்தையும் உனக்கு ஒப்புக்கொடுக்கப்போகிறேன்; இதுமுதல் அவனுடைய தேசத்தை வசப்படுத்தி, சொந்தமாக்கிக்கொள் என்றார்.
И рече Господь ко мне: се, начах предаяти пред лицем твоим Сиона царе Есевоня Аморрейска и землю его, и начинай наследити землю его.
32 ௩௨ சீகோன் தன்னுடைய எல்லா மக்களோடு நம்முடன் போர்செய்யப் புறப்பட்டு, யாகாசுக்கு வந்தான்.
И изыде Сион царь Есевонь противу нам сам и вси людие его на брань во Иассу:
33 ௩௩ அவனை நம்முடைய தேவனாகிய யெகோவா நமக்கு ஒப்புக்கொடுத்தார்; நாம் அவனையும் அவனுடைய மகன்களையும், அனைத்து மக்களையும் தோற்கடித்து,
и предаде его Господь Бог наш пред лицем нашим в руце наши: и убихом его, и сыны его и вся люди его:
34 ௩௪ அக்காலத்தில் அவனுடைய பட்டணங்களையெல்லாம் பிடித்து, சகல பட்டணங்களிலும் இருந்த பெண்களையும், ஆண்களையும், பிள்ளைகளையும், ஒருவரையும் மீதியாக வைக்காமல் முற்றிலும் அழித்தோம்.
и одержихом вся грады его во оно время, и разорихом всяк град, ктому и жены их и дети их не оставихом живы:
35 ௩௫ மிருகஜீவன்களையும், நாம் பிடித்த பட்டணங்களில் கொள்ளையடித்த பொருட்களையும் மாத்திரம் நமக்கென்று வைத்துக்கொண்டோம்.
токмо скот пленихом себе, и корысти градов взяхом.
36 ௩௬ அர்னோன் ஆற்றங்கரையில் இருக்கிற ஆரோவேரும், ஆற்றுக்கு அருகிலிருக்கிற பட்டணமும் துவங்கி, கீலேயாத்வரைக்கும் நமக்கு எதிர்த்து நிற்கத்தக்க பாதுகாப்பான பட்டணம் இருந்ததில்லை, எல்லாவற்றையும் நம்முடைய தேவனாகிய யெகோவா நமக்கு ஒப்புக்கொடுத்தார்.
Из Ароира, иже есть при устии водотечи Ариони, и град иже есть в дебри, и даже до горы Галаадовы, не бысть град уцелевый от нас: вся предаде Господь Бог наш в руце наши:
37 ௩௭ அம்மோன் மக்களுடைய தேசத்தையும், யாப்போக்கு ஆற்றங்கரையிலுள்ள இடங்களையும், மலைகளிலுள்ள பட்டணங்களையும், நம்முடைய தேவனாகிய யெகோவா நமக்கு விலக்கின மற்ற இடங்களையும் சேராமல் விலகிப்போனாய்.
токмо в земли сынов Амманих не приступахом ко всем прилежащым к водотечи Иавокове и ко градом иже в горах, якоже повеле нам Господь Бог наш.