< உபாகமம் 15 >
1 ௧ “ஏழாம் வருடத்தின் முடிவிலே விடுதலைசெய்வாயாக.
A hetedik esztendő végén elengedést mívelj.
2 ௨ விடுதலையின் விபரமாவது: மற்றவனுக்குக் கடன் கொடுத்தவன் எவனும், யெகோவா நியமித்த விடுதலை கூறப்பட்டதால், அந்தக் கடனை மற்றவனிடத்திலாவது தன் சகோதரனிடத்திலாவது வாங்காமல் விட்டுவிடுவானாக.
Ez pedig az elengedésnek módja: Minden kölcsönadó ember engedje el, a mit kölcsönadott az ő felebarátjának; ne hajtsa be az ő felebarátján és atyjafián; mert elengedés hirdettetett az Úrért.
3 ௩ அந்நியனிடத்தில் நீ கடனை வசூலிக்கலாம்; உன் சகோதரனிடத்திலோ உனக்கு வரவேண்டியதை உன் கை விட்டுவிடுவதாக.
Az idegenen hajtsd be; de a mid a te atyádfiánál lesz, engedje el néki a te kezed.
4 ௪ எளியவன் உனக்குள் இல்லாதிருக்க இப்படிச் செய்யவேண்டும்; இன்று நான் உனக்குக் கற்பிக்கிற எல்லாக் கற்பனைகளின்படியும் நீ செய்ய, உன் தேவனாகிய யெகோவாவின் சத்தத்தைக் கவனமாகக் கேட்பாயானால்.,
De nem is lesz közötted szegény, mert igen megáld téged az Úr azon a földön, a melyet az Úr, a te Istened ád néked örökségül, hogy bírjad azt.
5 ௫ உன் தேவனாகிய யெகோவா உனக்குச் சொந்தமாக கொடுக்கும் தேசத்தில், உன்னை மேன்மேலும் ஆசீர்வதிப்பார்.
De csak úgy lesz ez, ha hallgatsz az Úrnak, a te Istenednek szavára, megtartván és teljesítvén mind azt a parancsolatot, a melyet én ma parancsolok néked.
6 ௬ உன் தேவனாகிய யெகோவா உனக்குச் சொன்னபடி உன்னை ஆசீர்வதிப்பதினால், நீ அநேகம் மக்களுக்குக் கடன் கொடுப்பாய், நீயோ கடன் வாங்குவதில்லை; நீ அநேகம் மக்களை ஆள்வாய், உன்னையோ அவர்கள் ஆள்வதில்லை.
Mert az Úr, a te Istened megáld téged, a miképen megmondotta néked; és sok népnek adsz zálogos kölcsönt, te pedig nem kérsz kölcsönt, és sok népen fogsz uralkodni, és te rajtad nem uralkodnak.
7 ௭ “உன் தேவனாகிய யெகோவா உனக்குக் கொடுக்கும் தேசத்தின் எந்த வாசலிலும் உன் சகோதரர்களில் எளியவனான ஒருவன் இருந்தால், எளியவனாகிய உன் சகோதரனுக்கு உன் இருதயத்தை நீ கடினமாக்காமலும், உன் கையை மூடாமலும்,
Ha mégis szegénynyé lesz valaki a te atyádfiai közül valamelyikben a te kapuid közül a te földeden, a melyet az Úr, a te Istened ád néked: ne keményítsd meg a te szívedet, be se zárjad kezedet a te szegény atyádfia előtt;
8 ௮ அவனுக்கு உன் கையைத் தாராளமாகத் திறந்து, அவனுடைய அவசரத்தின் காரணமாக அவனுக்குத் தேவையானதைக் கடன்கொடுப்பாயாக.
Hanem örömest nyisd meg a te kezedet néki, és örömest adj kölcsön néki, a mennyi elég az ő szükségére, a mi nélkül szűkölködik.
9 ௯ விடுதலை வருடமாகிய ஏழாம் வருடம் நெருங்கிவிட்டதென்று அறிந்து, உன் இருதயத்திலே பொல்லாத நினைவுகொண்டு, உன் ஏழைச் சகோதரனுக்குக் கொடுக்காமல் மறுத்து, அவன்மேல் வன்கண் வைக்காதபடிக்கும், அவன் உன்னைக் குறித்துக் யெகோவாவை நோக்கி முறையிடாதபடிக்கும் எச்சரிக்கையாயிரு; அப்படிச் செய்வாயானால் அது உனக்குப் பாவமாயிருக்கும்.
Vigyázz magadra, hogy ne legyen a te szívedben valami istentelenség, mondván: Közelget a hetedik esztendő, az elengedésnek esztendeje; és elfordítsd szemedet a te szegény atyádfiától, hogy ne adj néki; mert ő ellened kiált az Úrhoz, és bűn lesz benned.
10 ௧0 அவனுக்குத் தாராளமாகக் கொடுப்பாயாக; அவனுக்குக் கொடுக்கும்போது உன் இருதயம் விசனப்படாதிருப்பதாக; அதன்காரணமாக உன் தேவனாகிய யெகோவா உன்னுடைய எல்லாக் செயல்களிலும், நீ கையிட்டுச் செய்யும் எல்லாக் காரியங்களிலும் உன்னை ஆசீர்வதிப்பார்.
Bizonyára adj néki, és meg ne háborodjék azon a te szíved, mikor adsz néki; mert az ilyen dologért áld meg téged az Úr, a te Istened minden munkádban, és mindenben, a mire kezedet veted.
11 ௧௧ தேசத்திலே எளியவர்கள் இல்லாதிருப்பதில்லை; ஆகையால் உன் தேசத்திலே சிறுமைப்பட்டவனும் எளியவனுமாகிய உன் சகோதரனுக்கு உன் கையைத் தாராளமாகத் திறக்கவேண்டும் என்று நான் உனக்குக் கட்டளையிடுகிறேன்.
Mert a szegény nem fogy ki a földről, azért én parancsolom néked, mondván: Örömest nyisd meg kezedet a te szűkölködő és szegény atyádfiának a te földeden.
12 ௧௨ “உன் சதோதரனாகிய எபிரெய ஆணாகிலும் பெண்ணாகிலும் உனக்கு விற்கப்பட்டால், ஆறு வருடங்கள் உன்னிடத்தில் வேலைசெய்யவேண்டும்; ஏழாம் வருடத்தில் அவனை விடுதலைசெய்து அனுப்பிவிடுவாயாக.
Hogyha eladja magát néked a te atyádfia, a zsidó férfi és zsidó asszony, és szolgál téged hat esztendeig: a hetedik esztendőben bocsássad őt szabadon mellőled.
13 ௧௩ அவனை விடுதலைசெய்து அனுப்பிவிடும்போது அவனை வெறுமையாக அனுப்பிவிடாமல்,
És mikor szabadon bocsátod őt mellőled, ne bocsásd el őt üresen;
14 ௧௪ உன் தேவனாகிய யெகோவா உன்னை ஆசீர்வதித்ததின்படி, உன் ஆட்டுமந்தையிலும், உன் களத்திலும், உன் ஆலையிலும் எடுத்து அவனுக்குத் தாராளமாகக் கொடுத்து அனுப்பிவிடுவாயாக.
Hanem terheld meg őt bőven a te juhaidból, a te szérűdről, és a te sajtódból; a mivel megáldott téged az Úr, a te Istened, adj néki abból.
15 ௧௫ நீ எகிப்துதேசத்தில் அடிமையாயிருந்ததையும், உன் தேவனாகிய யெகோவா உன்னை மீட்டுக்கொண்டதையும் ஞாபகப்படுத்துவாயாக; ஆகையால் நான் இன்று இந்தக் காரியத்தை உனக்குக் கட்டளையிடுகிறேன்.
És emlékezzél meg róla, hogy te is szolga voltál Égyiptom földén, és megszabadított téged az Úr, a te Istened; azért parancsolom én ma ezt néked.
16 ௧௬ ஆனாலும், அவன் உன்னிடத்தில் நன்மைபெற்று, உன்னையும் உன் குடும்பத்தையும் நேசிப்பதினால்: நான் உன்னைவிட்டுப் போகமாட்டேன் என்று உன்னுடனே சொல்வானேயாகில்,
Ha pedig ezt mondja néked: Nem megyek el tőled, mert szeret téged és a te házadat, mivelhogy jól van néki te nálad dolga:
17 ௧௭ நீ ஒரு கம்பியை எடுத்து, அவன் காதைக் கதவோடே சேர்த்துக் குத்துவாயாக; பின்பு அவன் என்றைக்கும் உனக்கு அடிமையாயிருக்கக்கடவன்; உன் அடிமைப்பெண்ணுக்கும் அப்படியே செய்யக்கடவாய்.
Akkor vedd az árat, és fúrd a fülébe és az ajtóba; és legyen szolgáddá mindvégig; így cselekedjél szolgálóleányoddal is.
18 ௧௮ அவனை விடுதலையாக்கி அனுப்பிவிடுவது உனக்கு வருத்தமாகக் காணப்படவேண்டாம்; இரட்டிப்பான கூலிக்கு இணையாக ஆறு வருடங்கள் உன்னிடத்தில் வேலைசெய்தானே; இப்படி உன் தேவனாகிய யெகோவா நீ செய்யும் எல்லாவற்றிலும் உன்னை ஆசீர்வதிப்பார்.
Ne essék nehezedre, hogy szabadon bocsátod őt mellőled; (hiszen két annyi bérre valót szolgált néked hat éven át, mint a béres-munkás) és megáld téged az Úr, a te Istened mindenben, a mit cselekszel.
19 ௧௯ “உன் ஆடுமாடுகளில் தலையீற்றாகிய ஆணையெல்லாம் உன் தேவனாகிய யெகோவாவுக்குப் பரிசுத்தமாக்கக்கடவாய்; உன் மாட்டின் தலையீற்றை வேலை வாங்காமலும், உன் ஆட்டின் தலையீற்றை மயிர் கத்தரிக்காமலும் இருப்பாயாக.
Barmaid és juhaid első fajzásának minden hímjét az Úrnak, a te Istenednek szenteljed. Ne munkálkodjál a te tehenednek első fajzásán, és meg ne nyírjad a te juhaidnak első fajzását.
20 ௨0 யெகோவா தெரிந்துகொள்ளும் இடத்திலே வருடந்தோறும் நீயும் உன் வீட்டாருமாக உன் தேவனாகிய யெகோவாவுடைய சந்நிதியில் அப்படிப்பட்டவைகளைச் சாப்பிடுங்கள்.
Az Úrnak, a te Istenednek színe előtt edd meg azt esztendőről esztendőre, te és a te házad népe, azon a helyen, a melyet kiválaszt az Úr.
21 ௨௧ அதற்கு ஊனம், குருடு முதலான யாதொரு குறையிருந்தால், அதை உன் தேவனாகிய யெகோவாவுக்குப் பலியிட வேண்டாம்.
Hogyha valami fogyatkozás lesz benne; sánta vagy vak lesz, vagy akármely fogyatkozásban szenvedő: meg ne áldozd azt az Úrnak, a te Istenednek.
22 ௨௨ அப்படிப்பட்டதை நீ உன் வாசல்களிலே, கலைமானையும், வெளிமானையும், சாப்பிடுவதுபோலச் சாப்பிடலாம்; தீட்டுப்பட்டவனும் தீட்டுப்படாதவனும் அதைச் சாப்பிடலாம்.
A te kapuidon belől edd meg azt; a tisztátalan és a tiszta egyaránt, mintha őz volna az vagy szarvas.
23 ௨௩ அதின் இரத்தத்தைமாத்திரம் சாப்பிடாமல், அதைத் தண்ணீரைப்போலத் தரையிலே ஊற்றிவிடுவாயாக.
Csakhogy a vérét meg ne edd, hanem a földre öntsd azt, mint a vizet.