< உபாகமம் 13 >

1 “உங்களுக்குள்ளே ஒரு தீர்க்கதரிசியாகிலும், சொப்பனக்காரனாகிலும் எழும்பி:
Sɛ odiyifo anaa obi a ɔnam adaeso so ka ahintasɛm sɔre wɔ mo mu na ɔka nsɛnkyerɛnne a ɛyɛ hu ne anwonwasɛm kyerɛ mo,
2 நீங்கள் அறியாத வேறே தெய்வங்களைப் பின்பற்றி, அவர்களை வணங்குவோம் வாருங்கள் என்று சொல்லி, உங்களுக்கு ஒரு அடையாளத்தையும் அற்புதத்தையும் காண்பிப்பேன் என்று குறிப்பாகச் சொன்னாலும், அவன் சொன்ன அடையாளமும் அற்புதமும் நடந்தாலும்,
na sɛ nsɛnkyerɛnne anaa anwonwasɛm no ba mu na ɔka se, “Momma yenni anyame afoforo akyi (anyame a munnim wɔn) na yɛnsom wɔn” a,
3 அந்தத் தீர்க்கதரிசியாகிலும், அந்தச் சொப்பனக்காரனாகிலும் சொல்லுகிறவைகளைக் கேட்காதிருப்பீர்களாக; உங்கள் தேவனாகிய யெகோவாவிடத்தில் நீங்கள் உங்கள் முழு இருதயத்தோடும் உங்கள் முழு ஆத்துமாவோடும் அன்புசெலுத்துகிறீர்களோ இல்லையோ என்று அறியும்படி உங்கள் தேவனாகிய யெகோவா உங்களைச் சோதிக்கிறார்.
ɛnsɛ sɛ mutie saa odiyifo anaa ɔdaesofo no nsɛm. Awurade, mo Nyankopɔn, resɔ mo ahwɛ sɛ mufi mo koma ne mo kra mu nyinaa dɔ no ana.
4 நீங்கள் உங்களுடைய தேவனாகிய யெகோவாவைப் பின்பற்றி, அவருக்குப் பயந்து, அவருடைய கற்பனைகளைக் கைக்கொண்டு, அவருடைய சத்தத்தைக் கேட்டு, அவரைச் சேவித்து, அவரைப் பற்றிக்கொள்வீர்களாக.
Awurade, mo Nyankopɔn no, na ɛsɛ sɛ mudi nʼakyi na ɔno na ɛsɛ sɛ mode obu ne nidi ma no. Munni ne mmara so na monyɛ osetie mma no; monsom no na mommata ne ho den.
5 அந்தத் தீர்க்கதரிசியும், அந்தச் சொப்பனக்காரனும் கொலைசெய்யப்படக்கடவன்; நீங்கள் நடக்கும்படி உங்கள் தேவனாகிய யெகோவா உங்களுக்கு விதித்த வழியைவிட்டு உங்களை விலக்கும்படி, அவன், உங்களை எகிப்துதேசத்திலிருந்து புறப்படச்செய்தவரும் உங்களை அடிமைத்தன வீட்டிலிருந்து நீங்கலாக்கி மீட்டுக்கொண்டவருமான உங்கள் தேவனாகிய யெகோவாவுக்கு விரோதமான துரோகப்பேச்சைப் பேசினான்; இப்படிப்பட்ட தீமையை உங்களிடத்திலிருந்து விலக்குவீர்களாக.
Ɛsɛ sɛ wokum saa odiyifo anaa ɔdaesofo no, efisɛ ɔkasa tia Awurade, mo Nyankopɔn no, a oyii mo fii Misraim nkoasom asase no so no; wayere ne ho sɛ ɔpɛ sɛ ɔtwe mo fi ɔkwan a Awurade, mo Nyankopɔn no, ahyɛ sɛ momfa so no so. Ɛsɛ sɛ mututu abɔnefo nyinaa fi mo mu.
6 “உன் தாய்க்குப் பிறந்த உன்னுடைய சகோதரனாகிலும், உன்னுடைய மகனாகிலும், மகளாகிலும், உன் மனைவியாகிலும், உன் உயிரைப்போலிருக்கிற உன்னுடைய நண்பனாகிலும் உன்னை நோக்கி: நாம் போய் வேறே தெய்வங்களை வணங்குவோம் வாருங்கள் என்று சொல்லி,
Sɛ wo nuabarima, wo babarima, wo babea, wo yere a wodɔ no anaa wʼadamfo pa bi fa sum ase twetwe wo, ka kyerɛ wo se, “Momma yɛnkɔsom anyame afoforo, anyame a wo anaa wʼagyanom nhuu bi da,”
7 உன்னைச் சுற்றிலும் உனக்குச் சமீபத்திலாகிலும் உனக்குத் தூரத்திலாகிலும், தேசத்தின் ஒருமுனை துவங்கி மறுமுனைவரையுள்ள எவ்விடத்திலாகிலும் இருக்கிற மக்களுடைய தெய்வங்களில், நீயும் உன் முற்பிதாக்களும் அறியாத அந்நிய தெய்வங்களை வணங்கும்படி இரகசியமாக உன்னைத் தூண்டிவிட்டால்,
anyame a ɛyɛ nnipa a atwa wo ho ahyia no de, sɛ wɔbɛn anaa wɔwɔ akyiri, fi asase ano kosi ano no a,
8 நீ அவனுக்குச் சம்மதியாமலும், அவனுக்குச் செவிகொடாமலும், உன் கண் அவன்மேல் இரக்கம்கொள்ளாமலும், அவனைத் தப்பவிடாமலும், அவனை ஒளித்துவைக்காமலும்,
mommfa wo ho mma no anaasɛ ntie no. Nhu no mmɔbɔ. Mfa ne ho nkyɛ no na mmɔ ne ho ban nso.
9 அவனைக் கொலை செய்துவிடவேண்டும்; அவனைக் கொலைசெய்வதற்கு, முதலில் உன் கையும் பின்பு சகல மக்களின் கைகளும் அவன்மேல் இருப்பதாக.
Kum na ɛsɛ sɛ mukum no. Mo nsa na momma enni kan wɔ ne kum no mu ansa na nnipa nyinaa de wɔn nsa abɛka ho.
10 ௧0 அடிமைத்தன வீடாகிய எகிப்துதேசத்திலிருந்து உன்னைப் புறப்படச்செய்த உன் தேவனாகிய யெகோவாவை விட்டுவிலகும்படி அவன் உன்னை தூண்டியதால், அவன் சாகும்படி அவன்மேல் கல்லெறிவாயாக.
Munsiw no abo nkum no, efisɛ ɔpɛɛ sɛ ɔtwe mo fi Awurade, mo Nyankopɔn no, a oyii mo fii Misraim nkoasom asase so no ho.
11 ௧௧ இஸ்ரவேலர்கள் யாவரும் அதைக் கேட்டுப் பயந்து, இனி உன் நடுவே இப்படிப்பட்ட தீமையான காரியத்தைச் செய்யாமலிருப்பார்கள்.
Afei, Israel nyinaa bɛte na wɔasuro na obiara nni hɔ a obefi mo mu a, ɔbɛyɛ saa ade no bio.
12 ௧௨ “உன் தேவனாகிய யெகோவா நீ குடியிருப்பதற்குக் கொடுக்கும் பட்டணங்கள் ஒன்றில் வீணர்களாகிய துன்மார்க்கர்கள் உன்னிடத்திலிருந்து புறப்பட்டு,
Sɛ ɛba sɛ mote wɔ nkurow a Awurade, mo Nyankopɔn, de rema mo no baako so sɛ
13 ௧௩ நீங்கள் அறியாத வேறே தெய்வங்களை வணங்குவதற்குப் போவோம் வாருங்கள் என்று தங்கள் பட்டணத்தின் குடிமக்களைத் தூண்டினார்கள் என்கிற செய்தியைக் கேள்விப்படும்போது,
nnipa bɔnefo bi asɔre wɔ wɔn mu adi nnipa a wɔwɔ kurow no mu anim de wɔn akosi bɔne mu aka se, “Momma yɛnkɔsom anyame afoforo,” anyame a munhuu bi da a,
14 ௧௪ நீ நன்றாக விசாரித்து, ஆராய்ந்து, அப்படிப்பட்ட அருவருப்பான காரியம் உன் நடுவே நடந்தது உண்மையும் நிச்சயமும் என்று கண்டால்,
ɛsɛ sɛ mubisa mu, hwehwɛ mu yiye. Na sɛ ɛyɛ nokware na sɛ nhwehwɛmu ada no adi sɛ nneyɛe bɔne bi akɔ so wɔ mo mu a,
15 ௧௫ அந்தப் பட்டணத்தின் குடிமக்களைப் பட்டயக்கருக்கினால் வெட்டி, அதையும் அதிலுள்ள அனைத்தையும் அதின் மிருகஜீவன்களையும் பட்டயக்கருக்கினால் அழித்து,
ɛsɛ sɛ wɔde afoa kunkum wɔn a wɔwɔ kurow no mu nyinaa. Monsɛe kurow no pasapasa, emu nnipa ne nyɛmmoa.
16 ௧௬ அதில் கொள்ளையிட்டதையெல்லாம் அதின் நடுவீதியிலே கூட்டி, உன் தேவனாகிய யெகோவாவுக்கென்று அந்தப் பட்டணத்தையும், அதில் கொள்ளையிடப்பட்ட அனைத்தையும் முழுவதுமாக அக்கினியில் சுட்டெரிக்கக்கடவாய்; அது இனிக் கட்டப்படாமல் என்றென்றைக்கும் மண்மேடாயிருக்கக்கடவது.
Afei, mommoaboa asade no nyinaa ano wɔ kurow no aguabɔbea na monhyew no. Monhyew kurow mu no ne emu nneɛma nyinaa mma ɛnyɛ sɛ ɔhyew afɔre mma Awurade, mo Nyankopɔn no. Saa kurow no nyɛ amamfo daa; ɛnsɛ sɛ wɔsan kyekyere bio.
17 ௧௭ சபிக்கப்பட்ட பொருட்களில் ஒன்றும் உன் கையில் இருக்கவேண்டாம். நான் இன்று உனக்குக் கற்பிக்கிற உன் தேவனாகிய யெகோவாவின் கற்பனைகளையெல்லாம் நீ கைக்கொண்டு, உன் தேவனாகிய யெகோவாவுடைய பார்வைக்குச் செம்மையானதைச் செய்யும்படி, அவருடைய சத்தத்திற்குச் செவிகொடுப்பாயானால்,
Asade a wɔde agu nkyɛn sɛ wɔbɛsɛe no no, mommfa bi. Saayɛ na ɛbɛma Awurade adan afi nʼabufuwhyew no ho na wahu mo mmɔbɔ. Ne yam bɛhyehye no ama mo na wama mo adɔ sɛnea ɔkaa ntam hyɛɛ mo agyanom bɔ no,
18 ௧௮ யெகோவா தமது கோபத்தின் பயங்கரத்தைவிட்டுத் திரும்பி, உனக்குத் தயைவு செய்து, உனக்கு மனமிரங்கி, அவர் உன் முற்பிதாக்களுக்கு வாக்களித்தபடி உன்னைப் பெருகச்செய்வார்.
efisɛ moyɛ osetie ma Awurade, mo Nyankopɔn no, na mudi ne mmara a mede rema mo nnɛ yi so na moyɛ nea ɛsɔ nʼani.

< உபாகமம் 13 >