< தானியேல் 2 >
1 ௧ நேபுகாத்நேச்சார் ஆட்சிசெய்யும் இரண்டாம் வருடத்திலே, நேபுகாத்நேச்சார் கனவுகளைக் கண்டான்; அதினால், அவனுடைய ஆவி கலங்கி, அவனுடைய தூக்கம் கலைந்தது.
Og i Nebukadnezars andet Regeringsaar drømte Nebukadnezar Drømme, og hans Aand blev bekymret, og det var forbi for ham med hans Søvn.
2 ௨ அப்பொழுது ராஜா தன் கனவுகளைத் தனக்குத் தெரிவிப்பதற்காக ஞானிகளையும் சோதிடர்களையும் மாயவித்தைக்காரர்களையும் கல்தேயர்களையும் அழைக்கச் சொன்னான்; அவர்கள் வந்து, ராஜசமுகத்தில் நின்றார்கள்.
Da sagde Kongen, at de skulde kalde Spaamændene og Besværgerne og Troldkarlene og Kaldæerne for at forkynde Kongen hans Drømme; og de kom og stode for Kongens Ansigt.
3 ௩ ராஜா அவர்களை நோக்கி: ஒரு கனவு கண்டேன்; அந்தக் கனவின் அர்த்தத்தை அறியவேண்டுமென்று என் ஆவி கலங்கியிருக்கிறது என்றான்.
Og Kongen sagde til dem: Jeg drømte en Drøm, og min Aand blev bekymret, saa at jeg maa vide Drømmen.
4 ௪ அப்பொழுது கல்தேயர்கள் ராஜாவை நோக்கி: ராஜாவே, நீர் என்றும் வாழ்க; கனவை உமது அடியார்களுக்குச் சொல்லும், அப்பொழுது அதின் அர்த்தத்தை விடுவிப்போம் என்று சீரிய மொழியிலே சொன்னார்கள்.
Da talte Kaldæerne til Kongen paa Syrisk: Kongen leve evindelig! sig dine Tjenere Drømmen, og vi skulle kundgøre Udtydningen.
5 ௫ ராஜா கல்தேயர்களுக்கு மறுமொழியாக: என்னிடத்திலிருந்து பிறக்கிற தீர்மானம் என்னவென்றால், நீங்கள் கனவையும் அதின் அர்த்தத்தையும் எனக்குச் சொல்லாவிட்டால் துண்டித்துப்போடப்படுவீர்கள்; உங்கள் வீடுகள் எருக்களங்களாக்கப்படும்.
Kongen svarede og sagde til Kaldæerne: Ordet fra mig staar fast: Dersom I ikke kundgøre mig Drømmen og Udtydningen derpaa, skulle I blive huggede i Stykker og eders Huse blive gjorte til en Møgdynge.
6 ௬ கனவையும் அதின் அர்த்தத்தையும் சொல்வீர்களென்றால், என்னிடத்தில் வெகுமதிகளையும் பரிசுகளையும் மிகுந்த கனத்தையும் பெறுவீர்கள்; ஆகையால் கனவையும் அதின் அர்த்தத்தையும் எனக்குத் தெரிவியுங்கள் என்றான்.
Men dersom I kundgøre Drømmen og Udtydningen derpaa, da skulle I bekomme Skænk og Gave og stor Ære af mig; derfor kundgører mig Drømmen og Udtydningen derpaa!
7 ௭ அவர்கள் மறுபடியும் மறுமொழியாக: ராஜா அடியார்களுக்குக் கனவைச் சொல்வாராக; அப்பொழுது அதின் அர்த்தத்தைச் சொல்வோம் என்றார்கள்.
De svarede anden Gang og sagde: Kongen sige sine Tjenere Drømmen, saa ville vi kundgøre Udtydningen.
8 ௮ அதற்கு ராஜா மறுமொழியாக: என்னிடத்திலிருந்து தீர்மானம் பிறந்தபடியினாலே நீங்கள் காலதாமதம் செய்யப்பார்க்கிறீர்களென்று நிச்சயமாக எனக்குத் தெரியவருகிறது.
Kongen svarede og sagde: Sandelig, jeg mærker, at I ville vinde Tid, efterdi I se, at Ordet fra mig staar fast;
9 ௯ காலம் மாறுமென்று நீங்கள் எனக்கு முன்பாக பொய்யும் புரட்டுமான செய்தியைச் சொல்லும்படி திட்டமிட்டிருக்கிறீர்கள்; நீங்கள் கனவை எனக்குச் சொல்லாவிட்டால், உங்கள் அனைவருக்கும் இந்த ஒரே தீர்ப்பு பிறந்திருக்கிறது; ஆகையால் கனவை எனக்குச் சொல்லுங்கள்; அப்பொழுது அதின் அர்த்தத்தையும் உங்களால் சொல்லமுடியுமென்று அறிந்துகொள்வேன் என்றான்.
dersom I ikke kundgøre mig Drømmen, da er der een Dom over eder, og I ere komne overens om at sige løgnagtig og fordærvelig Tale for mig, indtil Tiden forandrer sig; derfor siger mig Drømmen, saa kan jeg vide, at I kunne kundgøre mig Udtydningen derpaa.
10 ௧0 கல்தேயர்கள் ராஜசமுகத்தில் மறுமொழியாக: ராஜா கேட்கும் காரியத்தை சொல்லத்தக்க மனிதன் பூமியில் ஒருவனும் இல்லை; ஆகையால் மகத்துவமும் வல்லமையுமான எந்த ராஜாவும் இப்படிப்பட்ட காரியத்தை ஒரு ஞானியினிடத்திலாவது சோதிடனிடத்திலாவது கல்தேயனிடத்திலாவது கேட்டதில்லை.
Kaldæerne svarede Kongen og sagde: Der er intet Menneske paa Jorden, som kan kundgøre det, som Kongen forlanger, efterdi ingen stor og mægtig Konge har begæret saadan Ting af nogen Spaamand eller Besværger eller Kaldæer.
11 ௧௧ ராஜா கேட்கிற காரியம் மிகவும் அருமையானது; மாம்சமாயிருக்கிறவர்களுடன் வாசம்செய்யாத தேவர்களேயல்லாமல் ராஜசமுகத்தில் அதை அறிவிக்க முடிந்தவர் ஒருவரும் இல்லை என்றார்கள்.
Og den Ting, som Kongen begærer, er svar, og der er ingen anden, som kan kundgøre den for Kongen, uden Guderne, hvis Bolig ikke er hos Menneskene.
12 ௧௨ இதனால் ராஜா மகா கோபமும் எரிச்சலுங்கொண்டு, பாபிலோனில் இருக்கிற எல்லா ஞானிகளையும் கொலைசெய்யும்படி கட்டளையிட்டான்.
Over dette blev Kongen fortørnet og meget vred, og han befalede, at man skulde udrydde alle vise i Babel.
13 ௧௩ ஞானிகளைக் கொலைசெய்யவேண்டுமென்கிற கட்டளை வெளிப்பட்டபோது, தானியேலையும் அவன் தோழரையும் கொலைசெய்யத் தேடினார்கள்.
Og Befalingen udgik, og de vise bleve ihjelslagne; og man ledte efter Daniel og hans Medbrødre, for at de kunde blive ihjelslagne.
14 ௧௪ பாபிலோனின் ஞானிகளைக் கொலைசெய்யப் புறப்பட்ட ராஜாவின் மெய்க்காப்பாளர்களுக்கு அதிபதியாகிய ஆரியோகோடே தானியேல் யோசனையும் புத்தியுமாகப் பேசி:
Da gav Daniel et klogt og forstandigt Svar til Ariok, Øversten for Kongens Livvagt, som var gaaet ud for at ihjelslaa de vise i Babel.
15 ௧௫ இந்தக் கட்டளை ராஜாவினால் இத்தனை அவசரமாக பிறப்பிப்பதற்குக் காரணம் என்ன என்று ராஜாவின் அதிபதியாகிய ஆரியோகினிடத்தில் கேட்டான்; அப்பொழுது ஆரியோகு தானியேலுக்குக் காரியத்தை அறிவித்தான்.
Han svarede og sagde til Ariok, Kongens mægtige Mand: Hvorfor kommer denne strenge Befaling fra Kongen? Saa gav Ariok Sagen til Kende for Daniel.
16 ௧௬ தானியேல் ராஜாவினிடத்தில் போய், கனவின் அர்த்தத்தை ராஜாவிற்குக் காண்பிக்கும்படித் தனக்குத் தவணைகொடுக்க விண்ணப்பம்செய்தான்.
Og Daniel gik ind og begærede af Kongen, at han vilde give ham Tid, og at han maatte kundgøre Kongen Udtydningen.
17 ௧௭ பின்பு தானியேல் தன் வீட்டிற்குப்போய், தானும் தன் தோழரும் பாபிலோனின் மற்ற ஞானிகளோடேகூட அழியாதபடிக்கு இந்த மறைபொருளைக்குறித்துப் பரலோகத்தின் தேவனை நோக்கி இரக்கம் கேட்கிறதற்காக,
Da gik Daniel til sit Hus og kundgjorde Hanania, Misael og Asaria, sine Medbrødre, Sagen,
18 ௧௮ அனனியா, மீஷாவேல், அசரியா என்னும் தன்னுடைய தோழருக்கு இந்தக் காரியத்தை அறிவித்தான்.
og det, for at de skulde begære Barmhjertighed af Gud i Himmelen angaaende denne Hemmelighed, for at de ikke skulde udrydde Daniel og hans Medbrødre tillige med Resten af de vise i Babel.
19 ௧௯ பின்பு இரவுநேரத்தில் தரிசனத்திலே தானியேலுக்கு மறைபொருள் வெளிப்படுத்தப்பட்டது; அப்பொழுது தானியேல் பரலோகத்தின் தேவனை மகிமைப்படுத்தினான்.
Da blev Hemmeligheden aabenbaret for Daniel i et Syn om Natten; da velsignede Daniel Himmelens Gud.
20 ௨0 பின்பு தானியேல் சொன்னது: தேவனுடைய நாமத்திற்கு என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் மகிமையுண்டாவதாக; ஞானமும் வல்லமையும் அவருக்கே உரியது.
Daniel svarede og sagde: Velsignet være Guds Navn fra Evighed og indtil Evighed; thi Visdommen og Kraften er hans.
21 ௨௧ அவர் காலங்களையும் நேரங்களையும் மாற்றுகிறவர்; ராஜாக்களைத் தள்ளி, ராஜாக்களை ஏற்படுத்துகிறவர்; ஞானிகளுக்கு ஞானத்தையும், அறிவாளிகளுக்கு அறிவையும் கொடுக்கிறவர்.
Og han forandrer Tider og Timer, han afsætter Konger og indsætter Konger; han giver de vise Visdom og de forstandige Kundskab.
22 ௨௨ அவரே ஆழமும் மறைபொருளுமானதை வெளிப்படுத்துகிறவர்; இருளில் இருக்கிறதை அவர் அறிவார்; வெளிச்சம் அவரிடத்தில் தங்கும்.
Han aabenbarer de dybe og skjulte Ting; han ved, hvad der er i Mørket, og Lyset bor hos ham.
23 ௨௩ என் பிதாக்களின் தேவனே, நீர் எனக்கு ஞானமும் வல்லமையும் கொடுத்து, நாங்கள் உம்மிடத்தில் வேண்டிக்கொண்டதை இப்பொழுது எனக்கு அறிவித்து, ராஜாவின் காரியத்தை எங்களுக்குத் தெரிவித்ததினால், உம்மைத் துதித்துப் புகழுகிறேன் என்றான்.
Dig, mine Fædres Gud! lover og priser jeg, thi du har givet mig Visdom og Styrke; og du har nu kundgjort mig det, vi begærede af dig, thi du har kundgjort os Kongens Sag.
24 ௨௪ பின்பு தானியேல் பாபிலோனின் ஞானிகளை அழிக்க ராஜா கட்டளையிட்ட ஆரியோகினிடத்தில் போய்: பாபிலோனின் ஞானிகளை அழிக்காதேயும், என்னை ராஜாவின் முன்பாக அழைத்துக்கொண்டுபோம்; ராஜாவிற்கு அர்த்தத்தைத் தெரிவிப்பேன் என்று சொன்னான்.
Derfor gik Daniel ind til Ariok, som Kongen havde befalet at udrydde de vise i Babel; han gik hen og sagde saaledes til ham: Udryd ikke de vise i Babel; før mig ind for Kongen, saa vil jeg kundgøre Kongen Udtydningen.
25 ௨௫ அப்பொழுது ஆரியோகு தானியேலை ராஜாவின்முன் வேகமாக அழைத்துக்கொண்டுபோய்: சிறைப்பட்டுவந்த யூதேயா தேசத்தாரில் ஒரு மனிதனைக் கண்டுபிடித்தேன்; அவன் ராஜாவிற்கு அர்த்தத்தைத் தெரிவிப்பான் என்றான்.
Da førte Ariok Daniel hastelig: ind for Kongen og sagde saaledes til ham: Jeg har fundet iblandt det bortførte Folk af Juda en Mand, som vil kundgøre Kongen Udtydningen.
26 ௨௬ ராஜா பெல்தெஷாத்சாரென்னும் பெயருள்ள தானியேலை நோக்கி: நான் கண்ட கனவுகளையும் அதின் அர்த்தத்தையும் நீ எனக்கு அறிவிக்கமுடியுமா என்று கேட்டான்.
Kongen svarede og sagde til Daniel, hvis Navn var Beltsazar: Er du i Stand til at kundgøre mig den Drøm, som jeg saa, og Udtydningen derpaa?
27 ௨௭ தானியேல் ராஜசமுகத்தில் மறுமொழியாக: ராஜா கேட்கிற மறைபொருளை ராஜாவிற்குத் தெரிவிக்க ஞானிகளாலும், சோதிடராலும், விண் ஆராய்ச்சியாளர்களாலும், குறிசொல்லுகிறவர்களாலும் முடியாது.
Daniel svarede Kongen og sagde: Hemmeligheden som Kongen begærer, kunne de vise, Besværgerne, Spaamændene og Sandsigerne ikke kundgøre Kongen.
28 ௨௮ மறைபொருட்களை வெளிப்படுத்துகிற பரலோகத்திலிருக்கிற தேவன் கடைசிநாட்களில் சம்பவிப்பதை ராஜாவாகிய நேபுகாத்நேச்சாருக்குத் தெரிவித்திருக்கிறார்; உம்முடைய கனவும் உமது படுக்கையின்மேல் உம்முடைய எண்ணத்தில் உண்டான தரிசனங்களும் என்னவென்றால்:
Men der er en Gud i Himmelen, som aabenbarer hemmelige Ting, han har kundgjort Kong Nebukadnezar, hvad der skal ske i de sidste Dage; din Drøm og dit Hoveds Syner paa dit Leje ere disse:
29 ௨௯ ராஜாவே, உம்முடைய படுக்கையின்மேல் நீர் படுத்திருக்கும்போது, இனிமேல் சம்பவிக்கப்போகிறதென்ன என்கிற நினைவுகள் உமக்குள் எழும்பினது; அப்பொழுது மறைபொருட்களை வெளிப்படுத்துகிறவர் சம்பவிக்கப்போகிறதை உமக்குத் தெரிவித்தார்.
Du Konge! dine Tanker opstege paa dit Leje om, hvad der skulde ske herefter; og han, som aabenbarer hemmelige Ting, har kundgjort dig, hvad der skal ske.
30 ௩0 உயிரோடிருக்கிற எல்லோரைப்பார்க்கிலும் எனக்கு அதிக ஞானம் உண்டென்பதினாலே அல்ல; அர்த்தம் ராஜாவிற்குத் தெரியவரவும், உம்முடைய இருதயத்தின் நினைவுகளை நீர் அறியவும், இந்த மறைபொருள் எனக்கு வெளியாக்கப்பட்டது.
Og mig er denne Hemmelighed aabenbaret, ikke af den Visdom, som er i mig, fremfor alle dem, der leve; men for at Udtydningen skulde gives Kongen til Kende, og du maatte komme til at vide dit Hjertes Tanker.
31 ௩௧ ராஜாவே, நீர் ஒரு பெரிய சிலையைக் கண்டீர்; அந்தப் பெரிய சிலை மிகவும் பிரகாசமுள்ளதாயிருந்தது; அது உமக்கு முன்னே நின்றது; அதின் ரூபம் பயங்கரமாயிருந்தது.
Du, Konge! saa, og se, der var et højt Billede, samme Billede var stort, og dets Glans var herlig; det stod foran dig, og dets Udseende var forfærdeligt.
32 ௩௨ அந்தச் சிலையின் தலை பசும்பொன்னும், அதின் மார்பும், புயங்களும் வெள்ளியும், அதின் வயிறும், தொடையும் வெண்கலமும்,
Dette Billedes Hoved var af fint Guld, dets Bryst og dets Arme af Sølv, dets Bug og dets Lænder af Kobber,
33 ௩௩ அதின் கால்கள் இரும்பும், பாதங்கள் பாதி இரும்பும் பாதி களிமண்ணுமாக இருந்தது.
dets Ben vare af Jern, dets Fødder til Dels af Jern og til Dels af Ler.
34 ௩௪ நீர் பார்த்துக்கொண்டிருக்கும்போதே, கைகளால் பெயர்க்கப்படாத ஒரு கல் பெயர்ந்து உருண்டுவந்தது; அது அந்தச் சிலையை இரும்பும் களிமண்ணுமாகிய அதின் பாதங்களில் மோதி, அவைகளை நொறுக்கிப்போட்டது.
Du saa, indtil der blev en Sten løsreven, og det ikke ved Hænder, og den slog Billedet paa dets Fødder, som vare af Jern og Ler, og knuste dem.
35 ௩௫ அப்பொழுது அந்த இரும்பும், களிமண்ணும், வெண்கலமும், வெள்ளியும், பொன்னும் முழுவதும் நொறுங்குண்டு, கோடைக்காலத்தில் போரடிக்கிற களத்திலிருந்து பறந்துபோகிற பதரைப்போலாயிற்று; அவைகளுக்கு ஒரு இடமும் கிடைக்காமல் காற்று அவைகளை அடித்துக்கொண்டுபோனது; சிலையை மோதின கல்லோவென்றால், ஒரு பெரிய மலையாகி பூமியையெல்லாம் நிரப்பிற்று.
Da blev Jernet, Leret, Kobberet, Sølvet og Guldet knuste paa een Gang og bleve ligesom Avner fra Tærskepladserne om Sommeren, og Vinden borttog dem, og intet Sted blev fundet for dem; men den Sten, som sønderslog Billedet, blev til et stort Bjerg og opfyldte hele Jorden.
36 ௩௬ கனவு இதுதான்; அதின் அர்த்தத்தையும், ராஜசமுகத்தில் தெரிவிப்போம்.
Det er Drømmen, og Udtydningen derpaa skulle vi sige Kongen.
37 ௩௭ ராஜாவே, நீர் ராஜாதி ராஜாவாயிருக்கிறீர்; பரலோகத்தின் தேவன் உமக்கு ராஜரீகத்தையும், பராக்கிரமத்தையும், வல்லமையையும், மகிமையையும் அருளினார்.
Du, Konge, Kongernes Konge, hvem Himmelens Gud har givet Riget, Magten og Styrken og Æren,
38 ௩௮ சகல இடங்களிலுமுள்ள மனிதர்களையும், வெளியின் மிருகங்களையும், ஆகாயத்துப் பறவைகளையும் அவர் உமது கையில் ஒப்புக்கொடுத்து, உம்மை அவைகளையெல்லாம் ஆளும்படி செய்தார். பொன்னான அந்தத் தலை நீரே.
og har allesteds, hvor Mennesker bo, Dyrene paa Marken og Fuglene under Himmelen, givet dem i din Haand og ladet dig herske over dem alle: Du selv er Guldholdet
39 ௩௯ உமக்குப்பிறகு உமக்குக் கீழ்த்தரமான வேறொரு ராஜ்ஜியம் தோன்றும்; பின்பு பூமியையெல்லாம் ஆண்டுகொள்ளும் வெண்கலமான மூன்றாம் ராஜ்ஜியம் ஒன்று எழும்பும்.
Og efter dig skal opkomme et andet Rige, ringere end dit, og et tredje Rige endnu, af Kobber, som skal herske over hele Jorden.
40 ௪0 நான்காவது ராஜ்ஜியம் இரும்பைப்போல உறுதியாயிருக்கும்; இரும்பு எல்லாவற்றையும் எப்படி நொறுக்கிச் சின்னபின்னமாக்குகிறதோ, அப்படியே இது நொறுக்கிப்போடுகிற இரும்பைப்போல அவைகளையெல்லாம் நொறுக்கித் தகர்த்துப்போடும்.
Og et fjerde Rige skal være stærkt som Jernet; eftersom Jernet knuser og sønderslaar alt, skal det som Jernet der sønderslaar, knuse og sønderslaa alle hine.
41 ௪௧ பாதங்களும், கால்விரல்களும், பாதி குயவனின் களிமண்ணும், பாதி இரும்புமாயிருக்க நீர் கண்டீரே, அந்த ராஜ்ஜியம் பிரிக்கப்படும்; ஆகிலும் களிமண்ணுடன் இரும்பு கலந்திருக்க நீர் கண்டபடியே இரும்பினுடைய உறுதியில் கொஞ்சம் அதிலே இருக்கும்.
Men at du saa Fødderne og Tæerne til Dels at være af Pottemagerler og til Dels af Jern, betyder, at det skal blive et delt Rige, og at der skal blive noget af Jernets Styrke derudi, efterdi du saa, at Jernet var blandet med Leret.
42 ௪௨ கால்விரல்கள் பாதி இரும்பும் பாதி களிமண்ணுமாயிருந்தது என்னவென்றால், அந்த ராஜ்ஜியம் ஒரு பங்கு பலமுள்ளதாகவும் ஒரு பங்கு நெரிசலுமாயிருக்கும்.
Og at Tæerne paa Fødderne vare til Dels af Jem og til Dels af Ler, betyder, at Riget for en Del skal være stærkt og for en Del skrøbeligt.
43 ௪௩ நீர் இரும்பைக் களிமண்ணுடன் கலந்ததாகக் கண்டீரே, அவர்கள் மற்ற மனிதர்களோடு சம்பந்தங்கலப்பார்கள்; ஆகிலும் இதோ, களிமண்ணுடன் இரும்பு கலவாததுபோல அவர்கள் ஒருவரோடொருவர் ஒட்டிக்கொள்ளாதிருப்பார்கள்.
At du saa Jernet blandet med Leret, betyder, at de skulle blande sig ved Slægtskabsforbindelser, men dog ikke indbyrdes holde sammen; se, ligesom Jernet ikke kan blandes med Leret.
44 ௪௪ அந்த ராஜாக்களின் நாட்களிலே, பரலோகத்தின் தேவன் என்றென்றைக்கும் அழியாத ஒரு ராஜ்ஜியத்தை எழும்பச்செய்வார்; அந்த ராஜ்ஜியம் வேறு மக்களுக்கு விடப்படுவதில்லை; ஒரு கல் கையால் பெயர்க்கப்படாமல் மலையிலிருந்து பெயர்ந்து, உருண்டுவந்து, இரும்பையும், வெண்கலத்தையும், களிமண்ணையும், வெள்ளியையும், பொன்னையும் நொறுக்கினதை நீர் கண்டீரே, அப்படியே அது அந்த ராஜ்ஜியங்களையெல்லாம் நொறுக்கி, நிர்மூலமாக்கி, அதுவோ என்றென்றைக்கும் நிற்கும்.
Men i disse Kongers Dage skal Himmelens Gud oprette et Rige, som i al Evighed ikke skal forgaa, og hvis Regering ikke skal overlades til noget andet Folk; det skal knuse og tilintetgøre alle hine Riger; men selv skal det bestaa evindelig,
45 ௪௫ இனிமேல் சம்பவிக்கப்போகிறதை மகா தேவன் ராஜாவிற்குத் தெரிவித்திருக்கிறார்; சொப்பனமானது உண்மை, அதின் அர்த்தம் சத்தியம் என்றான்.
efterdi du saa, at en Sten blev løsrevet fra Bjerget, og det ikke ved Hænder, og at den knuste Jernet, Kobberet, Leret, Sølvet og Guldet. Den store Gud har ladet Kongen vide, hvad der skal ske herefter, og Drømmen staar fast, og Udtydningen derpaa er vis.
46 ௪௬ அப்பொழுது ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் முகங்குப்புற விழுந்து, தானியேலை வணங்கி, அவனுக்குக் காணிக்கைசெலுத்தவும், தூபங்காட்டவும் கட்டளையிட்டான்.
Da faldt Kong Nebukadnezar paa sit Ansigt og nedbøjede sig for Daniel, og han befalede, at man skulde ofre ham Madofre og Røgelse.
47 ௪௭ ராஜா தானியேலை நோக்கி: நீ இந்த மறைபொருளை வெளிப்படுத்தினதினால், உண்மையாகவே உங்கள் தேவனே தேவர்களுக்கு தேவனும், ராஜாக்களுக்கு ஆண்டவரும், மறைபொருட்களை வெளிப்படுத்துகிறவருமாயிருக்கிறார் என்றான்.
Kongen svarede Daniel og sagde: Sandt er det, at eders Gud, han er en Gud over Guder og en Herre ovør Konger, og Hemmeligheders Aabenbarer, efterdi du har kunnet aabenbare denne Hemmelighed.
48 ௪௮ பின்பு ராஜா தானியேலைப் பெரியவனாக்கி, அவனுக்கு அநேகம் சிறந்த வெகுமதிகளைக் கொடுத்து, அவனைப் பாபிலோன் மாகாணம் முழுவதற்கும் அதிபதியாகவும், பாபிலோனிலுள்ள சகல ஞானிகளின்மேலும் பிரதான அதிகாரியாகவும் நியமித்தான்.
Da gjorde Kongen Daniel stor og gav ham mange store Gaver og gjorde ham til Fyrste over hele Landskabet Babel og til øverste Forstander for alle de vise i Babel.
49 ௪௯ தானியேல் ராஜாவை வேண்டிகொண்டதினால் அவன் சாத்ராக்கையும், மேஷாக்கையும், ஆபேத்நேகோவையும் பாபிலோன் மாகாணத்துக் காரியங்களை விசாரிக்கும்படிவைத்தான்; தானியேலோவென்றால் ராஜாவின் அரண்மனையில் இருந்தான்.
Og Daniel begærede af Kongen, at han til Bestyrelsen over Landskabet Babel vilde beskikke Sadrak, Mesak og Abed-Nego; men Daniel blev ved Kongens Hof.