< தானியேல் 10 >
1 ௧ பெர்சியாவின் ராஜாவாகிய கோரேஸ் ஆட்சிசெய்த மூன்றாம் வருடத்திலே பெல்தெஷாத்சார் என்று பெயரிடப்பட்ட தானியேலுக்கு ஒரு காரியம் வெளிப்படுத்தப்பட்டது; அந்தக் காரியம் சத்தியமும் மாபெரும் போருக்குரியதுமாக இருக்கிறது; அந்தக் காரியத்தை அவன் கவனித்து, தரிசனத்தின் அர்த்தத்தை அறிந்துகொண்டான்.
Persiahene Kores adedie afeɛ a ɛtɔ so mmiɛnsa mu no, wɔyii asɛm bi adi kyerɛɛ Daniel (a na wɔfrɛ no Beltesasar). Na nkra no yɛ nokorɛ, na ɛfa ɔko kɛseɛ bi ho. Ɔnyaa nkra no asekyerɛ wɔ anisoadehunu mu.
2 ௨ அந்த நாட்களில் தானியேலாகிய நான் மூன்று வாரம்முழுவதும் துக்கித்துக்கொண்டிருந்தேன்.
Saa ɛberɛ no, me, Daniel, medii awerɛhoɔ nnawɔtwe mmiɛnsa.
3 ௩ அந்த மூன்று வாரங்களாகிய நாட்கள் நிறைவேறும்வரை சுவையான உணவை நான் சாப்பிடவுமில்லை, இறைச்சியும் திராட்சைரசமும் என் வாய்க்குள் போகவுமில்லை, நான் நறுமணத்தைலம் பூசிக்கொள்ளவுமில்லை.
Manni aduane pa biara. Ɛnam anaa nsã biara anka mʼano, na mamfa sradehwam ansra kɔsii nnawɔtwe mmiɛnsa no awieeɛ.
4 ௪ முதலாம் மாதம் இருபத்துநான்காம்தேதியிலே நான் இதெக்கேல் என்னும் பெரிய ஆற்றங்கரையில் இருந்து,
Ɔbosome a ɛdi ɛkan no, da a ɛtɔ so aduonu ɛnan, ɛberɛ a megyina asubɔnten kɛseɛ Tigris konkɔn so no,
5 ௫ என் கண்களை ஏறெடுக்கும்போது, சணல்உடை அணிந்து, தமது இடுப்பில் ஊப்பாசின் தங்கக்கச்சையைக் கட்டிக்கொண்டிருக்கிற ஒரு மனிதனைக் கண்டேன்.
mepagyaa mʼani na mehunuu ɔbarima bi a ɔfira nweratam. Na ɔbɔ sikakɔkɔɔ amapa abɔsoɔ a ɛfiri Ufas wɔ nʼasene mu.
6 ௬ அவருடைய உடல் படிகப்பச்சையைப்போலவும், அவருடைய முகம் மின்னலின் பிரகாசத்தைப்போலவும், அவருடைய கண்கள் எரிகிற தீபங்களைப்போலவும், அவருடைய புயங்களும் அவருடைய கால்களும் துலக்கப்பட்ட வெண்கல நிறத்தைப்போலவும், அவருடைய வார்த்தைகளின் சத்தம் மக்கள்கூட்டத்தின் ஆரவாரத்தைப்போலவும் இருந்தது.
Ne onipadua no te sɛ aboɔdenboɔ. Nʼanim te sɛ anyinam, nʼani te sɛ ogyatɛn a ɛrederɛ, ne nsa ne nan te sɛ yaawa a wɔabere ho hyerɛn, na ne nne nso te sɛ nipakuo nnyegyeɛ.
7 ௭ தானியேலாகிய நான் மாத்திரம் அந்தத் தரிசனத்தைக் கண்டேன்; என்னோடே இருந்த மனிதர்களோ அந்தத் தரிசனத்தைக் காணவில்லை; அவர்கள் மிகவும் நடுநடுங்கி, ஓடி ஒளிந்துகொண்டார்கள்.
Me, Daniel nko ara na mehunuu saa anisoadehunu no; nnipa a na wɔka me ho no anhunu hwee. Ehu kɛseɛ bi bɔɔ wɔn ma wodwane kɔtetɛeɛ.
8 ௮ நான் தனித்துவிடப்பட்டு அந்தப் பெரிய தரிசனத்தைக் கண்டேன்; என் பெலனெல்லாம் போயிற்று; என் உருவம் மாறி வாடிப்போனது; திடனற்றுப்போனேன்.
Enti, ɛkaa me nko ara a merehwɛ anisoadehunu kɛseɛ yi. Na mʼahoɔden asa, mʼanim too hoa, afei na menni ɔboafoɔ biara.
9 ௯ அவருடைய வார்த்தைகளின் சத்தத்தைக் கேட்டேன்; அவருடைய வார்த்தைகளின் சத்தத்தை நான் கேட்கும்போது, நான் முகம்வெளிறி, தூங்குகிறவனைப்போலத் தரையிலே முகங்குப்புற விழுந்து கிடந்தேன்.
Na metee sɛ ɔrekasa, na meretie no no, mefaa mu daa nnahɔɔ a mʼanim butu fam.
10 ௧0 இதோ, ஒரு கை என்னைத் தொட்டு, என் முழங்கால்களும் என் உள்ளங்கைகளும் தரையை ஊன்றியிருக்கும்படி என்னைத் தூக்கிவைத்தது.
Nsa bi sɔɔ me mu, pagyaa me a me nsa ne me kotodwe rewoso biribiribiri.
11 ௧௧ அவன் என்னை நோக்கி: பிரியமான மனிதனாகிய தானியேலே, நான் இப்போது உன்னிடத்திற்கு அனுப்பப்பட்டு வந்தேன்; ஆதலால், நான் உனக்குச் சொல்லும் வார்த்தைகளின்மேல் நீ கவனமாயிருந்து, கால் ஊன்றி நில் என்றான்; இந்த வார்த்தையை அவன் என்னிடத்தில் சொல்லும்போது நடுக்கத்தோடே எழுந்து நின்றேன்.
Ɔkaa sɛ, “Daniel, wo a wɔbu wo yie, dwene nsɛm a merebɛka akyerɛ wo yi ho. Gyina pintinn, na wɔasoma me wɔ wo nkyɛn.” Ɔkaa saa asɛm yi kyerɛɛ me no, mede ahopopoɔ sɔreeɛ.
12 ௧௨ அப்பொழுது அவன் என்னை நோக்கி: தானியேலே, பயப்படாதே; நீ அறிவை அடைகிறதற்கும், உன்னை உன்னுடைய தேவனுக்கு முன்பாகச் சிறுமைப்படுத்துகிறதற்கும், உன் மனதைச் செலுத்தின முதல்நாள் துவங்கி உன் வார்த்தைகள் கேட்கப்பட்டது; உன் வார்த்தைகளினிமித்தம் நான் வந்தேன்.
Afei, ɔkɔɔ so kaa sɛ, “Nsuro, Daniel. Ɛfiri da a ɛdi ɛkan a wopɛɛ sɛ wote anisoadehunu no ase na wobrɛɛ wo ho ase wɔ wo Onyankopɔn anim no na ɔtee wo nsɛm, na ɛno enti na maba yi.
13 ௧௩ பெர்சியா ராஜ்ஜியத்தின் அதிபதி இருபத்தொரு நாட்கள்வரை என்னோடு எதிர்த்து நின்றான்; ஆனாலும் பிரதான அதிபதிகளில் ஒருவனாகிய மிகாவேல் எனக்கு உதவியாக வந்தான்; ஆதலால் நான் அங்கே பெர்சியாவின் ராஜாக்களிடத்தில் தங்கியிருந்தேன்.
Nanso, ɔhene babarima a ɔfiri Persia ahennie mu sii me ɛkwan nnafua aduonu baako. Afei, Mikael a ɔyɛ ahenemma atitire no mu baako bɛboaa me, ɛfiri sɛ na wɔde me asie wɔ Persia ɔhene nkyɛn.
14 ௧௪ இப்போதும் கடைசி நாட்களில் உன் மக்களுக்குச் சம்பவிப்பதை உனக்குத் தெரிவிக்கும்படிக்கு வந்தேன்; இந்தத் தரிசனம் நிறைவேற இன்னும் நாட்கள் செல்லும் என்றான்.
Seesei, maba sɛ merebɛkyerɛkyerɛ wo deɛ ɛbɛba wo nkurɔfoɔ so daakye, ɛfiri sɛ saa anisoadehunu yi fa berɛ bi a ɛrebɛba ho.”
15 ௧௫ அவன் இந்த வார்த்தைகளை என்னோடே சொல்லும்போது, நான் தலைகவிழ்ந்து, தரையை நோக்கி, பேச்சற்றுப்போனேன்.
Ɛberɛ a ɔreka yei akyerɛ me no, mebɔɔ me mu ase, na metɔree mum.
16 ௧௬ அப்பொழுது மனிதனின் சாயலாகிய ஒருவன் என் உதடுகளைத் தொட்டான்; உடனே நான் என் வாயைத் திறந்து பேசி, எனக்கு எதிரே நின்றவனை நோக்கி: ஐயா, தரிசனத்தினால் என் மூட்டுகள் புரண்டன, பெலனற்றுப்போனேன்.
Afei, obi a ɔte sɛ onipa de ne saa kaa mʼano, na mebuee mʼano, hyɛɛ aseɛ kasaeɛ. Meka kyerɛɛ deɛ ɔgyina mʼanim no sɛ, “Anisoadehunu no ama me ho adwiri me, me wura, na menni ɔboafoɔ biara.
17 ௧௭ ஆகையால் என் ஐயாவுடைய அடியேன் என் ஐயாவோடே எப்படிப் பேசமுடியும்? இனி என்னில் பெலனில்லை, என்னில் மூச்சுமில்லை என்றேன்.
Ɛbɛyɛ dɛn na wʼakoa bɛtumi ne wo akasa, me wura? Mʼahoɔden asa, na mentumi nhome.”
18 ௧௮ அப்பொழுது மனிதசாயலான ஒருவன் திரும்ப என்னைத் தொட்டு, என்னைப் பெலப்படுத்தி,
Deɛ ɔte sɛ onipa no de ne nsa kaa me bio, na ɔmaa me ahoɔden.
19 ௧௯ பிரியமானவனே, பயப்படாதே; உனக்குச் சமாதானமுண்டாவதாக, திடன்கொள், திடன்கொள் என்றான்; இப்படி அவன் என்னோடே பேசும்போது நான் திடன்கொண்டு அவனை நோக்கி: என் ஆண்டவன் பேசுவாராக; என்னைத் திடப்படுத்தினீரே என்றேன்.
Ɔka kyerɛɛ me sɛ, “Nsuro, wo a wɔbu wo bebree. Asomdwoeɛ nka wo. Hyɛ wo ho den. Yɛ den.” Ɔkasa kyerɛɛ me no, menyaa ahoɔden na mekaa sɛ, “Sɛ woama me ahoɔden yi, kasa, me wura.”
20 ௨0 அப்பொழுது அவன்: நான் உன்னிடத்திற்கு வந்த காரணம் என்னவென்று உனக்குத் தெரியுமா? இப்போது நான் பெர்சியாவின் பிரபுவோடே போரிடத் திரும்பிப்போகிறேன்; நான் போனபின்பு, கிரேக்கு தேசத்தின் அதிபதி வருவான்.
Enti ɔbisaa sɛ, “Wonim deɛ enti a maba wo nkyɛn? Ɛrenkyɛre, mɛsane akɔ na me ne Persia ɔhene babarima akɔko, na sɛ mekɔ a, Hela ɔhene babarima bɛba;
21 ௨௧ சத்திய எழுத்திலே கண்டிருக்கிறதை நான் உனக்குத் தெரிவிப்பேன்; உங்கள் அதிபதியாகிய மிகாவேலைத் தவிர என்னோடேகூட அவர்களுக்கு விரோதமாகப் பலங்கொள்ளுகிற வேறொருவரும் இல்லை.
nanso, mɛdi ɛkan aka deɛ wɔatwerɛ wɔ Nokorɛ Nwoma no mu no akyerɛ wo. (Obiara nni mʼafa a ɔko tia wɔn, gye sɛ Mikael a ɔyɛ wo henebabarima no.