< கொலோசெயர் 3 >
1 ௧ நீங்கள் கிறிஸ்துவுடன்கூட எழுந்ததுண்டானால், கிறிஸ்து தேவனுடைய வலதுபாரிசத்தில் வீற்றிருக்கும் இடத்திலுள்ள மேலானவைகளைத் தேடுங்கள்.
Отже, якщо ви воскресли з Христом, шукайте того, що вгорі, де Христос сидить праворуч від Бога.
2 ௨ பூமியிலுள்ளவைகளை இல்லை, மேலானவைகளையே விரும்புங்கள்.
Думайте про те, що вгорі, а не про те, що на землі,
3 ௩ ஏனென்றால், நீங்கள் மரித்தீர்கள், உங்களுடைய ஜீவன் கிறிஸ்துவோடு தேவனுக்குள் மறைந்திருக்கிறது.
адже ви померли, і ваше життя заховане разом із Христом у Бозі.
4 ௪ நம்முடைய ஜீவனாகிய கிறிஸ்து வெளிப்படும்போது, நீங்களும் அவரோடுகூட மகிமையிலே வெளிப்படுவீர்கள்.
Коли з’явиться Христос, ваше життя, тоді й ви з’явитеся разом із Ним у славі.
5 ௫ ஆகவே, விபசாரம், அசுத்தம், மோகம், தீய எண்ணம், விக்கிரக ஆராதனையான பொருளாசை ஆகிய இந்த உலகத்திற்குரிய பாவ சுபாவத்தை அழித்துப்போடுங்கள்.
Тому умертвіть ваші земні частини тіла: статеву розпусту, нечистоту, хтивість, згубні прагнення й жадібність, яка є ідолопоклонством.
6 ௬ இவைகளினாலேயே கீழ்ப்படியாமையின் பிள்ளைகள்மேல் தேவனுடைய கோபம் வரும்.
За все це приходить Божий гнів на синів непокори.
7 ௭ நீங்களும் முற்காலத்தில் அவர்களுக்குள்ளே வாழ்ந்தபோது, அவைகளைச் செய்துகொண்டுவந்தீர்கள்.
І ви теж так поводились, коли жили поміж ними.
8 ௮ இப்பொழுதோ கோபமும் மூர்க்கமும் பொறாமையும், உங்களுடைய வாயிலிருந்து வரக்கூடாத நிந்தனையும், வம்புவார்த்தைகளுமாகிய இவைகளையெல்லாம் விட்டுவிடுங்கள்.
Але зараз позбудьтеся всього: гніву, люті, злості, зневаги, брудного мовлення з ваших уст.
9 ௯ ஒருவருக்கொருவர் பொய் சொல்லாதிருங்கள்; பழைய மனிதனையும் அவன் செய்கைகளையும் களைந்துபோட்டு,
Не брешіть одне одному, адже ви скинули з себе стару людину разом з її ділами
10 ௧0 தன்னைப் படைத்தவருடைய சாயலுக்கு ஒப்பாக பூரண அறிவடையும்படி புதிதாக்கப்பட்ட புதிய மனிதனை அணிந்துகொண்டிருக்கிறீர்களே.
й одягнулися в нову [людину], оновлену в пізнанні за образом свого Творця.
11 ௧௧ அதிலே கிரேக்கனென்றும் யூதனென்றுமில்லை, விருத்தசேதனம் உள்ளவனென்றும், விருத்தசேதனம் இல்லாதவனென்றுமில்லை, யூதனல்லாதவனென்றும் வெளிதேசத்தானென்றுமில்லை, அடிமையென்றும் சுதந்திரமானவனென்றுமில்லை; கிறிஸ்துவே எல்லோரிலும் எல்லாமுமாக இருக்கிறார்.
Тут уже не існує ні грека, ні юдея, ні обрізання, ні необрізання, ні варвара, ні скіфа, ні раба, ні вільного, але Христос – усе й в усьому.
12 ௧௨ ஆகவே, நீங்கள் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட பரிசுத்தரும் பிரியருமாக, உருக்கமான இரக்கத்தையும், தயவையும், மனத்தாழ்மையையும், அமைதியையும், நீடிய பொறுமையையும் அணிந்துகொண்டு;
Отже, як обрані Богом, святі та улюблені, зодягніться в щире милосердя, доброту, смиренність, лагідність і довготерпіння.
13 ௧௩ ஒருவரையொருவர் ஏற்றுக்கொண்டு, ஒருவர்பேரில் ஒருவருக்குக் குறைபாடு உண்டானால், கிறிஸ்து உங்களுக்கு மன்னித்ததுபோல, ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்.
Прощайте та приймайте одне одного. Якщо хтось має скаргу на іншого, прощайте, як Господь простив вас.
14 ௧௪ இவை எல்லாவற்றின்மேலும், பூரண நற்குணத்தின் கட்டாகிய அன்பை அணிந்துகொள்ளுங்கள்.
А понад усе це – любов, яка об’єднує [всі ці якості] в досконалість.
15 ௧௫ தேவசமாதானம் உங்களுடைய இருதயங்களில் ஆளக்கடவது, இதற்கென்றே நீங்கள் ஒரே சரீரமாக அழைக்கப்பட்டீர்கள்; நன்றியுள்ளவர்களாகவும் இருங்கள்.
Нехай у ваших серцях панує мир Христа, до якого ви були покликані в одному тілі. І будьте вдячні.
16 ௧௬ கிறிஸ்துவின் வசனம் உங்களுக்குள்ளே எல்லா ஞானத்தோடும் பரிபூரணமாக குடியிருப்பதாக; பாடல்களினாலும் கீர்த்தனைகளினாலும் ஞானப்பாட்டுகளினாலும் ஒருவருக்கொருவர் போதித்து புத்திசொல்லிக்கொண்டு, உங்களுடைய இருதயத்திலே கர்த்த்தரைப் பக்தியுடன் பாடி;
Нехай Слово Христа щедро перебуває у вас, [коли] навчаєте й наставляєте одне одного в усій мудрості, із вдячністю співаючи Богові у ваших серцях псалми, гімни та духовні пісні.
17 ௧௭ வார்த்தையினாலாவது செயல்களினாலாவது, நீங்கள் எதைச்செய்தாலும், அதையெல்லாம் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே செய்து, அவர் மூலமாகப் பிதாவாகிய தேவனுக்கு நன்றி செலுத்துங்கள்.
І що б ви не робили, словом чи ділом, усе [робіть] в ім’я Господа Ісуса, дякуючи через Нього Богові Отцю.
18 ௧௮ மனைவிகளே, கர்த்தருக்கேற்கும்படி உங்களுடைய கணவர்களுக்குக் கீழ்ப்படியுங்கள்.
Дружини, підкоряйтеся вашим чоловікам, як личить у Господі.
19 ௧௯ கணவன்மார்களே, உங்களுடைய மனைவிகளில் அன்பு செலுத்துங்கள், அவர்கள்மேல் கசந்துகொள்ளாதிருங்கள்.
Чоловіки, любіть своїх дружин і не будьте до них суворі.
20 ௨0 பிள்ளைகளே, உங்களுடைய பெற்றோருக்கு எல்லாக் காரியத்திலேயும் கீழ்ப்படியுங்கள்; இது கர்த்தருக்கு விருப்பமானது.
Діти, слухайтеся ваших батьків в усьому, бо це до вподоби Господеві.
21 ௨௧ பிதாக்களே, உங்களுடைய பிள்ளைகள் மனம் தளர்ந்துபோகாதபடி, அவர்களை கோபமூட்டாமலிருங்கள்.
Батьки, не дратуйте ваших дітей, щоб вони не занепадали духом.
22 ௨௨ வேலைக்காரர்களே, சரீரத்தின்படி உங்களுடைய எஜமான்களாக இருக்கிறவர்களுக்கு எல்லாக் காரியத்திலேயும் கீழ்ப்படிந்து, நீங்கள் மனிதர்களைப் பிரியப்படுத்த விரும்புகிறவர்களாகப் பார்வைக்கு பணிவிடைசெய்யாமல், தேவனுக்குப் பயப்படுகிறவர்களாகக் கபடமில்லாத இருதயத்தோடு பணிவிடைசெய்யுங்கள்.
Раби, в усьому слухайтеся ваших земних панів, не лише про людське око, як підлабузники, але в щирості серця, боячись Господа.
23 ௨௩ நீங்கள் கர்த்தராகிய கிறிஸ்துவைத் தொழுதுகொள்ளுகிறதினாலே, உரிமைப்பங்கின் பலனைக் கர்த்தராலே பெறுவீர்களென்று அறிந்து,
Що б ви не робили, працюйте від душі, як для Господа, а не як для людей,
24 ௨௪ எதைச்செய்தாலும், அதை மனிதர்களுக்கென்று செய்யாமல், கர்த்தருக்கென்றே மனப்பூர்வமாகச் செய்யுங்கள்.
знаючи, що від Господа отримаєте у нагороду спадщину. Ви служите Господу Христу.
25 ௨௫ அநியாயம் செய்கிறவன் தான் செய்த அநியாயத்திற்குரிய பலனை அடைவான்; பட்சபாதமே இல்லை.
Адже той, хто несправедливість чинить, несправедливість і одержить. І немає [ніякої] упередженості.