< கொலோசெயர் 2 >

1 உங்களுக்காகவும் லவோதிக்கேயாவில் இருக்கிறவர்களுக்காகவும், சரீரத்தில் என் முகத்தைக் காணாதிருக்கிற மற்றெல்லோருக்காகவும் மிகுந்த போராட்டம் எனக்கு உண்டென்று நீங்கள் அறியவிரும்புகிறேன்.
yuṣmākaṁ lāyadikēyāsthabhrātr̥ṇāñca kr̥tē yāvantō bhrātaraśca mama śārīrikamukhaṁ na dr̥ṣṭavantastēṣāṁ kr̥tē mama kiyān yatnō bhavati tad yuṣmān jñāpayitum icchāmi|
2 அவர்களுடைய இருதயங்கள் தேற்றப்பட்டு, அவர்கள் அன்பினால் இணைக்கப்பட்டு, பிதாவாகிய தேவனுக்கும் கிறிஸ்துவிற்கும் உரிய இரகசியத்தை அறிந்துகொள்ளுகிற உணர்வின் பூரண நிச்சயத்தினுடைய எல்லா ஐசுவரியத்திற்கும் உரியவர்களாகவேண்டுமென்றே இப்படி விரும்புகிறேன்.
phalataḥ pūrṇabuddhirūpadhanabhōgāya prēmnā saṁyuktānāṁ tēṣāṁ manāṁsi yat piturīśvarasya khrīṣṭasya ca nigūḍhavākyasya jñānārthaṁ sāntvanāṁ prāpnuyurityarthamahaṁ yatē|
3 அவருக்குள் ஞானம் அறிவு என்பவைகளாகிய பொக்கிஷங்களெல்லாம் அடங்கியிருக்கிறது.
yatō vidyājñānayōḥ sarvvē nidhayaḥ khrīṣṭē guptāḥ santi|
4 ஒருவனும் பொய்யான வாதங்களால் உங்களை ஏமாற்றாதபடிக்கு இதைச் சொல்லுகிறேன்.
kō'pi yuṣmān vinayavākyēna yanna vañcayēt tadartham ētāni mayā kathyantē|
5 சரீரத்தின்படி நான் தூரமாக இருந்தும், ஆவியின்படி உங்களோடுகூட இருந்து, உங்களுடைய ஒழுங்கையும், கிறிஸ்துவின் மேலுள்ள உங்களுடைய விசுவாசத்தின் உறுதியையும் பார்த்துச் சந்தோஷப்படுகிறேன்.
yuṣmatsannidhau mama śarīrē'varttamānē'pi mamātmā varttatē tēna yuṣmākaṁ surītiṁ khrīṣṭaviśvāsē sthiratvañca dr̥ṣṭvāham ānandāmi|
6 ஆகவே, நீங்கள் கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை ஏற்றுக்கொண்டபடியே, அவருக்குள் வேர்கொண்டவர்களாகவும், அவர்மேல் கட்டப்பட்டவர்களாகவும், அவருக்குள் நடந்துகொண்டு,
atō yūyaṁ prabhuṁ yīśukhrīṣṭaṁ yādr̥g gr̥hītavantastādr̥k tam anucarata|
7 நீங்கள் போதிக்கப்பட்டபடியே, விசுவாசத்தில் உறுதிப்பட்டு, நன்றி செலுத்துவதோடு அதிலே பெருகுவீர்களாக.
tasmin baddhamūlāḥ sthāpitāśca bhavata yā ca śikṣā yuṣmābhi rlabdhā tadanusārād viśvāsē susthirāḥ santastēnaiva nityaṁ dhanyavādaṁ kuruta|
8 உலக ஞானத்தினாலும், மாயமான தந்திரத்தினாலும், ஒருவனும் உங்களைக் கொள்ளைகொண்டு போகாதபடிக்கு எச்சரிக்கையாக இருங்கள்; அது மனிதர்களின் பாரம்பரிய நியாயத்தையும் உலக வழிபாடுகளையும் பற்றினதேயல்லாமல் கிறிஸ்துவைப்பற்றினதல்ல.
sāvadhānā bhavata mānuṣikaśikṣāta ihalōkasya varṇamālātaścōtpannā khrīṣṭasya vipakṣā yā darśanavidyā mithyāpratāraṇā ca tayā kō'pi yuṣmākaṁ kṣatiṁ na janayatu|
9 ஏனென்றால், தேவத்துவத்தின் பரிபூரணமெல்லாம் சரீரப்பிரகாரமாக அவருக்குள் குடிகொண்டிருக்கிறது.
yata īśvarasya kr̥tsnā pūrṇatā mūrttimatī khrīṣṭē vasati|
10 ௧0 மேலும் எல்லாத் துரைத்தனங்களுக்கும் அதிகாரத்திற்கும் தலைவராக இருக்கிற அவருக்குள் நீங்கள் பரிபூரணம் உள்ளவர்களாக இருக்கிறீர்கள்.
yūyañca tēna pūrṇā bhavatha yataḥ sa sarvvēṣāṁ rājatvakarttr̥tvapadānāṁ mūrddhāsti,
11 ௧௧ அல்லாமலும், நீங்கள் கிறிஸ்துவைப்பற்றும் விருத்தசேதனத்தினாலே மாம்சத்திற்குரிய பாவசரீரத்தைக் களைந்துவிட்டதினால், கையால் செய்யப்படாத விருத்தசேதனத்தை அவருக்குள் பெற்றீர்கள்.
tēna ca yūyam ahastakr̥tatvakchēdēnārthatō yēna śārīrapāpānāṁ vigrasatyajyatē tēna khrīṣṭasya tvakchēdēna chinnatvacō jātā
12 ௧௨ ஞானஸ்நானத்திலே அவரோடுகூட அடக்கம்பண்ணப்பட்டவர்களாகவும், அதிலே அவரை மரித்தோரிலிருந்து உயிரோடு எழுப்பின தேவனுடைய செயலின்மேலுள்ள விசுவாசத்தினாலே அவரோடுகூட உயிரோடு எழுந்தவர்களாகவும் இருக்கிறீர்கள்.
majjanē ca tēna sārddhaṁ śmaśānaṁ prāptāḥ puna rmr̥tānāṁ madhyāt tasyōtthāpayiturīśvarasya śaktēḥ phalaṁ yō viśvāsastadvārā tasminnēva majjanē tēna sārddham utthāpitā abhavata|
13 ௧௩ உங்களுடைய பாவங்களினாலேயும், உங்களுடைய சரீரவிருத்தசேதனம் இல்லாமையினாலேயும் மரித்தவர்களாக இருந்த உங்களையும் அவரோடுகூட உயிர்ப்பித்து, அக்கிரமங்கள் எல்லாவற்றையும் உங்களுக்கு மன்னித்து;
sa ca yuṣmān aparādhaiḥ śārīrikātvakchēdēna ca mr̥tān dr̥ṣṭvā tēna sārddhaṁ jīvitavān yuṣmākaṁ sarvvān aparādhān kṣamitavān,
14 ௧௪ நமக்கு எதிரானதாகவும் கட்டளைகளால் நமக்கு விரோதமாகவும் இருந்த கையெழுத்தை அழித்து, அதை நடுவில் இல்லாதபடிக்கு எடுத்து, சிலுவையின்மேல் ஆணியடித்து;
yacca daṇḍājñārūpaṁ r̥ṇapatram asmākaṁ viruddham āsīt tat pramārjjitavān śalākābhiḥ kruśē baddhvā dūrīkr̥tavāṁśca|
15 ௧௫ துரைத்தனங்களையும் அதிகாரங்களையும் பறித்துக்கொண்டு, வெளியரங்கமாக வெளிப்படுத்தி, அவைகளின்மேல் சிலுவையிலே வெற்றி சிறந்தார்.
kiñca tēna rājatvakarttr̥tvapadāni nistējāṁsi kr̥tvā parājitān ripūniva pragalbhatayā sarvvēṣāṁ dr̥ṣṭigōcarē hrēpitavān|
16 ௧௬ ஆகவே, உணவையும், பானத்தையும் குறித்தாவது, பண்டிகை நாளையும் மாதப்பிறப்பையும் ஓய்வுநாட்களையும் குறித்தாவது, ஒருவனும் உங்களைக் குற்றப்படுத்தாமல் இருப்பானாக.
atō hētōḥ khādyākhādyē pēyāpēyē utsavaḥ pratipad viśrāmavāraścaitēṣu sarvvēṣu yuṣmākaṁ nyāyādhipatirūpaṁ kamapi mā gr̥hlīta|
17 ௧௭ அவைகள் வருங்காரியங்களுக்கு நிழலாக இருக்கிறது; அவைகளின் பொருள் கிறிஸ்துவைப்பற்றினது.
yata ētāni chāyāsvarūpāṇi kintu satyā mūrttiḥ khrīṣṭaḥ|
18 ௧௮ மூட்டுகளாலும் தசை நரம்புகளாலும் உதவிபெற்று இணைக்கப்பட்டு, தேவவளர்ச்சியாக வளர்ந்தேறுகிற சரீரமுழுவதையும் ஆதரிக்கிற தலையைப் பற்றிக்கொள்ளாமல்,
aparañca namratā svargadūtānāṁ sēvā caitādr̥śam iṣṭakarmmācaran yaḥ kaścit parōkṣaviṣayān praviśati svakīyaśārīrikabhāvēna ca mudhā garvvitaḥ san
19 ௧௯ மாய்மாலமான தாழ்மையிலும், தேவதூதர்களுக்குச் செய்யும் ஆராதனையிலும் விருப்பமடைந்து, காணாத காரியங்களிலே துணிவாய் நுழைந்து, தன் சரீரசிந்தையினாலே வீணாக கர்வம் கொண்டிருக்கிற எவனும் உங்களுடைய பந்தயப்பொருளை நீங்கள் இழந்துபோகும்படி உங்களை ஏமாற்றாதிருக்கப் பாருங்கள்.
sandhibhiḥ śirābhiścōpakr̥taṁ saṁyuktañca kr̥tsnaṁ śarīraṁ yasmāt mūrddhata īśvarīyavr̥ddhiṁ prāpnōti taṁ mūrddhānaṁ na dhārayati tēna mānavēna yuṣmattaḥ phalāpaharaṇaṁ nānujānīta|
20 ௨0 நீங்கள் கிறிஸ்துவோடுகூட உலகத்தின் வழக்கங்களுக்கு மரித்ததுண்டானால், இன்னும் உலக வழக்கத்தின்படி பிழைக்கிறவர்கள்போல,
yadi yūyaṁ khrīṣṭēna sārddhaṁ saṁsārasya varṇamālāyai mr̥tā abhavata tarhi yai rdravyai rbhōgēna kṣayaṁ gantavyaṁ
21 ௨௧ மனிதர்களுடைய கட்டளைகளின்படியும் போதனைகளின்படியும் நடந்து: தொடாதே, ருசி பாராதே, தீண்டாதே என்கிற கட்டளைகளுக்கு உடன்படுகிறதென்ன?
tāni mā spr̥śa mā bhuṁkṣva mā gr̥hāṇēti mānavairādiṣṭān śikṣitāṁśca vidhīn
22 ௨௨ இவையெல்லாம் அநுபவிக்கிறதினால் அழிந்துபோகுமே.
ācarantō yūyaṁ kutaḥ saṁsārē jīvanta iva bhavatha?
23 ௨௩ இப்படிப்பட்டப் போதனைகள் சுயவிருப்பமான ஆராதனையையும், போலியான தாழ்மையையும், சரீர ஒடுக்கத்தையும்பற்றி ஞானம் என்கிற பெயர்கொண்டிருந்தாலும், இவைகள் மாம்சத்தைப் பாதுகாப்பதற்கேயன்றி வேறு எதற்கும் உபயோகப்படாது.
tē vidhayaḥ svēcchābhaktyā namratayā śarīraklēśanēna ca jñānavidhivat prakāśantē tathāpi tē'gaṇyāḥ śārīrikabhāvavarddhakāśca santi|

< கொலோசெயர் 2 >