< கொலோசெயர் 2 >
1 ௧ உங்களுக்காகவும் லவோதிக்கேயாவில் இருக்கிறவர்களுக்காகவும், சரீரத்தில் என் முகத்தைக் காணாதிருக்கிற மற்றெல்லோருக்காகவும் மிகுந்த போராட்டம் எனக்கு உண்டென்று நீங்கள் அறியவிரும்புகிறேன்.
Kdybyste věděli, jaké boje svádím v modlitbách za vás a za věřící v Laodiceji i za mnohé jiné, kteří mne ani osobně neznají.
2 ௨ அவர்களுடைய இருதயங்கள் தேற்றப்பட்டு, அவர்கள் அன்பினால் இணைக்கப்பட்டு, பிதாவாகிய தேவனுக்கும் கிறிஸ்துவிற்கும் உரிய இரகசியத்தை அறிந்துகொள்ளுகிற உணர்வின் பூரண நிச்சயத்தினுடைய எல்லா ஐசுவரியத்திற்கும் உரியவர்களாகவேண்டுமென்றே இப்படி விரும்புகிறேன்.
Jak mi záleží na tom, aby byli potěšeni a vzájemně se milovali, aby plně poznali a pochopili Boží tajemství. Tímto tajemstvím je Kristus.
3 ௩ அவருக்குள் ஞானம் அறிவு என்பவைகளாகிய பொக்கிஷங்களெல்லாம் அடங்கியிருக்கிறது.
V něm je obsaženo vše, co člověk vůbec může o Bohu vědět.
4 ௪ ஒருவனும் பொய்யான வாதங்களால் உங்களை ஏமாற்றாதபடிக்கு இதைச் சொல்லுகிறேன்.
Říkám to proto, aby vám někdo něco nenamluvil.
5 ௫ சரீரத்தின்படி நான் தூரமாக இருந்தும், ஆவியின்படி உங்களோடுகூட இருந்து, உங்களுடைய ஒழுங்கையும், கிறிஸ்துவின் மேலுள்ள உங்களுடைய விசுவாசத்தின் உறுதியையும் பார்த்துச் சந்தோஷப்படுகிறேன்.
I když jsem daleko od vás, přece jsem v duchu s vámi. Jsem rád, že vaše víra v Krista je tak pevná a spořádaná.
6 ௬ ஆகவே, நீங்கள் கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை ஏற்றுக்கொண்டபடியே, அவருக்குள் வேர்கொண்டவர்களாகவும், அவர்மேல் கட்டப்பட்டவர்களாகவும், அவருக்குள் நடந்துகொண்டு,
Přijali jste Krista jako svého Pána.
7 ௭ நீங்கள் போதிக்கப்பட்டபடியே, விசுவாசத்தில் உறுதிப்பட்டு, நன்றி செலுத்துவதோடு அதிலே பெருகுவீர்களாக.
Zůstaňte s ním v živém spojení. Zapusťte do něj kořeny, na něm budujte celý svůj život. Držte se pevně toho, co jste od něj přijali. A stále znovu za vše děkujte Bohu.
8 ௮ உலக ஞானத்தினாலும், மாயமான தந்திரத்தினாலும், ஒருவனும் உங்களைக் கொள்ளைகொண்டு போகாதபடிக்கு எச்சரிக்கையாக இருங்கள்; அது மனிதர்களின் பாரம்பரிய நியாயத்தையும் உலக வழிபாடுகளையும் பற்றினதேயல்லாமல் கிறிஸ்துவைப்பற்றினதல்ல.
Mějte se na pozoru před domnělou moudrostí, která do křesťanského hávu odívá jen lidské teorie, s živým Kristem však nemá nic společného. Kristus je pánem i všech andělských bytostí, které někteří z vás uctívají.
9 ௯ ஏனென்றால், தேவத்துவத்தின் பரிபூரணமெல்லாம் சரீரப்பிரகாரமாக அவருக்குள் குடிகொண்டிருக்கிறது.
On je dokonalým ztělesněním božství
10 ௧0 மேலும் எல்லாத் துரைத்தனங்களுக்கும் அதிகாரத்திற்கும் தலைவராக இருக்கிற அவருக்குள் நீங்கள் பரிபூரணம் உள்ளவர்களாக இருக்கிறீர்கள்.
a jenom v něm máte plné spojení s Bohem.
11 ௧௧ அல்லாமலும், நீங்கள் கிறிஸ்துவைப்பற்றும் விருத்தசேதனத்தினாலே மாம்சத்திற்குரிய பாவசரீரத்தைக் களைந்துவிட்டதினால், கையால் செய்யப்படாத விருத்தசேதனத்தை அவருக்குள் பெற்றீர்கள்.
Tak jste se i vy stali Božím lidem a nebylo k tomu již třeba obvyklé židovské obřízky, která je dílem člověka. „Obřízka“, kterou na nás provádí Bůh, je účinnější, protože zasahuje celé tělo, až dosud ovládané hříchem.
12 ௧௨ ஞானஸ்நானத்திலே அவரோடுகூட அடக்கம்பண்ணப்பட்டவர்களாகவும், அதிலே அவரை மரித்தோரிலிருந்து உயிரோடு எழுப்பின தேவனுடைய செயலின்மேலுள்ள விசுவாசத்தினாலே அவரோடுகூட உயிரோடு எழுந்தவர்களாகவும் இருக்கிறீர்கள்.
Vždyť ve křtu jsme se postavili po bok Kristu v jeho smrti i pohřbení a s jeho vzkříšením jsme přijali i my nový život.
13 ௧௩ உங்களுடைய பாவங்களினாலேயும், உங்களுடைய சரீரவிருத்தசேதனம் இல்லாமையினாலேயும் மரித்தவர்களாக இருந்த உங்களையும் அவரோடுகூட உயிர்ப்பித்து, அக்கிரமங்கள் எல்லாவற்றையும் உங்களுக்கு மன்னித்து;
Vaše hříchy, vaše přirozená odcizenost Bohu, byly hrobem, do něhož jste se sami uzavřeli. On ale vaše hříchy odklidil, hrob otevřel a propustil vás na svobodu.
14 ௧௪ நமக்கு எதிரானதாகவும் கட்டளைகளால் நமக்கு விரோதமாகவும் இருந்த கையெழுத்தை அழித்து, அதை நடுவில் இல்லாதபடிக்கு எடுத்து, சிலுவையின்மேல் ஆணியடித்து;
Seznam vašich hříchů, který svědčil proti vám, přibil na kříž a tím jej navždy zničil.
15 ௧௫ துரைத்தனங்களையும் அதிகாரங்களையும் பறித்துக்கொண்டு, வெளியரங்கமாக வெளிப்படுத்தி, அவைகளின்மேல் சிலுவையிலே வெற்றி சிறந்தார்.
Tak odzbrojil, zneškodnil a na pranýř postavil neviditelné síly, které vás držely v hříchu. Jak slavné vítězství!
16 ௧௬ ஆகவே, உணவையும், பானத்தையும் குறித்தாவது, பண்டிகை நாளையும் மாதப்பிறப்பையும் ஓய்வுநாட்களையும் குறித்தாவது, ஒருவனும் உங்களைக் குற்றப்படுத்தாமல் இருப்பானாக.
Nikdo už tedy nemá právo vytýkat vám, co jíte nebo pijete, ani že nedodržujete svátky, slavnosti nových měsíců nebo židovské dny odpočinku.
17 ௧௭ அவைகள் வருங்காரியங்களுக்கு நிழலாக இருக்கிறது; அவைகளின் பொருள் கிறிஸ்துவைப்பற்றினது.
Všechny ty předpisy byly jen dočasné a Kristovým příchodem ztratily smysl. To všechno bylo jen obrazem nového Božího světa. V Kristu se již setkáváme s jeho skutečností.
18 ௧௮ மூட்டுகளாலும் தசை நரம்புகளாலும் உதவிபெற்று இணைக்கப்பட்டு, தேவவளர்ச்சியாக வளர்ந்தேறுகிற சரீரமுழுவதையும் ஆதரிக்கிற தலையைப் பற்றிக்கொள்ளாமல்,
Nenechte si nic předepisovat od lidí, kteří uctívají anděly a odvolávají se přitom na svá vidění. Nemají nač být domýšliví.
19 ௧௯ மாய்மாலமான தாழ்மையிலும், தேவதூதர்களுக்குச் செய்யும் ஆராதனையிலும் விருப்பமடைந்து, காணாத காரியங்களிலே துணிவாய் நுழைந்து, தன் சரீரசிந்தையினாலே வீணாக கர்வம் கொண்டிருக்கிற எவனும் உங்களுடைய பந்தயப்பொருளை நீங்கள் இழந்துபோகும்படி உங்களை ஏமாற்றாதிருக்கப் பாருங்கள்.
Nedrží se totiž Krista – hlavy, s nímž všichni tvoříme jedno tělo. V něm jsme všichni navzájem spojeni a růst můžeme jen tehdy, bereme-li výživu a sílu z Boha.
20 ௨0 நீங்கள் கிறிஸ்துவோடுகூட உலகத்தின் வழக்கங்களுக்கு மரித்ததுண்டானால், இன்னும் உலக வழக்கத்தின்படி பிழைக்கிறவர்கள்போல,
S Kristem jste vstoupili do nové roviny života. Starý život vzal za své a s ním i všechny obřadní předpisy, které z něho vzešly. Proč tedy stále ještě to staré:
21 ௨௧ மனிதர்களுடைய கட்டளைகளின்படியும் போதனைகளின்படியும் நடந்து: தொடாதே, ருசி பாராதே, தீண்டாதே என்கிற கட்டளைகளுக்கு உடன்படுகிறதென்ன?
toho se nedotýkej, to nejez, to neber. Vždyť jde o věci určené ke spotřebování.
22 ௨௨ இவையெல்லாம் அநுபவிக்கிறதினால் அழிந்துபோகுமே.
Jsou to jen lidské předpisy a jejich plnění nemusí být ani tolik projevem zvláštní zbožnosti, jako spíše ukájením vlastní ctižádosti.
23 ௨௩ இப்படிப்பட்டப் போதனைகள் சுயவிருப்பமான ஆராதனையையும், போலியான தாழ்மையையும், சரீர ஒடுக்கத்தையும்பற்றி ஞானம் என்கிற பெயர்கொண்டிருந்தாலும், இவைகள் மாம்சத்தைப் பாதுகாப்பதற்கேயன்றி வேறு எதற்கும் உபயோகப்படாது.