< கொலோசெயர் 1 >
1 ௧ தேவனுடைய விருப்பத்தினாலே இயேசுகிறிஸ்துவின் அப்போஸ்தலனாகிய பவுலும், சகோதரனாகிய தீமோத்தேயும்,
Pauluselt, kes on Jumala tahtel Jeesuse Kristuse apostel, ja vend Timoteoselt,
2 ௨ கொலோசே பட்டணத்தில் கிறிஸ்துவிற்குள் பரிசுத்தவான்களும் விசுவாசிகளுமாக இருக்கிற சகோதரர்களுக்கு எழுதுகிறதாவது: நம்முடைய பிதாவாகிய தேவனாலும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.
Jumala pühadele Kolossas, ustavatele vendadele ja õdedele Kristuses: Armu ja rahu teile Jumalalt, meie Isalt!
3 ௩ கிறிஸ்து இயேசுவின்மேலுள்ள உங்களுடைய விசுவாசத்தையும், பரிசுத்தவான்கள் எல்லார்மேலுமுள்ள உங்களுடைய அன்பையும்குறித்து நாங்கள் கேள்விப்பட்டு,
Me täname Jumalat, meie Issanda Jeesuse Kristuse Isa, kui me teie eest palvetame,
4 ௪ பரலோகத்தில் உங்களுக்காக வைத்திருக்கிற நம்பிக்கையினிமித்தம்,
sest oleme kuulnud teie usust Kristusesse Jeesusesse ja armastusest kõigi pühade vastu
5 ௫ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு நன்றிசெலுத்தி, எப்பொழுதும் உங்களுக்காக வேண்டுதல் செய்கிறோம்.
lootuse pärast, mis on teie jaoks taevasse hoiule pandud. Sellest lootusest te olete juba kuulnud, kui evangeeliumi tõesõnum
6 ௬ அந்த நம்பிக்கையைக்குறித்து, நீங்கள் முன்னமே சத்தியவசனமாகிய நற்செய்தியினாலே கேள்விப்பட்டீர்கள்; அந்த நற்செய்தி உலகமெங்கும்பரவிப் பலன்தருகிறதுபோல, உங்களிடத்திலும் வந்து, நீங்கள் அதைக்கேட்டு, தேவகிருபையைச் சத்தியத்தின்படி அறிந்துகொண்ட நாள்முதல், அது உங்களுக்குள்ளும் பலன் தருகிறதாக இருக்கிறது;
teie juurde jõudis. Seesama evangeelium kannab nüüd vilja ja kasvab kogu maailmas, täpselt samamoodi, nagu on juhtunud teiegi juures alates päevast, mil te seda kuulsite ja hakkasite mõistma Jumala armu.
7 ௭ அதை எங்களுக்குப் பிரியமான உடன் வேலையாளும், உங்களுக்காகக் கிறிஸ்துவின் உண்மையான ஊழியக்காரனுமாக இருக்கிற எப்பாப்பிராவினிடம் நீங்கள் கற்றறிந்திருக்கிறீர்கள்;
Epafras, kes seda teile õpetas, on meie armas kaassulane ja Kristuse ustav teenija meie heaks.
8 ௮ ஆவியானவருக்குள்ளான உங்களுடைய அன்பையும் அவனே எங்களுக்குத் தெரியப்படுத்தினான்.
Tema rääkiski meile armastusest, mida Vaim on teis äratanud.
9 ௯ இதினிமித்தம், நாங்கள் அதைக் கேட்ட நாள்முதல் உங்களுக்காக இடைவிடாமல் ஜெபம் செய்கிறோம்; நீங்கள் எல்லா ஞானத்தோடும், ஆவியானவருக்குரிய விவேகத்தோடும் அவருடைய விருப்பத்தை அறிகிற அறிவினாலே நிரப்பப்படவும்,
Seepärast ei ole me lakanud palvetamast ja anumast teie pärast alates päevast, mil me seda kuulsime, et teid täidetaks Jumala tahtmise tundmisega koos kõige vaimuliku tarkuse ja arusaamisega.
10 ௧0 எல்லாவித நல்ல செயல்களாகிய கனிகளைத் தந்து, தேவனை அறிகிற அறிவில் வளர்ச்சியடைந்து, கர்த்தருக்குப் பிரியமுண்டாக வாழவும் அவருக்குத் தகுதியாக நடந்துகொள்ளவும்,
Et te saaksite elada Issanda väärilist elu ja talle igati meeldida: kandes vilja kõiges heas töös, kasvades Jumala tundmises,
11 ௧௧ சந்தோஷத்தோடுகூடிய எல்லாப் பொறுமையும் நீடிய சாந்தமும் உண்டாவதற்கு மகிமையான அவருடைய வல்லமையின்படி, எல்லா வல்லமையாலும் பலப்படுத்தப்படவும், உங்களுக்காக ஜெபம் செய்கிறோம்.
saades vägevaks tema aulise väe läbi, et te oleksite vastupidavad ja kannatlikud,
12 ௧௨ ஒளியிலுள்ள பரிசுத்தவான்களுடைய சுதந்திரத்தில் பங்கடைவதற்கு, நம்மைத் தகுதியுள்ளவர்களாக்கினவரும்,
tänades rõõmsalt Isa, kes on teid kõlbulikuks teinud osa saama pühade pärandist valguse kuningriigis.
13 ௧௩ இருளின் அதிகாரத்திலிருந்து நம்மை விடுதலையாக்கி, தமது அன்பின் குமாரனுடைய ராஜ்யத்திற்கு உட்படுத்தினவருமாக இருக்கிற பிதாவிற்கு நன்றி செலுத்துகிறோம்.
Sest tema on meid päästnud pimeduse meelevallast ning toonud meid oma armsa Poja Kuningriiki.
14 ௧௪ குமாரனாகிய இயேசுகிறிஸ்துவிற்குள், அவருடைய இரத்தத்தினாலே, பாவமன்னிப்பாகிய மீட்பு நமக்கு உண்டாயிருக்கிறது.
Temas on meil lunastus, pattude andestus.
15 ௧௫ அவர் கண்ணுக்குத் தெரியாத தேவனுடைய ரூபமும், எல்லாப் படைப்புக்கும் முதற்பேறுமானவர்.
Tema on nähtamatu Jumala kuju, sündinud enne kõike loodut,
16 ௧௬ ஏனென்றால், அவருக்குள் எல்லாம் படைக்கப்பட்டது; பரலோகத்திலுள்ளவைகளும் பூலோகத்திலுள்ளவைகளுமாகிய காணப்படுகிறவைகளும் காணப்படாதவைகளுமான எல்லாப் பொருட்களும், சிங்காசனங்களானாலும், கர்த்தத்துவங்களானாலும், அரசாங்க ஆட்சி புரிவோர்களானாலும், அதிகாரங்களானாலும், எல்லாமும் அவரைக் கொண்டும் அவருக்கென்றும் படைக்கப்பட்டது.
sest tema läbi on loodud kõik, mis on taevastes ja maa peal, mis nähtav ja nähtamatu, olgu aujärjed, võimud, valitsused ja meelevallad – kõik on loodud tema läbi ja tema jaoks.
17 ௧௭ அவர் எல்லாவற்றிற்கும் முந்தினவர், எல்லாம் அவருக்குள் நிலைநிற்கிறது.
Tema ise on enne kõike ja kõik püsib koos tema sees.
18 ௧௮ அவரே சபையாகிய சரீரத்திற்குத் தலையானவர்; எல்லாவற்றிலும் முதல்வராக இருக்கும்படி, அவரே துவக்கமும் மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்த முதற்பேறுமானவர்.
Tema on oma ihu, koguduse pea. Ta on algus, esmasündinu surnute hulgast, et tema oleks ülim kõiges.
19 ௧௯ எல்லாப் பரிபூரணமும் அவருக்குள்ளே வாசமாக இருக்கவும்,
Sest Jumal arvas heaks panna temasse kogu oma täiuse
20 ௨0 அவர் சிலுவையில் சிந்தின இரத்தத்தினாலே சமாதானத்தை உண்டாக்கி, பூலோகத்திலுள்ளவைகள் பரலோகத்திலுள்ளவைகள் யாவையும் அவர் மூலமாகத் தமக்கு ஒப்புரவாக்கிக்கொள்ளவும் தேவனுக்கு விருப்பமானது.
ja lepitada tema kaudu enesega kõik, kes on maa peal ja kes on taevas, sellega, et ta tegi rahu tema vere läbi, mis ristil valati.
21 ௨௧ முன்னே தேவனுக்கு அந்நியர்களாகவும் தீய செயல்களினால் மனதிலே விரோதிகளாகவும் இருந்த உங்களையும் பரிசுத்தர்களாகவும் குற்றமற்றவர்களாகவும் கண்டிக்கப்படாதவர்களாகவும் தமக்குமுன் நிறுத்தும்படியாக அவருடைய மாம்சசரீரத்தில் அடைந்த மரணத்தினாலே இப்பொழுது ஒப்புரவாக்கினார்.
Kunagi olite teiegi Jumalast võõrdunud ja mõtteviisi poolest tema vaenlased oma kurjade tegudega.
22 ௨௨ நீங்கள் கேட்ட நற்செய்தியினால் உண்டாகும் நம்பிக்கையைவிட்டு அசையாமல், நிலையாகவும் உறுதியாகவும் விசுவாசத்திலே நிலைத்திருப்பீர்களானால் அப்படியாகும்.
Nüüd aga on Kristus teid lepitanud oma lihalikus ihus surma läbi, et saaksite seista pühadena, veatuina ja laitmatuina tema ees,
23 ௨௩ அந்த நற்செய்தி வானத்தின்கீழே இருக்கிற எல்லாப் படைப்புகளுக்கும் பிரசங்கிக்கப்பட்டுவருகிறது; அதற்கென்றே பவுலாகிய நான் ஊழியக்காரனானேன்.
kui te jätkate kindlana ja rajatuna usus ega tagane evangeeliumis olevast lootusest. See on evangeelium, mida te olete kuulnud ja mida on kuulutatud kogu loodule taeva all ja mille teenriks olen saanud ka mina, Paulus.
24 ௨௪ இப்பொழுது நான் உங்கள்நிமித்தம் அநுபவிக்கிற பாடுகளில் சந்தோஷமடைந்து, கிறிஸ்துவினுடைய உபத்திரவங்களில் குறைவானதை அவருடைய சரீரமாகிய சபைக்காக, என் சரீரத்தினாலே நிறைவேற்றுகிறேன்.
Nüüd on mul hea meel selle üle, mida ma teie pärast kannatan. Ja kui mu maises elus on veel midagi Kristuse vaevadest olemata, talun ma sedagi tema ihu, see on koguduse heaks.
25 ௨௫ ஆரம்ப காலங்களுக்கும் தலைமுறை தலைமுறைகளுக்கும் மறைவாக இருந்து, இப்பொழுது அவருடைய பரிசுத்தவான்களுக்கு வெளியாக்கப்பட்ட இரகசியமாகிய தேவவசனத்தை நிறைவாகத் தெரியப்படுத்துகிறதற்கு, (aiōn )
Jumal on määranud mind koguduse teenriks, et ma kuulutaksin teile Jumala sõna kogu selle täiuses,
26 ௨௬ உங்கள்நிமித்தம் தேவனால் எனக்கு அளிக்கப்பட்ட வேலையின்படியே நான் அந்தச் சபைக்கு ஊழியக்காரனானேன்.
saladust, mis oli varjatud läbi aegade ja sugupõlvede, kuid mis nüüd on ilmutatud tema pühadele. (aiōn )
27 ௨௭ யூதரல்லாதவர்களுக்குள்ளே விளங்கிய இந்த இரகசியத்திலுள்ள மகிமையின் ஐசுவரியம் இன்னதென்று, தேவன் தம்முடைய பரிசுத்தவான்களுக்குத் தெரியப்படுத்தப் பிரியமானார்; கிறிஸ்துவானவர் மகிமையின் நம்பிக்கையாக உங்களுக்குள் இருப்பதே அந்த இரகசியம்.
Neile tahtis Jumal selle teatavaks teha ja näidata selle saladuse aulisi rikkusi kõigi rahvaste seas; see on Kristus teie sees, kirkuse lootus.
28 ௨௮ எந்த மனிதனையும் கிறிஸ்து இயேசுவிற்குள் தேறினவனாக நிறுத்தும்படிக்கு, அவரையே நாங்கள் அறிவித்து, எந்த மனிதனுக்கும் புத்திசொல்லி, எந்த மனிதனுக்கும் எல்லா ஞானத்தோடும் உபதேசம் செய்கிறோம்.
Teda me kuulutame, manitsedes ja õpetades igaüht kogu tarkuses, et valmistada ette iga inimest täiuslikuks Kristuses.
29 ௨௯ அதற்காக நான் எனக்குள்ளே வல்லமையான செய்கையை நடப்பிக்கிற அவருடைய பலத்தின்படி போராடிப் பிரயாசப்படுகிறேன்.
Selle nimel ma võitlen ja pingutan Kristuse jõuga, mis minus väega tegutseb.