< ஆமோஸ் 8 >
1 ௧ பின்பு யெகோவாகிய ஆண்டவர் எனக்குக் காண்பித்தது என்னவென்றால்: இதோ, பழுத்த பழங்களுள்ள ஒரு கூடை இருந்தது.
౧యెహోవా ప్రభువు నాకిది చూపించాడు. అదిగో ఎండాకాలపు పళ్ళ గంప!
2 ௨ அவர்: ஆமோஸே, நீ எதைக் காண்கிறாய் என்று கேட்டார்? பழுத்த பழங்களுள்ள ஒரு கூடையைக் காண்கிறேன் என்றேன். அப்பொழுது யெகோவா என்னை நோக்கி: என்னுடைய மக்களாகிய இஸ்ரவேலுக்கு முடிவுகாலம் வந்தது; இனி அவர்களை மன்னிக்கமாட்டேன்.
౨ఆయన “ఆమోసూ, నువ్వేం చూస్తున్నావు?” అని అడిగాడు. నేను “ఎండాకాలపు పళ్ళ గంప” అన్నాను. అప్పుడు యెహోవా నాతో, నా ప్రజలైన ఇశ్రాయేలీయులకు అంతం వచ్చేసింది. ఇక నేను వాళ్ళను వదిలిపెట్టను.
3 ௩ அந்த நாளிலே தேவாலயப் பாடல்கள் அலறுதலாக மாறும்; எல்லா இடத்திலும் திரளான பிரேதங்கள் புலம்பல் இல்லாமல் எறிந்துவிடப்படும் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
౩యెహోవా ప్రభువు చెప్పేదేమిటంటే, “మందిరంలో వాళ్ళు పాడే పాటలు ఏడుపులవుతాయి. ఆ రోజు శవాలు విపరీతంగా పడి ఉంటాయి. నిశ్శబ్దంగా వాటిని అన్ని చోట్లా పడేస్తారు” అన్నాడు.
4 ௪ தேசத்தில் சிறுமைப்பட்டவர்களை ஒழியச்செய்ய, எளியவர்களை விழுங்கி:
౪దేశంలోని పేదలను తీసేస్తూ దీనులను అణిచేసే మీరు ఈ విషయం వినండి.
5 ௫ நாங்கள் மரக்காலைக் குறைத்து, சேக்கல் நிறையை அதிகமாக்கி, கள்ளத்தராசினால் வஞ்சித்து, தரித்திரர்களைப் பணத்திற்கும், எளியவர்களை ஒரு ஜோடி காலணிகளுக்கும் வாங்கும்படியும், தானியத்தின் பதரை விற்கும்படியும்,
౫వారిలా అంటారు, “మనం ధాన్యం అమ్మడానికి అమావాస్య ఎప్పుడు వెళ్ళిపోతుందో? గోదుమల వ్యాపారం చేసుకోడానికి సబ్బాతు ఎప్పుడు పోతుందో? మనం కొలపాత్రను చిన్నదిగా చేసి, వెల పెంచుదాం. తప్పుడు తూకాలతో మనం మోసం చేద్దాం.
6 ௬ நாங்கள் கேட்ட கோதுமையை விற்கத்தக்கதாக மாதப்பிறப்பும், நாங்கள் தானியத்தின் சேமிப்புக்கிடங்குகளை திறக்கத்தக்கதாக ஓய்வு நாளும் எப்போது முடியும் என்று சொல்லுகிறவர்களே, இதைக் கேளுங்கள்.
౬పాడైపోయిన గోదుమలను అమ్మి, వెండికి పేదవారిని కొందాం. దీనులను, ఒక జత చెప్పులకు కొందాం.”
7 ௭ அவர்கள் செய்கைகளையெல்லாம் நான் ஒருபோதும் மறப்பதில்லையென்று யெகோவா யாக்கோபுடைய மகிமையின்பேரில் ஆணையிட்டார்.
౭యాకోబు అతిశయాస్పదం తోడని యెహోవా ఇలా ప్రమాణం చేశాడు. “వారు చేసిన పనుల్లో దేన్నీ నేను మరచిపోను.”
8 ௮ இதனால் தேசம் அதிரவும் அதில் குடியிருக்கிறவர்கள் எல்லோரும் துக்கிக்கவும், எங்கும் நதிகளாகப் புரண்டோடவும், எகிப்தின் ஆற்றுவெள்ளத்தைப்போல் அடித்து, பெருவெள்ளமாகவும் வேண்டாமோ?
౮దీన్ని బట్టి భూమి కంపించదా? అందులో నివసించే వారంతా దుఃఖపడరా? నైలునది లాగా అదంతా పొంగుతుంది. ఐగుప్తుదేశపు నదిలాగా అది పైకి లేచి, మళ్ళీ అణిగి పోతుంది.
9 ௯ அந்த நாளிலே நான் மத்தியானத்திலே சூரியனை மறையச்செய்து, பட்டப்பகலிலே தேசத்தை இருளாக்கி,
౯యెహోవా ప్రభువు చెప్పేదేమిటంటే, ఆ రోజు నేను మధ్యాహ్నమే పొద్దు గుంకేలా చేస్తాను. పట్టపగలే భూమికి చీకటి కమ్ముతుంది.
10 ௧0 உங்களுடைய பண்டிகைகளைத் துக்கிப்பாகவும், உங்களுடைய பாடல்களையெல்லாம் புலம்பலாகவும் மாறச்செய்து, எல்லா இடுப்புகளிலும் சணல் ஆடையும், எல்லாத் தலைகளிலும் மொட்டையையும் வருவித்து, அவர்களுடைய துக்கிப்பை ஒரே பிள்ளைக்காகத் துக்கிக்கிற துக்கிப்புக்குச் சமமாக்கி, அவர்களுடைய முடிவைக் கசப்பான நாளாக்குவேன் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
౧౦మీ పండగలను దుఃఖదినాలుగా మీ పాటలన్నిటినీ విషాద గీతాలుగా మారుస్తాను. మీరంతా గోనెపట్ట కట్టుకొనేలా చేస్తాను. మీ అందరి తలలు బోడిచేస్తాను. ఒక్కడే కొడుకు చనిపోతే శోకించినట్టుగా నేను చేస్తాను. దాని ముగింపు ఘోరమైన రోజుగా ఉంటుంది.
11 ௧௧ இதோ, நான் தேசத்தின்மேல் பஞ்சத்தை அனுப்பும் நாட்கள் வரும்; ஆகாரக்குறைவினால் உண்டாகிய பஞ்சமல்ல, தண்ணீர்குறைவினால் உண்டாகிய தாகமுமல்ல, யெகோவாவுடைய வசனம் கேட்கக் கிடைக்காத பஞ்சத்தை அனுப்புவேன் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
౧౧యెహోవా ప్రకటించేది ఇదే, “రాబోయే రోజుల్లో దేశంలో నేను కరువు పుట్టిస్తాను. అది తిండి కోసం, మంచినీళ్ళ కోసం కరువు కాదు కానీ యెహోవా మాటలు వినకపోవడం వలన కలిగేదిగా ఉంటుంది.
12 ௧௨ அப்பொழுது அவர்கள் யெகோவாவுடைய வசனத்தைத் தேட ஒரு சமுத்திரம் துவங்கி மறு சமுத்திரம்வரை, வடக்குதிசை துவங்கிக் கிழக்குத்திசைவரை அலைந்து திரிந்தும் அதைக் கண்டடையாமல்போவார்கள்.
౧౨యెహోవా మాట వినడానికి ఒక సముద్రం నుంచి మరొక సముద్రం వరకూ, ఉత్తర దిక్కు నుంచి తూర్పు దిక్కు వరకూ తిరుగుతారు కానీ అది వారికి దొరకదు.
13 ௧௩ அந்த நாளிலே அழகுள்ள கன்னிகளும் வாலிபர்களும் தாகத்தினால் சோர்ந்துபோவார்கள்.
౧౩ఆ రోజు అందమైన కన్యలూ యువకులూ దాహంతో సోలిపోతారు.
14 ௧௪ தாணே! உன்னுடைய தேவனுடைய ஜீவனைக்கொண்டும், பெயெர்செபா மார்க்கத்தின் தேவனுடைய ஜீவனைக்கொண்டும் என்று சொல்லி, சமாரியாவின் பாவத்தின்மேல் ஆணையிடுகிறவர்கள் விழுவார்கள்; இனி ஒருபோதும் எழுந்திருக்கமாட்டார்கள் என்றார்.
౧౪సమరయ పాపంతో ఒట్టు పెట్టుకునే వారు, ‘దాను, నీ దేవుని ప్రాణం మీద ఒట్టు.’ ‘బెయేర్షెబా, దేవుని ప్రాణం మీద ఒట్టు’ అనేవారు ఇంకా ఎన్నడూ లేవలేకుండా కూలిపోతారు.”