< ஆமோஸ் 7 >

1 யெகோவாகிய ஆண்டவர் எனக்குக் காண்பித்தது என்னவென்றால்: இதோ, ராஜாவினுடைய புல்லறுப்புக்குப்பின்பு இரண்டாம் அறுவடையில் புல் முளைக்கத் தொடங்கும்போது அவர் வெட்டுக்கிளிகளை உண்டாக்கினார்.
యెహోవా ప్రభువు నాకిది చూపించాడు. రాజుకు రావలసిన కోత తరువాత గడ్డి మళ్ళీ మొలిచినప్పుడు ఆయన మిడతల గుంపు పుట్టించాడు.
2 அவைகள் தேசத்தின் புல்லைத் தின்று தீர்ந்தபோது, நான்: யெகோவாகிய ஆண்டவரே, மன்னித்தருளும்; யாக்கோபு திரும்ப யாராலே எழுந்திருப்பான்? அவன் சிறுமையடைந்தான் என்றேன்.
అవి పచ్చికనంతా తినేసినప్పుడు నేనిలా అన్నాను. “యెహోవా ప్రభూ, దయచేసి క్షమించు. యాకోబు వంశం కొద్దిమందేగా. అది ఎలా నిలదొక్కుకుంటుంది”
3 யெகோவா அதற்கு மனஸ்தாபப்பட்டு, அப்படி ஆவதில்லை என்றார்.
దీని గురించి యెహోవా మనస్సు మార్చుకుని “అది జరగదు” అన్నాడు.
4 யெகோவாகிய ஆண்டவர் எனக்குக் காண்பித்தது என்னவென்றால்: இதோ, அக்கினியாலே நியாயம் விசாரிப்பேன் என்று யெகோவாகிய ஆண்டவர் தோன்றினார்; அது மகா ஆழத்தை விழுங்கியது, அதில் ஒரு பங்கை விழுங்கி முடித்தது.
యెహోవా ప్రభువు నాకిది చూపించాడు. శిక్షించడానికి యెహోవా ప్రభువు అగ్ని రప్పించాడు. అది భూమి కిందున్న అగాధ మహా జలాన్ని ఎండగొట్టి భూమిని కూడా మింగేసేదే.
5 அப்பொழுது நான்: யெகோவாகிய ஆண்டவரே, நிறுத்துமே; யாக்கோபு திரும்ப யாராலே எழுந்திருப்பான்? அவன் மிகச் சிறியதானான் என்றேன்.
అయితే నేనిలా అన్నాను. “యెహోవా ప్రభూ, యాకోబు వంశం కొద్దిమందేగా. అది ఎలా నిలదొక్కుకుంటుంది?”
6 யெகோவா அதற்கு மனஸ்தாபப்பட்டு, அப்படி ஆவதில்லை என்றார்.
దీని గురించి యెహోవా మనస్సు మార్చుకుని “అది కూడా జరగదు” అన్నాడు.
7 பின்பு அவர் எனக்குக் காண்பித்தது என்னவென்றால்: இதோ, தூக்குநூல் பிரமாணத்தினால் கட்டப்பட்ட ஒரு மதிலின்மேல் நின்றார்; அவர் கையில் தூக்குநூல் இருந்தது.
ఆయన నాకిది చూపించాడు. చూడు, మట్టపు గుండు చేతిలో పట్టుకుని ప్రభువు గోడ పక్కన నిలబడ్డాడు.
8 யெகோவா என்னை நோக்கி: ஆமோஸே, நீ என்னத்தைக் காண்கிறாய் என்றார்; தூக்குநூலைக் காண்கிறேன் என்றேன்; அப்பொழுது ஆண்டவர்: இதோ, இஸ்ரவேல் என்னும் என்னுடைய மக்களின் நடுவே தூக்குநூலை விடுவேன்; இனி அவர்களை மன்னிக்கமாட்டேன்.
యెహోవా నాతో ఇలా అన్నాడు. “ఆమోసూ, నువ్వేం చూస్తున్నావు?” “మట్టపు గుండు” అన్నాను. అప్పుడు ప్రభువు ఇలా అన్నాడు. “నా ప్రజలైన ఇశ్రాయేలీయుల మధ్య నేను మట్టపు గుండు వేయబోతున్నాను. ఇక ఏమాత్రం నేను వాళ్ళను వదిలిపెట్టను.
9 ஈசாக்கின் மேடைகள் பாழும், இஸ்ரவேலின் பரிசுத்த இடங்கள் அழிக்கவும்படும்; நான் யெரொபெயாம் வீட்டாருக்கு விரோதமாகப் வாளோடு எழும்பிவருவேன் என்றார்.
ఇస్సాకు వంశం వారి ఉన్నత స్థలాలు నాశనమవుతాయి. ఇశ్రాయేలీయుల ప్రతిష్ఠిత స్థలాలు పాడైపోతాయి. యరొబాము వంశానికి విరోధంగా కత్తి ఎత్తుతాను.”
10 ௧0 அப்பொழுது பெத்தேலில் ஆசாரியனான அமத்சியா இஸ்ரவேலின் ராஜாவாகிய யெரொபெயாமுக்கு ஆள் அனுப்பி: ஆமோஸ் இஸ்ரவேல் வம்சத்தாரின் நடுவே உமக்கு விரோதமாகக் கட்டுப்பாடு செய்கிறான்; தேசம் அவனுடைய வார்த்தைகளையெல்லாம் சகிக்கமாட்டாது.
౧౦అప్పుడు బేతేలు యాజకుడు అమజ్యా, ఇశ్రాయేలు రాజు యరొబాముకు ఇలా కబురు పంపాడు “ఇశ్రాయేలీయుల మధ్య, ఆమోసు నీ మీద కుట్ర చేస్తున్నాడు. అతని మాటలు దేశం సహించలేదు.”
11 ௧௧ யெரொபெயாம் வாளால் சாவான் என்றும், இஸ்ரவேல் தன்னுடைய தேசத்திலிருந்து சிறைபிடித்துக் கொண்டுபோகப்படுவான் என்றும் ஆமோஸ் சொல்லுகிறான் என்று சொல்லச்சொன்னான்.
౧౧అప్పుడు ఆమోసు, యరొబాము కత్తితో చస్తాడు. ఇశ్రాయేలీయులు తప్పకుండా తమ దేశాన్నివిడిచి బందీలుగా వెళతారు అన్నాడు.
12 ௧௨ அமத்சியா ஆமோஸை நோக்கி: தரிசனம் பார்க்கிறவனே, போ; நீ யூதா தேசத்திற்கு ஓடிப்போ, அங்கே அப்பம் சாப்பிட்டு, அங்கே தீர்க்கதரிசனம் சொல்லு.
౧౨అమజ్యా ఆమోసుతో ఇట్లన్నాడు. “దీర్ఘదర్శీ, వెళ్ళిపో! యూదా దేశానికి పారిపో. అక్కడే ప్రవచించుకుంటూ పొట్ట పోసుకో.
13 ௧௩ பெத்தேலிலே இனித் தீர்க்கதரிசனம் சொல்லாதே; அது ராஜாவின் பரிசுத்த இடமும் ராஜ்ஜியத்தின் அரண்மனையுமாக இருக்கிறது என்றான்.
౧౩బేతేలులో ఇంక ఎంత మాత్రం ప్రవచించవద్దు. రాజు నివసించే స్థలం, రాజభవనం ఇక్కడ ఉన్నాయి.”
14 ௧௪ ஆமோஸ் அமத்சியாவுக்குப் பதிலாக: நான் தீர்க்கதரிசியுமல்ல, தீர்க்கதரிசியின் மகனுமல்ல; நான் மந்தை மேய்க்கிறவனும், காட்டத்திப்பழங்களைப் பதனிடுகிறவனுமாக இருந்தேன்.
౧౪అందుకు ఆమోసు అమజ్యాతో ఇలా అన్నాడు. “నేను ప్రవక్తను కాదు, ప్రవక్త కొడుకును కూడా కాదు. నేను గొర్రెల కాపరిని. మేడి చెట్లు చూసుకుంటాను.
15 ௧௫ ஆனால் மந்தையின் பின்னாலே போகிறபோது என்னைக் யெகோவா அழைத்து, நீ போய் என்னுடைய மக்களாகிய இஸ்ரவேலுக்கு விரோதமாகத் தீர்க்கதரிசனம் சொல்லு என்று யெகோவா சொன்னார்.
౧౫అయితే, నేను నా మందలను కాస్తూ ఉంటే యెహోవా నన్ను పిలిచి, ‘నువ్వు వెళ్లి నా ప్రజలైన ఇశ్రాయేలు వారికి ప్రవచించు’ అన్నాడు.”
16 ௧௬ இப்போதும், நீ யெகோவாவுடைய வார்த்தையைக் கேள்; இஸ்ரவேலுக்கு விரோதமாகத் தீர்க்கதரிசனம் சொல்லாதே, ஈசாக்கின் வம்சத்தினருக்கு விரோதமாக ஒன்றையும் சொல்லாதே என்று சொல்லுகிறாயே.
౧౬అందుచేత యెహోవా మాట వినండి. మీరిలా అంటున్నారు, ఇశ్రాయేలీయులను గురించి ప్రవచించవద్దు. ఇస్సాకు వంశానికి వ్యతిరేకంగా మాట జారవద్దు.
17 ௧௭ இதனால் உன்னுடைய மனைவி நகரத்தில் விபசாரியாவாள்; உன்னுடைய மகன்களும் உன்னுடைய மகள்களும் வாளால் விழுவார்கள்; உன்னுடைய வயல் அளவு நூலால் பங்கிட்டுக்கொள்ளப்படும்; நீயோவென்றால் அசுத்தமான தேசத்திலே செத்துப்போவாய்; இஸ்ரவேலும் தன்னுடைய தேசத்திலிருந்து சிறைபிடிக்கப்பட்டுக் கொண்டுபோகப்படுவான் என்று யெகோவா சொல்லுகிறார் என்றான்.
౧౭యెహోవా చెప్పేదేమిటంటే, నీ భార్య పట్టణంలో వేశ్య అవుతుంది. నీ కొడుకులూ కూతుళ్ళు కత్తితో హతమౌతారు. శత్రువులు నీ భూమిని కొలిచి పంచుకుంటారు. నువ్వు అపవిత్ర దేశంలో ప్రాణం విడుస్తావు. కచ్చితంగా ఇశ్రాయేలీయులు తమ దేశం విడిచి బందీలవుతారు.

< ஆமோஸ் 7 >