< ஆமோஸ் 1 >

1 தெக்கோவா ஊர் மேய்ப்பருக்குள் இருந்த ஆமோஸ், யூதாவின் ராஜாவாகிய உசியாவின் நாட்களிலும், இஸ்ரவேலின் ராஜாவாகிய யோவாசுடைய மகனாகிய ரொபெயாமின் நாட்களிலும், பூமி அதிர்ச்சி உண்டாவதற்கு இரண்டு வருடங்களுக்கு முன்னே, இஸ்ரவேலைக்குறித்துத் தரிசனம்கண்டு சொன்ன வார்த்தைகள்.
דִּבְרֵ֣י עָמֹ֔וס אֲשֶׁר־הָיָ֥ה בַנֹּקְדִ֖ים מִתְּקֹ֑ועַ אֲשֶׁר֩ חָזָ֨ה עַל־יִשְׂרָאֵ֜ל בִּימֵ֣י ׀ עֻזִּיָּ֣ה מֶֽלֶךְ־יְהוּדָ֗ה וּבִימֵ֞י יָרָבְעָ֤ם בֶּן־יֹואָשׁ֙ מֶ֣לֶךְ יִשְׂרָאֵ֔ל שְׁנָתַ֖יִם לִפְנֵ֥י הָרָֽעַשׁ׃
2 யெகோவா சீயோனிலிருந்து கெர்ச்சித்து, எருசலேமிலிருந்து சத்தமிடுவார்; அதினால் மேய்ப்பர்களின் பசும்புல்நிலம் துக்கம் கொண்டாடும்; கர்மேலின் உச்சியும் காய்ந்துபோகும்.
וַיֹּאמַ֓ר ׀ יְהוָה֙ מִצִּיֹּ֣ון יִשְׁאָ֔ג וּמִירוּשָׁלַ֖͏ִם יִתֵּ֣ן קֹולֹ֑ו וְאָֽבְלוּ֙ נְאֹ֣ות הָרֹעִ֔ים וְיָבֵ֖שׁ רֹ֥אשׁ הַכַּרְמֶֽל׃ פ
3 யெகோவா சொல்லுகிறது என்னவென்றால்: தமஸ்குவினுடைய மூன்று பாவங்களுக்காகவும் நான்கு பாவங்களுக்காகவும், நான் அதின் தண்டனையைத் திருப்பமாட்டேன்; அவர்கள் கீலேயாத்தை இரும்புக் கருவிகளினால் போரடித்தார்களே.
כֹּ֚ה אָמַ֣ר יְהוָ֔ה עַל־שְׁלֹשָׁה֙ פִּשְׁעֵ֣י דַמֶּ֔שֶׂק וְעַל־אַרְבָּעָ֖ה לֹ֣א אֲשִׁיבֶ֑נּוּ עַל־דּוּשָׁ֛ם בַּחֲרֻצֹ֥ות הַבַּרְזֶ֖ל אֶת־הַגִּלְעָֽד׃
4 ஆசகேலின் வீட்டை தீக்கொளுத்துவேன்; அது பெனாதாதின் அரண்மனைகளை அழித்துவிடும்.
וְשִׁלַּ֥חְתִּי אֵ֖שׁ בְּבֵ֣ית חֲזָאֵ֑ל וְאָכְלָ֖ה אַרְמְנֹ֥ות בֶּן־הֲדָֽד׃
5 நான் தமஸ்குவின் தாழ்ப்பாளை உடைத்து, குடிகளை ஆவேன் என்னும் பள்ளத்தாக்கிலும், செங்கோல் செலுத்துகிறவனை பெத் ஏதேனிலும் இல்லாதபடி அழித்துப்போடுவேன்; அப்பொழுது சீரியாவின் மக்கள் கீருக்குச் சிறைப்பட்டுப்போவார்கள் என்று யெகோவா சொல்லுகிறார்.
וְשָֽׁבַרְתִּי֙ בְּרִ֣יחַ דַּמֶּ֔שֶׂק וְהִכְרַתִּ֤י יֹושֵׁב֙ מִבִּקְעַת־אָ֔וֶן וְתֹומֵ֥ךְ שֵׁ֖בֶט מִבֵּ֣ית עֶ֑דֶן וְגָל֧וּ עַם־אֲרָ֛ם קִ֖ירָה אָמַ֥ר יְהוָֽה׃ פ
6 யெகோவா சொல்லுகிறது என்னவென்றால்: காசாவினுடைய மூன்று பாவங்களுக்காகவும், நான்கு பாவங்களுக்காகவும், நான் அதின் தண்டனையைத் திருப்பமாட்டேன்; அவர்கள் சிறைப்பட்டவர்களை ஏதோமியர்களிடத்தில் ஒப்புவிக்கும்படி முழுவதும் சிறையாக்கினார்களே.
כֹּ֚ה אָמַ֣ר יְהוָ֔ה עַל־שְׁלֹשָׁה֙ פִּשְׁעֵ֣י עַזָּ֔ה וְעַל־אַרְבָּעָ֖ה לֹ֣א אֲשִׁיבֶ֑נּוּ עַל־הַגְלֹותָ֛ם גָּל֥וּת שְׁלֵמָ֖ה לְהַסְגִּ֥יר לֶאֱדֹֽום׃
7 காசாவின் மதிலுக்குள் தீக்கொளுத்துவேன்; அது அதினுடைய அரண்மனைகளை அழித்துவிடும்.
וְשִׁלַּ֥חְתִּי אֵ֖שׁ בְּחֹומַ֣ת עַזָּ֑ה וְאָכְלָ֖ה אַרְמְנֹתֶֽיהָ׃
8 நான் குடிகளை அஸ்தோத்திலும், செங்கோல் பிடித்திருக்கிறவனை அஸ்கலோனிலும் இல்லாதபடி அழித்து, பெலிஸ்தர்களில் மீதியானவர்கள் அழியும்படி என்னுடைய கையை எக்ரோனுக்கு விரோதமாகத் திருப்புவேன் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
וְהִכְרַתִּ֤י יֹושֵׁב֙ מֵֽאַשְׁדֹּ֔וד וְתֹומֵ֥ךְ שֵׁ֖בֶט מֵֽאַשְׁקְלֹ֑ון וַהֲשִׁיבֹ֨ותִי יָדִ֜י עַל־עֶקְרֹ֗ון וְאָֽבְדוּ֙ שְׁאֵרִ֣ית פְּלִשְׁתִּ֔ים אָמַ֖ר אֲדֹנָ֥י יְהוִֽה׃ פ
9 மேலும்: தீருவினுடைய மூன்று பாவங்களுக்காகவும், நான்கு பாவங்களுக்காகவும், நான் அதின் தண்டனையைத் திருப்பமாட்டேன்; அவர்களுடைய சகோதர்களின் உடன்படிக்கையை நினைக்காமல், சிறைப்பட்டவர்களை முழுவதும் ஏதோமியர்கள் கையில் ஒப்புவித்தார்களே.
כֹּ֚ה אָמַ֣ר יְהוָ֔ה עַל־שְׁלֹשָׁה֙ פִּשְׁעֵי־צֹ֔ר וְעַל־אַרְבָּעָ֖ה לֹ֣א אֲשִׁיבֶ֑נּוּ עַֽל־הַסְגִּירָ֞ם גָּל֤וּת שְׁלֵמָה֙ לֶאֱדֹ֔ום וְלֹ֥א זָכְר֖וּ בְּרִ֥ית אַחִֽים׃
10 ௧0 தீருவின் மதிலுக்குள் தீக்கொளுத்துவேன்; அது அதின் அரண்மனைகளை அழித்துவிடும் என்று யெகோவா சொல்லுகிறார்.
וְשִׁלַּ֥חְתִּי אֵ֖שׁ בְּחֹ֣ומַת צֹ֑ר וְאָכְלָ֖ה אַרְמְנֹתֶֽיהָ׃ פ
11 ௧௧ மேலும்: ஏதோமுடைய மூன்று பாவங்களுக்காகவும், நான்கு பாவங்களுக்காகவும், நான் அவனுடைய தண்டனையைத் திருப்பமாட்டேன்; அவன் தன்னுடைய சகோதரனைப் வாளோடு பின்தொடர்ந்து, தன்னுடைய மனதை இரக்கமற்றதாக்கி, தன்னுடைய கோபத்தினாலே என்றைக்கும் அவனைப் பீறிப்போட்டு, தன்னுடைய கடுங்கோபத்தை நித்திய காலமாக வைத்திருக்கிறானே.
כֹּ֚ה אָמַ֣ר יְהוָ֔ה עַל־שְׁלֹשָׁה֙ פִּשְׁעֵ֣י אֱדֹ֔ום וְעַל־אַרְבָּעָ֖ה לֹ֣א אֲשִׁיבֶ֑נּוּ עַל־רָדְפֹ֨ו בַחֶ֤רֶב אָחִיו֙ וְשִׁחֵ֣ת רַחֲמָ֔יו וַיִּטְרֹ֤ף לָעַד֙ אַפֹּ֔ו וְעֶבְרָתֹ֖ו שְׁמָ֥רָה נֶֽצַח׃
12 ௧௨ தேமானிலே தீக்கொளுத்துவேன்; அது போஸ்றாவின் அரண்மனைகளை அழிக்கும் என்று யெகோவா சொல்லுகிறார்.
וְשִׁלַּ֥חְתִּי אֵ֖שׁ בְּתֵימָ֑ן וְאָכְלָ֖ה אַרְמְנֹ֥ות בָּצְרָֽה׃ פ
13 ௧௩ யெகோவா சொல்லுகிறது என்னவென்றால்: அம்மோன் மக்களின் மூன்று பாவங்களுக்காகவும், நான்கு பாவங்களுக்காகவும், நான் அவர்களுடைய தண்டனையைத் திருப்பமாட்டேன்; அவர்கள் தங்களுடைய எல்லைகளை விரிவாக்க கீலேயாத் தேசத்தின் கர்ப்பவதிகளைக் கீறிப்போட்டார்களே.
כֹּ֚ה אָמַ֣ר יְהוָ֔ה עַל־שְׁלֹשָׁה֙ פִּשְׁעֵ֣י בְנֵֽי־עַמֹּ֔ון וְעַל־אַרְבָּעָ֖ה לֹ֣א אֲשִׁיבֶ֑נּוּ עַל־בִּקְעָם֙ הָרֹ֣ות הַגִּלְעָ֔ד לְמַ֖עַן הַרְחִ֥יב אֶת־גְּבוּלָֽם׃
14 ௧௪ ரப்பாவின் மதிலுக்குள் தீக்கொளுத்துவேன்; அது யுத்தநாளின் முழக்கமாகவும், பெருங்காற்றின் புயலாகவும் அதின் அரண்மனைகளை அழிக்கும்.
וְהִצַּ֤תִּי אֵשׁ֙ בְּחֹומַ֣ת רַבָּ֔ה וְאָכְלָ֖ה אַרְמְנֹותֶ֑יהָ בִּתְרוּעָה֙ בְּיֹ֣ום מִלְחָמָ֔ה בְּסַ֖עַר בְּיֹ֥ום סוּפָֽה׃
15 ௧௫ அவர்களுடைய ராஜாவும், அவனுடைய அதிபதிகளும் சிறைப்பட்டுப்போவார்கள் என்று யெகோவா சொல்லுகிறார்.
וְהָלַ֥ךְ מַלְכָּ֖ם בַּגֹּולָ֑ה ה֧וּא וְשָׂרָ֛יו יַחְדָּ֖ו אָמַ֥ר יְהוָֽה׃ פ

< ஆமோஸ் 1 >