< அப்போஸ்தலர் 1 >
1 ௧ 48 தெயோப்பிலுவே, இயேசுவானவர் தாம் தெரிந்துகொண்ட அப்போஸ்தலர்களுக்குப் பரிசுத்த ஆவியானவராலே கட்டளையிட்டபின்பு,
ओ श्रीमान्, थियुफिलुस! मैं पईली कताब तिना सबी गल्ला रे बारे रे लिखी, जो प्रभु यीशु शुरूओ ते करदा और सिखांदा रया।
2 ௨ அவர் எடுத்துக்கொள்ளப்பட்ட நாள்வரை செய்தவைகள் மற்றும் போதித்தவைகள் எல்லாவற்றையும்குறித்து, முதலாம் புத்தகத்தை எழுதினேன்.
जदुओ तक से परमेशरो रे जरिए स्वर्गो रे नि चकेया गया, तदुओ तक तेसरे स्वर्गो रे चकणे ते पईले, तिने आपणे चुणे रे प्रेरिता खे पवित्र आत्मा रे जरिए आज्ञा देंदा रया।
3 ௩ அவர் சிலுவையில் பாடுபட்டப்பின்பு, நாற்பது நாட்கள்வரை அப்போஸ்தலர்களுக்குத் தரிசனமாகி, தேவனுடைய இராஜ்யத்திற்குரியவைகளை அவர்களோடு பேசி, அநேகம் தெளிவான ஆதாரங்களினாலே அவர்களுக்குத் தம்மை உயிரோடிருக்கிறவராகக் காண்பித்தார்.
और यीशुए दु: खो ते और मौता ते बाद, बऊत ई पक्के सबूता साथे आपणे आपू खे प्रेरिता गे जिऊँदा दखाया और चाल़ी दिनो तक सेयो तिना खे दिशदे रये और परमेशरो रे राज्य रिया गल्ला करदे रये।
4 ௪ அன்றியும், அவர் அவர்களோடு கூடிவந்திருக்கும்போது, அவர்களை நோக்கி: யோவான் தண்ணீரினாலே ஞானஸ்நானம் கொடுத்தான்; நீங்கள் சில நாட்களுக்குள்ளே பரிசுத்த ஆவியானவராலே ஞானஸ்நானம் பெறுவீர்கள்.
तेबे तिने चेलेया खे मिली की आज्ञा दित्ती, “यरूशलेमो खे नि छाडो, पर पिते रे तेस वादे रा पूरे ऊणे रा इन्तजार करदे रओ, जेतेरे बारे रे तुसे मांते सुणी चुके रे।
5 ௫ ஆகவே, நீங்கள் எருசலேமைவிட்டுப் போகாமல் என்னிடத்தில் கேள்விப்பட்ட பிதாவின் வாக்குத்தத்தம் நிறைவேறக் காத்திருங்கள் என்று கட்டளையிட்டார்.
कऊँकि यूहन्ने तो पाणिए साथे बपतिस्मा देई राखेया, पर थोड़े दिन बाद तुसा पवित्र आत्मा रा बपतिस्मा पाणा।”
6 ௬ அப்பொழுது கூடிவந்திருந்தவர்கள் அவரை நோக்கி: ஆண்டவரே, இக்காலத்திலா ராஜ்யத்தை இஸ்ரவேலுக்குத் திரும்பக் கொடுப்பீர் என்று கேட்டார்கள்.
तेबे तिने कट्ठे ऊई की तिना ते पूछेया, “ओ प्रभु! क्या तुसा एसी बखते ई इस्राएलो खे राज्य फेरी देणा?”
7 ௭ அதற்கு அவர்: பிதாவானவர் தம்முடைய அதிகாரத்தில் வைத்திருக்கிற காலங்களையும் வேளைகளையும் அறிகிறது உங்களுக்கு அடுத்ததல்ல.
तिने तिना खे बोलेया, “तेस बखतो खे और तेसा कअड़िया खे जाणना, जो पिते आपणे ई अक्को रे राखी राखे, तुसा रा काम निए।
8 ௮ பரிசுத்த ஆவியானவர் உங்களிடம் வரும்போது நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசி எல்லைவரையிலும், எனக்குச் சாட்சிகளாக இருப்பீர்கள் என்றார்.
पर जेबे पवित्र आत्मा तुसा पाँदे आऊणा, तेबे तुसा सामर्थ पाणी और यरूशलेम नगरो रे, सारे यहूदिया और सामरिया प्रदेशो रे और तरतिया रे कनारे तक तुसे मेरे गवा ऊणे।”
9 ௯ இவைகளை அவர் சொன்னபின்பு, அவர்கள் பார்த்துக்கொண்டிருக்கும்போது, வானத்திற்குமேல் எடுத்துக்கொள்ளப்பட்டார்; அவர்களுடைய கண்களுக்கு மறைவாக ஒரு மேகம் அவரை எடுத்துக்கொண்டது.
ये बोलदे ऊए सेयो, तिना रे देखदे-देखदे परमेशरो रे जरिए स्वर्गो खे चकी ते और बादल़ो री बजअ ते सेयो तिना खे जादा देरा तक देखी नि सके।
10 ௧0 அவர் போகிறபோது அவர்கள் வானத்தை அண்ணாந்து பார்த்துக்கொண்டிருக்கும்போது, இதோ, வெண்மையான உடையணிந்தவர்கள் இரண்டுபேர் அவர்கள் அருகே நின்று:
जेबे तिना खे जांदे ऊए सेयो सर्गो खे ताकणे लगी रे थे, तेबे दो मांणू सफेद टाले पईने रे अचाणक तिना बीचे आयी की खड़े ऊईगे
11 ௧௧ கலிலேய மக்களே, நீங்கள் ஏன் வானத்தை அண்ணாந்துபார்த்து நிற்கிறீர்கள்? உங்களிடமிருந்து வானத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இந்த இயேசுவானவர் எப்படி உங்களுடைய கண்களுக்கு முன்பாக வானத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டாரோ, அப்படியே மறுபடியும் வருவார் என்றார்கள்.
और तिना खे बोलेया, “ओ गलीली मर्दो! तुसे खड़े ऊई की सर्गो खे कऊँ लगी रे देखणे? येई यीशु जो तुसा गे ते स्वर्गो खे चकी ला रा, जिंयाँ तुसे से स्वर्गो खे जांदा ऊआ देखी राखेया, तिंयाँ ई से फेर आऊणा।”
12 ௧௨ அப்பொழுது அவர்கள் எருசலேமுக்கு அருகில் ஒரு ஓய்வுநாள் பயணதூரத்திலிருக்கிற ஒலிவமலை என்னப்பட்ட மலையிலிருந்து எருசலேமுக்குத் திரும்பிப்போனார்கள்.
तेबे चेले जैतून नाओं रे पाह्ड़ो ते, जो यरूशलेम नगरो रे नेड़े तकरीबन एक किलोमीटरो री दुरिया रे ए, यरूशलेमो खे वापस ऊए।
13 ௧௩ அவர்கள் அங்கே வந்தபோது மேல்வீட்டில் ஏறினார்கள்; அதில் பேதுருவும், யாக்கோபும், யோவானும், அந்திரேயாவும், பிலிப்பும், தோமாவும், பர்தொலொமேயும், மத்தேயுவும், அல்பேயுவின் குமாரனாகிய யாக்கோபும், செலோத்தே என்னப்பட்ட சீமோனும், யாக்கோபின் சகோதரனாகிய யூதாவும் தங்கியிருந்தார்கள்.
जेबे सेयो नगरो रे पऊँछे, तेबे सेयो तेसा बाऊड़ी दे गये, जेती पतरस, यूहन्ना, याकूब, अन्द्रियास, फिलिप्पुस, थोमा, बरतुल्मै, मत्ती, हलफईसो रा पाऊ याकूब, शमौन जेलोतेस और याकूबो रा पाऊ यहूदा रओ थे।
14 ௧௪ அங்கே இவர்களெல்லோரும், பெண்களோடும் இயேசுவின் தாயாகிய மரியாளோடும், அவருடைய சகோதரர்களோடுகூட ஒருமனப்பட்டு, ஜெபத்திலும் வேண்டுதலிலும் தரித்திருந்தார்கள்.
यो सब कईया जवाणसा साथे और प्रभु यीशुए री आम्मा मरियम और तिना रे पाईया साथे एक चित्त ऊई की प्रार्थना रे लगे रये।
15 ௧௫ அந்த நாட்களிலே, சீடர்கள் ஏறக்குறைய நூற்றிருபதுபேர் கூடியிருந்தபோது, அவர்கள் மத்தியிலே பேதுரு எழுந்து நின்று:
तिना दिना रेई पतरस पाईया बीचे, जो एक सौ बीईया रे तकरीबन विश्वासी थे, खड़ा ऊई की बोलणे लगेया,
16 ௧௬ சகோதரர்களே, இயேசுவைப் பிடித்தவர்களுக்கு வழிகாட்டின யூதாசைக்குறித்துப் பரிசுத்த ஆவியானவர் தாவீதின் வாக்கினால் முன்சொன்ன வேதவாக்கியம் நிறைவேறவேண்டியதாயிருந்தது.
“ओ पाईयो जरूरी था कि पवित्र शास्त्रो रा से लेख पूरा ओ, जो पवित्र आत्मे दाऊदो रे मुंओ ते यहूदा रे बारे दे, जो प्रभु यीशुए खे पकड़ने वाल़ेया रा अगुवा था, पईले तेई बोलेया था।
17 ௧௭ அவன் எங்களில் ஒருவனாக எண்ணப்பட்டு, இந்த ஊழியத்திலே பங்குபெற்றவனாக இருந்தான்.
यहूदा तो आसा बीचे गिणेया गया और तेसा सेवकाईया रे शामिल ऊआ।”
18 ௧௮ தவறான வழியின் வருமானத்தினால் அவன் ஒரு நிலத்தைச் சம்பாதித்து, தலைகீழாக விழுந்தான்; அவன் வயிறுவெடித்து, குடல்களெல்லாம் சரிந்துபோனது.
तिने पापो री कमाईया ते एक डोरू खरीदेया और सिरो रे पारे रूड़ेया और तेसरा पेट फटीगा और तेसरी सारिया आंजा निकल़ी गिया,
19 ௧௯ இது எருசலேமிலுள்ள குடிகள் அனைவருக்கும் தெரிந்திருக்கிறது. அதினாலே அந்த நிலம் அவர்களுடைய மொழியிலே இரத்தநிலம் என்று அர்த்தங்கொள்ளும் அக்கெல்தமா என அழைக்கப்பட்டிருக்கிறது.
और एसा गल्ला खे यरूशलेमो रे रणे वाल़े जाणी गे, एथो तक कि तेस डोरूआ रा नाओं तिना री पाषा रे हकलदमा, मतलब-खूनो रा डोरू पड़ी गा।
20 ௨0 சங்கீத புத்தகத்திலே அவன் குடியிருக்கும் வீடு அழியக்கடவது, ஒருவனும் அதில் குடியில்லாதிருப்பானாக என்றும்; அவனுடைய தலைமைத்துவத்தை வேறொருவன் பெறவேண்டும்’ என்றும் எழுதியிருக்கிறது.
पतरसे बोलेया, “कऊँकि भजनसंहिता रे लिखी राखेया, “‘तेसरा कअर उजड़ी जाओ और तिदे कोई ना बसो,’ ‘और तेसरी अध्यक्षो री जगा कोई ओर लयी लो।’
21 ௨௧ ஆதலால், யோவான் ஞானஸ்நானம் கொடுத்த நாள்முதற்கொண்டு, கர்த்தராகிய இயேசுவானவர் நம்மிடத்திலிருந்து உயர எடுத்துக்கொள்ளப்பட்ட நாள்வரை,
“तेबेई ये जरूरी ए कि एक एड़ा मांणू चुणेया जाओ जो प्रभु यीशुए रे कित्ते रे सारे कामो रे गवा ओ। प्रभु यीशुए खे यूहन्ने रे जरिए बपतिस्मा देणे ते लयी की तिना रे स्वर्गो रे चकणे तक ये आदमी आसा साथे प्रभु यीशुए रे मरे रेया बीचा ते जिऊँदा ऊणे रा गवा बणो।
22 ௨௨ அவர் நம்மிடத்தில் வாழ்ந்திருந்த காலங்களிலெல்லாம் எங்களோடு இருந்த மனிதர்களில் ஒருவன் அவர் உயிரோடெழுந்ததைக்குறித்து, எங்களுடனேகூடச் சாட்சியாக ஏற்படுத்தப்படவேண்டும் என்றான்.
खरा ए कि तिना बीचा ते एक मांणू आसा साथे, यीशुए रे जिऊँदे ऊणे रा गवा ऊई जाओ।”
23 ௨௩ அப்பொழுது அவர்கள் யுஸ்து என்னும் மறுபெயருள்ள பர்சபா என்னப்பட்ட யோசேப்பு, மத்தியா ஆகிய இவ்விரண்டுபேரையும் நிறுத்தி:
तेबे तिने दो जणे खड़े कित्ते, एक यूसुफ, जेसखे बरसब्बास बी बोलोए, जेसरा छोटा नाओं युस्तुस ए और दूजा मत्तियाह।
24 ௨௪ எல்லோருடைய இருதயங்களையும் அறிந்திருக்கிற கர்த்தாவே, யூதாஸ் என்பவன் தனக்குரிய இடத்திற்குப் போகும்படி இழந்துபோன இந்த ஊழியத்திலும் இந்த அப்போஸ்தலப் பணியிலும் பங்குபெறுவதற்காக,
तेबे ये बोली की प्रार्थना कित्ती, “ओ प्रभु! तुसे जो सबी रे मनो खे जाणोए, ये बताओ कि तुसे इना दूँईं बीचा ते कुण चुणी राखेया,
25 ௨௫ இவ்விரண்டுபேரில் தேவரீர் தெரிந்துகொண்டவனை எங்களுக்குக் காண்பித்தருளும் என்று ஜெபம்பண்ணி;
ताकि से एसा सेवा री और प्रेरिताईया री जगा लई लओ, जेसखे यहूदा छाडी की आपणी जगा खे गया।”
26 ௨௬ பின்பு, அவர்களைக்குறித்துச் சீட்டுப்போட்டார்கள்; சீட்டு மத்தியாவின் பெயருக்கு விழுந்தது; அப்பொழுது அவன் பதினொரு அப்போஸ்தலர்களோடு சேர்த்துக்கொள்ளப்பட்டான்.
तेबे तिने तिना रे बारे रे चिट्ठिया पाईया और पत्री मत्तियाहो रे नाओं पाँदे निकल़ी, तेबे से तिना ग्यारा प्रेरिता साथे गिणेया गया।