< அப்போஸ்தலர் 8 >

1 ஸ்தேவானைக் கொலைசெய்வதற்கு சவுலும் சம்மதித்திருந்தான். அந்த நாட்களிலே எருசலேமிலுள்ள சபைக்கு மிகுந்த துன்பம் உண்டானது. அப்போஸ்தலர்கள்தவிர, மற்ற எல்லோரும் யூதேயா சமாரியா நாடுகளில் சிதறப்பட்டுப்போனார்கள்.
שאול עמד והסכים בהחלט להריגתו של סטפנוס. באותו יום החלה רדיפה גדולה נגד המאמינים בירושלים, וכולם – מלבד השליחים – ברחו ליהודה ושומרון.
2 தேவபக்தியுள்ள மனிதர்கள் ஸ்தேவானை எடுத்து அடக்கம்செய்து, அவனுக்காக மிகவும் துக்கம் அனுசரித்தார்கள்.
מספר אנשים יראי־אלוהים קברו את סטפנוס וספדו עליו בלב כואב.
3 சவுல் ஒவ்வொரு வீடாகப்புகுந்து, ஆண்களையும் பெண்களையும் இழுத்துக்கொண்டுபோய், சிறைப்பிடித்து சபையை அழித்துக்கொண்டிருந்தான்.
באותה עת התרוצץ שאול ממקום למקום בחוסר מנוחה והטריד את המאמינים, כשלפניו מטרה אחת: לחסל את הקהילה המשיחית. הוא אף פרץ לבתיהם של המאמינים, סחב משם גברים ונשים וכלא אותם בבית־הסוהר.
4 சிதறிப்போனவர்கள் எங்கும் சுற்றித்திரிந்து நற்செய்தியைப் போதித்துவந்தார்கள்.
באשר למאמינים שברחו מירושלים – הם הלכו ובישרו בכל מקום על אודות ישוע.
5 அப்பொழுது பிலிப்பு என்பவன் சமாரியாவிலுள்ள ஒரு பட்டணத்திற்குச் சென்று, அங்குள்ளவர்களுக்குக் கிறிஸ்துவைக்குறித்துப் போதித்தான்.
פיליפוס, למשל, הגיע לשומרון וסיפר לתושבי האזור על המשיח.
6 பிலிப்பு செய்த அதிசயங்களை மக்கள் கேள்விப்பட்டு கண்டு, அவனால் சொல்லப்பட்டவைகளை ஒருமனப்பட்டு கவனித்தார்கள்.
קהל גדול הקשיב לדבריו בתשומת לב והתפעל מהניסים שחולל.
7 அநேகருக்குள் இருந்த அசுத்தஆவிகள் மிகுந்த சத்தமிட்டு அவர்களைவிட்டுப்போனது. அநேக கைகால்கள் செயலிலந்தவர்களும், நடக்க இயலாதவர்களும் சுகமாக்கப்பட்டார்கள்.
הרבה רוחות רעות גורשו ויצאו מאנשים בצעקות אימים, והרבה פיסחים ומשותקים נרפאו כליל.
8 அந்தப் பட்டணத்திலே மிகுந்த மகிழ்ச்சி உண்டானது.
שמחה רבה הייתה בעיר.
9 சீமோன் என்ற ஒருவன் அந்தப் பட்டணத்திலே மாயவித்தை செய்து, தன்னை ஒரு பெரியவனென்று சொல்லி, சமாரியா நாட்டு மக்களைத் திகைக்கவைத்துக்கொண்டிருந்தான்.
באותה עיר היה אדם בשם שמעון, אשר עסק שנים רבות במעשי כשפים. הוא היה אדם גאה מאוד ובעל השפעה גדולה, בגלל הכשפים שעשה. השומרונים ממש העריצו אותו, והיו משוכנעים שהוא שליח אלוהים.
10 ௧0 தெய்வத்தின் பெரிய சக்தி இவன்தான் என்று நினைத்து, சிறியோர் பெரியோர் எல்லோரும் அவனுடைய சொல்லைக்கேட்டு வந்தார்கள்.
11 ௧௧ அவன் நீண்ட நாட்களாக தன்னுடைய மாயவித்தைகளினாலே அவர்களைப் பிரமிக்கப்பண்ணினதினால் அவனை மதித்துவந்தார்கள்.
12 ௧௨ தேவனுடைய இராஜ்யத்திற்கும் இயேசுகிறிஸ்துவினுடைய நாமத்திற்கும் ஏற்றவைகளைக்குறித்து, பிலிப்பு போதித்ததை அவர்கள் விசுவாசித்தபோது, ஆண்களும் பெண்களும் ஞானஸ்நானம் பெற்றார்கள்.
אולם עתה הם האמינו לדבריו של פיליפוס: שישוע הוא המשיח, ושמלכות אלוהים קרבה; ונשים וגברים רבים נטבלו במים.
13 ௧௩ அப்பொழுது சீமோனும் விசுவாசித்து ஞானஸ்நானம் பெற்று, பிலிப்பைச் சேர்ந்துகொண்டு, அவனால் நடந்த அடையாளங்களையும் பெரிய அற்புதங்களையும் பார்த்து பிரமித்தான்.
גם שמעון המכשף האמין לדברי פיליפוס ונטבל במים. מיד לאחר מכן הלך שמעון בעקבות פיליפוס לכל אשר הלך, והשתומם מאוד למראה הניסים שחולל.
14 ௧௪ சமாரியர் தேவவசனத்தை ஏற்றுக்கொண்டதை எருசலேமிலுள்ள அப்போஸ்தலர்கள் கேள்விப்பட்டு, பேதுருவையும் யோவானையும் அவர்களிடத்திற்கு அனுப்பினார்கள்.
כאשר שמעו השליחים בירושלים שאנשי שומרון האמינו בבשורת אלוהים, שלחו לשם את פטרוס ויוחנן.
15 ௧௫ இவர்கள் வந்தபொழுது அவர்களில் ஒருவரும் பரிசுத்த ஆவியானவரைப் பெறாமல் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே ஞானஸ்நானத்தைமட்டும் பெற்றிருந்தவர்களாகக் கண்டு,
כשהגיעו השניים לשומרון החלו מיד להתפלל בעד המאמינים החדשים האלה, כדי שגם הם יקבלו את רוח הקודש.
16 ௧௬ அவர்கள் பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக்கொள்ளும்படி அவர்களுக்காக ஜெபம்செய்து,
כי עד אז לא צלח רוח הקודש על איש מהם; הם רק נטבלו בשם ישוע.
17 ௧௭ அவர்கள்மேல் கரங்களை வைத்தார்கள், அப்பொழுது அவர்கள் பரிசுத்த ஆவியானவரைப் பெற்றார்கள்.
פטרוס ויוחנן סמכו את ידיהם על המאמינים החדשים, ואלה קיבלו את רוח הקודש.
18 ௧௮ அப்போஸ்தலர்கள் தங்களுடைய கரங்களை அவர்கள்மேல் வைத்ததினால் பரிசுத்த ஆவியானவர் கொடுக்கப்படுகிறதை சீமோன் பார்த்தபோது, அவர்களிடத்தில் பணத்தைக் கொண்டுவந்து:
כשראה שמעון שרוח הקודש ניתן למאמינים באמצעות סמיכת הידיים של פטרוס ויוחנן, הציע להם כסף תמורת הכוח הזה.
19 ௧௯ நான் எவன்மேல் என் கரங்களை வைக்கிறேனோ, அவனும் பரிசுத்த ஆவியானவரைப் பெறத்தக்கதாக எனக்கும் இந்த அதிகாரத்தைக் கொடுக்கவேண்டும் என்றான்.
”תנו גם לי את הכוח הזה, “ביקש,”כדי שבני־אדם יוכלו לקבל את רוח הקודש כל פעם שאניח את ידי עליהם!“
20 ௨0 பேதுரு அவனைப் பார்த்து: தேவனுடைய வரத்தை பணத்தினாலே சம்பாதித்துக்கொள்ளலாம் என்று நீ நினைத்தபடியால் உன் பணம் உன்னோடுகூட அழிந்து போகக்கடவது.
אולם פטרוס ענה לו:”כספך ילך יחד אתך לגיהינום! אתה חושב שאפשר לקנות בכסף את מתנת אלוהים?
21 ௨௧ உன் இருதயம் தேவனுக்கு முன்பாகச் செம்மையாக இல்லாதபடியால், இந்த விஷயத்திலே உனக்குப் பங்குமில்லை பாகமுமில்லை.
לא יהיה לך חלק בזה, משום שלבך אינו ישר לפני אלוהים.
22 ௨௨ ஆகவே, நீ உன் தீயகுணத்தைவிட்டு மனம்திரும்பி, தேவனை நோக்கி வேண்டிக்கொள்; ஒருவேளை உன் இருதயத்தின் எண்ணம் உனக்கு மன்னிக்கப்படலாம்.
עליך לחזור בתשובה על החטא הנורא הזה ולהתפלל אל אלוהים. אולי הוא יסלח לך על מחשבותיך הרעות,
23 ௨௩ நீ கசப்பான விஷத்திலும் பாவக்கட்டிலும் அகப்பட்டிருக்கிறதாகக் காண்கிறேன் என்றான்.
מפני שאני רואה בתוך לבך קנאה, מרירות וחטא מרושע!“
24 ௨௪ அதற்குச் சீமோன்: நீங்கள் சொன்ன காரியங்களில் ஒன்றும் எனக்கு சம்பவிக்காதபடிக்கு, எனக்காகக் கர்த்த்தரை வேண்டிக்கொள்ளுங்கள் என்றான்.
”התפללו לאלוהים בעדי, “התחנן שמעון,”כדי שלא יבואו עלי הדברים הנוראים שאמרתם!“
25 ௨௫ இவ்விதமாக அவர்கள் கர்த்தருடைய வார்த்தையைச் சாட்சியாக அறிவித்துச் சொன்னபின்பு, சமாரியருடைய அநேக கிராமங்களில் நற்செய்தியைப் போதித்து, எருசலேமுக்குத் திரும்பிவந்தார்கள்.
לאחר שפטרוס ויוחנן בישרו את דבר ה׳ והעידו על המשיח בשומרון, חזרו לירושלים. בדרך הם ביקרו ברבים מכפרי השומרון ובישרו את דבר ה׳.
26 ௨௬ பின்பு கர்த்தருடைய தூதன் பிலிப்பை நோக்கி: நீ எழுந்து, தெற்கு திசையாக எருசலேமிலிருந்து காசா பட்டணத்திற்குப் போகிற வனாந்திரப்பாதைவழியாகப் போ என்றான்.
ובאשר לפיליפוס – מלאך ה׳ נגלה אליו ואמר לו:”קום ולך דרומה בדרך היורדת מירושלים לעזה.“
27 ௨௭ அந்தப்படி அவன் எழுந்துபோனான். அப்பொழுது எத்தியோப்பியருடைய ராஜாத்தியாகிய கந்தாகே என்பவளுக்கு மந்திரியும் அவளுடைய பொக்கிஷமெல்லாவற்றிற்கும் தலைவனுமாக இருந்த எத்தியோப்பியனாகிய ஒருவன் தொழுதுகொள்ளும்படி எருசலேமுக்கு வந்திருந்து;
כשיצא פיליפוס לדרך בא לקראתו סריס כושי, אשר היה שר האוצר של קנדק מלכת כוש. הסריס עלה לירושלים כדי להשתחוות במקדש,
28 ௨௮ ஊருக்குத் திரும்பிப்போகும்போது, தன் இரதத்திலே உட்கார்ந்து, ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகத்தை வாசித்துக்கொண்டிருந்தான்.
ועכשיו ישב במרכבתו בדרכו חזרה, וקרא בקול בספר ישעיהו.
29 ௨௯ ஆவியானவர்: நீ போய், அந்த இரதத்துடனே சேர்ந்துகொள் என்று பிலிப்புடனே சொன்னார்.
”גש אל המרכבה הזאת והישאר לידה“, הורה רוח הקודש לפיליפוס.
30 ௩0 அப்பொழுது பிலிப்பு ஓடிப்போய்ச்சேர்ந்து, அவன் ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகத்தை வாசிக்கிறதைக் கேட்டு: நீர் வாசிக்கிறவைகளின் கருத்து உமக்குப் புரிகிறதா என்றான்.
פיליפוס רץ אל המרכבה ושמע את הסריס קורא בספר ישעיהו.”האם אתה מבין את מה שאתה קורא?“שאל פיליפוס.
31 ௩௧ அதற்கு அவன்: ஒருவன் எனக்குப் புரியவைக்காவிட்டால் அது எனக்கு எப்படி புரியும் என்று சொல்லி; பிலிப்பை, தன்னுடனே ஏறி உட்காரும்படி வேண்டிக்கொண்டான்.
”ודאי שלא!“ענה הסריס.”כיצד אוכל להבין אם איש אינו מסביר לי?“והוא ביקש מפיליפוס לעלות למרכבה ולשבת לידו.
32 ௩௨ அவன் வாசித்த வேதவாக்கியம் என்னவென்றால்: “அவர் ஒரு ஆட்டைப்போல அடிக்கப்படுவதற்குக் கொண்டுபோகப்பட்டார்; மயிர் கத்தரிக்கிறவனுக்கு முன்பாகச் சத்தம்போடாத ஆட்டுக்குட்டியைப்போல அவர் தமது வாயைத் திறவாதிருந்தார்.
זה היה הקטע שהכושי קרא באותו זמן:”כשה לטבח יובל וכרחל לפני גוזזיה נאלמה, ולא יפתח פיו.
33 ௩௩ அவர் தம்மைத் தாழ்த்தினபோது அவருடைய நியாயம் எடுத்துப்போடப்பட்டது; அவருடைய ஜீவன் பூமியிலிருந்து எடுபட்டுப்போனது; அவருடைய வம்சத்தை யாராலே சொல்லிமுடியும்” என்பதே.
מעצר וממשפט לקח, ואת־דורו מי ישוחח? כי נגזר מארץ חיים.“
34 ௩௪ மந்திரி பிலிப்பை நோக்கி: “தீர்க்கதரிசி யாரைக்குறித்து இதைச் சொல்லுகிறார்? தம்மைக்குறித்தோ, வேறொருவரைக்குறித்தோ? எனக்குச் சொல்லவேண்டும்” என்று கேட்டுக்கொண்டான்.
”על מי מדבר הנביא?“שאל הסריס את פיליפוס.”האם הוא מדבר על עצמו או על מישהו אחר?“
35 ௩௫ அப்பொழுது பிலிப்பு பேசத்தொடங்கி, இந்த வேதவாக்கியத்தை அடிப்படையாக வைத்து இயேசுவைக்குறித்து அவனுக்குப் போதித்தான்.
פיליפוס פתח בפסוק זה והחל לספר לו על אודות ישוע.
36 ௩௬ இவ்விதமாக அவர்கள் போய்க்கொண்டிருக்கும்போது, தண்ணீர் உள்ள ஒரு இடத்திற்கு வந்தார்கள். அப்பொழுது மந்திரி: “இதோ, தண்ணீர் இருக்கிறதே, நான் ஞானஸ்நானம் பெறுகிறதற்குத் தடை என்ன” என்றான்.
הם המשיכו בדרכם והגיעו למקווה־מים קטן.”ראה, הנה בריכת מים!“קרא הסריס.”מדוע שלא אטבל כאן?“
37 ௩௭ அதற்குப் பிலிப்பு: “நீர் முழு இருதயத்தோடும் விசுவாசித்தால் தடையில்லை” என்றான். அப்பொழுது அவன்: “இயேசுகிறிஸ்துவை தேவனுடைய குமாரனென்று விசுவாசிக்கிறேன்” என்று சொல்லி;
”אתה יכול להיטבל כאן, “השיב פיליפוס,”אם אתה מאמין בכל לבך!“והכושי ענה:”אני מאמין בכל לבי שישוע המשיח הוא בן האלוהים!“
38 ௩௮ இரதத்தை நிறுத்தச்சொன்னான். அப்பொழுது பிலிப்புவும் மந்திரியும் தண்ணீரில் இறங்கினார்கள், பிலிப்பு அவனுக்கு ஞானஸ்நானம் கொடுத்தான்.
הם עצרו את המרכבה, נכנסו לתוך המים, ופיליפוס הטביל את הסריס.
39 ௩௯ அவர்கள் தண்ணீரைவிட்டுக் கரையேறினபொழுது, கர்த்தருடைய ஆவியானவர் பிலிப்பைக் கொண்டுபோய்விட்டார். மந்திரி அதற்குப்பின்பு அவனைக் காணாமல், சந்தோஷத்தோடு தன் வழியே போனான்.
כשיצאו שניהם מן המים נשאה משם רוח ה׳ את פיליפוס. הסריס לא ראה שוב את פיליפוס והוא המשיך בדרכו בלב שמח.
40 ௪0 பிலிப்பு ஆசோத்திலே காணப்பட்டு, அந்த இடத்திலிருந்து பிரயாணம்பண்ணி, செசரியாவிற்கு வருகிறவரையில் அனைத்து பட்டணங்களிலும் நற்செய்தியைப் போதித்துக்கொண்டுவந்தான்.
בינתיים פיליפוס נראה באשדוד. הוא המשיך להטיף את הבשורה בכל עיר ובכל כפר, עד שהגיע לקיסריה.

< அப்போஸ்தலர் 8 >