< அப்போஸ்தலர் 7 >

1 பிரதான ஆசாரியன் அவனை நோக்கி: காரியம் இப்படியா இருக்கிறது என்று கேட்டான்.
大祭司が言った,「これらのことはそのとおりなのか」。
2 அதற்கு அவன்: சகோதரர்களே, தகப்பன்மார்களே, கேளுங்கள். நம்முடைய முற்பிதாவாகிய ஆபிரகாம் காரானூரிலே குடியிருக்கிறதற்கு முன்பே மெசொப்பொத்தாமியா நாட்டிலே இருக்கும்போது மகிமையின் தேவன் அவனுக்குத் தரிசனமாகி:
彼は言った,「兄弟たち,また父たちよ,聞いてください。わたしたちの父祖アブラハムがハランに住む前,まだメソポタミアにいた時に,栄光の神が彼に現われて,
3 நீ உன் தேசத்தையும் உன் இனத்தையும்விட்டுப் புறப்பட்டு, நான் உனக்குக் காண்பிக்கும் தேசத்திற்குப் போ என்றார்.
こう言われました。『あなたの土地,またあなたの親族から出て,わたしがあなたに示す土地に行きなさい』。
4 அப்பொழுது அவன் கல்தேயர் தேசத்தைவிட்டுப் புறப்பட்டு, காரானூரிலே குடியிருந்தான். அவனுடைய தகப்பன் மரித்தபின்பு, அந்த இடத்தைவிட்டு நீங்கள் இப்பொழுது குடியிருக்கிற இந்த தேசத்திற்கு அவனை அழைத்துக்கொண்டுவந்து குடியிருக்கும்படி செய்தார்.
それで彼はカルデア人の土地から出て,ハランに住みました。彼の父が死んだのち,神はそこから,あなた方が今住んでいるこの土地へ,彼を移されました。
5 இதிலே ஒரு அடி நிலத்தையாவது அவனுக்கு சொத்தாகக் கொடுக்காமல், அவனுக்குப் பிள்ளையில்லாதிருக்கும்போது: உனக்கும் உனக்குப் பின்வரும் உன் சந்ததிக்கும் இதை சொத்தாகத் தருவேன் என்று அவனுக்கு வாக்குத்தத்தம்பண்ணினார்.
ここでは何の相続財産も,そうです,足の踏み場となるほどのものさえもお与えになりませんでした。ここを所有物として彼に,また彼の後でその子孫に与えると約束されましたが,その時には彼にはまだ子供がいなかったのです。
6 அப்படியே, தேவன் அவனை நோக்கி: உன் சந்ததியார் வேறு தேசத்தில் குடியிருப்பார்கள்; அந்த தேசத்தார் அவர்களை அடிமைகளாக்கி, நானூறு வருடங்கள் துன்பப்படுத்துவார்கள்.
神はこのように語られました。彼の子孫は見知らぬ土地で異国人として住み,四百年のあいだ奴隷にされ,虐待されるだろう,と。
7 அவர்களை அடிமைப்படுத்தும் மக்களை நான் தண்டிப்பேன். அதற்குப்பின்பு அவர்கள் புறப்பட்டுவந்து இந்த இடத்திலே எனக்கு ஆராதனை செய்வார்கள் என்றார்.
『彼らを奴隷にする民族を,わたしは裁くだろう』と神は言われました。『そしてそののち,彼らは出て来て,この場所でわたしに仕えるだろう』。
8 மேலும் விருத்தசேதன உடன்படிக்கையையும் அவனுக்கு ஏற்படுத்தினார். அந்தப்படியே அவன் ஈசாக்கைப் பெற்றபோது, எட்டாம் நாளிலே அவனுக்கு விருத்தசேதனம்பண்ணினான். ஈசாக்கு யாக்கோபையும், யாக்கோபு பன்னிரண்டு கோத்திரப்பிதாக்களையும் பெற்றார்கள்.
神は彼に割礼の契約を与えられました。こうして,アブラハムはイサクの父となり,八日目に彼に割礼を施しました。イサクはヤコブの父となり,ヤコブは十二人の族長たちの父となりました。
9 அந்தக் கோத்திரப்பிதாக்கள் பொறாமைகொண்டு யோசேப்பை எகிப்துக்குக் கொண்டுபோகும்படியாக விற்றுப்போட்டார்கள்.
「この族長たちは,ヨセフに対するねたみに動かされ,彼をエジプトに売りました。神は彼と共におられ,
10 ௧0 தேவனோ அவனோடிருந்து, எல்லா உபத்திரவங்களில் இருந்தும் அவனை விடுவித்து, எகிப்தின் ராஜாவாகிய பார்வோனிடம் அவனுக்கு தயவையும் ஞானத்தையும் அருளினார்; அந்த ராஜா அவனை எகிப்துதேசத்திற்கும் தன் வீடு அனைத்திற்கும் அதிகாரியாக ஏற்படுத்தினான்.
そのあらゆる苦難から彼を救い出し,エジプトの王ファラオの前で彼に好意と知恵を与えられました。ファラオは彼に,エジプトと王の家全体を治めさせたのです。
11 ௧௧ பின்பு எகிப்து கானான் என்னும் தேசங்களிலெங்கும் பஞ்சமும் அதிக வருத்தமும் உண்டாகி, நம்முடைய முற்பிதாக்களுக்கு ஆகாரம் கிடைக்காமல்போனது.
さて,エジプトとカナンの全土にききんが起こり,大きな苦難が臨みました。わたしたちの父祖たちは食物を見つけることができなくなりました。
12 ௧௨ அப்பொழுது எகிப்திலே தானியம் உண்டு என்று யாக்கோபு கேள்விப்பட்டு, யோசேப்புடைய மூத்த சகோதரர்களை முதல்முறை அனுப்பினான்.
しかし,ヤコブはエジプトに穀物があると聞いて,わたしたちの父祖たちを最初に遣わしました。
13 ௧௩ இரண்டாம்முறை யோசேப்பு தன்னுடைய சகோதரர்களுக்குத் தன்னைத் தெரியப்படுத்தினான். யோசேப்புடைய வம்சமும் பார்வோனுக்குத் தெரியவந்தது.
二度目の時,ヨセフのことがその兄弟たちに知らされ,ヨセフの一族のことがファラオに明らかにされました。
14 ௧௪ பின்பு யோசேப்பு, தன்னுடைய தகப்பன் யாக்கோபையும் தன்னுடைய இனத்தார் எழுபத்தைந்துபேரையும் அழைத்துவரும்படி அனுப்பினான்.
ヨセフは人を遣わして,その父ヤコブ,また親族全体,すなわち七十五人の魂を呼び寄せました。
15 ௧௫ அந்தப்படி யாக்கோபு எகிப்துக்குப் போனான். அவனும் நம்முடைய முற்பிதாக்களும் மரித்து,
ヤコブはエジプトに下って行き,やがて彼自身もわたしたちの父祖たちも死にました。
16 ௧௬ அங்கேயிருந்து சீகேமுக்குக் கொண்டுவரப்பட்டு, ஆபிரகாம் சீகேமின் தகப்பனாகிய ஏமோருடைய சந்ததியாரிடத்தில் விலைக்கு வாங்கியிருந்த கல்லறையில் வைக்கப்பட்டார்கள்.
そして彼らはシェケムに持ち帰られ,アブラハムが銀を支払ってシェケムのハモルの子らから買っておいた墓に横たえられました。
17 ௧௭ ஆபிரகாமுக்கு தேவன் ஆணையிட்டு அருளின வாக்குத்தத்தம் நிறைவேறும் நேரம் நெருங்கியபோது,
「一方,神がアブラハムに誓われた約束の時が近づくにつれ,民はエジプトで殖え広がってゆき,
18 ௧௮ யோசேப்பைத் தெரியாத வேறொரு ராஜா தோன்றின காலம்வரையிலும், மக்கள் எகிப்திலே பலுகிப் பெருகினார்கள்.
ついにヨセフのことを知らない別の王が現われました。
19 ௧௯ அவன் நம்முடைய மக்களை வஞ்சகமாக நடப்பித்து, நம்முடைய முற்பிதாக்களின் குழந்தைகள் உயிரோடிராதபடிக்கு அவர்கள் அவைகளை வெளியே போட்டுவிடும்படி செய்து, அவர்களை உபத்திரவப்படுத்தினான்.
この王はわたしたちの同族に対して悪巧みをし,わたしたちの父祖たちを虐げ,無理やりにその赤子たちを捨てさせ,生かしておけないようにしました。
20 ௨0 அக்காலத்திலே மோசே பிறந்து, மிகுந்த அழகுள்ளவனாக இருந்து, மூன்று மாதங்கள் தன் தகப்பன் வீட்டிலே வளர்க்கப்பட்டான்.
そうした時にモーセが生まれましたが,非常に美しい子でした。彼は三か月の間,自分の父の家で養われました。
21 ௨௧ அவன் வீட்டிற்கு வெளியே போட்டுவிடப்பட்டபோது, பார்வோனுடைய மகள் அவனை எடுத்துத் தனக்குப் பிள்ளையாக வளர்த்தாள்.
捨てられた時,ファラオの娘が彼を拾い上げ,彼を自分の子として育てました。
22 ௨௨ மோசே எகிப்தியருடைய எல்லா சாஸ்திரங்களிலும் கற்பிக்கப்பட்டு, வாக்கிலும் செய்கையிலும் வல்லவனானான்.
モーセはエジプト人のあらゆる知恵を教え込まれました。彼は言葉にも業にも強力な者でした。
23 ௨௩ அவனுக்கு நாற்பது வயதானபோது, இஸ்ரவேலின் பிள்ளைகளாகிய தன்னுடைய சகோதரர்களைக் கண்டு சந்திக்கும்படி அவனுடைய இருதயத்தில் தோன்றியது.
しかし,四十歳になった時,自分の兄弟たち,すなわちイスラエルの子らのもとを訪ねようという気持ちがその心に起こりました。
24 ௨௪ அப்பொழுது அவர்களில் ஒருவன் அநியாயமாக நடத்தப்படுகிறதை அவன் கண்டு, அவனுக்குத் துணையாக இருந்து, எகிப்தியனை வெட்டி, துன்பப்பட்டவனுக்கு நியாயம் செய்தான்.
彼らのうちの一人が不当に苦しめられているのを見て,その人をかばい,エジプト人を打ち殺して,虐げられていたその人のためにあだを討ちました。
25 ௨௫ தன்னுடைய கையினாலே தேவன் தங்களுக்கு விடுதலையைத் தருவார் என்பதைத் தன்னுடைய சகோதரர்கள் தெரிந்துகொள்வார்களென்று அவன் நினைத்தான்; அவர்களோ அதை தெரிந்துகொள்ளவில்லை.
自分の手によって神が兄弟たちを救出しようとしておられることを,彼らが理解してくれるものと思っていたのですが,彼らは理解しませんでした。
26 ௨௬ மறுநாளிலே சண்டைபண்ணிக்கொண்டிருக்கிற இரண்டுபேரை அவன் கண்டு: மனிதர்களே, நீங்கள் சகோதரர்களாக இருக்கிறீர்கள்; ஒருவருக்கொருவர் அநியாயம் செய்கிறது என்ன என்று, அவர்களைச் சமாதானப்படுத்தும்படி பேசினான்.
「次の日,彼はけんかをしている人たちのところに現われて,彼らを仲直りさせようとして言いました,『君たちは兄弟同士ではないか。なぜ互いに傷つけ合うのか』。
27 ௨௭ ஆனால் மற்றவனுக்கு அநியாயஞ்செய்தவன் அவனைப் பிடித்துத் தள்ளி: எங்கள்மேல் அதிகாரியாகவும், நியாயாதிபதியாகவும் உன்னை நியமித்தவன் யார்?
しかし,隣人を傷つけていた者が彼を押しのけて言いました,『だれがお前を支配者や裁判官として我々の上に立てたのか。
28 ௨௮ நேற்று நீ அந்த எகிப்தியனைக் கொன்றதுபோல என்னையும் கொன்றுபோட நினைக்கிறாயோ என்றான்.
昨日あのエジプト人を殺したように,わたしを殺そうと思っているのか』。
29 ௨௯ இந்த வார்த்தையினிமித்தம் மோசே ஓடிப்போய், மீதியான் தேசத்திலே வசித்து வந்தான்; அங்கே இருக்கும்போது அவனுக்கு இரண்டு குமாரர்கள் பிறந்தார்கள்.
この言葉を聞いてモーセは逃げ,ミディアンの地で居留者となり,二人の子の父となりました。
30 ௩0 நாற்பது வருடங்கள் முடிந்தபின்பு, சீனாய்மலையின் வனாந்திரத்திலே கர்த்தருடைய தூதன் முட்செடி எரிகிற அக்கினிஜூவாலையிலே அவனுக்குத் தரிசனமானார்.
「四十年が満ちた時,シナイ山の荒野において,燃える茂みの炎の中で,主のみ使いが彼に現われました。
31 ௩௧ மோசே அந்தத் தரிசனத்தைக் கண்டு, அதிசயப்பட்டு, அதை உற்றுப்பார்க்கும்படி அருகில் வரும்போது:
これを見て,モーセはその光景を不思議に思いました。よく見ようとして近づくと,主の声が彼に臨みました。
32 ௩௨ நான் ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனும் யாக்கோபின் தேவனுமாகிய உன் முற்பிதாக்களுடைய தேவனாக இருக்கிறேன் என்று கர்த்தர் உரைத்த சத்தம் அவனுக்குக் கேட்டது. அப்பொழுது மோசே நடுக்கமடைந்து, உற்றுப்பார்க்கத் துணிச்சல் இல்லாமலிருந்தான்.
『わたしはあなたの父祖たちの神,すなわち,アブラハムの神,イサクの神,ヤコブの神だ』。モーセはおののいて,もはや見ようとはしませんでした。
33 ௩௩ பின்னும் கர்த்தர் அவனை நோக்கி: உன் பாதங்களிலிருக்கிற காலணிகளைக் கழற்றிப்போடு; நீ நிற்கிற இடம் பரிசுத்த பூமியாக இருக்கிறது.
主は彼に言われました,『あなたの足のサンダルを脱ぎなさい。あなたが立っている場所は聖なる地なのだ。
34 ௩௪ எகிப்திலிருக்கிற என் மக்களின் உபத்திரவத்தை நான் கண்டு, அவர்கள் பெருமூச்சைக்கேட்டு, அவர்களை விடுவிக்கும்படி இறங்கினேன்; ஆகவே, நீ வா, நான் உன்னை எகிப்திற்கு அனுப்புவேன் என்றார்.
わたしは,エジプトにいるわたしの民の苦難を確かに目にし,彼らのうめきを聞いた。それで,彼らを救い出すために下って来たのだ。さあ,行きなさい。わたしはあなたをエジプトに遣わそう』。
35 ௩௫ உன்னை அதிகாரியாகவும் நியாயாதிபதியாகவும் நியமித்தவன் யார் என்று சொல்லி அவர்கள் நிராகரித்த இந்த மோசேயைத்தான் தேவன், முட்செடியில் அவனுக்குத் தரிசனமான தூதனாலே தலைவனாகவும் மீட்பனாகவும் அனுப்பினார்.
「このモーセ,すなわち,『だれがお前を支配者や裁判官としたのか』と言って彼らが拒んだ人を,神は,茂みの中で彼に現われたみ使いの手によって,支配者また救出者として遣わされたのです。
36 ௩௬ இவனே அவர்களை அங்கேயிருந்து அழைத்துக்கொண்டுவந்து, எகிப்து தேசத்திலேயும் செங்கடலிலேயும், நாற்பது வருடகாலமாக வனாந்திரத்திலேயும், அற்புதங்களையும் அடையாளங்களையும் செய்தான்.
この人が,エジプトにおいても,紅海においても,また荒野での四十年間においても,不思議な業としるしを行ないながら,彼らを導き出したのです。
37 ௩௭ இஸ்ரவேல் மக்களை நோக்கி: உங்களுடைய தேவனாகிய கர்த்தர் உங்களுடைய சகோதரர்களிலிருந்து என்னைப்போல ஒரு தீர்க்கதரிசியை உங்களுக்காக ஏற்படுத்துவார், அவர் சொல்வதை கேட்பீர்களாக என்று சொன்னவனும் இந்த மோசேயே.
これこそ,イスラエルの子らに,『わたしたちの神なる主は,わたしを起こされたように,あなた方の兄弟たちの中からあなた方のために一人の預言者を起こされるだろう』と言った,あのモーセなのです。
38 ௩௮ சீனாய்மலையில் தன்னோடு பேசின தூதனோடும் நம்முடைய முற்பிதாக்களோடும் வனாந்திரத்தில் இருந்தவனும், நமக்குக் கொடுக்கும்படி ஜீவவார்த்தைகளைப் பெற்றவனும் இவனே.
これこそ,荒野での集会において,シナイ山で彼に語りかけたみ使いやわたしたちの父祖たちと共にいて,生ける託宣を受け,それをわたしたちに伝えた人なのです。
39 ௩௯ இவனுக்கு நம்முடைய முற்பிதாக்கள் கீழ்ப்படிய மனமில்லாமல், இவனைத் தள்ளிவிட்டு, தங்களுடைய இருதயங்களில் எகிப்துக்குத் திரும்பி,
わたしたちの父祖たちは彼に対して従順ではなく,かえって彼をはねのけ,心の中でエジプトに引き返し,
40 ௪0 ஆரோனை நோக்கி: எகிப்துதேசத்திலிருந்து எங்களை அழைத்துக்கொண்டுவந்த அந்த மோசேக்கு என்ன ஆனதோ தெரியாது; ஆதலால் எங்களுக்கு முன்னேசெல்லும் தெய்வங்களை எங்களுக்கு உண்டுபண்ணும் என்று சொல்லி;
アロンにこう言いました。『わたしたちの前を行く神々を造ってください。わたしたちをエジプトの地から導き出したあのモーセについては,彼がどうなったか分からないからです』。
41 ௪௧ அந்த நாட்களில் ஒரு கன்றுக்குட்டியை உண்டுபண்ணி, அந்த விக்கிரகத்திற்குப் பலியிட்டு, தங்களுடைய கைவேலைகளில் மகிழ்ந்திருந்தார்கள்.
彼らはそのころに子牛を造り,その偶像に犠牲をささげ,自分たちの手の業のうちで喜びました。
42 ௪௨ அப்பொழுது தேவன் அவர்களைவிட்டு விலகி, வானத்தின் கோள்களுக்கு ஆராதனைசெய்ய அவர்களை ஒப்புக்கொடுத்தார். அதைக்குறித்து: இஸ்ரவேல் வம்சத்தாரே, நீங்கள் வனாந்திரத்திலிருந்த நாற்பது வருடங்கள்வரையில் காணிக்கைகளையும் பலிகளையும் எனக்குச் செலுத்தினீர்களோ என்றும்,
一方,神は背を向け,彼らが天の軍勢に仕えるままにされました。預言者たちの書にこう書かれているとおりです。 『イスラエルの家よ,あなた方は荒野にいた四十年の間に,ほふられた獣と犠牲とをわたしにささげたことがあったか。
43 ௪௩ பணிந்துகொள்ளும்படி நீங்கள் உண்டாக்கின சொரூபங்களாகிய மோளோகினுடைய கூடாரத்தையும், உங்களுடைய தேவனாகிய ரெம்பான் என்னும் நட்சத்திர சொரூபத்தையும் சுமந்தீர்களே; ஆகவே, உங்களைப் பாபிலோனுக்கு அப்புறத்திலே குடிபோகப்பண்ணுவேன்’ என்றும் தீர்க்கதரிசிகளின் புத்தகத்தில் எழுதியிருக்கிறதே.
あなた方が担ぎ上げたのは,モロクの幕屋,あなた方の神レファンの星,崇拝するために自分で造った像だった。わたしはあなた方をバビロンのかなたに運び去るだろう』。
44 ௪௪ மேலும் நீ பார்த்த மாதிரியின்படியே சாட்சியின் கூடாரத்தை உண்டுபண்ணு என்று மோசேயுடனே பேசினவர் கட்டளையிட்டபடி, அந்தக் கூடாரம் வனாந்திரத்திலே நம்முடைய முற்பிதாக்களோடு இருந்தது.
「わたしたちの父祖たちには,荒野に証明の幕屋がありました。それは,モーセに語った方が,彼の見たままの形に従って造るようにと命じられたとおりのものでした。
45 ௪௫ மேலும், யோசுவாவோடுகூட நம்முடைய முற்பிதாக்கள் அதைப் பெற்றுக்கொண்டு, தேவன் அவர்களுக்கு முன்பாகத் துரத்திவிட்ட யூதரல்லாதவர்களுடைய தேசத்தை அவர்கள் கைப்பற்றிக்கொள்ளும்போது, அதை அந்த தேசத்திற்கு கொண்டுவந்து தாவீதின் நாள்வரை வைத்திருந்தார்கள்.
わたしたちの父祖たちもこれを受け継いで,神がわたしたちの父祖たちの面前から追い払われた諸国民の所有地に入る時,ヨシュアと共にそれを持ち込み,ダビデの日々に及びました。
46 ௪௬ இவன் தேவனிடத்தில் தயவு பெற்றபடியினால், யாக்கோபின் தேவனுக்கு ஒரு ஆலயத்தைத் தான் கட்டவேண்டுமென்று விண்ணப்பம்பண்ணினான்.
ダビデは神のみ前で好意を受け,ヤコブの神のために住まいを設けたいと願いました。
47 ௪௭ சாலொமோனோ அவருக்கு ஆலயத்தைக் கட்டினான்.
しかし,ソロモンが神のために家を建てました。
48 ௪௮ ஆனாலும் உன்னதமான தேவன் கைகளினால் செய்யப்பட்ட ஆலயங்களில் வாசம்பண்ணுவதில்லை.
ですが,いと高き方は手で造った神殿の中には住まわれません。預言者が言っているとおりです。
49 ௪௯ வானம் எனக்குச் சிங்காசனமும் பூமி எனக்குப் பாதபடியுமாக இருக்கிறது; எனக்காக நீங்கள் எப்படிப்பட்ட வீட்டைக் கட்டுவீர்கள்; நான் தங்கியிருக்கத்தக்க இடம் எது;
『天はわたしの王座,地はわたしの足台。あなた方はわたしのためにどんな家を建てるのか』と,主は言われる。『あるいは,わたしの休む場所とはどこか。
50 ௫0 இவைகள் எல்லாவற்றையும் என்னுடைய கரம் உண்டாக்கவில்லையா’ என்று கர்த்தர் உரைக்கிறார் என்று தீர்க்கதரிசி சொல்லியிருக்கிறானே.
これらのすべてのものは,わたしの手が造ったものではないか』。
51 ௫௧ “வணங்காக் கழுத்துள்ளவர்களே, இருதயத்திலும் காதுகளிலும் விருத்தசேதனம் பெறாதவர்களே, உங்களுடைய முற்பிதாக்களைப்போல நீங்களும் பரிசுத்த ஆவியானவருக்கு எப்பொழுதும் எதிர்த்துநிற்கிறீர்கள்.
「強情で,心にも耳にも割礼を受けていない人たちよ。あなた方はいつも聖霊に抵抗しています! あなた方の父祖たちが行なったとおりに,あなた方も行なっているのです。
52 ௫௨ தீர்க்கதரிசிகளில் யாரை உங்களுடைய முற்பிதாக்கள் துன்பப்படுத்தாமல் இருந்தார்கள்? நீதிபரராகிய இயேசுவின் வருகையை முன்னறிவித்தவர்களையும் அவர்கள் கொலைசெய்தார்கள். இப்பொழுது நீங்கள் அவருக்குத் துரோகிகளும் அவரைக் கொலைசெய்த பாதகருமாக இருக்கிறீர்கள்.
預言者たちの中で,あなた方の父祖たちが迫害しなかった人がいるでしょうか。彼らは,義なる方の到来を予告した人たちを殺し,あなた方は今や,その方を裏切る者,また殺す者となりました。
53 ௫௩ தேவதூதர்களைக்கொண்டு நீங்கள் நியாயப்பிரமாணத்தைப் பெற்றிருந்தும், அதைக் கடைபிடிக்காமல்போனீர்கள்” என்றான்.
あなた方は,み使いたちの定めた律法を受けたのに,それを守らなかったのです!」
54 ௫௪ இவைகளை அவர்கள் கேட்டபொழுது மிகுந்த கோபமடைந்து, அவனைப் பார்த்துப் பல்லைக் கடித்தார்கள்.
さて,これを聞くと,人々は心を刺され,彼に向かって歯ぎしりをした。
55 ௫௫ அவன் பரிசுத்த ஆவியானவராலே நிறைந்தவனாக, வானத்தை அண்ணாந்துபார்த்து, தேவனுடைய மகிமையையும், தேவனுடைய வலதுபக்கத்தில் இயேசுவானவர் நிற்கிறதையும் பார்த்து:
しかし,彼は聖霊に満たされ,天をじっと見つめ,神の栄光と,神の右に立っているイエスを見て,
56 ௫௬ அதோ வானங்கள் திறந்திருக்கிறதையும், இயேசுவானவர் தேவனுடைய வலதுபக்கத்தில் நிற்கிறதையும் காண்கிறேன் என்றான்.
こう言った,「ご覧なさい,わたしには,天が開けて,人の子が神の右に立っておられるのが見えます!」
57 ௫௭ அப்பொழுது அவர்கள் உரத்த சத்தமாகக் கூக்குரலிட்டுத் தங்களுடைய காதுகளை அடைத்துக்கொண்டு, ஒன்றுசேர்ந்து அவன்மேல் பாய்ந்து,
すると,人々は大声で叫んで,耳をふさぎ,彼に向かっていっせいに突進した。
58 ௫௮ அவனை நகரத்திற்கு வெளியே தள்ளி, அவன் மீது கல்லெறிந்தார்கள். சாட்சிக்காரர்கள் தங்களுடைய ஆடைகளைக் கழற்றி, சவுல் என்னப்பட்ட ஒரு வாலிபனுடைய பாதத்தின் அருகே வைத்தார்கள்.
彼を町の外に投げ出して,石打ちにした。証人たちは,自分の外衣をサウロという名の若者の足もとに置いた。
59 ௫௯ அப்பொழுது: கர்த்தராகிய இயேசுவே, என் ஆவியை ஏற்றுக்கொள்ளும் என்று ஸ்தேவான் தொழுதுகொள்ளும்போது, அவனைக் கல்லெறிந்தார்கள்.
彼らがステファノを石打ちにしている間,彼は叫んで言った,「主イエスよ,わたしの霊をお受けください!」
60 ௬0 அவனோ, முழங்காற்படியிட்டு: ஆண்டவரே, இவர்கள்மேல் இந்தப்பாவத்தைச் சுமத்தாமல் இரும் என்று அதிக சத்தமிட்டுச் சொன்னான். இப்படிச் சொல்லி உயிரைவிட்டான்.
ひざまずいて,大声で叫んだ,「主よ,この罪を彼らに負わせないでください!」 こう言ってから,眠りについた。

< அப்போஸ்தலர் 7 >