< அப்போஸ்தலர் 4 >
1 ௧ பேதுருவும் யோவானும் மக்களுடனே பேசிக்கொண்டிருக்கும்போது, ஆசாரியர்களும் தேவாலயத்துப் படைத்தலைவனும் சதுசேயர்களும் அவர்களிடத்தில் வந்து,
Phi -e-rơ và Giăng đương nói với dân chúng, thì các thầy tế lễ, quan coi đền thờ, và người Sa-đu-sê thoạt đến,
2 ௨ அவர்கள் மக்களுக்கு போதிக்கிறதினாலும், இயேசுவை முன்வைத்து, மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுதலைப் பிரசங்கிக்கிறதினாலும், கோபமடைந்து,
tức mình vì hai người dạy dân chúng và rao truyền, nhơn Ðức Chúa Jêsus, sự từ kẻ chết sống lại.
3 ௩ அவர்களைப் பிடித்து, மாலைநேரமாக இருந்தபடியினால், மறுநாள்வரை காவலில் வைத்தார்கள்.
Họ bắt hai người giam vào ngục cho đến bữa sau, vì bấy giờ đã tối rồi.
4 ௪ வசனத்தைக் கேட்டவர்களில் அநேகர் விசுவாசித்தார்கள்; அவர்களுடைய தொகை ஏறக்குறைய ஐயாயிரமாக இருந்தது.
Dầu vậy, có nhiều người đã nghe đạo thì tin, số tín đồ lên đến độ năm ngàn.
5 ௫ மறுநாளிலே மக்களுடைய அதிகாரிகளும் மூப்பர்களும் வேதபண்டிதர்களும்,
Bữa sau, các quan, các trưởng lão, các thầy thông giáo nhóm tại thành Giê-ru-sa-lem,
6 ௬ பிரதான ஆசாரியனாகிய அன்னாவும், காய்பாவும், யோவானும், அலெக்சந்தரும், பிரதான ஆசாரியனுடைய குடும்பத்தார் அனைவரும் எருசலேமிலே கூடிவந்து,
với An-ne, là thầy cả thượng phẩm, Cai phe, Giăng, A-léc-xan-đơ và hết thảy mọi người thuộc về họ thầy cả thượng phẩm.
7 ௭ அவர்களை நடுவே நிறுத்தி: நீங்கள் எந்த வல்லமையினாலே, எந்த நாமத்தினாலே, இதைச் செய்தீர்கள் என்று கேட்டார்கள்.
Họ bắt Phi -e-rơ và Giăng đến hầu trước mặt mình, và hỏi rằng: Bởi quyền phép nào hay là nhơn danh ai mà các ngươi làm điều nầy?
8 ௮ அப்பொழுது பேதுரு பரிசுத்த ஆவியானவராலே நிறைந்து, அவர்களை நோக்கி: மக்களின் அதிகாரிகளே, இஸ்ரவேலின் மூப்பர்களே,
Bấy giờ Phi -e-rơ, đầy dẫy Ðức Thánh Linh, nói rằng: Hỡi các quan và các trưởng lão,
9 ௯ வியாதியாக இருந்த இந்த மனிதனுக்குச் செய்யப்பட்ட உபகாரத்தைக்குறித்து எதினாலே இவன் சுகமானான் என்று நீங்கள் இன்று எங்களிடம் விசாரித்துக்கேட்டால்,
nếu ngày nay chúng tôi bị tra hỏi vì đã làm phước cho một người tàn tật, lại hỏi chúng tôi thể nào người đó được lành,
10 ௧0 உங்களால் சிலுவையில் அறையப்பட்டவரும், தேவனால் மரித்தோரிலிருந்து உயிரோடு எழுப்பப்பட்டவருமாக இருக்கிற நசரேயனாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலேயே இவன் உங்களுக்கு முன்பாகச் சுகமாக்கப்பட்டவனாக நிற்கிறானென்று உங்களெல்லோருக்கும், இஸ்ரவேல் மக்களெல்லோருக்கும் தெரிந்திருக்கக்கடவது.
thì hết thảy các ông, và cả dân Y-sơ-ra-ên đều khá biết, ấy là nhơn danh Ðức Chúa Jêsus Christ ở Na-xa-rét, Ðấng mà các ông đã đóng đinh trên thập tự giá, và Ðức Chúa Trời đã khiến từ kẻ chết sống lại, ấy là nhờ Ngài mà người nầy được lành mạnh hiện đứng trước mặt các ông.
11 ௧௧ வீடுகட்டுகிறவர்களாகிய உங்களால் அற்பமாக நினைக்கப்பட்ட அவரே அஸ்திபாரத்திற்கு முதற்கல்லானவர்.
Jêsus nầy là hòn đá bị các ông xây nhà bỏ ra, rồi trở nên hòn đá góc nhà.
12 ௧௨ அவரைத்தவிர வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை; நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனிதர்களுக்குள்ளே அவருடைய நாமம்தவிர வேறொரு நாமம் கொடுக்கப்படவுமில்லை என்றான்.
Chẳng có sự cứu rỗi trong đấng nào khác; vì ở dưới trời, chẳng có danh nào khác ban cho loài người, để chúng ta phải nhờ đó mà được cứu.
13 ௧௩ பேதுருவும் யோவானும் பேசுகிற தைரியத்தை அவர்கள் கண்டு, அவர்கள் படிப்பறியாதவர்களென்றும் பேதைகளென்றும் அறிந்து ஆச்சரியப்பட்டு, அவர்கள் இயேசுவோடுகூட இருந்தவர்களென்றும் தெரிந்துகொண்டார்கள்.
Khi chúng thấy sự dạn dĩ của Phi -e-rơ và Giăng, biết rõ rằng ấy là người dốt nát không học, thì đều lấy làm lạ; lại nhận biết hai người từng ở với Ðức Chúa Jêsus.
14 ௧௪ சுகமாக்கப்பட்ட மனிதன் அவர்கள் அருகே நிற்கிறதைக் கண்டபடியால், எதிர்த்துபேச அவர்களுக்கு முடியாமற்போனது.
Nhưng vì thấy người được chữa lành đứng bên hai người, nên chúng không có lời gì để bẻ bác được hết.
15 ௧௫ அப்பொழுது அவர்களை ஆலோசனைச் சங்கத்தைவிட்டு வெளியே போகும்படி கட்டளையிட்டு, தங்களுக்குள்ளே யோசனைபண்ணிக்கொண்டு:
Chúng biểu hai người ra khỏi tòa công luận rồi, bèn bàn luận cùng nhau,
16 ௧௬ இந்த மனிதர்களை நாம் என்ன செய்யலாம்? எருசலேமில் வசிக்கின்ற எல்லோருக்கும் தெரிந்திருக்கிறபடி வெளிப்படையான அற்புதம் இவர்களால் செய்யப்பட்டதே, அதை நாம் இல்லையென்று சொல்லக்கூடாது.
rằng: Chúng ta xử với hai người nầy làm sao? Vì cả dân thành Giê-ru-sa-lem đều biết rõ thật họ đã làm ra một phép lạ sờ sờ; chúng ta chối không nổi.
17 ௧௭ ஆனாலும் இது அதிகமாக மக்களுக்குள்ளே பரவாதபடிக்கு, இதுமுதல் ஒருவரோடும் இந்த நாமத்தைக்குறித்துப் பேசக்கூடாதென்று, அவர்களை உறுதியாக எச்சரிக்கவேண்டும் என்று சொல்லிக்கொண்டு,
Dầu vậy, hầu cho việc khỏi đồn ra trong dân nữa, chúng ta nên lấy lời ngăm dọa, cầm họ, từ rày về sau, chớ lấy danh đó dạy dỗ không cứ là ai.
18 ௧௮ அவர்களை அழைத்து: இயேசுவின் நாமத்தைக்குறித்து எதையும் பேசவும், போதிக்கவும் கூடாதென்று அவர்களுக்குக் கட்டளையிட்டார்கள்.
Họ bèn đòi hai người vào, rồi cấm tiệt, chẳng cho nhơn danh Ðức Chúa Jêsus mà nói hay là dạy.
19 ௧௯ பேதுருவும் யோவானும் அவர்களை நோக்கி: தேவனுக்குச் செவிகொடுக்கிறதைவிட உங்களுக்குச் செவிகொடுக்கிறது தேவனுக்குமுன்பாக நியாயமாக இருக்குமோ என்று நீங்களே யோசித்துப்பாருங்கள்.
Nhưng Phi -e-rơ và Giăng trả lời rằng: Chính các ông hãy suy xét, trước mặt Ðức Chúa Trời có nên vâng lời các ông hơn là vâng lời Ðức Chúa Trời chăng?
20 ௨0 நாங்கள் கண்டவைகளையும் கேட்டவைகளையும் பேசாமலிருக்கக்கூடாதே என்றார்கள்.
Vì, về phần chúng tôi, không có thể chẳng nói về những điều mình đã thấy và nghe.
21 ௨௧ நடந்த சம்பவங்களைக்குறித்து எல்லோரும் தேவனை மகிமைப்படுத்தினபடியால், மக்களுக்குப் பயந்து அவர்களைத் தண்டிக்க வழியொன்றும் இல்லாமல், அவர்களைப் பயமுறுத்தி விட்டுவிட்டார்கள்.
Vậy, họ lại ngăm dọa hai người nữa, rồi tha ra, không tìm phương bắt tội, vì cớ dân chúng, bởi ai nầy đều ngợi khen Ðức Chúa Trời về việc đã xảy ra.
22 ௨௨ அற்புதமாகச் சுகமாக்கப்பட்ட மனிதன் நாற்பது வயதுக்கு மேற்பட்டவனாக இருந்தான்.
Vả, người đã nhờ phép lạ cho được chữa bịnh đó, là người đã hơn bốn mươi tuổi.
23 ௨௩ அவர்கள் விடுதலையாக்கப்பட்டப்பின்பு, தங்களைச் சேர்ந்தவர்களிடத்தில் வந்து, பிரதான ஆசாரியர்களும் மூப்பர்களும் தங்களுக்குச் சொன்ன எல்லாவற்றையும் அறிவித்தார்கள்.
Khi chúng đã tha ra, hai người đến cùng anh em mình, thuật lại mọi điều các thầy tế lễ cả và các trưởng lão đã nói.
24 ௨௪ அவர்கள் அதைக்கேட்டு, ஒருமனப்பட்டு தேவனை நோக்கிச் சத்தமிட்டு: கர்த்தாவே, நீர் வானத்தையும் பூமியையும் கடலையும் அவைகளிலுள்ள எல்லாவற்றையும் உண்டாக்கின தேவனாக இருக்கிறீர்.
Mọi người nghe đoạn, thì một lòng cất tiếng lên cầu Ðức Chúa Trời rằng: Lạy Chúa, là Ðấng dựng nên trời, đất, biển, cùng muôn vật trong đó,
25 ௨௫ யூதரல்லாதோர் கோபமடைந்து, மக்கள் வீணான காரியங்களைச் சிந்திப்பது ஏன் என்றும்,
và đã dùng Ðức Thánh Linh, phải bởi miệng tổ phụ chúng tôi, tức là đầy tớ Ngài, là vua Ða-vít, rằng: Vì sao các dân nổi giận, Lại vì sao các nước lập mưu vô ích?
26 ௨௬ கர்த்தருக்கு விரோதமாகவும் அவருடைய கிறிஸ்துவுக்கு விரோதமாகவும் பூமியின் ராஜாக்கள் எழும்பிநின்று, அதிகாரிகள் ஒன்றுகூடினார்கள் என்றும் தேவரீர் உம்முடைய அடியானாகிய தாவீதின் வாக்கினால் உரைத்தீரே.
Các vua trên mặt đất dấy lên, Các quan hiệp lại, Mà nghịch cùng Chúa và Ðấng chịu xức dầu của Ngài.
27 ௨௭ அந்தப்படி உம்முடைய கரமும் உம்முடைய ஆலோசனையும் முன்குறித்தவைகள் யாவையும் செய்யும்படி,
Vả, Hê-rốt và Bô-xơ Phi-lát, với các dân ngoại, cùng dân Y-sơ-ra-ên thật đã nhóm họp tại thành nầy đặng nghịch cùng Ðầy tớ thánh Ngài là Ðức Chúa Jêsus mà Ngài đã xức dầu cho,
28 ௨௮ ஏரோதும் பொந்தியுபிலாத்தும், யூதரல்லாதாரோடும் இஸ்ரவேல் மக்களோடுகூட, நீர் அபிஷேகம்பண்ணின உம்முடைய பரிசுத்த பிள்ளையாகிய இயேசுவிற்கு விரோதமாக, மெய்யாகவே கூட்டம் கூடினார்கள்.
để làm mọi việc tay Ngài và ý Ngài đã định rồi.
29 ௨௯ இப்பொழுதும், கர்த்தாவே, அவர்கள் பயமுறுத்தல்களை தேவரீர் கவனித்து,
Nầy, xin Chúa xem xét sự họ ngăm dọa, và ban cho các đầy tớ Ngài rao giảng đạo Ngài một cách dạn dĩ,
30 ௩0 உம்முடைய பரிசுத்த பிள்ளையாகிய இயேசுவின் நாமத்தினாலே அதிசயங்களும் அற்புதங்களும் நடக்கும்படிச் செய்து, நோயாளிகளைக் குணமாக்கும்படி உம்முடைய கரத்தை நீட்டி, உம்முடைய ஊழியக்காரர்கள் உம்முடைய வசனத்தை முழு தைரியத்தோடு சொல்லும்படி அவர்களுக்கு உதவி செய்தருளும்” என்றார்கள்.
giơ tay Ngài ra, để nhớ danh Ðầy tớ thánh của Ngài là Ðức Chúa Jêsus, mà làm những phép chữa lành bịnh, phép lạ và dấu kỳ.
31 ௩௧ அவர்கள் ஜெபம்பண்ணினபோது, அவர்கள் கூடியிருந்த இடம் அசைந்தது. அவர்களெல்லோரும் பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்பட்டு, தேவவார்த்தையைத் தைரியமாகச் சொன்னார்கள்.
Khi đã cầu nguyện, thì nơi nhóm lại rúng động; ai nấy đều được đầy dẫy Ðức Thánh Linh, giảng đạo Ðức Chúa Trời cách dạn dĩ.
32 ௩௨ திரளான விசுவாசக் கூட்டத்தார் ஒரே இருதயமும் ஒரே மனமுள்ளவர்களாக இருந்தார்கள். ஒருவனும் தனக்குள்ளவைகளில் ஒன்றையும் தன்னுடையதென்று சொல்லவில்லை; அனைத்தும் அவர்களுக்குப் பொதுவாக இருந்தது.
Vả, người tin theo đông lắm, cứ một lòng một ý cùng nhau. Chẳng ai kể của mình là của riêng; nhưng kể mọi vật là của chung cho nhau.
33 ௩௩ கர்த்தராகிய இயேசுவின் உயிர்த்தெழுதலைக்குறித்து அப்போஸ்தலர்கள் மிகுந்த உறுதியாக சாட்சிகொடுத்தார்கள்; அவர்களெல்லோர்மேலும் பூரணகிருபை உண்டாயிருந்தது.
Các sứ đồ lại lấy quyền phép rất lớn mà làm chứng về sự sống lại của Ðức Chúa Jêsus Christ; và hết thảy đều được phước lớn.
34 ௩௪ நிலங்களையும் வீடுகளையும் உடையவர்கள் அவைகளை விற்று, விற்கப்பட்டவைகளின் தொகையைக் கொண்டுவந்து,
Vì trong tín đồ không ai thiếu thốn cả, bởi những người có ruộng hay nhà, đều bán đi, bán được bao nhiêu tiền cũng đem đến
35 ௩௫ அப்போஸ்தலர்களுடைய பாதத்திலே வைத்தார்கள். அவனவனுக்குத் தேவைக்குத்தக்கதாகப் பகிர்ந்துகொடுக்கப்பட்டது; அவர்களில் ஒருவனுக்கும் ஒன்றும் குறைவாக இருந்ததில்லை.
đặt dưới chơn các sứ đồ; rồi tùy theo sự cần dùng của mỗi người mà phát cho.
36 ௩௬ சீப்புருதீவானும் லேவியனும் அப்போஸ்தலர்களாலே ஆறுதலின் மகன் என்று அர்த்தங்கொள்ளும் பர்னபா என்னும் மறுபெயர்பெற்றவனுமாகிய யோசே என்பவன்,
Vậy có Giô-sép mà các sứ đồ đặt tên là Ba-na-ba, nghĩa là con trai của sự yên ủi, về họ Lê-vi, quê hương tại Chíp-rơ,
37 ௩௭ தனக்கு உண்டாயிருந்த நிலத்தை விற்று, அதின் தொகையைக் கொண்டுவந்து, அப்போஸ்தலர்களுடைய பாதத்திலே வைத்தான்.
có một đám ruộng, bán đi, đem tiền đặt nơi chơn các sứ đồ.