< அப்போஸ்தலர் 28 >
1 ௧ நாங்கள் தப்பிக் கரையைச் சேர்ந்தப்பின்பு, அந்தத் தீவின் பெயர் மெலித்தா என்று அறிந்தோம்.
Od lidí, kteří se seběhli k místu naší záchrany, jsme se dozvěděli, že jsme na ostrově Malta.
2 ௨ அறிமுகமில்லாத அந்தத் தீவின் மக்கள் எங்களுக்குப் பாராட்டின அன்பு கொஞ்சமல்ல. அந்த நேரத்திலே பிடித்திருந்த மழைக்காகவும் குளிருக்காகவும் அவர்கள் நெருப்பை மூட்டி, எங்கள் அனைவரையும் சேர்த்துக்கொண்டார்கள்.
Byli k nám neobyčejně laskaví. Pršelo a bylo zima, a tak nám rozdělali velký oheň a vůbec se o nás starali.
3 ௩ பவுல் சில விறகுகளை வாரி அந்த நெருப்பின்மேல் போடும்போது, ஒரு விரியன்பாம்பு வெப்பம் தாங்காமல் வெளியே வந்து அவனுடைய கையைக் கவ்விக்கொண்டது.
Pavel také pomáhal sbírat chrastí. Jak je však přikládal na oheň, vylezla z jeho otýpky zmije vypuzená horkem a zakousla se mu do ruky.
4 ௪ விரியன்பாம்பு அவன் கையிலே தொங்குகிறதை அறிமுகமில்லாத அந்தத் தீவின் மக்கள் கண்டபோது, இந்த மனிதன் கொலைபாதகன், இதற்குச் சந்தேகமில்லை; இவன் கடலிலிருந்து தப்பிவந்தும், பழியானது இவனைப் பிழைக்க விடவில்லை என்று தங்களுக்குள்ளே சொல்லிக்கொண்டார்கள்.
Mezi domorodci se ozvalo: „Ten člověk je jistě vrah! Zachránil se z moře, ale božské spravedlnosti neutekl.“
5 ௫ அவன் அந்த விரியன் பாம்பை தீயிலே உதறிப்போட்டு, ஒரு தீங்கும் அடையாதிருந்தான்.
Pavel však klidně hada setřásl do ohně a nic zlého se s ním nedělo.
6 ௬ அவனுக்கு வீக்கங்கொண்டு, அல்லது அவன் உடனடியாக விழுந்து சாவானென்று அவர்கள் பார்த்துக்கொண்டிருந்தார்கள்; நெடுநேரமாகப் பார்த்துக்கொண்டிருந்தும், ஒரு சேதமும் அவனுக்கு வராததைக் கண்டபோது, தங்களுடைய எண்ணத்தை மாற்றி, அவர் ஒரு தெய்வம் என்று சொல்லிக்கொண்டார்கள்.
Lidé čekali, že opuchne a zemře. Když však byl Pavel i po hodné době v pořádku, začali si lidé šeptat, že je to asi nějaký vtělený bůh.
7 ௭ தீவிற்கு முதலாளியாகிய புபிலியு என்னும் பெயர்கொண்டவனுடைய நிலங்கள் அந்த இடத்திற்கு அருகில் இருந்தது; அவன் எங்களை ஏற்றுக்கொண்டு, மூன்று நாட்கள் அன்போடு உபசரித்தான்.
Zachránili jsme se na pomezí statků Publia, římského správce ostrova. Přijal nás a tři dny přátelsky hostil.
8 ௮ புபிலியுவினுடைய தகப்பன் காய்ச்சலாலும் இரத்த பேதியினாலும் வியாதிப்பட்டு கிடந்தான்; பவுல் அவனிடத்திற்குப்போய் ஜெபம்பண்ணி, அவன்மேல் கரங்களை வைத்து, அவனைக் குணமாக்கினான்.
Publiův otec stonal – byl postižen horečnatou úplavicí. Pavel ho navštívil, modlil se nad ním a pak ho dotekem rukou uzdravil.
9 ௯ இது நடந்தபின்பு, தீவிலே இருந்த மற்ற வியாதிக்காரர்களும் வந்து குணமாக்கப்பட்டார்கள்.
Rozkřiklo se to po ostrově, a tak ze všech stran přicházeli za Pavlem nemocní a on je uzdravoval.
10 ௧0 அவர்கள் எங்களுக்கு அதிக மரியாதை செய்து, நாங்கள் கப்பல் ஏறிப்போகிறபோது எங்களுக்குத் தேவையானவைகளை ஏற்றினார்கள்.
Za to si nás ohromně vážili a před odjezdem nás zahrnuli všemi potřebnými věcmi.
11 ௧௧ மூன்று மாதங்கள் சென்றபின்பு, அந்தத் தீவிலே மழைகாலத்திற்கு தங்கியிருந்த மிதுனம் என்னும் அடையாளமுடைய அலெக்சந்திரியா பட்டணத்துக் கப்பலில் நாங்கள் ஏறிப் புறப்பட்டு,
Trvalo to však tři měsíce, než jsme mohli pokračovat v cestě. Vzala nás loď, která měla domovský přístav v Alexandrii a jejímž znamením byla dvojčata Kastor a Pollux, ochránci námořníků.
12 ௧௨ சீரகூசா பட்டணத்தைச் சேர்ந்து, அங்கே மூன்று நாட்கள் தங்கினோம்.
Přistála nejprve v Syrakusách na Sicílii, kde jsme se zdrželi tři dny.
13 ௧௩ அந்த இடத்தைவிட்டுக் கரையோரமாகச் சுற்றி பயணம்செய்து, ரேகியு துறைமுகத்திற்கு வந்துசேர்ந்தோம். மறுநாளில் தென்றல் காற்றடிக்கும்போது புறப்பட்டு, இரண்டாம் நாள் புத்தேயோலி பட்டணத்திற்கு வந்து,
Pak jsme přepluli úžinu do Regia a s jižním větrem v zádech jsme se po dalších dvou dnech dostali do přístavu Puteoli.
14 ௧௪ அங்கே சகோதரர்களைக் கண்டோம்; அவர்கள் எங்களை ஏழுநாட்கள் தங்களிடத்தில் இருக்கும்படி வேண்டிக்கொண்டார்கள்; அந்தப்படி நாங்கள் இருந்து, பின்பு ரோமாபுரிக்குப் போனோம்.
Tam tedy skončila naše pohnutá plavba do Itálie. Na prosby tamních křesťanů jsme zůstali v Puteolech celý týden.
15 ௧௫ அந்த இடத்திலுள்ள சகோதரர்கள் நாங்கள் வருகிற செய்தியைக் கேள்விப்பட்டு, சிலர் அப்பியுபரம்வரைக்கும், சிலர் மூன்று தங்கும் விடுதி என்ற இடம்வரைக்கும், எங்களுக்கு எதிர்கொண்டுவந்தார்கள்; அவர்களைப் பவுல் கண்டு, தேவனை ஸ்தோத்திரித்துத் தைரியமடைந்தார்கள்.
Odtud jsme se pěšky vydali do Říma. Mezitím se o nás dozvěděli bratři v Římě a někteří nám přišli naproti sedmdesát kilometrů, až na Appiovo tržiště, jiní alespoň ke Třem hospodám. Když se s nimi Pavel setkal, děkoval Bohu a šel dál s novou odvahou.
16 ௧௬ நாங்கள் ரோமாபுரியில் சேர்ந்தபோது, நூறுபேருக்குத் தலைவன் தன் காவலலிருந்தவர்களைப் போர்த்தலைவனிடத்தில் ஒப்புக்கொடுத்தான்; அப்பொழுது பவுல் தன்னைக் காத்திருக்கிற போர்ச்சேவகனுடனே தனித்துக் குடியிருக்கும்படி உத்தரவு பெற்றுக்கொண்டான்.
V Římě byl potom umístěn v soukromém bytě – vždy s jedním vojenským strážcem.
17 ௧௭ மூன்று நாட்களுக்குப்பின்பு, பவுல் யூதர்களில் முக்கியமானவர்களை வரவழைத்தான்; அவர்கள் கூடிவந்திருந்தபோது, அவன் அவர்களை நோக்கி: சகோதரர்களே, நம்முடைய மக்களுக்கும் நம்முடைய முன்னோர்களின் பழக்கங்களுக்கும் விரோதமானதொன்றையும் நான் செய்யாமலிருந்தும், கட்டப்பட்டவனாக எருசலேமிலிருந்து ரோமர்கள் கைகளில் ஒப்புக்கொடுக்கப்பட்டேன்.
Tři dny po příchodu do Říma si Pavel k sobě pozval tamní významné židy. Když přišli, řekl jim: „Bratři, nijak jsem se neprovinil proti našemu národu, ani proti našim tradicím. Přesto jsem byl v Jeruzalémě uvězněn a předán Římanům.
18 ௧௮ அவர்கள் என்னை நியாயம் விசாரித்தபோது மரணத்திற்குரிய குற்றம் ஒன்றும் என்னிடத்தில் காணாதபடியினால், என்னை விடுதலையாக்க மனதாயிருந்தார்கள்.
Ti mě vyslýchali a byli by mě propustili, protože jsem neudělal nic, zač bych zasluhoval smrt.
19 ௧௯ யூதர்கள் அதற்கு எதிர்பேசினபோது, நான் இராயனிடத்தில் முறையிடவேண்டியதாயிருந்தது; ஆனாலும் என் மக்கள்மேல் எந்தவொரு குற்றஞ்சாட்டவேண்டுமென்று நான் அப்படிச் செய்யவில்லை.
Jeruzalémští židé však proti mně byli zaujatí, a tak jsem nakonec nucen odvolat se k císaři. Nehodlám tu však žalovat na svůj národ.
20 ௨0 இந்தக் காரியத்தினிமித்தமே உங்களைக் காணவும் உங்களோடு பேசவும் உங்களை அழைப்பித்தேன். இஸ்ரவேலுடைய நம்பிக்கைக்காகவே இந்தச் சங்கிலியால் கட்டப்பட்டிருக்கிறேன் என்றான்.
Proto jsem si přál setkat se s vámi a vysvětlit vám to. Pro naši společnou víru v Mesiáše mám tato pouta!“
21 ௨௧ அதற்கு அவர்கள்: உன்னைக்குறித்து யூதேயாவிலிருந்து எங்களுக்குக் கடிதம் ஒன்றும் வரவுமில்லை, வந்த சகோதரர்களில் ஒருவனும் உன்பேரில் ஒரு தீங்கானக் காரியத்தையும் அறிவித்ததுமில்லை, அதைப்பற்றிப் பேசினதுமில்லை.
Odpověděli mu: „My jsme o tobě z Judska nedostali žádnou zprávu nebo žalobu, ani písemně, ani ústně.
22 ௨௨ எங்கும் இந்த மதப்பிரிவிற்கு விரோதமாகப் பேசுகிறதாக நாங்கள் அறிந்திருக்கிறபடியால், இதைக்குறித்து உன்னுடைய கருத்து என்னவென்று கேட்டறிய விரும்புகிறோம் என்றார்கள்.
Chtěli bychom však slyšet tvoje názory. Víme totiž, že vaše sekta se všude setkává s odporem.“
23 ௨௩ அதற்காக அவர்கள் ஒரு நாளைக்குறித்து, அந்த நாளில் அநேகம்பேர் அவன் தங்கியிருந்த வீட்டிற்கு அவனிடத்தில் வந்தார்கள். அவன் காலைதுவங்கி மாலைவரை மோசேயின் நியாயப்பிரமாணத்திலும் தீர்க்கதரிசிகளின் புத்தகங்களிலிருந்தும் இயேசுவிற்குரியவைகளை அவர்களுக்குப் போதித்து, தேவனுடைய ராஜ்யத்தைக்குறித்துச் சாட்சிக்கொடுத்து வலியுறுத்திப் பேசினான்.
Dohodli se tedy na dalším setkání a pak se jich u něho sešlo mnohem více. Pavel jim celý den vykládal o tom, že Boží království přišlo mezi lidi v osobě Ježíše Krista. Snažil se je o tom přesvědčit důkazy a předpověďmi ze Starého zákona.
24 ௨௪ அவன் சொன்னவைகளைச் சிலர் ஏற்றுக்கொண்டனர், சிலர் விசுவாசிக்காமலிருந்தார்கள்.
Některé získal, jiní však odmítali uvěřit.
25 ௨௫ இப்படி அவர்கள் ஒருவரோடொருவர் கருத்து வேறுபட்டவர்களாக, புறப்பட்டுப்போகும்போது, பவுல் அவர்களுக்குச் சொன்ன வார்த்தையாவது:
Odcházeli takto rozdvojeni a Pavel těm zatvrzelým řekl: „Přesně tak to Duch svatý předpověděl vašim předkům ústy proroka Izajáše:
26 ௨௬ நீங்கள் காதாரக்கேட்டும் உணராதிருப்பீர்கள், கண்ணாரக்கண்டும் பார்க்காதிருப்பீர்கள்.
‚Jdi k tomu lidu a řekni mu: Budete naslouchat a naslouchat, a přece neporozumíte. Budete se dívat a dívat, ale nic neuvidíte.
27 ௨௭ இவர்கள் கண்களினால் காணாமலும், காதுகளினால் கேளாமலும், இருதயத்தினால் உணர்ந்து குணப்படாமலும், நான் இவர்களை ஆரோக்கியமாக்காமலும் இருக்கும்படிக்கு, இந்த மக்களின் இருதயம் கொழுத்திருக்கிறது; காதுகளினால் மந்தமாகக் கேட்டுத் தங்களுடைய கண்களை மூடிக்கொண்டார்கள்’ என்று இந்த மக்களினிடத்திற்குப்போய்ச் சொல்லு என்பதைப் பரிசுத்த ஆவியானவர் ஏசாயா தீர்க்கதரிசியைக்கொண்டு நம்முடைய முற்பிதாக்களுடனே நன்றாகச் சொல்லியிருக்கிறார்.
Máte totiž otupělé srdce, zacpané uši a zavřené oči, aby se vám snad nestalo, že byste viděli, slyšeli a srdcem pochopili; to byste se totiž ke mně obrátili a já bych vás uzdravil.‘“
28 ௨௮ ஆதலால் தேவனுடைய இரட்சிப்பு யூதரல்லாதவர்களுக்கு அனுப்பப்பட்டிருக்கிறதென்றும், அவர்கள் அதற்குச் செவிகொடுப்பார்களென்றும் உங்களுக்குத் தெரிந்திருக்கக்கடவது என்றான்.
„Proto se nedivte, “dodal Pavel, „že zprávu o Boží záchraně hlásáme pohanům. Ti ji dychtivě přijímají.“
29 ௨௯ இப்படி அவன் சொன்னபின்பு, யூதர்கள் தங்களுக்குள்ளே மிகவும் விவாதம்பண்ணிக்கொண்டு, போய்விட்டார்கள்.
30 ௩0 பின்பு பவுல் தனக்காக வாடகைக்கு வாங்கியிருந்த வீட்டிலே இரண்டு வருடங்கள் முழுதும் தங்கி, தன்னிடத்தில் வந்த அனைவரையும் ஏற்றுக்கொண்டு,
Celé dva roky byl Pavel ve svém soukromém římském vězení a směl přijímat všechny návštěvy.
31 ௩௧ மிகுந்த தைரியத்துடனே தடையில்லாமல், தேவனுடைய ராஜ்யத்தைக்குறித்துப் பிரசங்கித்து, கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவைப்பற்றிய சத்தியங்களை உபதேசித்துக்கொண்டிருந்தான்.
A tak svobodně a bez překážek hlásal Boží království a učil o Pánu Ježíši Kristu.