< அப்போஸ்தலர் 26 >
1 ௧ அகிரிப்பா பவுலைப் பார்த்து: நீ உனக்காகப் பேச உன்னை அனுமதிக்கிறேன் என்றான். அப்பொழுது பவுல் கையை நீட்டி, தனக்காக பதில் சொல்லத்தொடங்கினான்.
亚基帕对保罗说:“准许你为自己辩护。”于是保罗用手臂示意开始了自己的辩护:
2 ௨ அகிரிப்பா ராஜாவே, யூதர்கள் என்மேல் சுமத்துகிற எல்லாக் காரியங்களைக்குறித்தும் நான் இன்றைக்கு உமக்கு முன்பாக பதில் சொல்லப்போகிறபடியினாலே என்னைப் பாக்கியவான் என்றெண்ணுகிறேன்.
“亚基帕王,很荣幸今天能就犹太人控告我一事,在你面前进行自我辩护。
3 ௩ விசேஷமாக நீர் யூதர்களுடைய எல்லாமுறைமைகளையும் விவாதங்களையும் அறிந்தவரானதால் அப்படி எண்ணுகிறேன்; ஆகவே, நான் சொல்வதைப் பொறுமையோடு கேட்கும்படி உம்மை வேண்டிக்கொள்ளுகிறேன்.
尤其是你熟悉犹太人的所有规则和习俗,所以恳请你耐心听取我说的话。
4 ௪ நான் என் சிறுவயது முதற்கொண்டு, எருசலேமிலே என் மக்களுக்குள்ளே இருந்தபடியால், ஆரம்பமுதல் நான் நடந்த நடக்கையை யூதரெல்லோரும் அறிந்திருக்கிறார்கள்.
从我在祖国幼年时期的经历再到耶路撒冷的一切,所有犹太人都知道我的人生道路。
5 ௫ நம்முடைய மார்க்கத்திலுள்ள மதவேறுபாடுகளில் மிகவும் கண்டிப்பான நேரத்திற்கு ஏற்றபடி பரிசேயனாக நடந்தேனென்று சாட்சிசொல்ல அவர்களுக்கு விருப்பமிருந்தால் சொல்லலாம்.
他们一直以来都很了解我,如果他们肯作证,你就会知道,我一直严格遵循最严格的教派,忠于我的信仰。我按照法利赛人的方式生活。
6 ௬ தேவன் நம்முடைய பிதாக்களுக்கு அருளிச்செய்த வாக்குத்தத்தம் நிறைவேறுமென்கிற நம்பிக்கைக்காகவே நான் இப்பொழுது நியாயம் விசாரிக்கப்படுகிறவனாக நிற்கிறேன்.
现在我之所以站在这里受审,就是因为上帝向祖先们承诺的希望。
7 ௭ இரவும் பகலும் இடைவிடாமல் ஆராதனை செய்துவருகிற நம்முடைய பன்னிரண்டு கோத்திரத்தார்களும் அந்த வாக்குத்தத்தம் நிறைவேறுமென்று நம்பியிருக்கிறார்கள். அகிரிப்பா ராஜாவே, அந்த நம்பிக்கையினிமித்தமே யூதர்கள் என்மேல் குற்றஞ்சுமத்துகிறார்கள்.
我们的十二族群始终虔诚地服侍上帝,都是盼望这希望可以实现。是的,国王陛下,犹太人控告我也是因为这希望。
8 ௮ தேவன் மரித்தவர்களை எழுப்புகிறது நம்பப்படாத காரியமென்று நீங்கள் நினைக்கிறதென்ன?
为什么你们认为,上帝让死人复活是不可思议的事情呢?
9 ௯ முன்னே நானும் நசரேயனாகிய இயேசுவின் நாமத்திற்கு எதிராக அநேக காரியங்களைச் செய்யவேண்டுமென்று நினைத்திருந்தேன்.
我以前也真的相信,自己应该想方设法反对拿撒勒人耶稣之名。
10 ௧0 அப்படியே நான் எருசலேமிலும் செய்தேன். நான் பிரதான ஆசாரியர்களிடத்தில் அனுமதிபெற்று, பரிசுத்தவான்களில் அநேகரைச் சிறைச்சாலைகளில் அடைத்தேன்; அவர்கள் கொலைசெய்யப்படும்போது நானும் சம்மதித்திருந்தேன்.
我在耶路撒冷就是这么做的。我在祭司长的授权下,把很多信徒扔进监牢,在他们被杀的时候,我也完全同意。
11 ௧௧ எல்லா ஜெபஆலயங்களிலும் நான் அவர்களை பலமுறைத் தண்டித்து அவதூறு சொல்லக் கட்டாயப்படுத்தினேன்; அவர்கள் பேரில் கோபவெறிகொண்டவனாக அந்நியப் பட்டணங்கள்வரைக்கும் அவர்களைத் துன்பப்படுத்தினேன்.
我让他们在所有的犹太教堂受到惩罚,试图让他们放弃。 我非常反对他们,我到国外的城市去迫害他们。
12 ௧௨ இப்படிச் செய்துவரும்போது, நான் பிரதான ஆசாரியர்களிடத்தில் அதிகாரமும் அனுமதியும் பெற்று, தமஸ்குவிற்குப் போகும்போது,
但有一天,我得到祭司长的授权和指令去往大马士革。
13 ௧௩ மத்தியான நேரத்தில், ராஜாவே, நான் வழியிலே சூரியனுடைய பிரகாசத்திலும் அதிகமான ஒளி வானத்திலிருந்து என்னையும் என்னுடனேகூடப் பயணம் செய்தவர்களையும் சுற்றிப் பிரகாசிக்கக்கண்டேன்.
国王陛下,就在那天中午,我在路上看见来自天上的一道光,比太阳更明亮,照耀着我和其他同伴。
14 ௧௪ நாங்களெல்லோரும் தரையிலே விழுந்தபோது: சவுலே, சவுலே, நீ ஏன் என்னைத் துன்பப்படுத்துகிறாய்? முள்ளில் உதைக்கிறது உனக்குக் கடினம் என்று எபிரெயு மொழியிலே என்னுடனே பேசுகிற ஒரு சத்தத்தைக் கேட்டேன்.
我们都伏倒在地,然后我听见有声音用希伯来语对我说:‘扫罗啊,扫罗!你为什么迫害我?你是很难对抗我的!’
15 ௧௫ அப்பொழுது நான்: ஆண்டவரே, நீர் யார்? என்றேன். அதற்கு அவர்: நீ துன்பப்படுத்துகிற இயேசு நானே.
我问到:‘主啊,你是谁?’ 主说:‘我就是你所迫害的耶稣。
16 ௧௬ இப்பொழுது நீ எழுந்து, காலூன்றி நில். நீ பார்த்தவைகளையும் நான் உனக்குத் தரிசனமாகிக் காண்பிக்கப்போகிறவைகளையும்குறித்து உன்னை ஊழியக்காரனாகவும் சாட்சியாகவும் ஏற்படுத்துகிறதற்காக உனக்குக் காட்சியளித்தேன்.
但现在起来吧。我之所以要向你显现,是为了指认你为我的仆人,为我见证,告诉其他人你如何看到我,以及我向你显化的一切。
17 ௧௭ உன் சொந்த மக்களிடத்திலிருந்தும் அந்நிய மக்களிடத்திலிருந்தும் உன்னை விடுதலையாக்கி,
我要把你从同胞和异教徒那里拯救出来,现在我就派你到他们那里去,
18 ௧௮ அவர்கள் என்னைப் பற்றும் விசுவாசத்தினாலே பாவமன்னிப்பையும், பரிசுத்தமாக்கப்பட்டவர்களுக்குரிய உரிமைப்பங்கையும் பெற்றுக்கொள்ளும்படியாக, அவர்கள் இருளைவிட்டு ஒளியினிடத்திற்கும், சாத்தானுடைய அதிகாரத்தைவிட்டு தேவனிடத்திற்கும் திரும்பும்படிக்கு நீ அவர்களுடைய கண்களைத் திறப்பதற்காக, இப்பொழுது உன்னை அவர்களிடத்திற்கு அனுப்புகிறேன் என்றார்.
开启他们的双眼,让他们从黑暗转向光明,从撒旦的控制转向上帝,这样他们的罪恶才会得到赦免,那些因信我而正确行事之人,才会被包含其中。’
19 ௧௯ ஆகவே, அகிரிப்பா ராஜாவே, நான் அந்தப் பரமதரிசனத்திற்குக் கீழப்படியாதவனாக இருக்கவில்லை.
亚基帕王啊,很显然,我没有违背这来自天堂的异象。
20 ௨0 முன்பு தமஸ்குவிலும் எருசலேமிலும் யூதேயா நாடெங்குமுள்ளவர்களிடத்திலும், பின்பு யூதரல்லாதோர்களிடத்திலும் நான் போய், அவர்கள் தேவனிடத்திற்கு மனம்திரும்பி குணப்படவும், மனம்திரும்புவதற்கேற்ற செயல்களைச் செய்யவும் வேண்டுமென்று அறிவித்தேன்.
我先在大马士革、耶路撒冷、犹太全地向众人宣讲这忏悔之道,然后又向异教徒宣讲:关于如何转信上帝,通过行动彰显他们的悔改。
21 ௨௧ இதினிமித்தமே யூதர்கள் தேவாலயத்திலே என்னைப் பிடித்துக் கொலைசெய்ய முயற்சிசெய்தார்கள்.
犹太人就是因此在圣殿中捉拿我,想要杀我。
22 ௨௨ ஆனாலும் தேவ உதவியைப் பெற்று, நான் இந்த நாள்வரை சிறியோர்களுக்கும் பெரியோர்களுக்கும் சாட்சி சொல்லிவருகிறேன்.
但我获得了上帝的眷顾,所以今天还能站在众人面前,包括普通百姓和尊贵之人。我所言只是重复了摩西和先知所讲必然发生之事,
23 ௨௩ தீர்க்கதரிசிகளும் மோசேயும் முன்னமே சொல்லியிருந்தபடியே, கிறிஸ்து பாடுபடவேண்டியதென்றும், மரித்தோர் உயிர்த்தெழுதலில் அவர் முதல்வராகி, சொந்த மக்களுக்கும் அந்நிய மக்களுக்கும் ஒளியை வெளிப்படுத்துகிறவரென்றும் சொல்லுகிறேனேயன்றி, வேறொன்றையும் நான் சொல்லுகிறதில்லை என்றான்.
那就是基督必须受难,然后率先死而复生,向犹太人和异教徒宣告上帝的拯救之光。”
24 ௨௪ இவ்விதமாக அவன் தனக்காக பதில்சொல்லும்போது, பெஸ்து மிகவும் சத்தமாக: பவுலே, நீ உலறுகிறாய், அதிகக் கல்வி உனக்குப் பயித்தியமுண்டாக்குகிறது என்றான்.
保罗的自我辩护说到这里,非斯都大声说:“保罗!你疯了!你的学问让你疯了!”
25 ௨௫ அதற்கு அவன்: கனம்பொருந்திய பெஸ்துவே, நான் பயித்தியக்காரனல்ல, சத்தியமும் சுயபுத்தியோடு வார்த்தைகளைப் பேசுகிறேன்.
保罗回答:“非斯都大人,我没有疯,我说的都是真实,都是言之有理。
26 ௨௬ இந்தச் செய்திகளை ராஜா அறிந்திருக்கிறார்; ஆகவே, தைரியமாக அவருக்கு முன்பாகப் பேசுகிறேன்; இவைகளில் ஒன்றும் அவருக்கு மறைவானதல்லவென்று நினைக்கிறேன்; இது ஒரு பக்கம் நடந்த காரியமல்ல.
国王意识到了这一点,我只是很坦白地解释而已。我相信他知道到底发生了什么,因为这种事情无法躲躲藏藏。
27 ௨௭ அகிரிப்பா ராஜாவே, தீர்க்கதரிசிகளை நம்புகிறீரா? நம்புகிறீர் என்று அறிவேன் என்றான்.
亚基帕王啊,你相信先知所言吗?我知道你信!”
28 ௨௮ அப்பொழுது அகிரிப்பா பவுலைப் பார்த்து: நான் கிறிஸ்தவனாகிறதற்குக் கொஞ்சங்குறைய நீ என்னைச் சம்மதிக்கச் செய்கிறாய் என்றான்.
亚基帕问保罗说:“你认为自己能这么快就说服我变成基督徒吗?”
29 ௨௯ அதற்குப் பவுல்: நீர் மாத்திரமல்ல, இன்று என் வசனத்தைக் கேட்கிற அனைவரும், கொஞ்சங்குறையமட்டும் அல்ல, இந்தக் கட்டுகள்தவிர, முழுவதும் என்னைப்போலாகும்படி தேவனை வேண்டிக்கொள்ளுகிறேன் என்றான்.
保罗回答:“无论时间长短,都没有关系。我不止为你向上帝祈祷,更包括今天希望像我一样的所有听众,只是不应该有这锁链。”
30 ௩0 இவைகளை அவன் சொன்னபோது, ராஜாவும் தேசாதிபதியும் பெர்னீக்கேயாளும் அவர்களோடு உட்கார்ந்திருந்தவர்களும் எழுந்து,
亚基帕王、总督、百尼基以及在座的所有人都站起来,然后离开了法庭,
31 ௩௧ தனியேபோய்: இந்த மனிதன் மரணத்திற்காவது கட்டுகளுக்காவது தகுதியானது எதையும் செய்யவில்லை என்று தங்களுக்குள்ளே பேசிக்கொண்டார்கள்.
召开了一次会议。他们的结论是:“这个人并没有犯下任何应处死或监禁的罪行。”
32 ௩௨ அகிரிப்பா பெஸ்துவைப் பார்த்து: இந்த மனிதன் இராயனுக்கு மேல்முறையீடு செய்யாதிருந்தானானால், இவனை விடுதலை செய்யமுடியும் என்றான்.
亚基帕对非斯都说:“如果他没有请求向凯撒上诉,就可以释放了。”