< அப்போஸ்தலர் 24 >

1 ஐந்து நாட்களுக்குப்பின்பு பிரதான ஆசாரியனாகிய அனனியா மூப்பர்களோடும் தெர்த்துல்லு என்னும் ஒரு வழக்கறிஞரோடும் கூடப்போனான், அவர்கள் பவுலுக்கு எதிராக தேசாதிபதியினிடத்தில் முறையீடு செய்தார்கள்.
五天后,大祭司亚拿尼亚、几名长老和一位名叫帖土罗的律师来到总督府,控告保罗。
2 அவன் அழைக்கப்பட்டபோது, தெர்த்துல்லு குற்றஞ்சாட்டத்தொடங்கி:
当保罗被传唤过来,帖土罗开始控诉他:“腓力斯大人,因为你的缘故,民众长久以来一直享受着太平。由于您的明智判断,为了国家的利益而进行了改革。
3 கனம்பொருந்திய பேலிக்ஸே, உம்மாலே நாங்கள் மிகுந்த சமாதான சுகத்தை அநுபவிக்கிறதையும், உம்முடைய பராமரிப்பினாலே இந்த தேசத்தினர்களுக்கு சிறந்த நன்மைகள் நடக்கிறதையும் நாங்கள் எப்பொழுதும் எங்கும் மிகுந்த நன்றியறிதலுடனே ஒப்புக்கொள்ளுகிறோம்.
全国人民都对你深表感激。
4 உம்மை நான் அதிக சொற்களினாலே வருத்தப்படுத்தாதபடிக்கு, நாங்கள் சுருக்கமாகச் சொல்வதை நீர் பொறுமையாகக் கேட்கவேண்டுமென்று வேண்டுகிறேன்.
但为了不烦扰你,我们只需要占用你一点时间。
5 என்னவென்றால், இந்த மனிதன் கொள்ளைநோயாகவும், பூமியிலுள்ள அனைத்து யூதர்கள் நடுவில் கலகம் எழுப்புகிறவனாகவும், நசரேயருடைய மதகுழப்பத்திற்கு தலைவனாகவும் இருக்கிறானென்று கண்டறிந்தோம்.
我们发现这个人就像瘟疫一样,他煽动普天下的犹太人叛乱,还是拿撒勒派的头目。
6 இவன் தேவாலயத்தையும் தீட்டுப்படுத்தப்பார்த்தான். நாங்கள் இவனைப்பிடித்து எங்களுடைய வேதபிரமாணத்தின்படியே நியாயம் விசாரிக்க விரும்பியிருந்தோம்.
因为他想要污损圣殿,所以我们将他逮捕。
7 அப்பொழுது இராணுவ அதிபதி லீசியா வந்து, மிகவும் துணிகரமாக இவனை எங்களுடைய கைகளிலிருந்து இழுத்துக்கொண்டுபோய்,
8 இவன்மேல் குற்றஞ்சுமத்துகிறவர்கள் உம்மிடத்தில் வரும்படி கட்டளையிட்டார். இவனிடத்தில் நீர் விசாரித்தால் நாங்கள் இவன்மேல் சுமத்துகிற குற்றங்கள் அனைத்தையும் அறிந்துகொள்ளலாம் என்றான்.
你只需亲自审问,就会清楚我们控告他的一切事实。”
9 யூதர்களும் அதற்கு சம்மதித்து, இவைகள் உண்மைதான் என்றார்கள்.
犹太人也应声附和,证实事实的确如此。
10 ௧0 பவுல் பேச தேசாதிபதி அனுமதித்தபோது, அவன் பதிலாக: நீர் அநேக வருடகாலமாக இந்த நாட்டாருக்கு நீதிபதியாக இருக்கிறீர் என்றறிந்து, நான் என் காரியங்களைக்குறித்து அதிக தைரியத்துடன் பதில் சொல்லுகிறேன்.
总督示意保罗回应。保罗开始申辩:“我知道你多年来一直担任本国的法官,我很乐意为自己辩护。
11 ௧௧ நான் தொழுதுகொள்ளும்படியாக எருசலேமுக்குப் போனதுமுதல் இதுவரைக்கும் பன்னிரண்டு நாட்கள்மட்டும் ஆனதென்று நீர் அறிந்துகொள்ளலாம்.
有一点很容易证明,我是十二天前才抵达耶路撒冷进行礼拜,
12 ௧௨ தேவாலயத்திலே நான் ஒருவரிடத்திலாவது தர்க்கம் செய்ததையும், நான் ஜெப ஆலயங்களிலாவது பட்டணத்திலாவது மக்களுக்குள்ளே கலகமெழுப்பினதையும், இவர்கள் பார்த்ததில்லை.
无论在圣殿、会堂或城里,没有人看到我跟人辩论或是煽动群众作乱,
13 ௧௩ இப்பொழுது என்மேல் சுமத்துகிற குற்றங்களை இவர்கள் உம்மிடத்தில் நிரூபிக்கவும் முடியாது.
他们现在控告我的事,也没有人能向你证明。
14 ௧௪ உம்மிடத்தில் ஒன்றை ஏற்றுக்கொள்ளுகிறேன்; அது என்னவென்றால், இவர்கள் மதபேதம் என்று சொல்லுகிற வழியின்படியே எங்களுடைய முன்னோர்களின் தேவனுக்கு ஆராதனைசெய்து நியாயப்பிரமாணத்திலேயும் தீர்க்கதரிசிகள் புத்தகங்களிலேயும் எழுதியிருக்கிற எல்லாவற்றையும் நான் நம்பி,
但我要向你明确一件事:我谨遵正道信仰伺奉我们祖先的上帝,但他们称之为邪教。无论是律法还是先知所记载的一切,我都相信。
15 ௧௫ நீதிமான்களும் அநீதிமான்களுமாகிய மரித்தோர் உயிர்த்தெழுந்திருப்பது உண்டென்று இவர்கள் தேவனிடத்தில் நம்பிக்கை வைத்திருக்கிறதுபோல, நானும் நம்பிக்கை வைத்திருக்கிறேன்.
我和他们一样对上帝心存希望,相信无论是正义或不正义之人都会复活。
16 ௧௬ இதனால் நான் தேவனுக்கும் மனிதர்களுக்கும் முன்பாக எப்பொழுதும் குற்றமற்ற மனச்சாட்சியை உடையவனாக இருக்க முயற்சிக்கிறேன்.
因此,我在上帝和世人面前,努力保持无愧于心。
17 ௧௭ பல வருடங்களுக்குப்பின்பு நான் என் மக்களுக்கு நன்கொடைப் பணத்தைக் கொடுக்கவும், காணிக்கைகளைச் செலுத்தவும் வந்தேன்.
我曾离开这里几年,在返回时带来了捐款支援穷苦人,也为上帝带来了祭物。
18 ௧௮ அப்பொழுது கூட்டமில்லாமலும் ஆர்ப்பாட்டமில்லாமலும் தேவாலயத்திலே சுத்திகரிப்பு செய்துகொண்டவனாக இருந்தபோது, ஆசியா நாட்டாரான சில யூதர்கள் என்னைப் பார்த்தார்கள்.
他们在圣殿中找到我时,我正在完成洁净礼,没有和大群民众在一起,更没有骚乱,
19 ௧௯ அவர்களுக்கு என்பேரில் விரோதமான காரியம் ஏதாவது இருந்தால், அவர்களே இங்கே வந்து, உமக்கு முன்பாகக் குற்றஞ்சுமத்தவேண்டும்.
当时只有几名来自亚西亚的犹太人而已。他们针对于我,今天就应该站在你面前控告我。
20 ௨0 நான் ஆலோசனைச் சங்கத்தினர்களுக்கு முன்பாக நின்றபோது அவர்கள் ஏதாவது அநியாயத்தை என்னிடத்தில் கண்டிருந்தால் இவர்களே அதைச் சொல்லட்டும்.
这些人如果发现我有什么罪行,当我站在公议会面前受审时,就会说出来了。
21 ௨௧ நான் அவர்கள் நடுவில் நின்றபோது மரித்தோர் உயிர்த்தெழுந்திருப்பதைக்குறித்து, இன்று உங்களாலே நியாயந்தீர்க்கப்படுகிறேன் என்று நான் சொன்ன ஒரு சொல்லினிமித்தமேயன்றி வேறொன்றினிமித்தமும் குற்றம் காணப்படவில்லை என்றான்.
如果有什么特别的,那可能就是我向他们喊的那句话:‘我今天在你们面前受审,就是因为我相信死人复活。’”
22 ௨௨ இந்த மார்க்கத்தின் விஷயங்களை தெளிவாக அறிந்திருந்த பேலிக்ஸ் இவைகளைக் கேட்டபொழுது: இராணுவ அதிபதி லீசியா வரும்போது உங்களுடைய காரியங்களைக் கண்டிப்பாய் விசாரிப்பேன் என்று சொல்லி;
腓力斯本人非常熟悉道,于是就故意拖延审讯。他说:“等千夫长吕西亚过来的时候,我再来决定你的案子。”
23 ௨௩ பவுலைக் காவலில் வைக்கவும், கண்டிப்பில்லாமல் நடத்தவும், அவனுக்கு சேவைசெய்கிறதற்கும் அவனைக் கவனித்துக்கொள்ளுகிறதற்கும் வருகிற அவனுடைய மனிதர்களில் ஒருவரையும் தடைசெய்யாதிருக்கவும் நூறுபேருக்கு அதிபதியானவனுக்கு ஆணையிட்டு, அவர்களைக் காத்திருக்கும்படி செய்தான்.
他吩咐百夫长看守保罗,但要给他一些自由,不要阻止保罗的亲友前来照料。
24 ௨௪ சில நாட்களுக்குப்பின்பு பேலிக்ஸ் யூதப் பெண்ணாகிய தன் மனைவி துருசில்லாளுடனே வந்து, பவுலை அழைத்து வரச்செய்து, கிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்தைக்குறித்து அவன் சொல்லக்கேட்டான்.
几天后,腓力斯把他的犹太妻子土西拉带来。他们召见保罗,听他讲述对耶稣基督的信仰。
25 ௨௫ அவன், நீதியையும், இச்சையடக்கத்தையும், இனிவரும் நியாயத்தீர்ப்பைக்குறித்துப் பேசும்போது, பேலிக்ஸ் பயமடைந்து: இப்பொழுது நீ போகலாம், எனக்கு நேரம் கிடைக்கும்போது உன்னை வரவழைப்பேன் என்றான்.
保罗简述了关于在生活中遵循正道、自我控制和即将到来的审判,这让腓力斯感到警觉,于是说:“你现在可以走了,有机会再叫你过来。”
26 ௨௬ மேலும், அவன் பவுலை விடுதலைசெய்யும்படி தனக்கு அவன் பணங்கொடுப்பானென்று நம்பிக்கையுள்ளவனாக இருந்தான்; அதினாலே அவன் அநேகமுறை அவனை அழைத்து, அவனுடனே பேசினான்.
此外,他也想让保罗向他行贿,所以后来又多次传见他,与他交流。
27 ௨௭ இரண்டு வருடங்கள் சென்றபின்பு பேலிக்ஸ் என்பவனுக்குப் பதிலாக பொர்க்கியுபெஸ்து தேசாதிபதியாக வந்தான்; அப்பொழுது பேலிக்ஸ் யூதர்களுக்கு நன்மைசெய்ய விரும்பி பவுலைக் காவலில் வைத்துவிட்டுப்போனான்.
两年过去了,非斯都接替了腓力斯的职务,腓力斯为了讨好犹太人,就将保罗继续关在监牢中。

< அப்போஸ்தலர் 24 >