< அப்போஸ்தலர் 18 >
1 ௧ அதன்பின்பு பவுல் அத்தேனே பட்டணத்தைவிட்டு, கொரிந்து பட்டணத்திற்கு வந்து;
After this he left Athens and came to Corinth.
2 ௨ யூதரெல்லோரும் ரோமாபுரியைவிட்டுப்போகும்படி கிலவுதியு பேரரசன் கட்டளையிட்டபடியினாலே, இத்தாலியாவிலிருந்து புதிதாக வந்திருந்த பொந்து தேசத்தைச் சேர்ந்த ஆக்கில்லா என்னும் பெயருள்ள ஒரு யூதனையும் அவன் மனைவியாகிய பிரிஸ்கில்லாளையும் அங்கே பார்த்து, அவர்களிடத்திற்குப் போனான்.
Here he found a Jew, a native of Pontus, of the name of Aquila. He and his wife Priscilla had recently come from Italy because of Claudius's edict expelling all the Jews from Rome. So Paul paid them a visit;
3 ௩ அவர்கள் கூடாரம்பண்ணுகிற தொழிலாளிகளாக இருந்தார்கள்; தானும் அந்தத் தொழில் செய்கிறவனாக இருந்தபடியால் அவர்களோடு தங்கி, வேலை செய்துகொண்டு வந்தான்.
and because he was of the same trade--that of tent-maker--he lodged with them and worked with them.
4 ௪ ஓய்வு நாட்களிலே இவன் ஜெப ஆலயத்திலே, யூதர்களுக்கும் கிரேக்கர்களுக்கும் புத்திசொன்னான்.
But, Sabbath after Sabbath, he preached in the synagogue and tried to win over both Jews and Greeks.
5 ௫ மக்கெதோனியாவிலிருந்து சீலாவும் தீமோத்தேயுவும் வந்தபோது, பவுல் வைராக்கியத்தோடு, இயேசுவே கிறிஸ்து என்று யூதர்களுக்கு நிரூபித்தான்.
Now at the time when Silas and Timothy came down from Macedonia, Paul was preaching fervently and was solemnly telling the Jews that Jesus is the Christ.
6 ௬ அவர்கள் எதிர்த்து நின்று பவுலுக்கு எதிராகப் பேசினபோது, அவன் தன் ஆடைகளை உதறி: உங்களுடைய இரத்தப்பழி உங்களுடைய தலையின்மேல் இருக்கும்; நான் சுத்தமாக இருக்கிறேன்; இனி நான் யூதர்களல்லாதவரிடத்திற்கு போவேன் என்று அவர்களுக்குச் சொல்லி,
But upon their opposing him with abusive language, he shook his clothes by way of protest, and said to them, "Your ruin will be upon your own heads. I am not responsible: in future I will go among the Gentiles."
7 ௭ அந்த இடத்தைவிட்டு, தேவனை வணங்குகிறவனாகிய யுஸ்து என்பவனுடைய வீட்டிற்கு வந்தான்; அவன் வீடு ஜெப ஆலயத்திற்கு அடுத்து இருந்தது.
So he left the place and went to the house of a person called Titius Justus, a worshipper of the true God. His house was next door to the synagogue.
8 ௮ ஜெப ஆலயத்தலைவனாகிய கிறிஸ்பு என்பவன் குடும்பமாக கர்த்தரிடத்தில் விசுவாசமுள்ளவனானான். கொரிந்தியரில் அநேக மக்கள் நற்செய்தியைக் கேட்டு, விசுவாசித்து, ஞானஸ்நானம் பெற்றார்கள்.
And Crispus, the Warden of the synagogue, believed in the Lord, and so did all his household; and from time to time many of the Corinthians who heard Paul believed and received baptism.
9 ௯ இராத்திரியிலே கர்த்தர் பவுலுக்குத் தரிசனமாகி: நீ பயப்படாமல் பேசு, மவுனமாக இருக்காதே;
And, in a vision by night, the Lord said to Paul, "Dismiss your fears: go on speaking, and do not give up.
10 ௧0 நான் உன்னோடுகூட இருக்கிறேன், ஒருவனும் உனக்குத் தீங்குசெய்யமுடியாது; இந்தப் பட்டணத்தில் எனக்கு அநேக மக்கள் உண்டு என்றார்.
I am with you, and no one shall attack you to injure you; for I have very many people in this city."
11 ௧௧ அவன் ஒரு வருடம் ஆறுமாத காலங்கள் அங்கே தங்கி, தேவவசனத்தை அவர்களுக்கு உபதேசம்பண்ணிக்கொண்டுவந்தான்.
So Paul remained in Corinth for a year and six months, teaching among them the Message of God.
12 ௧௨ கல்லியோன் என்பவன் அகாயா நாட்டிற்கு அதிபதியானபோது, யூதர்கள் ஒன்றுசேர்ந்து, பவுலுக்கு எதிராக எழும்பி, அவனை நீதிமன்றத்திற்கு கொண்டுபோய்:
But when Gallio became Proconsul of Greece, the Jews with one accord made a dead set at Paul, and brought him before the court.
13 ௧௩ இவன் வேதப்பிரமாணத்திற்கு முரண்பாடாக தேவனை வணங்கும்படி எல்லோருக்கும் போதிக்கிறான் என்றார்கள்.
"This man," they said, "is inducing people to offer unlawful worship to God."
14 ௧௪ பவுல் பேச ஆரம்பிக்கும்போது, கல்லியோன் யூதரை நோக்கி: யூதர்களே, இது ஒரு அநியாயமாக அல்லது பொல்லாத செயலாக இருக்குமென்றால் நான் நீங்கள் சொல்வதை பொறுமையோடு கேட்பது நல்லது.
But, when Paul was about to begin his defence, Gallio said to the Jews, "If it had been some wrongful act or piece of cunning knavery I might reasonably have listened to you Jews.
15 ௧௫ ஆனால் இது வார்த்தைகளுக்கும், நாமங்களுக்கும், உங்களுடைய வேதத்திற்கும் சம்பந்தப்பட்ட காரியமாக இருப்பதால், இவைகளைப்பற்றி, விசாரணைசெய்ய எனக்கு விருப்பமில்லை, நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள் என்று சொல்லி,
But since these are questions about words and names and your Law, you yourselves must see to them. I refuse to be a judge in such matters."
16 ௧௬ அவர்களை அங்கிருந்து துரத்திவிட்டான்.
So he ordered them out of court.
17 ௧௭ அப்பொழுது கிரேக்கரெல்லோரும் ஜெப ஆலயத்தலைவனாகிய சொஸ்தேனேயைப் பிடித்து, நீதிமன்றத்திற்கு முன்பாக அடித்தார்கள். இவைகளைக்குறித்துக் கல்லியோன் கவலைப்படவில்லை.
Then the people all set upon Sosthenes, the Warden of the synagogue, and beat him severely in front of the court. Gallio did not concern himself in the least about this.
18 ௧௮ பவுல் அநேகநாட்கள் அங்கே தங்கியிருந்து, சகோதரர்களிடம் விடைபெற்றுக்கொண்டு, தனக்கு ஒரு பிராத்தனை இருக்கிறபடியால் கெங்கிரேயா பட்டணத்தில் தலைச்சவரம்பண்ணிக்கொண்டு, கப்பல் ஏறி சீரியா தேசத்திற்குப் போனான். பிரிஸ்கில்லாளும் ஆக்கில்லாவும் அவனோடுகூட போனார்கள்.
After remaining a considerable time longer in Corinth, Paul took leave of the brethren and set sail for Syria; and Priscilla and Aquila were with him. He had shaved his head at Cenchreae, because he was bound by a vow.
19 ௧௯ அவன் எபேசு பட்டணத்திற்கு வந்தபோது, அங்கே அவர்களைவிட்டுப் பிரிந்து, ஜெப ஆலயத்திற்குச் சென்று, யூதர்களுடனே பேசிக்கொண்டிருந்தான்.
They put in at Ephesus, and there Paul left his companions behind. As for himself, he went to the synagogue and had a discussion with the Jews.
20 ௨0 அவன் இன்னும் கொஞ்சநாட்கள் அவர்களோடு தங்கவேண்டுமென்று அவர்கள் கேட்டுக் கொண்டபோது அவன் சம்மதிக்காமல்,
When they asked him to remain longer he did not consent,
21 ௨௧ வருகிற பண்டிகையிலே, நான் எப்படியாவது எருசலேமில் இருக்கவேண்டும். தேவனுக்குச் சித்தமானால் திரும்பி உங்களிடம் வருவேன் என்று சொல்லி, அவர்களிடம் விடைபெற்றுக்கொண்டு, கப்பல் ஏறி எபேசுவைவிட்டுப் புறப்பட்டு,
but took leave of them with the promise, "I will return to you, God willing." So he set sail from Ephesus.
22 ௨௨ செசரியா பட்டணத்திற்கு வந்து, எருசலேமுக்குப்போய், சபைமக்களைச் சந்தித்து, அந்தியோகியாவிற்குப் போனான்.
Landing at Caesarea, he went up to Jerusalem and inquired after the welfare of the Church, and then went down to Antioch.
23 ௨௩ அங்கே சிலகாலம் தங்கியிருந்தபின்பு, அங்கிருந்து புறப்பட்டு, கலாத்தியா நாட்டிலேயும் பிரிகியா நாட்டிலேயும் சுற்றித்திரிந்து, சீடரெல்லோரையும் உற்சாகப்படுத்தினான்.
After spending some time in Antioch, Paul set out on a tour, visiting the whole of Galatia and Phrygia in order, and strengthening all the disciples.
24 ௨௪ அப்பொழுது அலெக்சந்திரியா பட்டணத்தில் பிறந்த பேச்சிலே வல்லவனும், வேதாகமங்களில் தேறினவனுமான அப்பொல்லோ என்னும் பெயர்கொண்ட ஒரு யூதன் எபேசு பட்டணத்திற்கு வந்தான்.
Meanwhile a Jew named Apollos came to Ephesus. He was a native of Alexandria, a man of great learning and well versed in the Scriptures.
25 ௨௫ அவன் கர்த்தருடைய வழியிலே போதிக்கப்பட்டு, யோவான் கொடுத்த ஞானஸ்நானத்தைமட்டும் தெரிந்தவனாக இருந்து, ஆவியில் வைராக்கியள்ளவனாகக் கர்த்தருக்குரிய காரியங்களைத் தெளிவாய்ப் போதகம்பண்ணிக்கொண்டுவந்தான்.
He had been instructed by word of mouth in the way of the Lord, and, being full of burning zeal, he used to speak and teach accurately the facts about Jesus, though he knew of no baptism but John's.
26 ௨௬ அவன் ஜெப ஆலயத்தில் தைரியமாகப் பேசினபோது, ஆக்கில்லாவும், பிரிஸ்கில்லாளும் அவன் பேசுகிறதைக் கேட்டு, அவனைத் தங்களோடு சேர்த்துக்கொண்டு, தேவனுடைய வழிகளை அதிகத் தெளிவாக அவனுக்கு விளக்கிக் காண்பித்தார்கள்.
He began to speak boldly in the synagogue, and Priscilla and Aquila, after hearing him, took him home and explained God's way to him more accurately.
27 ௨௭ பின்பு அவன் அகாயா நாட்டிற்குப் போகவேண்டும் என்றபோது, சீடர்கள் அங்கே அவனை ஏற்றுக்கொள்ளும்படி சகோதரர்கள் அவர்களுக்கு கடிதம் எழுதினார்கள்.
Then, as he had made up his mind to cross over into Greece, the brethren wrote to the disciples in Corinth begging them to give him a kindly welcome. Upon his arrival he rendered valuable help to those who through grace had believed;
28 ௨௮ அவன் அகாயா நாட்டிற்கு வந்து வெளிப்படையாக யூதர்களுடனே பலமாக வாதாடி, இயேசுவே கிறிஸ்து என்று வேதவாக்கியங்களைக் கொண்டு விளக்கினபடியால், கிருபையினாலே விசுவாசிகளானவர்களுக்கு மிகவும் உதவியாக இருந்தான்.
for he powerfully and in public overcame the Jews in argument, proving to them from the Scriptures that Jesus is the Christ.