< அப்போஸ்தலர் 17 >
1 ௧ அவர்கள் அம்பிபோலி பட்டணத்தையும் அப்பொலோனியா பட்டணத்தையும் கடந்து, தெசலோனிக்கே பட்டணத்திற்கு வந்தார்கள்; அங்கே யூதர்களுக்கு ஒரு ஜெப ஆலயம் இருந்தது.
ಪೌಲಸೀಲೌ ಆಮ್ಫಿಪಲ್ಯಾಪಲ್ಲೋನಿಯಾನಗರಾಭ್ಯಾಂ ಗತ್ವಾ ಯತ್ರ ಯಿಹೂದೀಯಾನಾಂ ಭಜನಭವನಮೇಕಮ್ ಆಸ್ತೇ ತತ್ರ ಥಿಷಲನೀಕೀನಗರ ಉಪಸ್ಥಿತೌ|
2 ௨ பவுல் தன் வழக்கத்தின்படியே அங்குபோய், மூன்று ஓய்வுநாட்களில் வேதவாக்கியங்களின் நியாயங்களை எடுத்து அவர்களோடு பேசி,
ತದಾ ಪೌಲಃ ಸ್ವಾಚಾರಾನುಸಾರೇಣ ತೇಷಾಂ ಸಮೀಪಂ ಗತ್ವಾ ವಿಶ್ರಾಮವಾರತ್ರಯೇ ತೈಃ ಸಾರ್ದ್ಧಂ ಧರ್ಮ್ಮಪುಸ್ತಕೀಯಕಥಾಯಾ ವಿಚಾರಂ ಕೃತವಾನ್|
3 ௩ கிறிஸ்து பாடுபடவும் மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்திருக்கவும் வேண்டுமென்றும், நான் உங்களுக்கு அறிவிக்கிற இந்த இயேசுவே கிறிஸ்து என்றும் வேதவாக்கியங்களிலிருந்து காண்பித்தான்.
ಫಲತಃ ಖ್ರೀಷ್ಟೇನ ದುಃಖಭೋಗಃ ಕರ್ತ್ತವ್ಯಃ ಶ್ಮಶಾನದುತ್ಥಾನಞ್ಚ ಕರ್ತ್ತವ್ಯಂ ಯುಷ್ಮಾಕಂ ಸನ್ನಿಧೌ ಯಸ್ಯ ಯೀಶೋಃ ಪ್ರಸ್ತಾವಂ ಕರೋಮಿ ಸ ಈಶ್ವರೇಣಾಭಿಷಿಕ್ತಃ ಸ ಏತಾಃ ಕಥಾಃ ಪ್ರಕಾಶ್ಯ ಪ್ರಮಾಣಂ ದತ್ವಾ ಸ್ಥಿರೀಕೃತವಾನ್|
4 ௪ அவர்களில் சிலரும், பக்தியுள்ள கிரேக்கர்களில் அநேகரும், கனம்பெற்ற பெண்களில் அநேகரும் விசுவாசித்து, பவுல் சீலாவிடம் சேர்ந்துகொண்டார்கள்.
ತಸ್ಮಾತ್ ತೇಷಾಂ ಕತಿಪಯಜನಾ ಅನ್ಯದೇಶೀಯಾ ಬಹವೋ ಭಕ್ತಲೋಕಾ ಬಹ್ಯಃ ಪ್ರಧಾನನಾರ್ಯ್ಯಶ್ಚ ವಿಶ್ವಸ್ಯ ಪೌಲಸೀಲಯೋಃ ಪಶ್ಚಾದ್ಗಾಮಿನೋ ಜಾತಾಃ|
5 ௫ விசுவாசிக்காத யூதர்கள் வைராக்கியத்தோடு பொல்லாத மனிதர்கள் சிலரைச் சேர்த்துக்கொண்டு, பட்டணத்தில் கலவரம் உண்டாக்கி, யாசோனுடைய வீட்டைச் சுற்றிவளைத்து, அவர்களைப் பட்டணத்து மக்களிடம் இழுத்துக்கொண்டுவரப் பார்த்தார்கள்.
ಕಿನ್ತು ವಿಶ್ವಾಸಹೀನಾ ಯಿಹೂದೀಯಲೋಕಾ ಈರ್ಷ್ಯಯಾ ಪರಿಪೂರ್ಣಾಃ ಸನ್ತೋ ಹಟಟ್ಸ್ಯ ಕತಿನಯಲಮ್ಪಟಲೋಕಾನ್ ಸಙ್ಗಿನಃ ಕೃತ್ವಾ ಜನತಯಾ ನಗರಮಧ್ಯೇ ಮಹಾಕಲಹಂ ಕೃತ್ವಾ ಯಾಸೋನೋ ಗೃಹಮ್ ಆಕ್ರಮ್ಯ ಪ್ರೇರಿತಾನ್ ಧೃತ್ವಾ ಲೋಕನಿವಹಸ್ಯ ಸಮೀಪಮ್ ಆನೇತುಂ ಚೇಷ್ಟಿತವನ್ತಃ|
6 ௬ அவர்கள் அங்கு இல்லாததால், யாசோனையும் சில சகோதரர்களையும் பட்டணத்து அதிகாரிகளிடத்தில் இழுத்துக்கொண்டுவந்து: உலகத்தைக் கலக்குகிறவர்கள் இங்கேயும் வந்திருக்கிறார்கள்.
ತೇಷಾಮುದ್ದೇಶಮ್ ಅಪ್ರಾಪ್ಯ ಚ ಯಾಸೋನಂ ಕತಿಪಯಾನ್ ಭ್ರಾತೃಂಶ್ಚ ಧೃತ್ವಾ ನಗರಾಧಿಪತೀನಾಂ ನಿಕಟಮಾನೀಯ ಪ್ರೋಚ್ಚೈಃ ಕಥಿತವನ್ತೋ ಯೇ ಮನುಷ್ಯಾ ಜಗದುದ್ವಾಟಿತವನ್ತಸ್ತೇ ಽತ್ರಾಪ್ಯುಪಸ್ಥಿತಾಃ ಸನ್ತಿ,
7 ௭ இவர்களை யாசோன் தன் வீட்டில் சேர்த்துக்கொண்டான். இவர்கள் எல்லோரும் இயேசு என்னும் வேறு ஒருவனை ராஜா என்று சொல்லி, பேரரசனுடைய கட்டளைகளுக்கு எதிராக செயல்படுகிறார்கள் என்று சத்தமிட்டு,
ಏಷ ಯಾಸೋನ್ ಆತಿಥ್ಯಂ ಕೃತ್ವಾ ತಾನ್ ಗೃಹೀತವಾನ್| ಯೀಶುನಾಮಕ ಏಕೋ ರಾಜಸ್ತೀತಿ ಕಥಯನ್ತಸ್ತೇ ಕೈಸರಸ್ಯಾಜ್ಞಾವಿರುದ್ಧಂ ಕರ್ಮ್ಮ ಕುರ್ವ್ವತಿ|
8 ௮ இவைகளைக் கேட்டுக்கொண்டிருந்த மக்களையும் பட்டணத்து அதிகாரிகளையும் கலங்கப்பண்ணினார்கள்.
ತೇಷಾಂ ಕಥಾಮಿಮಾಂ ಶ್ರುತ್ವಾ ಲೋಕನಿವಹೋ ನಗರಾಧಿಪತಯಶ್ಚ ಸಮುದ್ವಿಗ್ನಾ ಅಭವನ್|
9 ௯ பின்பு அவர்கள் யாசோனிடத்திலும் மற்றவர்களிடத்திலும் ஜாமீன் வாங்கிக்கொண்டு, அவர்களை விட்டுவிட்டார்கள்.
ತದಾ ಯಾಸೋನಸ್ತದನ್ಯೇಷಾಞ್ಚ ಧನದಣ್ಡಂ ಗೃಹೀತ್ವಾ ತಾನ್ ಪರಿತ್ಯಕ್ತವನ್ತಃ|
10 ௧0 அன்று இரவிலே சகோதரர்கள் பவுலையும் சீலாவையும் பெரோயா பட்டணத்திற்கு அனுப்பிவிட்டார்கள்; அவர்கள் அங்கே சென்று, யூதர்களுடைய ஜெப ஆலயத்திற்குப் போனார்கள்.
ತತಃ ಪರಂ ಭ್ರಾತೃಗಣೋ ರಜನ್ಯಾಂ ಪೌಲಸೀಲೌ ಶೀಘ್ರಂ ಬಿರಯಾನಗರಂ ಪ್ರೇಷಿತವಾನ್ ತೌ ತತ್ರೋಪಸ್ಥಾಯ ಯಿಹೂದೀಯಾನಾಂ ಭಜನಭವನಂ ಗತವನ್ತೌ|
11 ௧௧ அந்தப் பட்டணத்து மக்கள் வசனத்தை ஆர்வத்தோடு ஏற்றுக்கொண்டு, விஷயங்கள் இப்படியிருக்கிறதா என்று தினமும் வேதவாக்கியங்களை ஆராய்ந்துபார்த்ததினால், தெசலோனிக்கேயில் உள்ளவர்களைவிட நற்பண்பு உடையவர்களாக இருந்தார்கள்.
ತತ್ರಸ್ಥಾ ಲೋಕಾಃ ಥಿಷಲನೀಕೀಸ್ಥಲೋಕೇಭ್ಯೋ ಮಹಾತ್ಮಾನ ಆಸನ್ ಯತ ಇತ್ಥಂ ಭವತಿ ನ ವೇತಿ ಜ್ಞಾತುಂ ದಿನೇ ದಿನೇ ಧರ್ಮ್ಮಗ್ರನ್ಥಸ್ಯಾಲೋಚನಾಂ ಕೃತ್ವಾ ಸ್ವೈರಂ ಕಥಾಮ್ ಅಗೃಹ್ಲನ್|
12 ௧௨ அதனால் அவர்களில் அநேகரும், கிரேக்கர்களில் கனம்பெற்ற அநேக ஆண்களும் பெண்களும் விசுவாசித்தார்கள்.
ತಸ್ಮಾದ್ ಅನೇಕೇ ಯಿಹೂದೀಯಾ ಅನ್ಯದೇಶೀಯಾನಾಂ ಮಾನ್ಯಾ ಸ್ತ್ರಿಯಃ ಪುರುಷಾಶ್ಚಾನೇಕೇ ವ್ಯಶ್ವಸನ್|
13 ௧௩ பெரோயாவிலும் தேவவசனம் பவுலினால் அறிவிக்கப்படுகிறது என்று தெசலோனிக்கேயரான யூதர்களுக்கு தெரிந்தபோது, அங்கேயும் வந்து, மக்களைத் தூண்டிவிட்டார்கள்.
ಕಿನ್ತು ಬಿರಯಾನಗರೇ ಪೌಲೇನೇಶ್ವರೀಯಾ ಕಥಾ ಪ್ರಚಾರ್ಯ್ಯತ ಇತಿ ಥಿಷಲನೀಕೀಸ್ಥಾ ಯಿಹೂದೀಯಾ ಜ್ಞಾತ್ವಾ ತತ್ಸ್ಥಾನಮಪ್ಯಾಗತ್ಯ ಲೋಕಾನಾಂ ಕುಪ್ರವೃತ್ತಿಮ್ ಅಜನಯನ್|
14 ௧௪ உடனே சகோதரர்கள் பவுலைக் கடல்வழியாக அனுப்பிவிட்டார்கள். சீலாவும் தீமோத்தேயுவும் அங்கே தங்கியிருந்தார்கள்.
ಅತಏವ ತಸ್ಮಾತ್ ಸ್ಥಾನಾತ್ ಸಮುದ್ರೇಣ ಯಾನ್ತೀತಿ ದರ್ಶಯಿತ್ವಾ ಭ್ರಾತರಃ ಕ್ಷಿಪ್ರಂ ಪೌಲಂ ಪ್ರಾಹಿಣ್ವನ್ ಕಿನ್ತು ಸೀಲತೀಮಥಿಯೌ ತತ್ರ ಸ್ಥಿತವನ್ತೌ|
15 ௧௫ பவுலைக் கூட்டிச்சென்றவர்கள் அவனை அத்தேனே பட்டணம்வரைக்கும் கூட்டிக்கொண்டுபோனார்கள். அங்கே பவுல், சீலாவையும் தீமோத்தேயுவையும் சீக்கிரமாக என்னிடம் வரச் சொல்லுங்கள் என்று அவர்களுக்குச் சொல்லி அனுப்பினான்.
ತತಃ ಪರಂ ಪೌಲಸ್ಯ ಮಾರ್ಗದರ್ಶಕಾಸ್ತಮ್ ಆಥೀನೀನಗರ ಉಪಸ್ಥಾಪಯನ್ ಪಶ್ಚಾದ್ ಯುವಾಂ ತೂರ್ಣಮ್ ಏತತ್ ಸ್ಥಾನಂ ಆಗಮಿಷ್ಯಥಃ ಸೀಲತೀಮಥಿಯೌ ಪ್ರತೀಮಾಮ್ ಆಜ್ಞಾಂ ಪ್ರಾಪ್ಯ ತೇ ಪ್ರತ್ಯಾಗತಾಃ|
16 ௧௬ அத்தேனே பட்டணத்தில் பவுல் அவர்களுக்காகக் காத்துக்கொண்டிருக்கும்போது, அந்தப் பட்டணம் விக்கிரகங்களால் நிறைந்திருக்கிறதைப் பார்த்து, தன் மனதில் அதிக வைராக்கியம் கொண்டு,
ಪೌಲ ಆಥೀನೀನಗರೇ ತಾವಪೇಕ್ಷ್ಯ ತಿಷ್ಠನ್ ತನ್ನಗರಂ ಪ್ರತಿಮಾಭಿಃ ಪರಿಪೂರ್ಣಂ ದೃಷ್ಟ್ವಾ ಸನ್ತಪ್ತಹೃದಯೋ ಽಭವತ್|
17 ௧௭ ஜெப ஆலயத்தில் யூதர்களோடும், பக்தியுள்ளவர்களோடும், சந்தையில் பார்ப்பவர்களோடும் தினமும் பேசிக்கொண்டிருந்தான்.
ತತಃ ಸ ಭಜನಭವನೇ ಯಾನ್ ಯಿಹೂದೀಯಾನ್ ಭಕ್ತಲೋಕಾಂಶ್ಚ ಹಟ್ಟೇ ಚ ಯಾನ್ ಅಪಶ್ಯತ್ ತೈಃ ಸಹ ಪ್ರತಿದಿನಂ ವಿಚಾರಿತವಾನ್|
18 ௧௮ அப்பொழுது எப்பிக்கூரர்களும் ஸ்தோயிக்கர்களுமான ஞானிகளில் சிலர் அவனோடுகூட வாக்குவாதம்பண்ணினார்கள். சிலர்: இந்த வாயாடி என்ன பேசப்போகிறான் என்றார்கள். சிலர்: இவன் அந்நிய தேவதைகளை அறிவிக்கிறவனைப்போல இருக்கிறான் என்றார்கள். அவன் இயேசுவையும் உயிர்த்தெழுதலையும் அவர்களுக்குப் போதித்ததினால் அப்படிச் சொன்னார்கள்.
ಕಿನ್ತ್ವಿಪಿಕೂರೀಯಮತಗ್ರಹಿಣಃ ಸ್ತೋಯಿಕೀಯಮತಗ್ರಾಹಿಣಶ್ಚ ಕಿಯನ್ತೋ ಜನಾಸ್ತೇನ ಸಾರ್ದ್ಧಂ ವ್ಯವದನ್ತ| ತತ್ರ ಕೇಚಿದ್ ಅಕಥಯನ್ ಏಷ ವಾಚಾಲಃ ಕಿಂ ವಕ್ತುಮ್ ಇಚ್ಛತಿ? ಅಪರೇ ಕೇಚಿದ್ ಏಷ ಜನಃ ಕೇಷಾಞ್ಚಿದ್ ವಿದೇಶೀಯದೇವಾನಾಂ ಪ್ರಚಾರಕ ಇತ್ಯನುಮೀಯತೇ ಯತಃ ಸ ಯೀಶುಮ್ ಉತ್ಥಿತಿಞ್ಚ ಪ್ರಚಾರಯತ್|
19 ௧௯ அவர்கள் அவனை மார்ஸ் மேடைக்கு கூட்டிக்கொண்டுபோய்: நீ சொல்லுகிற இந்த புதிய உபதேசம் என்ன என்று நாங்கள் தெரிந்துகொள்ளலாமா?
ತೇ ತಮ್ ಅರೇಯಪಾಗನಾಮ ವಿಚಾರಸ್ಥಾನಮ್ ಆನೀಯ ಪ್ರಾವೋಚನ್ ಇದಂ ಯನ್ನವೀನಂ ಮತಂ ತ್ವಂ ಪ್ರಾಚೀಕಶ ಇದಂ ಕೀದೃಶಂ ಏತದ್ ಅಸ್ಮಾನ್ ಶ್ರಾವಯ;
20 ௨0 நீ சொன்ன அநேக வினோதமான காரியங்களை எங்களுடைய காதுகளில் கேட்டோம்; அதின் விளக்கம் என்ன என்று தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறோம் என்றார்கள்.
ಯಾಮಿಮಾಮ್ ಅಸಮ್ಭವಕಥಾಮ್ ಅಸ್ಮಾಕಂ ಕರ್ಣಗೋಚರೀಕೃತವಾನ್ ಅಸ್ಯಾ ಭಾವಾರ್ಥಃ ಕ ಇತಿ ವಯಂ ಜ್ಞಾತುಮ್ ಇಚ್ಛಾಮಃ|
21 ௨௧ அந்த அத்தேனே பட்டணத்து மக்கள், அங்கே தங்குகிற வெளிமக்கள் எல்லோரும், வினோதமான காரியங்களைச் சொல்லுவதிலும் கேட்பதிலுமே தங்களுடைய நேரத்தைச் செலவழித்தார்கள்.
ತದಾಥೀನೀನಿವಾಸಿನಸ್ತನ್ನಗರಪ್ರವಾಸಿನಶ್ಚ ಕೇವಲಂ ಕಸ್ಯಾಶ್ಚನ ನವೀನಕಥಾಯಾಃ ಶ್ರವಣೇನ ಪ್ರಚಾರಣೇನ ಚ ಕಾಲಮ್ ಅಯಾಪಯನ್|
22 ௨௨ அப்பொழுது பவுல் மார்ஸ் மேடையின் நடுவிலே நின்று: அத்தேனே பட்டணத்தாரே, எல்லாக் காரியத்திலும் உங்களை அதிக பக்தியுள்ளவர்களாகப் பார்க்கிறேன்.
ಪೌಲೋಽರೇಯಪಾಗಸ್ಯ ಮಧ್ಯೇ ತಿಷ್ಠನ್ ಏತಾಂ ಕಥಾಂ ಪ್ರಚಾರಿತವಾನ್, ಹೇ ಆಥೀನೀಯಲೋಕಾ ಯೂಯಂ ಸರ್ವ್ವಥಾ ದೇವಪೂಜಾಯಾಮ್ ಆಸಕ್ತಾ ಇತ್ಯಹ ಪ್ರತ್ಯಕ್ಷಂ ಪಶ್ಯಾಮಿ|
23 ௨௩ எப்படியென்றால், நான் சுற்றித்திரிந்து, உங்களுடைய ஆராதனைகளை கவனித்துப் பார்த்தபொழுது, “அறியப்படாத தேவனுக்கு” என்று எழுதியிருக்கிற ஒரு பலிபீடத்தைப் பார்த்தேன்; நீங்கள் அறியாமல் ஆராதனை செய்கிற அவரையே நான் உங்களுக்கு அறிவிக்கிறேன்.
ಯತಃ ಪರ್ಯ್ಯಟನಕಾಲೇ ಯುಷ್ಮಾಕಂ ಪೂಜನೀಯಾನಿ ಪಶ್ಯನ್ ‘ಅವಿಜ್ಞಾತೇಶ್ವರಾಯ’ ಏತಲ್ಲಿಪಿಯುಕ್ತಾಂ ಯಜ್ಞವೇದೀಮೇಕಾಂ ದೃಷ್ಟವಾನ್; ಅತೋ ನ ವಿದಿತ್ವಾ ಯಂ ಪೂಜಯಧ್ವೇ ತಸ್ಯೈವ ತತ್ವಂ ಯುಷ್ಮಾನ್ ಪ್ರತಿ ಪ್ರಚಾರಯಾಮಿ|
24 ௨௪ உலகத்தையும் அதிலுள்ள எல்லாவற்றையும் உண்டாக்கின தேவனானவர் வானத்திற்கும் பூமிக்கும் ஆண்டவராக இருக்கிறபடியால், கைகளினால் கட்டப்பட்ட கோவில்களில் அவர் குடியிருப்பதில்லை.
ಜಗತೋ ಜಗತ್ಸ್ಥಾನಾಂ ಸರ್ವ್ವವಸ್ತೂನಾಞ್ಚ ಸ್ರಷ್ಟಾ ಯ ಈಶ್ವರಃ ಸ ಸ್ವರ್ಗಪೃಥಿವ್ಯೋರೇಕಾಧಿಪತಿಃ ಸನ್ ಕರನಿರ್ಮ್ಮಿತಮನ್ದಿರೇಷು ನ ನಿವಸತಿ;
25 ௨௫ எல்லோருக்கும் ஜீவனையும் சுவாசத்தையும் எல்லாவற்றையும் கொடுக்கிற ஆண்டவர், தமக்கு ஏதாவது தேவையென்றால், மனிதர்கள் கைகளினால் பெற்றுக்கொள்வதில்லை.
ಸ ಏವ ಸರ್ವ್ವೇಭ್ಯೋ ಜೀವನಂ ಪ್ರಾಣಾನ್ ಸರ್ವ್ವಸಾಮಗ್ರೀಶ್ಚ ಪ್ರದದಾತಿ; ಅತಏವ ಸ ಕಸ್ಯಾಶ್ಚಿತ್ ಸಾಮಗ್ಯ್ರಾ ಅಭಾವಹೇತೋ ರ್ಮನುಷ್ಯಾಣಾಂ ಹಸ್ತೈಃ ಸೇವಿತೋ ಭವತೀತಿ ನ|
26 ௨௬ மனித இனமான எல்லா மக்களையும் அவர் ஒரே இரத்தத்தினாலே உண்டாக்கி, பூமியெங்கும் குடியிருக்கச்செய்து, முன் தீர்மானிக்கப்பட்ட காலங்களையும் அவர்கள் குடியிருக்கும் எல்லைகளையும் குறித்திருக்கிறார்;
ಸ ಭೂಮಣ್ಡಲೇ ನಿವಾಸಾರ್ಥಮ್ ಏಕಸ್ಮಾತ್ ಶೋಣಿತಾತ್ ಸರ್ವ್ವಾನ್ ಮನುಷ್ಯಾನ್ ಸೃಷ್ಟ್ವಾ ತೇಷಾಂ ಪೂರ್ವ್ವನಿರೂಪಿತಸಮಯಂ ವಸತಿಸೀಮಾಞ್ಚ ನಿರಚಿನೋತ್;
27 ௨௭ கர்த்தராகிய அவரை மக்கள் தடவியாவது தேடிக் கண்டுபிடிக்கும்படி அப்படிச் செய்தார்; அவர் நம் ஒவ்வொருவருக்கும் அருகில் உள்ளார்.
ತಸ್ಮಾತ್ ಲೋಕೈಃ ಕೇನಾಪಿ ಪ್ರಕಾರೇಣ ಮೃಗಯಿತ್ವಾ ಪರಮೇಶ್ವರಸ್ಯ ತತ್ವಂ ಪ್ರಾಪ್ತುಂ ತಸ್ಯ ಗವೇಷಣಂ ಕರಣೀಯಮ್|
28 ௨௮ ஏனென்றால், அவருக்குள் நாம் பிழைக்கிறோம், அசைகிறோம், இருக்கிறோம்; அப்படியே உங்களுடைய புலவர்களிலும் சிலர், நாம் அவருடைய வம்சத்தார் என்று சொல்லியிருக்கிறார்கள்.
ಕಿನ್ತು ಸೋಽಸ್ಮಾಕಂ ಕಸ್ಮಾಚ್ಚಿದಪಿ ದೂರೇ ತಿಷ್ಠತೀತಿ ನಹಿ, ವಯಂ ತೇನ ನಿಶ್ವಸನಪ್ರಶ್ವಸನಗಮನಾಗಮನಪ್ರಾಣಧಾರಣಾನಿ ಕುರ್ಮ್ಮಃ, ಪುನಶ್ಚ ಯುಷ್ಮಾಕಮೇವ ಕತಿಪಯಾಃ ಕವಯಃ ಕಥಯನ್ತಿ ‘ತಸ್ಯ ವಂಶಾ ವಯಂ ಸ್ಮೋ ಹಿ’ ಇತಿ|
29 ௨௯ நாம் தேவனுடைய வம்சமாக இருப்பதினால், மனிதனுடைய யோசனையினாலும் சித்திரவேலையினாலும் உருவாக்கின தங்கம், வெள்ளி, கல் ஆகியவற்றிக்கு தெய்வம் ஒப்பாவார் என்று நாம் நினைக்கக்கூடாது.
ಅತಏವ ಯದಿ ವಯಮ್ ಈಶ್ವರಸ್ಯ ವಂಶಾ ಭವಾಮಸ್ತರ್ಹಿ ಮನುಷ್ಯೈ ರ್ವಿದ್ಯಯಾ ಕೌಶಲೇನ ಚ ತಕ್ಷಿತಂ ಸ್ವರ್ಣಂ ರೂಪ್ಯಂ ದೃಷದ್ ವೈತೇಷಾಮೀಶ್ವರತ್ವಮ್ ಅಸ್ಮಾಭಿ ರ್ನ ಜ್ಞಾತವ್ಯಂ|
30 ௩0 மக்களின் அறியாமையின் நாட்களை தேவன் பார்க்காதவர்போல இருந்தார்; இப்பொழுது மனம் மாறவேண்டும் என்று எல்லா மனிதர்களுக்கும் கட்டளையிடுகிறார்.
ತೇಷಾಂ ಪೂರ್ವ್ವೀಯಲೋಕಾನಾಮ್ ಅಜ್ಞಾನತಾಂ ಪ್ರತೀಶ್ವರೋ ಯದ್ಯಪಿ ನಾವಾಧತ್ತ ತಥಾಪೀದಾನೀಂ ಸರ್ವ್ವತ್ರ ಸರ್ವ್ವಾನ್ ಮನಃ ಪರಿವರ್ತ್ತಯಿತುಮ್ ಆಜ್ಞಾಪಯತಿ,
31 ௩௧ ஒரு நாளைக் குறித்திருக்கிறார்; அந்த நாளிலே அவர் தாம் நியமித்த மனிதனைக்கொண்டு, பூலோகத்தை நீதியாக நியாயந்தீர்ப்பார்; அந்த மனிதனை மரித்தோரிலிருந்து உயிரோடு எழுப்பினதினாலே அதின் நிச்சயத்தை எல்லோருக்கும் விளங்கப்பண்ணினார் என்றான்.
ಯತಃ ಸ್ವನಿಯುಕ್ತೇನ ಪುರುಷೇಣ ಯದಾ ಸ ಪೃಥಿವೀಸ್ಥಾನಾಂ ಸರ್ವ್ವಲೋಕಾನಾಂ ವಿಚಾರಂ ಕರಿಷ್ಯತಿ ತದ್ದಿನಂ ನ್ಯರೂಪಯತ್; ತಸ್ಯ ಶ್ಮಶಾನೋತ್ಥಾಪನೇನ ತಸ್ಮಿನ್ ಸರ್ವ್ವೇಭ್ಯಃ ಪ್ರಮಾಣಂ ಪ್ರಾದಾತ್|
32 ௩௨ மரித்தவர்களின் உயிர்த்தெழுதலைக்குறித்து பவுல் சொல்வதை அவர்கள் கேட்டபோது, சிலர் கேலிசெய்தார்கள். சிலர்: நீ சொல்லுகிறதை வேறொரு நாளில் கேட்போம் என்றார்கள்.
ತದಾ ಶ್ಮಶಾನಾದ್ ಉತ್ಥಾನಸ್ಯ ಕಥಾಂ ಶ್ರುತ್ವಾ ಕೇಚಿದ್ ಉಪಾಹಮನ್, ಕೇಚಿದವದನ್ ಏನಾಂ ಕಥಾಂ ಪುನರಪಿ ತ್ವತ್ತಃ ಶ್ರೋಷ್ಯಾಮಃ|
33 ௩௩ எனவே, பவுல் அவர்களைவிட்டுப் போய்விட்டான்.
ತತಃ ಪೌಲಸ್ತೇಷಾಂ ಸಮೀಪಾತ್ ಪ್ರಸ್ಥಿತವಾನ್|
34 ௩௪ சிலர் பவுலோடு சேர்ந்துகொண்டு, விசுவாசிகளானார்கள். அவர்களில் மார்ஸ் மேடையின் நியாயாதிபதிகளில் ஒருவனாகிய தியொனீசியு என்பவனும், தாமரி என்னும் பெயருள்ள ஒரு பெண்ணும், வேறு சிலரும் இருந்தார்கள்.
ತಥಾಪಿ ಕೇಚಿಲ್ಲೋಕಾಸ್ತೇನ ಸಾರ್ದ್ಧಂ ಮಿಲಿತ್ವಾ ವ್ಯಶ್ವಸನ್ ತೇಷಾಂ ಮಧ್ಯೇ ಽರೇಯಪಾಗೀಯದಿಯನುಸಿಯೋ ದಾಮಾರೀನಾಮಾ ಕಾಚಿನ್ನಾರೀ ಕಿಯನ್ತೋ ನರಾಶ್ಚಾಸನ್|